Monday, October 26, 2015

கின்னஸ் கனவு தகர்ந்து விட்டது.

 வசந்த சொய்சா இந்த பெயர் சிலருக்கு நினைவில் இருக்கலாம். ஆனால் அண்மைய சில தினங்களாக
இந்த பெயர் செய்தி ஊடங்களிலும் மக்களிடத்திலும் அதிகமாக முணுமுணுக்கப்பட்ட மாறி விட்டது. இலங்கை நாட்டுக்காக தமது பெயரை, தமது நாட்டின் பெயரை உலகத்துக்கு  பல முறை பறைசாற்றிய சாதனையாளர்கள் சில வேளைகளில் புறக்கணிக்க பட்டிருக்கிறார்கள், சில வேளைகளில் உயிரையும் பணயம் வைத்திருக்கிறார்கள் இந்த கூற்றுக்கு மேலே கூறப்பட்ட வசந்த சொய்சாவின் பெயர் பொருந்தி விட்டது. அவர் இறந்து விட்டார்.



பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர்.தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மிக சிறந்த கராத்தே பயிற்றுவிப்பாளர்,இலங்கையில் கூட சிறந்த பயிற்றுவிப்பாளர் என பல முறை விருதுகளை பெற்றவர்.கராத்தே போட்டிகளின் ஆலோசகர். இன்னும் சில தினங்களில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டு 10 உலக சாதனைகளை படைக்க இருந்த ஒரு சாதனை வீரர் மறைந்து விட்டார்.அவரது மரணம் இலங்கைக்கு மிக பெரிய இழப்பாக அமைந்து விட்டது. ஒரு சிறந்த பைட்ட்ருவிப்பலரை இழந்து விட்டது இலங்கை  என இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உலக நாடுகள் பல வற்றிடமிருந்து அவரது மரணத்துக்கு பல அனுதாபங்கள் வந்த வண்ணம் உள்ளன.

அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது. கண்ணில் பட்ட உண்மையான தரவுகள் இதோ.
வசந்த சொய்சா அனுராதபுரம் கபடநாவ பகுதியை பியார்ப்பிடமாக கொண்டவர், 2 பிள்ளைகளின் தந்தையான இவர் 2 பிள்ளைகளின் தந்தை என்பது மட்டுமில்லாமல் இவருக்கு 57 வயது என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தற்காப்பு  கலை தவிர இரவு நேர விடுதி ஒன்றின் உரிமையாளர் என்பது சுட்டிக்காட்ட தக்கத.






வழமை போலவே தனது வேலைகளை நிறைவு செய்துக்கொண்டு தனது சொந்த இரவு நேர  விடுதியில் இரவு 11.45 மணியளவில் தனது கடமைகளை செய்துக்கொண்டிருந்த அவரது இரவு நேர விடுதிக்கு சல சலவென பெட்ரோல் கூண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பதறியவாறு அவரும் அவரது விடுதி ஊழியர்களும் நடந்தது என்ன என கவனிக்க முற்படும் போது அவருக்கும் அவரது ஊழியர்களுக்கும் சரமரியக்ஹா தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வந்தவர்கள் சுமார் 25 பேர் கொண்ட முக மூடி அணிந்த மர்மக் குழு.

கூரிய கோடரியினால்  நடத்தப்பட்ட தாக்குதலில் வசந்த சொய்சாவின் முகம் தலை யின் மீது பலத்த காயம் விளைவிக்கப்பட்டுள்ளது தவிர அவரது ஊழியர்களும்  பலத்த காயமடைந்து விட்டார்கள்.பிறகென்ன சம்பவத்தை மர்மமாக நடத்திவிட்டு சந்தேக நபர்கள் விடுதியில் உள்ள ரூபா ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும் எடுத்தது மட்டும் அல்லாமல் விலையுயர்ந்த 5 மது பான போத்தல்களையும் திருடி விட்டு சென்று விட்டனர்.வசந்த சொய்சாவின் மகன் அவரை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை அவர் உயிரிழந்தார்.அவரது ஊழியர்கள் 3 பேரில் ஒருவர்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு. மற்றைய 2வரும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விடயம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்த  போது கூரிய வாழ்,ரத்தம் பதிந்த 04 தடிகள் ,கூரிய கோடரி என்பன மீட்க பட்டுள்ளதோடு சந்தேக நபர்களின் வாகனங்கள் (கார், முச்சக்கர வண்டி) என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.தவிர சம்பவ இடத்தில் நடந்த அணைத்து நிகழ்வுகளும் CCTV  காமெராவினால் பதிவாகி உள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த 25 சந்தேக நபர்களில் 2வர் ராணுவ வீரர்கள் என்றும் ராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ள அதேவேளை 08 பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் 06வரிடம் விசாரணைகள் மேட்கொள்ளப்பட்டு வருவதாகவும் எஞ்சிய 15 சந்தேக நபர்களையும்  விசேட போலீஸ் குழு   தேடி வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்கள் தையாகம,மஸ்மடுவ,விஜயபுரம் மற்றும் பாலன்குலம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.மேலும் இதில் இருவர் அவரது இரவு விடுதிக்கு பக்கத்தில் சொந்தமாக இரவு நேர விடுதிகளை நடத்திவந்துள்ளதகவும், தனிப்பட குரோதம் காரணமாகவே இந்த திட்டமிட்ட கொலை நடை பெற்றிருக்கலாம் எனவும் போலீஸ் ஊடக பேச்சாளர் காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறு இருப்பினும் இனிமேல் கராத்தே துறையில் வசந்த சொய்சா இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிறந்த கராத்தே வீரர் மண்ணை விட்டு பிரிந்து  விட்டார்.

No comments:

Post a Comment