Sunday, July 17, 2016

நூல் அறிமுகம்.

போராளிகள்

மனித சமுதாயத்தின் நலனுக்காக தன்னை முழுமையாக அர்பணித்துக் கொள்பவர்கள் போராளிகளாக அடையாளம் காட்டப்படுகிறார்கள். மனித உரிமைக்காக அடக்கு முறைகளை சர்வாதிகாரங்களை எதிர்த்து அதில் வெற்றி கண்டவர்களுக்கு உலக வரலாற்றில் என்றென்றும் நிரந்தர இடமுண்டு.


ஏற்றதாழ்வுகள் நிறைந்த மனித குலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாயத்துக்காக  போரட்டத்தை முன்னெடுக்கும் போது ,அந்த சமுதாயத்தின் பிரதிநிதியாக முன்னின்று போராடியவர்கள் விடுதலையின் விடியலாக உருவெடுக்கிறார்கள். அத்தகைய போராளிகள் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகவும் பென்னுரிமைக்க்காகவும் கல்வி உரிமைக்காகவும் போராடி உரிமையை வென்றெடுக்கிறார்கள்.
இது போன்ற உரிமை போரில் களத்தில்  நின்றவர்களில் ஏராளமான பெண்களும் இருக்கிறார்கள். இத்தகைய புரட்சி பெண் போராளிகள் பலர் உலகப் பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார்கள். அந்த பெண் போராளிகளின் விபரங்களையும் அவர்கள் எந்தெந்த துறையில் தமது உரிமைகளுக்காக போராடினார்கள் என்பது தான் போராளிகள் நூல்.
 
குறிப்பாக மகாத்மா காந்தியின் துறையில் அகிம்சை வழியில் போராடி கடும் காவல் சிறை தண்டனை பெற்று தமது மக்களுக்காக உரிமைகளை பெற்ற மியன்மாரின் ஆன் சாங் சூகி. மணிப்பூர் மண்ணில் உண்ணாநிலை அறப்போரில் பத்தாண்டுகளாக ஈடுபட்டு வரும் ஜெரோம் ஷர்மிளா போன்றவர்கள் போராட்டத்தின் உச்சகட்டத்தை தொட்டு தமது கொள்கைகளில் வென்று காட்டியவர்கள்.
மேலும் மருத்துவர் பினாயக் சென் , கல்வி போராளி பெண்களின் ஆதர்ஷ நாயகி மலாலா ,வெனிசுலாவின் பொது உடமை போராளி சாவேஸ் ,இந்தியாவின் விடுதலைக்காக  விளிம்பு நிலை மக்களுக்காக தன வாழ்நாளை அர்பணித்துள்ள சமூகப் போராளி மேதா பட்கர் ,சுற்று சூழல் போராளி வங்காரி மாதாய் ,எழுத்து இலக்கிய போராளி அருந்ததி ராய் ,ஆகியவர்கள் குரிப்பிடத்தக்க்கவர்கள்.

 இவர்கள் போராளி ஆனது எப்படி? அவர்களது போராட்டம் எவ்வளவு காத்திரமானது என்பதனை மு.செந்திலதிபனின் இந்த நூல் விபரிக்கிறது.  வெறுமனே விமரசனங்களை மட்டுமே விமர்சித்து பழகி இருக்கின்ற நமக்கு போராளிகள் நூல் நல்லதொரு புரிதலை ஏற்படுத்தும்.