Friday, September 25, 2015

எனது நூல் கிறிஸ்தவம்



மதங்களின் வேர் விசுவாசத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது.அதன் கிளைகள் மனிதத்தின் மீது மலர் சொரிய வேண்டும்.மனிதத்தின் மையத்தில் புயலாய் மையம் கொண்டு சமுதாயக் கரைகளை கருணையின்றி கடக்கும் எந்த மதமும் அதன் அர்த்தத்தை தொலைத்து விடுகிறது.
கிறிஸ்தவம் அது எப்போதுமே அன்பின்  அடிச்சுவடுகளில் பாதம் பதிந்து அயலானின் கண்ணீர் ஈரம் துடைக்கும் கைக்குட்டையோடு காத்திருக்கும் மதம்.

வரலாறுகள் சிலிர்பூட்டுபவை மட்டுமல்ல நிகழ்காலத்தில் நமக்கு முன்னால் அலட்சியமாய் விரிக்கபட்டிருக்கும் காலத்தின் அகோரமான சுவடுகளையும்,வழிகளையும் நம் முன்னால் விபரிப்பவையும் கூட.மதமும் அதன் கோட்பாடுகளும் வலுவாக ஊன்றபட்டிருக்கும் ஒரு சமூகத்தில் முலைதெலும் எந்த ஒரு புதிய மதமும் மனதில் நெருக்கப்படும் கீரைசெடி போல கிழிபட்டே ஆகவேண்டும். நிராகரிப்புகளும் அவமானங்களும்,துரத்தல்களும்,மட்டுமே இந்த மதத்துக்கு காலம் காலமாக அடையாளமாக திகழ்கின்றன.தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு கோட்பாடோ,மதமோ பல நூற்றாண்டுகள் போராட வேண்டி இருக்கும் என்பதன் சாட்சியாய் நிற்கிறது கிறிஸ்தவ மதம்.

 எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்கும் உரித்தான நிகழ்வுகளும், வியப்பும்,வழியும்,பிரமிப்பும் கிறிஸ்தவ வரலாற்றுக்கும் உண்டு.கிறிஸ்தவம் கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பி பார்கையில் இது நன்றாகவே புரியும்.
கிறிஸ்தவம் எல்லா மதங்களுக்கும் உள்ள பலத்தோடும், பலவீனத்தோடும் தான் பரவி வந்திருகிறது என்பதை வரலாற்றின் கரை படிந்த பக்கங்கள் விளக்குகின்றன.யார் பெரியவன், எது சரியானது,எனும் போராட்டங்களின் பிள்ளையாக இன்று உலகெங்கும் பரவிக்கிடக்கும் கிறிஸ்தவக் குழுக்களில் எது சரியானது ? எல்லாம் சரியானதெனில் ஏன் இத்தனை பிரிவுகள்? கிறிஸ்தவம் புனிதமா? அவமானமா ? என வரலாறு சொல்லும் விடயங்களை தக்க சான்றுகளோடு நிருபித்து நிற்கிறது இந்நூல் என்று என்னால் கூற முடியும்.

இவ்வாறு எந்த பிரிவு கிறிஸ்தவத்தையும் சாராமல் உண்மை நிலையை அதன் புனிதக் கூறுகளோடும், புளுதிக் கூறுகளோடும் அமைதி வாசனையோடும், போரின் நெடியோடும் எழுத்தாளர் சேவியரால் எழுதப்பெற்ற நூல் இது. வாசிப்பை நேசிப்பவர்களுக்கான மிக சிறந்த நூல் இது.

Tuesday, September 22, 2015

மொசாட் நூல் விமர்சனம்.

இயேசு கிறிஸ்துவின் காலத்திலிருந்தே யூதர்களை சுற்றி வரும் ஒரு சாபத்தை பற்றி சிலர் பேச
கேட்டிருக்கிறேன்.தங்களுக்கென ஒரு தூண்டு நிலம் கூட இன்றி திண்டாடுவார்கள் என்பதுவே அது.இன்று இஸ்ரேல் என்ற யூதர்களுக்கான தேசம் உருவாகி இருந்தாலும் அவர்களை சுற்றி ஆயிரம் பிரட்சினைகள் சூழ்ந்து  நிற்கின்றன இயேசு கிறிஸ்துவின் வரலாற்றில் கூட யூதர்களை யேசுவிற்குஎதிரான ஆளுமைகளாகத்தான் நாம் பார்கிறோம்.

ஹிட்லர் காலத்தில் யூதர்கள் கூட்டம் கூட்டமாக கொன்று அழிக்கப்பட்டதனை இந்த உலகம் நன்கு அறியும்.இப்போதும் சமிபத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இனம் தெரியாத நபர்கள் சிலரால் யுத்தப் பள்ளிக்கூடம் ஒன்றும், யூத ஆசிரியை ஒருவரும் கொல்லப்பட்டது வரை யூதர்களின் மீதான இந்த உலகின் வன்மம் தொடர்கிறது.

இது எங்கே தொடங்கியது,எங்கே தொடர்கிறது,இவற்றின் மூலம் என்ன, யூதர்கள்  அடிப்படையில் நல்லவர்களா?, கெட்டவர்களா? என்ற விடை தெரியாத கேள்விகளுக்கு  எல்லாம் விடை காணுதல் அத்தனை எளிமை அல்ல.

எது எப்படியோ, தன்னை சுற்றி காலம் காலமாக தொடர்ந்து வரும் பிரட்சினைகளை சமாளிக்கவும், நேரத்தில் சரியான பதிலடி தரவும் இஸ்ரேல் உருவாக்கிய உளவு நிறுவனம் தான் மொசாட்.அந்த உளவு நிறுவனத்தின் சவால்கள் மீதான பார்வை தான் இந்த நூல்.

ஒரு விடயத்தை உறுதிபட கூறலாம் இந்த புத்தகத்தை கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்று தோன்றும்.அத்தனை சுவாரஸ்யம் நிறைந்ததாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் என்.சொக்கன் அதில் தங்கியுள்ளது இவரின் வெற்றி.

உலகை கிடுகிடுக்க வைக்கும் இஸ்ரேலிய உளவுத்துறை குறித்த விரிவான அறிமுகம் என்ற அட்டை பட தகவலோடு தொடங்குகிறது புத்தகம்.பொதுவாக உளவுத்துறை சார்ந்த தகவல்கள்,அவர்களின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்தல் அத்தனை எளிய காரியம் அன்று.

அதிலும் இஸ்ரேல் போன்ற உணர்ச்சி வசப்படும் தேசத்தின் உளவு நிறுவனம் பற்றி புத்தகமெல்லாம் எழுத முடியும் என்று புத்தகத்தை கையில் எடுக்கும் போது யோசிக்க  தோன்றும். புத்தகத்தின் சுவாரஸ்யத்தில் கடைசி அத்தியாயம் வாசிக்கும் வரை அப்படி ஒரு யோசனை மீண்டும் வராது.கடைசி அத்தியாயமும், புத்தகத்தின் முடிவில் நன்றியும் ஆதாரங்களோடுவாசித்த பின்னர் தான் இந்த புத்தகம் உருவான பின்னணியை அறிய முடிந்தது.

மிகச்சிறந்த தகுந்த ஆதாரங்களோடு உறுதிபடுத்த பட்ட தகவல்களோடும் இந்நூல் அமையப் பெற்றுள்ளது.இஸ்ரேல் என்ற நாட்டின் கொடூரத்தின் உச்சங்களை சரியான விதத்தில் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.நம்மில் பலர் வாசிக்க வேண்டிய நூல்  இது என என்னால் கூற முடியும்.

Friday, September 18, 2015


                       

அறிவின் தேடல்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது.எல்லாம் அவன் செயல், அவன் ஆட்டுகிறான் மனிதன் ஆடுகிறான் இன்றைய நவீன யுக வாழ்கையில் இவை தவிர்க்க முடியாத வசனங்கலாகி விட்டன.உலக உயிர்களின் தேடலில் தான் அதன் வாழ்வு அமைகிறது.இந்த வரிசையில் மனிதனும் தான் வாழ்க்கைக்குரிய தேடலை தொடங்குகிறான்.

அதில் சில நேரங்களில் துவளும் போது கடவுளையோ அதை சார்ந்த கொள்கைகளையோ அல்லது அது சார்ந்தவற்றை குறை கூறுவதோடு அக் கொள்கைகளை துணைக்கு அழைத்து கொள்கிறான்.அப்போதும் தோல்விகள் ஏற்படுமிடத்து அதையே விதி,கர்மம்,பூர்வ ஜென்மத்து பலன் என்று தான் இயலாமைக்கு தானே காரணம் என சொல்லிக்  கொள்கிறான்.

அறிவை தேடி மனித மனம் பயணிக்கும் பாதைகள் தான் விஞ்ஜானமும் மெய் ஜானமும்.தான் வாழ்வுக்காக தனக்கேற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது,விஞ்ஜானம் விஞ்சாநிகளுடைய ஆக்கிரமித்த செயற்பாடுகளினால் தன்னை வளைத்து கொள்வது ,மெய் ஜானம் இவை இரண்டுமே அறிவின் பயணங்களே.

நடைமுறை விடயங்களோடு சேர்த்து யதார்த்தத்தின் இன்றியமையாத பண்புகளோடு யதார்த்த வாழ்வை காண நல்லதொரு வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது.

நாம் யார் இந்த உலகம் எப்படி உருவானது,உலகத்து உயிர்களில் மனிதனின் நிலை என்ன, கடவுள்,மனிதன்,மதம்,ஆன்மா,விதி,ஆவி,மறுபிறவிகள்,மோட்சம்,நரகம்,சடங்குகள்,கனவுகள்,பேய் பிசாசு, என்பவற்றோடு அமானுஷ்ய உண்மைகள்,சகுனங்கள் ஜோதிடம் என்பவற்றின் பின்னணி என்ன? போன்ற பல்வேறு விடை காணா கேள்விகளுக்கு இந்நூல் சரியான விடையை தேடித்தரும் என்பது நிதர்சனம்.

இவ்வாறு மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தகூடிய மேட்குறிபிட்ட 15 க்கும் மேற்பட்ட விடை காணா வினாக்களுக்குரிய அறிவு பூர்வமான விடைகளோடு நூலை விளக்கியுள்ளார் நூலாசிரியர் மா.பாபு 

மாய வாழ்க்கையின் நிலையை சற்று விளக்கி பார்த்தால் நமக்குள்ளேயும்  உண்மையான ,உன்னதமான பேரானந்த மெய்யறிவு  ஒளிர்வதை உணரலாம்.மனித சிந்தனையில் எழும், குடி கொண்டு வாழும் ஐயங்களுக்கு பதில் தரும் தெளிவான நூல் இது.கண்டிப்பாக தேடலார்வம் கொண்டவர்களால் தேடி வாசிக்கபடவேண்டிய மிக முக்கிய நூல் இது 
isis பதிவின் தொடர்ச்சி............

இந்த அமைப்பை தொடங்கிய அல்ஜர்க்வாவி 2006 ம் ஆண்டில் அமெரிக்க படைகளால் ஈராக்கில் கொல்லப்பட்டனர்.அடுத்தடுத்து தலைமைக்கு வந்தவர்களும் கொல்லப்பட்டார்கள்.பிறகு தலைமைக்கு வந்தவர்களும்  கொல்லப்பட்டார்கள்.பிறகு தலைமைக்கு வந்தவர் தன அபூபக்கர் அல் பக்தாதி. இவரது வருகைக்கு பின்னர் தான் isis மிகவும் மூர்க்கத்தனமாக மாறியது.இதுவரை அறியப்பட்ட அல்கொய்த தலிபான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு isis 30 நாட்களில் அதிரடியாக முன் அரங்குக்கு வரக்காரணம் அந்த அமைப்பின் மிகக் கொடுரமான தண்டனை முறைதான்.

இவர்களது நோக்கம் என்ன?

சன்னி முஸ்லீம்களின் ஆதரவை சடுதியில் பெற்ற isis சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக  கிளர்ச்சியை   தொடங்க சிறியவை பிடிக்காத பல மேற்குலக நாடுகளும் சில அரபு நாடுகளும் அதை ஆதரித்தன, உதவின. விறுவிறுவென சிரியாவில் சன்னி முஸ்லிம்கள் செறிவாக வாழும் பல நகரங்களை கைப்பற்றினார்கள்.அனால் isis இன் நோக்கம் சிரியாவுடன் மட்டும் முடியவில்லை.

ஓட்டோமன் பேரரசுக் காலத்தில் ஸ்பெயின் தொடங்கி இந்தோனேசிய வரை முஸ்லிம்கள் ஆண்டார்கள்.இது போன்ற பரந்துபட்ட தேசம் அமைக்கப்பட வேண்டும். அதன் தொடக்கம் தான்  சிரியாவையும்,ஈராக்கையும் கைப்பற்றியது என்று அவர்கள் அறிவித்த வரைபடத்தில் இந்தியாவும் உண்டு.

இஸ்லாத்தின் பழைமைவாதக் கோட்பாடான வாஹபியசித்தின் வழித்தோன்றல்கள் என்று தங்களை அறிவித்துக்கொண்ட isis  சன்னி அல்லாத பிற முஸ்லிம்களை இழிவானவர்களாகவும், பிற சிறுபான்மை சமூகங்களை சாத்தானை வழிபடுகிறவர்களாகவும் கருதுகிறது.isis  அமைப்பின் செயற்பாடுகளை உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் பதற்ற தலையீடு.

குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இர்பில் நகரை விரைவில் கைபற்றகூடிய நிலை வந்தபோது தான் அமெரிக்கா இசிஸ் செயற்பாட்டில் தலையிட்டது.அங்கு கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக வசிக்கிறார்கள்.மேலும் யஹிதி என்ற பழங்குடிகள் இருக்கிறார்கள்.இவர்களை (isis ) கொன்று குவிக்க தொடங்கியது.

இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மலைபகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.இதையே காரணமாக வைத்து வான்வழி தாக்குதலில் இறங்கி விட்டது அமெரிக்கா . ஆனால் 2011 இல் ஈராக்கில் தலையிட்டதை போல இப்போது ஒரு முழு யுத்தத்தை நேரடியாக நடத்தவில்லை.அதற்கு பதிலாக குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து isis உடன் மோத விடுகிறது.குர்திஷ் போராளிகளின் தனிநாட்டு போராட்டத்தை அங்கிகரிக்காத அமெரிக்கா இப்போது தனக்கு காரியம் ஆகா வ்பிண்டும் என்பதற்காக ஆயுதம் கொடுத்து ஊக்குவிக்கிறது.நாளை இவர்கள் வேலை முடிந்ததும் குர்திஷ் படைகளையும் ஒழித்துகட்டுவார்கள். வங்கம் தந்த பாடமும், ஈழம் சொன்ன பாடமும் இதுதான்.ஈராக் விவகாரத்தில் தவறு செய்துவிட்டோம் அங்கிருந்து வெளியேற்றும் முன்பு மத சார்பற்ற குழுக்களுக்கு       ஆயுதம் கொடுத்து அவர்களை வலுப்படுத்தி விட்டு வந்திருக்க வேண்டும் என்று இப்போது வெளிப்படையாக சொல்கிறார் ஹிலரி கிளிண்டன்.இதுதான் அமெரிக்காவின் உண்மையான முகம்.

பொதுவாக மத்தியகிழக்கு மற்றும் கிழக்கு, மற்றும் வளைகுடா நாடுகள், முஸ்லிம் நாடுகள் என அறியப்பட்டாலும் அமெரிக்கா ஆதரவு அல்லது எதிர்ப்பில் பிளவுண்டு கிடக்கின்றன.பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை இஸ்ரேலுக்குள் வசிக்கும் யூதர்கள் கூட கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் ஆனால் முஸ்லிம் நாடுகள் இவை கூட திறக்காது.

அங்கிருந்துதான் அகண்ட இஸ்லாமிய தேசத்துக்கான அரை கூவல் பிறக்கிறது.ஈராக்கில் நிலை கொண்டிருந்த அமெரிக்கா ராணுவம் தீரப்பசியோடும், பெரும் இழப்புகளோடும் 2011 இல் அங்கிருந்து விலகியது. அப்போது isis அமைப்பிடம் இருந்து தங்களை காப்பாற்றக்கோரி ஈராக் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா கண்டுகொள்ளவே இல்லை.

நடப்பது நடக்கட்டும் என்று வேடிக்கை தான் பார்த்தது.ஆனால் isis  பரந்துபட்ட இஸ்லாமிய நாட்டை அமைக்க கோரி அரை கூவல் விடுக்கிறது என்று தெரிந்து உடனே வான்வழி தாக்குதலை தொடங்கியிருக்கிறது.

உலகெங்கிலும் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்த கூடிய குழுவை முஸ்லிம்கள்  கிலாபத் என்கிறார்கள்.இந்திய சுதந்திர போரட்டத்தில் கூட கிலாபத் இயக்கத்துக்கு பெரும் பங்கு உண்டு.isis  அமைப்பு நாங்கள் தான் அந்த கிலாபத் என்கிறது.அதையும் அப்பாவி இஸ்லாமிய இளஞ்சர்கள் நம்பி நம்பி இவர்களது வலையில் வீழ்கிறார்கள் என்பது தான் இதன் நிதர்சனமான உண்மை.

நன்றி இந்திய ஊடகம்.

Wednesday, September 16, 2015

ISIS  உலகின் புதிய அச்சம்

  இந்த கட்டுரை ஒரு முறை இந்திய அச்சு ஊடகம் ஒன்றில் பிரசுரிக்க பட்டு இருக்கிறது.படித்ததும்
இந்த கட்டுரையை எனக்கு பிடித்திருந்தது.அதனால் இந்த கட்டுரையை பிரசுரிக்கிறேன். நன்றி இந்திய ஊடகம்.

இஸ்லாமாபாதாக இருந்தாலும் சரி,ராமநாதபுரமாக இருந்தாலும் சரி அப்பாவி முஸ்லிம்கள் தங்களின்  பிள்ளைகளை முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றி ஆக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். பெரும்பான்மை மத வெறியால் தனிமைப்படுத்தப்படும் அப்பாவி இஸ்லாமிய  வாலிபர்கள் சில அடிப்படை வாத அமைப்புக்கள் விரிக்கும் மதவாத படுகுழியில் வீழ்ந்து விடுகின்றனர்.இந்தியாவில் செயல்படும் தீவிரவாத குழுக்களில் தொடக்கி, இன்று  உலகத்தையே அட்சிருத்திக் கொண்டிருக்கும் isis (islamic state of irag and syria ) அமைப்பு வரை இதுதான் நிலவரம் அதிலும் இதுவரை உலகில் தோன்றிய தீவிரவாத குழுக்களில் மிகவும் இறுக்கமான, இரக்கமற்ற அடிப்படைவாத அமைப்பாக இருக்கிறது இசிஸ்.

யார் இந்த isis

சுடப்பட்டு உயிர் தடித்து கொண்டிருக்கும் ஈராக் ராணுவ வீரரை ,ஆட்டை அறுப்பது போல தொண்டையை அறுக்கிறார் ஒருவர்.இன்னொருவர் அதை நிதானமாக படம் பிடிக்கிறார்.துப்பாக்கிகளோடும், கொடிகளோடும் சூழ்ந்து நிற்பவர்கள் கோஷங்களை எழுப்புகின்றனர்.ஈராக்கில்  isis  அமைப்பு நடத்தும் கொலைகளில் இது ஒரு விதம்.கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொள்வது, கழுத்தை மட்டும் அறுத்துக் கொள்வது, சிலுவை வடிவிலான கம்பங்களில் கட்டிவைத்து சுட்டு கொள்வது என்று வித விதமாக வெளியிடப்படும் வீடியோக்கள் அந்த அமைப்பினரை ஆகக் கொடிய பயங்கரவாதிகளாக அடையலாம் கட்டி இருக்கின்றன.

1990 கலீல் ஜோர்தான் நாட்டை சேர்ந்த அல்ஜர்காவி என்பவரால் தொடக்கப்பட்ட இந்த அமைப்புக்கு ஆரம்பத்தில் ஜமா அத் ஜிகாத் என்று பெயர். அப்போது அல்கொய்தா உலகெங்கும் செல்வாக்குடன் இருந்ததால் இந்த அமைப்பின் பெயர் வெளியில் தெரியவில்லை.பிறகு இந்த குழுவினர் பின்லேடனை தங்கள் தலைவராக ஏற்று அல்கொய்தாவில்  இணைத்தனர்.யூப்ரடிஸ், தைகிரிஸ் நதிகளை ஒட்டியப் பகுதிகளில் செயல்பட்ட இவர்கள் ஈராக்கின் அல்கொய்தா  என அழைக்கப்பட்டனர்.

ஈராக்கில் சதாம் ஆட்சியில் இருந்தவரை சன்னி பிரிவினர் மேலாதிக்கம் செய்கிறவர்களாகவும், ஷியா முஸ்லிம்கள் அடக்கப்பட்டுபவர்களாகவும் இருந்தனர்.பக்கத்துக்கு நாடான சிரியாவிலோ பெரும்பான்மை  சன்னி பிரிவினர் ஒடுக்கு முறைக்கு உள்ளாக சிறுபான்மை சியா பிரிவினர் ஆளும் தரப்பாக இருந்தனர்.

இந்த நிலையில் தான் ஷியா, சன்னி பிளவை பயன்படுத்திம் ஈராக்கை கைப்பற்றியது அமெரிக்கா. 148 ஷியா முஸ்லிம்களை கொன்ற குற்றசாட்டின் பேரில் சத்தமாய் தூக்கில் போட்டது.சத்தமின் மரணத்தோடு சன்னி முஸ்லிம்கள் ஈராக்கில் பலம் இழந்தனர்.அமெரிக்காவின் ஆதரவோடு ஷியா தலைவரான மாலிக் ஆட்சிக் கட்டிலில்  ஏற, சன்னி முஸ்லிம்களின்  பாடு மேலும் திண்டாட்டம் ஆனது.

ஈராக்கில் ஆயுத முனையில் நடந்த இந்த ஆட்சி மாற்றம், அல்கொய்தா அமைப்பினுள் கருத்தியல் ரீதியான பிளவை உருவாக்கியது.முஸ்லிம்களின் பொது எதிரி, முதல் எதிரி யார்? அமெரிக்காவா? அல்லது அமெரிக்காவை ஆதரிக்கும் முஸ்லிம்களா? உண்மையான முஸ்லிம்களான  சன்னிகள் ஏன் ஈராக்கிலும் சிரியாவிலும் நசுக்க படுகிறார்கள்?

அவர்களுக்கு என்று ஒரு தேசம் வேண்டாமா? என்ற ரீதியில் கேள்விகளும் விவாதங்களும் எல.......... எட்டு மாதங்களுக்கு முன்னர் அல்கொதாவில்  இருந்து பிரிந்த இந்த குழுவினர் தங்களை (isis) என்று அழைத்து கொண்டனர்.

சிரியாவையும்,ஈராக்கையும் மீட்டு அங்கு  சன்னிகளை அதிகாரத்துக்கு கொண்டு வருவது தான் அவர்களது ஆரம்ப நிலை கோஷமாக இருந்தது.இன விடுதலை அமைப்பு போன்ற தோற்றத்தை  பெற்ற இந்த குழுவை ஆரம்பத்தில் அனைவருமே போராளிகள் என்று நினைத்தது இதனால் தான் .
இந்த பதிவின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் இடுகிறேன்.

Sunday, September 13, 2015

கிளியோபேட்ரா.

மொத்தம் எழுநூறு கழுதைகள் அலெக்ஸ்சாண்ட்ரியாவின் அரண்மனை வளாகத்தில்அவற்றை பராமரிக்கவே தனி தொழுவம் இருந்தது.கழுதைப்பால் கரப்பவர்களின் வேளை காலை முதலே ஆரம்பமாகி விடும்.தூசு துரும்புகள் எதுவுமற்ற கழுதைப்பால் மதிய நேரத்தில் அந்தபுரத்தில் தயாராக
வைக்கப்பட தோழிகள்  புடை சூழ அந்த கழுதைப்பால் குளியல் தொட்டிக்குள் கிளியோபேட்ரா இரங்கி ஊற ஆரம்பிப்பாள்.

அழகென்றால் அழகு அப்படி ஒரு அழகு.உலகம் வியக்கும் பேரழகியின் சர்ச்சைக்குரிய
சரித்திரம் என அறிமுகப்படுத்தப்படும் இந்த புத்தகம் சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஓர் அரசியை அழகியை,அவள்,ஆளுமையை குறித்து அறியத்தரும் மிகச்சிறந்த நூல் என என்னால் அடையாளபடுத்த முடியும்.

கிளியோபேட்ரா தனது தந்தையின் மறைவை அடுத்து எகிப்தின் அரசியாக முடிசூடி கொண்ட போது
எதிரி நாட்டு மன்னர்கள் அந்த நாட்டின் மீது போர்தொடுத்த கணத்தில் கிளியோபேட்ரா என்ற அத்தனை ஆளுமை பொருந்திய அரசி எதிரி நாட்டு மன்னர்களிடம் அடிபணிய நேரிட்டது.அந்த சமயத்தில் ஜுலிய சீசர் பற்றி கேள்வி பட்டு அவரிடம் எனக்கு உதவி செய்ய மாட்டர்களா ? என்று உதவி கேட்டிருக்கிறாள்.உடனே சீசரும் க்ளியோபெற்றாவுக்கு உதவி செய்து இழந்த நாட்டை,வளங்களை மீட்டுகொடுக்கிறார்.

அந்த சமயத்தில் அவளது அழகில் மயங்கி சீசரும் அவளுடன் காதல் கொள்ள,க்ளியோபெற்றாவும் சீசரின் வீரத்தில் மயங்கி அவருடன் காதல் கொள்ள ஆரம்பிக்கிறாள்.வரலாறு கொண்ட மிக சிறந்த காதல் அத்தியாயங்களில் இதுவும் ஒன்று.சில காலங்கள் செல்ல இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

வாழ்கை இனிமையாக நகர,கிளியோபேட்ரா அவரது நாட்டையும் அதே நேரத்தில் சீசரின் மனைவியாகவும் இருந்ததாக புத்தகம் சான்று பகர்கிறது.
சில காலங்களில் க்ளியோபெற்ற சீசரின் வாரிசை தனது வயற்றில் சுமக்க,அந்த வாரிசை சீசர் க்ளியோபெற்றவின் வயிற்றை கிழித்து எடுத்ததாகவும்,இது தான் நவீன மருத்துவ முறையின் செசரியன் முறை என அழைக்கபடுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அழகை தன் ஒரே ஆயுதமாக கொண்டு கம்பீரம்,நாகரிகம்,நளினம்,அகங்காரம்,பிரமாண்டம்,என அனைத்தையும் கலந்து தன் அறிவாற்றலால்
ஆயுதங்களை பிரயோகித்து நண்பர்களை உருவாக்கவும்,எதிரிகளை வீழ்த்தவும் செய்த சரித்திரம் கண்ட வியக்க வைக்கும் ஆளுமை கிளியோபேட்ரா.

சீசர்,அகிலேஷ் என்ற இரு மாபெரும் பேரரசர்கள் தாம் யார் என்பதை மறந்து, தமது வீரத்தை,விவேகத்தை மறந்து அவள் அழகினால்,காதலி  மட்டுமே கதி என்று அவளை சரணடைந்து கிடந்தார்கள் என்றால் அவள் எப்படிப்பட்ட பேரழகியாக இருந்திருக்க வேண்டும் என்ற கேள்வி  இன்று
வரை விடை காணாமல் உயிரோடு இருக்கிறது.

 சீசரின் மறைவுக்கு பின்னால் துவண்டு போய் இருந்த கிளியோபேட்ரா மறுபடியும் அகிலேஷ் என்ற பேரரசரை காதலித்த வரலாறு நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.எப்பேற்பட்ட அழகியாக இருந்தாலும் நாட்டு மக்களை பாதுகாத்த இன்றியமையாத ஒரு அரசி கிளியோபேட்ரா.ஈதோ ஒரு தருணத்தில் அகிலேசும் மறித்து போக மறுபடியும் வாழ பொறுக்காத கிளியோபேட்ரா காட்டில் உள்ள விஷ பாம்புகளை கொண்டு வர சொல்லி அவற்றை தம் மீது படர வைத்து இறந்து போனதாக நூலில் குறிப்பிடபட்டுள்ளது.

அத்தோடு கிளியோபேட்ரா என்ற பேரழகியின் ராச்சியம்  முடிந்து விட்டது. ஆனால்  இப்போதும் கிளியோபேட்ரா வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

எகிப்துக்கும் ரோமுக்கும் ஒரு சிறப்பான சரித்திர அனுபவத்தை தருகிறது இந்நூல்.நூலாசிரியர் முகில் பக்கத்துக்கு பக்கம் கடல் போர்கள்,நைல்நதி பயணம்,என எழுத்துக்கள் ஒரு புறம் இருக்க கற்பனையிலே க்ளியோபெற்றாவை வரலாற்று அரசியாக நிலைநிறுத்தி இருக்கிறார் .

ஜுலிய சீசர்,அகிலேஷ்,போம்போ,ப்ரூட்டஸ்,தால்மிக்கள்,என க்ளியோபெற்றாவை சுற்றி நடைபெற்றிருக்கும் அனைத்தும் இந்நூலில் சுவையாக சொல்லபட்டிருக்கிறது.
வெறுமனே ஒரு அரசியின் வரலாற்றை சொல்லும் நூல் என்பது மாட்டுக் அல்லாமல் காதல், பெண்மை,வீரம்  என அனைத்தையும் கலந்த ஒரு அறிவு பெட்டகம் இந்நூல்.நம்மில் பலர் வாசிக்க வேண்டிய நூல் இது.

Monday, September 7, 2015

தீவிரவாதத்தின் உச்சம் செப்டம்பர் 11

உலகத்துக்கு இழப்புகள் என்றல் என்ன என்பதை பறை சாற்ற இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய கோர சம்பவம் செப்டம்பர் 11 தாக்குதல்.
உலகை படிய வைக்க வேண்டும் என நினைத்த ஐக்கிய அமெரிக்காவின் எதேட்ச அதிகார போக்கை எதிர்த்து அமெரிக்காவை உருகுலைய வைத்தநாள் செப்டம்பர் 11.
மொத்தமாக 2973 பேர்,இரத்தம்,வலிகள் ,வேதனைகள்,அமெரிக்க நகரெங்கும் கரை படிந்த கண்ணீர் பதிவுகள் அந்த பேரிழப்பை கூற வார்த்தைகள் கிடையாது.

அமெரிக்கவை கதிகலங்க வைத்த சம்பவங்களை பட்டியலிட்டால் அதில் மிக முக்கிய இடம் பிடிப்பது செப்டெம்பர் 11 தாக்குதல்.இந்த தாக்குதல் நடைபெற்று நாளைய தினத்தோடு சேர்த்து 14 வருடங்கள் பூர்த்தியாகிறது.
உலகை உலுக்கி கொண்டிருக்கின்ற தீவிரவாதிகளிலே ஒசாமா பின்லேடனும் அவரது தீவிரவாத குழுவான அல்கொய்தா தீவிரவாத அமைப்பும் சேர்ந்து திட்டமிட்டு,அமெரிக்காவின் அதிக எரிபொருட்களை கொண்ட 4 விமானங்களைக் கடத்தினர்.

திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த தீவிரவாதத் தாக்குதல் அமெரிக்காவின் மிக முக்கிய இடங்களான நியூயோர்க்கின் இரட்டை கோபுரம்,அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் கட்டமான பெண்டகன்,வோசின்க்டனின் டி.சிப கோபுரம் என மிக முக்கிய 4 இடங்களை குறிவைத்தது.

இதன்படி அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் 19 தீவிரவாதிகளும் அல்லாவின் புனிதம் இந்த தாக்குதல் என்று தம்மை சுதாகரித்து கொண்டு கடத்தப்பட்ட 4 விமானங்களில் முதலாவது விமானமான பிளைட் 11 மூலம் அமெரிக்க இரட்டை கோபுரத்தை நோக்கி செலுத்தினர்.
சரியாக 2001 செம்டெம்பர் 11 செவ்வாய்கிழமை காலை 8.45 க்கு இரட்டை கோபுரம் தகர்கபட்டது.

பெரும் சத்தம்,நெருப்பு குழம்பு,புகை,மரண ஓலம்,என பேரிழப்புகள் அங்கெ கிளம்ப ,நியூயார்க் வானம் கரும்புகையால் அப்பி காணப்பட்டது.எப்பேற்பட்ட பேரிழப்பு என்று எல்லோரும் பதற ஆரம்பித்த தருணத்தில் சரியாக 18 நிமிடங்கள் களைத்து பெண்டகன் மீது மற்றொரு விமானம் மோதியது.மறுபடியும் 16 நிமிடங்கள் கழித்து 4 வது விமானம் வொசிக்டனின் டி,சி யை நோக்கி பரந்த சந்தர்பத்தில் பென்சிலெனியாவில் ஒரு விவசாய நிலத்தில் வீழ்ந்து தீப்பற்றி எரிந்தது.

மொத்தமாக 2973 பேர் ஸ்தலத்திலே கொல்லப்பட்டனர்.இதில் 115 நாடுகளை சேர்ந்த 300 பேர் அடங்குவர்.அமெரிக்காவுக்கு இந்த இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கே சிறிது காலம் தேவைப்பட்டது.உடனடியாக இந்தத்  தாக்குதலுக்கு அல்கொய்தா அமைப்பும்,அதன் தலைவர் ஒசாமா பின்லேடனும் தான் பதில்  கூற வேண்டும் என அறிவித்த போதிலும்,அல்கொய்தா சார்பாக இந்த கருத்துகளும் வெளியிடப்பட்டவில்லை.

இதற்கு பின் முழுமையான அமெரிக்க இரட்டை கோபுரமும்,பென்டகன் கட்டமும் கட்டபட்டாலும் அந்த கோர தாக்குதலில் பலியான அப்பாவி உயிர்களின் மனித எச்சங்கள் அகற்றபடாமலே புதைக்கபட்டன என்பது தான் உண்மை.

மீண்டும் அமெரிக்கா மீண்டு எழுந்தது,பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என அறிவித்து விட்டு ஆப்கான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் மீது படையெடுக்க ஆரம்பித்தது.தீவிரமாக ஒசாமா பின்லேடனை தேட ஆரம்பித்தது.இதன்படி 7 வருடங்களின் பின் 2007 இல் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்கா ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டார்.

அதிகாரத்துக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் போபால் வாயு விளைவு போல அமெரிக்கா மக்களையும் இன்றும் பாதித்துகொண்டு தான் இருக்கிறது என்றாலும்,உலக வரலாற்றில் ஒவ்வொரு பக்கத்திலும் இந்த வரலாறு இருந்தே தீரும்.

புனிதத்தின் பெயரில் மனித உயிர்களைக் காவு கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் எப்போதுமே மறக்கவும்,மன்னிக்கவும் முடியாத ஒன்று.
14 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இந்த இழப்பில் உயிரிழந்த அப்பாவி உயிர்களை நினைவு கூறுவோம்.