Sunday, May 29, 2016


               இடி அமின்.

உகாண்டா மக்கள் மட்டுமல்ல உலகமே உச்சரிக்க பயந்த ஒரு பெயர் இடியமின். இந்த கொடூர மனிதர் தான் இறக்கின்ற வரைக்கும் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் ஒரு லட்சம் முதல் ஐந்த லட்சம் வரை இருக்கும் என வரலாற்றியர்கள் கணக்கெடுக்கிறார்கள். மனித ரத்தம் குடிப்பார் , மனித உடல் பாகங்களை தின்பார் ஒட்டு மொத்தத்தில் நர மாமிசம் தின்னும் ஒரு மனிதரை பற்றிய ஆவணம் இந்த புத்தகம்.

இடியமின் குறித்த வதந்திகளும் கட்டுக்கதைகளும் மிக அதிகம் என்றாலும் உகாண்டாவின் சர்வாதிகாரியாக அவர் ஆட்சியில் இருந்தக் காலத்தில் அரங்கேறிய இனப் படுகொலைகளும் , அரசியல் அராஜகங்களும் ,பல உகாண்டா இளம் பெண்கள் மீதான கற்பலிப்புக்கலுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வலுவான ஆதாரங்கள் இன்றும் இடியமின் மீது முன்வைக்கப்படுகின்றன. 

எதிர்ப்பவர்களை மட்டுமல்ல தன்னை எதிர்க்க நினைப்பவர்களையும் அமின் என்ற கொடுங்கோலன் அழித்திருக்கிறான்.
இவ்வாறு நூலில் மொத்தம் பதினோரு தலைப்புக்களில் இடியமின் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கின்ற தகவல்கள் அனைத்தும் உண்மையில் ஒரு நிமிடம் நம்மை சஞ்சலப் படத்தான் வைக்கின்றன.சாதாரண ஒரு சமையல் காரனாக தனது வாழ்க்கையை தொடங்கி படிப்படியாக உகண்டா ராணுவத்தில் ராணுவ வீரர்களுக்கு பணிவிடை செய்தது,ராணுவ சிப்பாய் அதன் பின்  ராணுவ வீரனாக மாறியது பின்பு ராணுவ சார்ஜன் , தலைமைப் படை அதிகாரி, படை தளபதி, பில்ட் மார்ஷல் உகாண்டா நாட்டின் ஜனாதிபதி என்று தொடர்கின்ற நூலில் இடியமின் பற்றிய தகவல்கள் வாசிப்பை தூண்டுகின்றன.

இடியமினின் மிக முக்கிய பலமே எந்த சந்தர்ப்பத்திலும் யார் முன்னேயும் அமைதியுடனும் , ஆரவாரமின்றியும் நடந்துக் கொள்வது தான். இவ்வாறாக அடிமை சங்கிலி என்று தலைப்பிடப் பட்ட கட்டுரையில் இடியமின் ராணுவ தளபதியான வரலாறும் , வளர்த்த கடா என்ற கட்டுரையில் அரசாங்கத்தை கவிழ்த்து தான் சர்வாதிகாரியாக ஆனமை பற்றியும், இந்தியனே  வெளியேறு என தலைப்பிடப் பட்ட கட்டுரையில்  இந்தியர்களை இடியமின் எவ்வாறு எல்லாம் சித்திரவதைகள் படுத்தினார் அதற்கான காரணங்கள் என்ன ? போன்ற தகவல்களும் காதல் காமம் கொலை என்ற தலைப்பிடப் பட்ட கட்டுரையில் இடியமினின் மனைவிகள் , அவரது ஆசைக்கு அடங்கிய இளம் பெண்கள், அவரால் கற்பழித்து கொலை செய்யப் பட்ட பெண்களின் எண்ணிக்கை என்று தகவல்கள் நீள்கிறது நூலில்.

இஸ்ரேல் கொடுத்த அடி, பேராயர் கொலை , மனிதக் கறி , ஓடிப் போனமை , ஒழிந்தமை ,இறந்தமை உகாண்டாவில் சுதந்திரக் காற்று என மேலதிகமாக இருக்கின்ற தலைப்புக்கள் அனைத்தும் இடியமினின் கொடுமைகளை கண் முன் நிறுத்துகின்றன.

இடியமின் செய்தது சீர் திருத்தமா , சீரழிவா என்பதை உலகம் என்றுமே புரிந்துக் கொள்ள வில்லை. உண்மை தெரிய வந்தப் போது ஒரு தேசம் அங்கெ அழிந்துக் கொண்டிருந்தது. ஹிட்லர் , முசோலினி வரிசையில் மனித குலத்துக்கு பெரும் நாசம் விளைவித்த சர்வாதிகாரியான இடியமினின் வாழ்க்கையை உகண்டா தேசத்தின் வரலாறோடு சேர்த்து தந்திருக்கிறார் நூலாசிரியர் ச.ந கண்ணன். நிச்சயம் இந்த நூலை சந்தர்ப்பம் கிடைத்தால் வாசித்து பாருங்கள். 

Tuesday, May 24, 2016

வின்சென்ட் சேர்ச்சில் .

வின்சென்ட் செர்ர்ச்சில் பற்றி அவ்வப்போது நாம் கேள்விப் பட்டிருபோபோம். அனால் அவரை அவரது வாழ்க்கை யை அப்படியே அச்சொட்டாக விளக்கியிருக்கிறது இந்தப் புத்தகம்.  போருக்கு என்று  சென்று விட்டால் உறுதி, தோல்வியில் எதிர்ப்பு; வெற்றியில் கண்ணியம்; அமைதியில் நல்லெண்ணம்’ - இதுவே ஒரு உலக வரலாற்றில் அன்றும் இன்றும் மாபெரும் தாரக மந்திரம்; சர்ச்சில் என்ற மாமனிதர் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. உழைப்பு, வீரம், எழுச்சி, திறமை, எதற்கும் அஞ்சாத போர்க் குணம்... இதுதான் வின்ஸ்டன் சர்ச்சில். இது தான் அவருக்கான அடையாளம்.


காட்டில் கால்நடையாக அலைவதைவிட யானையின் மீது அமர்ந்து போவது எளிது. யானை, துதிக்கையால் ஊசியை எடுக்கும். மரத்தை வீழ்த்தும். அதன் முதுகின் மேலிருந்து எல்லாவற்றையும் காணலாம். ஒரு காலத்தில் சேர்ச்சில் செய்தார். அது தான் 2ம் உலக யுத்தம்.பத்திரிகையாளனாகத் தன் வாழ்வைத் தொடக்கிய சர்ச்சில், ராணுவ வீரனாக உயர்ந்து தளபதியாக உருவெடுத்து நிதி அமைச்சராகி, இரண்டு முறை இங்கிலாந்துப் பேரரசின் பிரதம மந்திரியாக ஜொலித்தவர். ‘செய்தியை எழுதிக்கொண்டிருப்பதைவிட, ஒரு செய்தியைப் படைப்பது சிறந்தது’ என்று அவர் தனது முதல் நூலில் ஒரு கருத்தை வெளியிட்டதற்கு ஏற்ப அவருடைய அமைதியற்ற உள்ளம் போரில் ஈடுபட விரும்பியது என்றெல்லாம் அவருடைய வாழ்கை இந்த நூலில் அற்புதமாய் கூறப்பட்டுள்ளது.

இருபத்துமூன்று வயதில் போர். அவர்  கடை பிடித்த போர் முறைகள். அவருக்கு கிடைத்த அனுபவங்கள். அரசியல் அறிவும், உலக மக்களைப்பற்றிய அறிவும் பெற்றிருந்த வின்ஸ்டன், சாவ்ரோலா என்ற புதினத்தை எழுதியிருக்கிறார். அதன் கதாநாயகன் சாவ்ரோலா அடைந்த வெற்றிகளைப் பிற்காலத்தில் சர்ச்சிலும் அடைந்தார் என்பதுதான் வியப்பு. வின்ஸ்டன் சர்ச்சிலின் அகராதியில் ‘செயல்’ என்றால் ‘போர்’ என்று பொருள். அவர் போர் அனுபவங்களைப்பற்றிப் பதினான்கு நூல்களை எழுதியிருக்கிறார் போன்ற தரவுகள் எல்லாம் மேலதிகமாக இந்த நூலுக்கு பெருமை சேர்த்திருக்கின்றன. 


இங்கிலாந்துக்கு  முதலாம் மற்றும்  இரண்டாம் உலக மகா  யுத்தங்களின் போது இங்கிலாந்தை வழிநடத்தியது முதல் அந்த நாட்டு மக்களுக்கு நட்டு போர் வீரர்களுக்கு  அவர் ஆற்றிய போர் உரைகள் மட்டும் 20 நூல்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. உலக யுத்தங்களின் போது மட்டும் இங்கிலாந்துக்காக எட்டுப் படைகளில் அவர் பணிபுரிந்திருக்கிறார். உலகப்போர்களுக்கு முன்னர் அவர் நான்கு படையெடுப்புகளில் பங்கு பன்குபற்றியிருக்கீரார். போர் நிருபராகப் பெருந்தொண்டு புரிந்துள்ளார். இரு உலகப்போர்களையும் இயக்கி இன்றலச்வும் இங்கிலாந்தை ஒரு வெற்றி சரித்திரமாக மற்றிய அமைத்திருகின்ற அவருக்கு மட்டுமே உரியது. 


வேறு பல ஆட்சியாளர்கள் இருந்திருந்தாலும் சேர்ச்சில் அளவுக்கு இங்கிலாந்து நாட்டு வெற்றிக்காக அவர்கள் உழைக்க வில்லை போன்ற தகவல்களோடு இந்த நூல அமையபெற்றிருக்கிறது.  நூலாசிரியர் எம்.எக்ஸ்.மிராண்டா வின் எழுத்துக்கள் வின்சென்ட் சேர்ச்சில் எவ்வளவு பெரிய இன்றியமையாத தலைவர் என்பதையும் அவர்  கொண்டிருந்த போர் குணத்தையும் தெளிவாக தந்திருக்கிறார். வின்ஸ்டன் சர்ச்சிலின் வாழ்க்கைச் சரித்திரம் போராட்டம் நிறைந்தது. படிக்கப் படிக்கப் வாசிப்பு என்ற அமிர்தத்தை  தரக் கூடியது எத்தனை போர்கள்.. எத்தனை அரசியல்கள்.. எத்தனை துரோகங்கள். சர்ச்சிலின் சரித்திரத்திலிருந்து பாடம் கற்போம்  இந்த நூல் துணைக் கொண்டு.