Friday, October 16, 2015

இந்தியாவின் தலை சிறந்த பந்துவீச்சாளர் ஓய்வு பெற்றார்..

ஒரு சர்வதேச தரம் மிகுந்த ஒரு இந்திய பந்துவீச்சாளர் ஓய்வு பெற்று விட்டார். இந்திய இந்த நிலைமையில் தலை நிமிர்ந்து விளையாட  எண்ணற்ற பல வெற்றிகளை குவிக்க காரணமாகவும் இருந்த ஒரு வீரர் ஓய்வு பெற்று விட்டார். வாழ்த்துக்கள் சாகிர் கான்.2003, 2011 உலகக்கோப்பைகளில் மிக சிறப்பாக பந்து  வீசி முதன் முறை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியதையும், 2வது  முறையாகவும்  இந்தியா உலகக்கிண்ணத்தை  வென்றதும் ஜாகீர் கானின் நினைவுகளை நம்மிடையே ஆழமாக்கும்.


சச்சின் டெண்டுல்கர் எப்படி பிரியாவிடையை மகிழ்ச்சியுடன், மனதிருப்தியுடன் ஈற்று கொண்டு ஓய்வு பெற்றாரோ அத்தகைய பிரியாவிடைக்கு உரியவர் சாகிர் கான்.இந்திய வரலாற்றில் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றில் கபில் தேவுக்கு பிறகு உலக அளவில் அதிக விக்கட்டுகளை கைப்பற்றிய வீரர் சாகிர் கான் தான்.வேக பந்துவீச்சு எப்போதுமே கிரிக்கெட்டுக்கு ஒரு பலம் என்பதை பல முறை நிரூபித்தவர் சாகிர் கான்.

எண்ணற்ற பலம் தலை சிறந்த விக்கட்டுக்களை கைப்பற்றி பல தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர், தவிர தலை சிறந்த ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களை குட ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க  வைத்த பந்துவீசி அசகாய சூரர் சாகிர் கான்.இப்படி இவரை பற்றி குறிப்பிட்டு கொண்டே போக முடியும் அவர் ஓய்வை அறிவித்து விட்டார் வாழ்த்துக்கள் மறுபடி மறுபடி சாகிர் கான்.

தனது ஓய்வு தொடர்பாக சாகிர் கான் அளித்த அறிக்கை வருமாறு,

ஒரு வீரருக்கு கடினமான தருணமே அவர் அந்த விளையாட்டை விட்டு ஓய்வு பெறுவது தான் எனக்கும் அந்த நிலைமை இப்போது வந்து விட்டது கடினமாக இருக்கிறது.எனது ஆரம்ப கால கிரிக்கெட் எனக்கு இனிமையாக நினைவிருக்கிறது. 1996-ம் ஆண்டு நேஷனல் கிரிக்கெட் கிளப் முதல் மும்பை அண்டர்-19 அணிக்கு அழைக்கப்பட்டது நினைவிருக்கிறது. அதன் பிறகு எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியில் சில மாதங்கள் பயிற்சி பெற்றது, பரோடா அணிக்கு எதிரான எனது அறிமுக போட்டி, அதிலிருந்து மும்பை அணியை தலைமையேற்று நடத்தியது என்று ஒவ்வொரு ஆட்டத்தையும் நான் உற்சாகத்துடன் அணுகினேன். ஒவ்வொரு ஆட்டமும் என்னை வெளிப்படுத்திக் கொள்ள சிறந்த வாய்ப்பாகவே இருந்தது. கிரிக்கெட் களத்தில் ஒரு வீரனாக எப்போதும் மேம்பாடடையவே முயன்றேன்.




எனது மிக முக்கியமான தருணம் 2011 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. நாங்கள் ஒரு சிறந்த அணியாக விளையாடினோம், இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் இடத்தைப் பிடித்த காலக்கட்டத்தில் விளையாடியது நிறைவைத் தருகிறது. இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியை வென்று கொடுத்த கணங்கள் எனக்கு திருப்திகரமான காலங்களாகும். வெற்றி பெறுவது என்பது ஒரு போதை. எனவே இந்திய அணிக்காக வெள்ளைச் சீருடையில் பங்கேற்று இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணியாக எழுச்சிபெற்றது எனக்கு மகிழ்ச்சிதரும் கணமாகும். எனது கனவைத் துரத்த என்னைப் புரிந்து கொண்ட எனது பெற்றோருக்கு எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் அது போதாது.



கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் மட்டுமே எனது வாழ்க்கை. உண்மையில் கூறவேண்டுமெனில் அது ஒன்றுதான் எனக்குத் தெரிந்தது. கிரிக்கெட்தான் நான் இப்போது உருவாகியிருக்கும் தனிமனிதனாக என்னை ஆக்கியது. எனக்கு வாழ்க்கையில் சகலத்தையும் அளித்தது, அளிக்கப்போவதும் கிரிக்கெட்தான். மிகச்சிறந்த நினைவுகளுடன் நான் விடைபெறுகிறேன்.

நீங்கள் இன்னும் மிக சிறந்த வீரராக விளங்குவீர்கள்.சலம் கூறி வலி அனுப்பி வைக்கிறோம்சாகிர் கான். மற்றுமொரு இந்திய அணிக்கு உங்கள் போல் பொறுப்புணர்ந்து விளையாடும் வீரர் வேண்டும்.

No comments:

Post a Comment