Friday, February 19, 2016

நரிக்குறவர்கள் ..



நரிக்குறவர்களின் இனவரலாறு, தோற்றம், இடப்பெயர்ச்சி, சமூக அமைப்பு, மொழி, வாழ்க்கைமுறை, சமூக மாற்றம் இவற்றுடன் அவர்களுடைய திருமணம், சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், புழங்குபொருட்கள், வழக்காறுகள் என அனைத்து விவரங்களையும் மிக எளிமையாகவும் சுவையாகவும் இந்த நூலில் அறிந்துக் கொள்ள முடியும். 

உண்மையில் யார் இந்த  நரிக்குறவர்கள் என்று தேடி பார்த்தால், அவர்களின் வாழ்க்கை நமக்கு பல துன்பங்களை கற்று தருகிறது. அதாவது இந்திய ஆரிய வழி சமூகத்தில்  தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு,இம்சைகளை தொடர்ந்து அனுபவித்து   வருகின்ற ஒரு இனம்இந்த நரிகுறவர்கள் . நாகரிகமற்ற நிலை, உடல் துர்நாற்றம், சுத்தமில்லாத ஆடை போன்றவையும் , பார்த்த உடனேயே குமட்டலைத் தந்து வாந்தியெடுக்கும் உணர்வை ஏற்படுத்துமாரான ஒரு அடையாளம் தான் இந்த நரிகுறவர்களினுடையது.

மேலும் இந்த இனத்தைப்பற்றி இன்னொரு மிக முக்கியமான விடயத்தையும் கூறியாக வேண்டும் சுறுசுறுப்பு, கடின உழைப்பு, கூடி மகிழும் இயல்பு, பொறுமை, இருக்கும் சூழலில் இன்புற்று வாழும் நிலை போன்றன இயல்பான ஆறறிவு மனிதனில் வேறுபட்டு இவர்களுக்கு மட்டுமே உரிய இயல்புகள்.

 இந்த நூலிலிருந்து இந்த இனத்தின் ஒரு அடையாளம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது அதாவது வேடுவர்களை  போலவே இவர்களும் வேட்டையாடுதலை மிக முக்கிய தொழிலாக கொண்டவர்கள்.வேட்டையாடினால்தான் அன்றைய பிழைப்பு இவர்களுக்கு.

பொதுவாக குறவர்கள் என்று வழங்கப்படும் இனத்துக்கும் இந்த நரிக்குறவர் இனத்துக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. குறவர்கள் என்பவர்கள் பண்டைக்கால தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மலையும் மலை சார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்தவர்கள்.. குற்றாலக்குறவஞ்சி போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக அறியப்பட்டவர்கள். ஆனால் நரிக்குறவர்கள் என்பவர்கள் வேறுவகையானவர்கள். அவர்கள் நாடோடிகள். தமிழகத்தில் குடியேறிய சமூகத்தினர்.


நரிக்குறவர்கள் குஜராத், மேவார் போன்ற பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பது இந்த நூலில் இருந்து தெரிய வருகிறது. மேலும் அவர்களின் பூர்வீகமும் அது தான்.முகலாயப் படையெடுப்பின் பிறகு அவர்களுக்குப் பயந்து காடுகளில் வசிக்கத் தொடங்கிய அவர்கள் காடுகளைச் சார்ந்தே தங்களுடைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டனர் போன்ற தகவல்கள் இந்த நூலில் பெண் எழுத்தாளர்  கரசூர் பத்மபாரதியினால் கூறப்பட்டுள்ளன. 

 தமிழகத்தில் ஏறக்குறைய எழுபது வகையான குறவர்கள் இருந்தாலும் தொழில் அடிப்படையில் பூனைகுத்தும் குறவர், உப்புக் குறவர், மலைக்குறவர் போன்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.நரிகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உண்பதாலும் நரித்தோல், நரிப்பல், நகம் வால் கொம்பு முதலியவற்றை விற்பதாலும் குறிப்பிட்ட இனத்தை நரிக்குறவர் இனம் என்பதாகத் தெரிகிறது.

இவ்வாறு இந்நூலில் பரவலாகக் காணப்படும் பல தகவல்கள் நரிக்குறவர் வாழ்க்கை பற்றிய ஒரு முழுமையானக் கண்ணோட்டத்தை நமக்கு வழங்கக்கூடியவை எனலாம்.நாம் முற்றிலும் அறிந்துகொள்ள விரும்பாது ஒதுக்கியும் உதாசீனப்படுத்தியும் வைத்துள்ள ஒரு சமூகத்தை, அதனுள் இருந்து பார்ப்பது போன்ற உணர்வைத் இந்த நூல் தருவதுடன் வாசித்து முடித்ததும் அவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் நமக்கு உண்டாவது  போன்றதான ஒரு புரிதல் இந்த நூலில் நிச்சயம் வெளிப்படும்.



Tuesday, February 16, 2016

இந்த முறை ஆசிய கிண்ணம் யார் வசம்?





உச்சத்தைத் தொட்ட பிறகு எல்லா அணிகளுக்கும் தான் தம் அணியை பற்றிய ஒரு பிரமிப்பு இருக்கும் அந்த வகையில் இந்த முறை ஆசிய கிண்ணத்தில் பங்கு பற்ற போகின்ற ஆசிய அணிகளுக்கு தமது அணி பற்றிய கனவு இருப்பது சாதாரணம் தான்.

இந்நிலையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளும் இன்னும் தம்மை, தமது திறமையை சரியாக நிரூபிக்க தவறாத அணிகளாக ஆசிய கண்டங்களில் இனங்கான பட்டிறிக்கின்ற மாலைத்திவுகள்,ஐக்கிய அரபு ராச்சியம், ஹாங் காங், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளில் ஒரு அணி தெரிவு செய்யப்பட்டு இந்த போட்டிகள் இடம்பெறுகின்றன. 








போட்டிகள் பங்களதேசில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டிகள் வருகின்ற 24ம் திகதி ஆரம்பமாகின்றது. இதன்படி முதல் போட்டியில் இந்தியாவும் பங்காளதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

குறித்த 05 அணிகளும் மற்றைய 04 அணிகளுடன்  மோதிக் கொள்ளும் இதன்படி 02  போட்டிகளில் வெற்றி பெறுகின்ற அணிகள் தரப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கின்ற அணிகள் வருகின்ற மார்ச் மாதம் 05ம் திகதி இருஹிபோஅடியில் மோதிக் கொள்ளும்.மேலும் முதல் சுற்று போட்டிகளில் மிகவும் விறுவிறுப்பான போட்டி உலகிலேயே அதிக ரசிகர்கள் ரசிக்கின்ற ,அதிக ரசிகர்கள்  மைதானங்களில் கூடுகின்ற போட்டி வருகின்ற 24ம் திகதி நடைபெறுகிறது. யார் இந்த இரு அணிகளும் என்று பார்க்கிறிர்களா இந்திஆயவும் பாகிஸ்தானும் தான்.


ஒரு பக்கம் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியாக வேண்டும் என்று  ஒரு கனவு ,ஒரு எதிர்பார்ப்பு இருந்தாலும் இந்த மறை ஆசிய கிண்ணம் டி20 போட்டிகளாக மாற்றப்பட்டிருக்கின்ற  காரணத்தினால் குறித்த ஆசிய அணிகள் இந்த போட்டிகளை உலக கிண்ணம் டி20 போட்டிகளுக்கான முன்னோட்ட போடிகளாகவே பார்க்கும் என்பதுனான் உட்பட கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்து. இந்நிலையில்  எந்த அணி  இந்த முறை ஆசிய கிண்ணத்தை கைப்பற்றும் என்பதான ஒரு சிறிய அலசல்.


01.இந்தியா


கடந்த முறை ஆசிய கிண்ண போட்டிகளில் அரையிறுதிப் போட்டிகளோடு பாகிஸ்தானுடன் பலத்த அடி வாங்கியிருந்த இந்திய அணி இந்த முறை விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைய காலமாக பல விமர்சனங்களை சந்தித்திருகின்ற இந்திய அணி அண்மையில் இலங்கை அணிக்கு எதிராக  டி20 தொடரை கைப்பற்றியதையடுத்து கொஞ்ச குஷியாக இருகின்றது.

மிக முக்கியமாக ஆதிரடியை வழங்கக் கூடிய தவான், ரோஹித் ஷர்மா ஜோடி பந்த்கு வீச்சாளர்களை துவம்சம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் அணிக்கு மீண்டும்  திரும்பி இருக்கின்ற யுவராஜ் சிங்க் மீதும் பலரது எதிர்பார்ப்பும் இருகின்றது என்றே கூறலாம். 



குறிப்பாக அனைவரது கவனமும் தற்போது மகேந்திர சிங்க் டோனி மீதும் விராத் கொஹ்லி மீதும் தான் இருகின்றது காரணம் இரண்டு  தலைவர்கள் சகல விதத்திலும் நம்பிக்கையான  இருக்கின்ற இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். மேலும் துடுப்பாட்டத்திலும் சுழற பந்து வீச்சிலும் கலக்கி வருகின்ற சென்னை பையன் அஷ்வின் மீது  தற்போது எல்லோரது கவனமும். அதே போல இந்திய அணிக்கு சகிர் கானின் நிரந்தர ஓய்வுக்கு பிறகு மிக சிறந்த பந்து வீச்சு பரிதிகளை வழங்கி வருகின்ற பும்ரா அதிகமாக கவனிக்கப்படுவார் ரசிகர்களால்.


02. இலங்கை 


சென்ற வருடம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடி கிண்ணத்தை கைப்பற்றிய  அதே சந்தோசத்தோடு இந்த முறையும் களம் காண காத்திருக்கிறது இளம் இலங்கை அணி. ஒரே ஒரு குறை தான், சென்ற தொடரில் விளையாடிய அதே நேரத்தில் இலங்கை அணிக்கு எந்த நேரத்திலும் மிக பெரிய துண்களாக விளங்கிய மஹேல,மற்றும் சங்கா என்ற இரு பெரும் நட்சத்திரங்கள் இந்த முறை விளையாட மாட்டார்கள் காரணம் அவர்கள் ஓய்வு பெற்றதனால்.




மேலும் திலகரட்ன டில்ஷான் அனுபவம் வாய்ந்த வீரராக இலங்கை அணிக்கு நம்பிக்கை தர கூடிய வீரராக இந்த  முறை இலங்கை ரசிகர்களால் நோக்கப்படுவார். இதேபோல தற்போது உபாதையில் சிக்கி தவித்துக்  கொண்டிருக்கும் ரங்கன ஹேரத்தும் பந்து வீச்சில் இலங்கை அணிக்கு பலம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற படி அதே இலங்கை அணி லசித் மலிங்கவின் தலைமையின் கீழ் இந்த மறையும் ஆசிய கிண்ணம் வெல்லும் முனைப்போடு இலக்கை நோக்கி இலங்கை அணி ஆடுகளங்களில் போராடும்.


03.பாகிஸ்தான்.


கடந்த தொடரில் இலங்கை அணியிடம் வாங்கிய மிக நீண்ட அடியும்,சில விமர்சனங்களும் நிச்சயம் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் நினைவில் இருக்கும். பல வீரர்களின் ஓய்வுக்கு  பிறகும் பாகிஸ்தான் நிமிர்ந்து போராட தயாராக இருக்கிறது என்பது அண்மைய காலங்களில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக வெளிபடுத்திய  மிக சிறந்த பெறுபேறுகளில்  இருந்து தெரிய வருகிறது.



மேலும் போதை பொருள் குற்ற சாட்டில் சிக்கி  தற்போது பாகிஸ்தான் அணிக்கு திரும்பியுள்ள மொஹமட் அமீரின் பந்து வீச்சு மீதும் ரசிகர்களின்  பார்வை அதிகமாக இருக்கும். மற்றபடி அப்ரிடியின் தலைமையில் பாகிஸ்தான் அணி  மிக சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தும் என நான் உட்பட எல்லோரும் எதிர்பார்த்து காத்திருகிறோம்.


05.பங்களாதேஷ். 



 அடுத்த ஆஸ்திரேலிய அணி என்ற புகழப்படுகின்ற அளவுக்கு பங்களாதேஸ் அணியின் வளர்ச்சியை அண்மைய போட்டிகளின் மூலம் காணக் கூடியதாக இருக்கிறது. முதலில் இந்திய அணிக்கு எதிராக  பெற்ற தொடர் வெற்றி, அடுத்து தென்னாபிரிக்க அணிக்கு எதிராக பெற்ற டி20 தொடர் வெற்றி என பங்களாதேஷ்  அணி கொடுத்தல் குஷியில் இருக்கிறது தாமும் மேற்கூறிய முதல் தர அணிகளுக்கு சவால் விடக் கூடிய அணி தான் என்ற நம்பிக்கையில். 



சொந்த மண்ணில் விளையாடுகிற  படியால் அதிகமான அழுத்தங்களை பங்களாதேஷ் அணி பிரயோக்கும் அதே நேரத்தில் எதிரணிகள் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கோடு போட்டிகளில் பங்கு பற்றும் என எதிர்பார்க்கலாம்.




1984 ம் ஆண்டு முதல் நடைபெறுகின்ற ஆசிய  கிண்ணப் போட்டிகளில் இதுவரையில் இந்திய அணி  06 தடவைகளும், இலங்கை அணி 04 தடவைகளும், பாகிஸ்தான் அணி 02 தடவையும் கின்னங்களைகைபற்றியுள்ளன. அதே நேரத்தில் பங்களாதேஷ் அணி எந்த வருடமும் கிண்ணத்தை கைப்பற்ற வில்லை. எனவே எல்லா பக்கமும்  மேற்குறிப்பிட்ட 04 அணிகளும் கிண்ணத்தை கைப்பற்ற கடுமையாக போராடும்.

Friday, February 12, 2016


தெற்காசிய  விளையாட்டுப்  போட்டிகள் ஒரு பார்வை.

கடந்த வாரம் 5ம் திகதியிலிருந்து தெற்காசிய நாடுகளுக்கு கொண்டாட்டம் தான் காரணம் தெற்காசிய வளையாட்டு போட்டிகள் ஆரம்பித்து களைகட்டிக் கொண்ருக்கின்றன.சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கின்ற இலங்கை ,இந்தியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் ,வங்கதேசம்,பூட்டான்,நேபாளம்,மாலைதீவு ஆகிய நாடுகளை சேர்ந்த 2500 வீர வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கு பற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டிகளை தொடக்கி வைத்தார்.





இம்முறை 12வது முறையாகவும் நடைபெறும் இத் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் குவாஹொட்டி இந்திரா காந்தி மைதானத்தில் ஆரம்பமானதோடு இந்தப் போட்டிகள் இந்தியாவில் இடம்பெறுவது இது 3வது சந்தர்ப்பமாகும்.

இதன்படி தடகளம்,கூடைபந்து,சைக்கிள் ,கால்பந்து,ஹன்ட்பால்,கபடி,கோ-கோ,துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ்,நீச்சல்,டென்னிஸ்,ட்ரையத்லான்,கைபந்து,பளுதூக்குதல்,மல்யுத்தம்,ஆடவர் கால்பந்து,ஆகிய விளையாட்டுக்கள் மிக பிரதான விளையாட்டுக்களாக விளையாடபடுவதோடு  இதற்கு மேலதிகமாக வில்வித்தை,பாட்மிட்டன்,குத்துசண்டை, ஜூடோ,டேபிள் டென்னிஸ்,தேக்வாண்டோ,வூசு (பெண்கள் ), ஆகிய போட்டிகளும் இடம்பெறுகின்றன.




நதிகளின்  பெயர்களில்  நிகழ்சிகள்.

தெற்கு ஆசிய நாடுகளில் ஓடும் நதிகளை நினைவுகூரும் முகமாக அல்லது பாரம்பரியத்தை போற்றும் முகமாகவும் இம்முறை நதிகளின் பெயர்களை ஒவ்வொரு நிகழ்சிகளின் பெயர்களும்  குறிபிடப்படிருந்தன.

இதன்படி பிரம்மபுத்திரா (இந்தியா), சிந்து நதி (பாகிஸ்தான்), காபுல் நதி (ஆப்கானிஸ்தான்), கோஸி (நேபாளம்), பத்மா நதி (வங்கதேசம்), மகாவலி (இலங்கை ), மாலை தீவு ( ஏரி) காரணம் மாலை தீவுகளில் ஆறுகள் கிடையாது ஆகிய   நதிகளை மையமாக வைத்து நிகழ்சிகள் நடத்தப்பட்டன.

லோகோ (இலட்சனை).



12வது தெற்காசிய விளையாட்டு போட்டியின் சின்னமாக இந்த முறை திஹொர் வடிவமைக்கப் பட்டிருந்தது.இந்த சின்னமானது தெற்காசிய நாடுகளுக்கிடையில் அமைதி ,முன்னேற்றம்,வலிமை ஆகியவற்றை வலியுறுத்துவதாக அமைந்தது.

இந்தியாவின் ஆதிக்கம்.




இதுவரை 12 முறை நடத்தப்பட்டுள்ள தெற்காசியப் போட்டிகளில் இந்தியா இதுவரை 7 முறை பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.தவிர பெரும்பாலான போட்டிகளில் பாகிஸ்தானே அதிக இரண்டாமிடன்களை பிடித்திருக்கின்றது.எனினும் கடுமையாகப்  போராடி இலங்கை இந்த முறை இரண்டாமிடத்துக்கு தரப்ப்படுத்தப்படுள்ளதுடன் இன்னும் கடுமையாகப் போராடுகின்ற சந்தர்ப்பங்களில் இலங்கை முதலிடத்துக்கு முன்னேறக்கூடிய சந்தரங்கள் அதிகம் இருக்கின்றன.கடந்த கால தோல்விகளும் எழுச்சி கண்ட இலங்கையும்.

கடந்த இரு வருடங்களை போல  இல்லாமல்  தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கையை பிரதிநிதுவப்படுதுகின்ற இலங்கை வீரர்கள் மிக சிறந்த பருதிகளை மிக சிறந்த வெற்றிகளை தேடி கொடுத்திருகின்றனர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இந்நிலையில் இது வரையான  போட்டிகளின் அடிப்படையில் இந்தியா 146 தங்கம் ,79 வெள்ளி,23 வெண்கல பதக்கங்களை கைப்பற்றி தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்க இந்தியா பாகிஸ்தான் போன்ற மிக பெரிய நாடு வீரர்களிடம் சவால் விடும் அளவுக்கு இலங்கை 25 தங்கம் ,53 வெள்ளி,79 வெண்கல பதக்கங்களை கைப்பற்றி  பதக்கப்படியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது.


இதன்படி இதுவரை நடந்துள்ள  போட்டிகளின் அடிப்படையில் இலங்கை 25 தங்க பதக்கங்களை கைப்பற்றி எமது  தாய் நாட்டுக்கு பெருமை தேடி தந்த தங்க நாயகர்கள் பற்றிய தேடல்  இது.

01. மெத்திவ் அபேசிங்க.
அண்மைய காலமாகவும் சரி இனிமேல் நடைபெற போகின்ற போட்டிகளிலும்  சரி  நீச்சல் போட்டிகளில் இந்திய வீரர்களை இந்திய நீச்சல் வீர,வீராங்கனைகளை வீழ்த்த முடியாமல் இருக்கின்றதே என்ற ஏக்கம் பலருக்கும் இருந்தது. ஆனால் இந்தமுறை இந்த கனவு பளித்திருக்கின்றது.ஆம் இலங்கையை  பிரதிநிதித்துவப்படுத்தி நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றிய மெத்திவ் அபேசிங்க தங்க பதக்கங்களை வென்றது  மட்டும் அல்லாமல் புதிய சாதனை ஒன்றையும் நிலைநாட்டியிருந்தார்.

அதாவது கடந்த 10ம் திகதி இடம்பெற்ற ஆண்களுக்கான குறுந்தூர மற்றும் நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றிய மெத்திவ் அபேசிங்க 200மீற்றர் நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கபதக்கத்தை கைப்பற்றி கொண்டதோடு, ஆண்களுக்கான 100மீற்றர் ப்ரி ஸ்டைல் (Free Style) நீச்சல் போட்டியிலும் அவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி  மொத்தமாக 7 தங்கப் பதக்கங்களை கைப்பற்றிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.கடந்த 1991 ம்ஆண்டு இடம்பெற்ற தெற்காசிய போட்டிகளில் நீச்சல் வீரர் ஜுலியன் போலிங் 6 தங்கப்பதக்கத்தை பெற்றிருந்ததே, இது வரை  தனிநபர் சாதனையாக  இருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த முறை மெத்திவ் அபேசிங்க கைப்பற்றிய தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 05 என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

2. சுரஞ்சித் 200 மீ.ஓட்டப்போட்டிகள்.

கடந்த 2ம் திகதி இடம்பெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் சுரன்ஜித் த சில்வா 21:00 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து இலங்கைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்திருந்தார்.

3. சந்தருவான்- கோலுன்றி பாய்தல்.
கடந்த 10ம்  இடம்பெற்ற கோலுன்றி பாய்தல் போட்டியில் இலங்கை வீரர் எம்.எச்.ஐ.  சந்தருவான் இலங்கைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.இதன்படி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சந்தருவான் 4.90 மீற்றர் பாய்ந்து தங்கப்பதக்கத்தை  வெற்றிக் கொண்டிருந்தார்.மேலும் கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் முகம்மது ஐயூபின் தெற்காசிய சாதனையை முறியடித்திருந்ததோடு பாகிஸ்தான் வீரர்   ஐயூப் 4.81 மீற்றர் உயரம் பாய்ந்திருந்தார்.என்பதும் இங்கு கவனிக்கக்கூடியது. மேலும் இலங்கைக்கு மொத்தமாக இலங்கைக்கு மொத்தமாக 09 தங்கப்பதக்கங்கள் தடகள போட்டிகளில் மட்டும் கிடைத்துள்ளன.

4.இந்துனில் ஹேரத் - 800 மீற்றர்.
இலங்கையை பிரதிநிதிதுவப்படுத்தி இந்த முறை 800 மீட்டர் ஓட்டப்போட்டிகளில் பங்குபற்றிய இந்துனில் ஹேரத் குறிப்பிட்ட தூரத்தை 1:51.46 என்ற மணித்தியாலத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியிருந்தார்.

5.கிமிகோ ரஹிம் - 100 மீட்டர் ஓட்டப்போட்டிகள்.

பெண்களுக்கான 100 மீற்றர் பிரிஸ்டைல் போட்டியில் கிமிகோ ரஹிம்  தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.இதன்படி குறிப்பிட்ட தூரத்தை அவர் 57.20 என்ற நிமிடங்களிலேயே கடந்து தங்க பதக்கத்தை தனதாக்கியிருந்தார்.இந்த பதக்கத்தோடு சேர்த்து இவர் கைப்பற்றிய தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 03. ஏற்கனவே 50 மீட்டர் நீச்சல் போட்டியில்  குறிப்பிட்ட தூரத்தை 26.49 நிமிடத்தில்  கடந்ததோடு, 50 மீற்றர் பின்நோக்கி நீந்தும்  நீச்சல் போட்டியில்    தங்கப்பதக்கத்தை கைப்பற்றியிருந்தார்.

6.ஜீவன் ஜயசிங்க - வீதியோர சைக்கிளோட்டம்.

இலங்கை வீர வீராங்கனைகளில் கவனிக்கப்படக் கூடிய ஒரு மெய்வல்லுனர் தான் இந்த ஜீவன் ஜயசிங்க, அதாவது கடந்த 10ம் திகதி இடம்பெற்ற வீதியோர சைக்கிளோட்டபோட்டிகளில் இலங்கைக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்காது என்ற மனநிலையில் இலங்கை ரசிகர்கள் இருக்க யாரும்  எதிர்பார்க்காத நேரத்தில்  ஜீவன் ஜயசிங்க  இலங்கைக்கு தங்கபதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.

இதோடு சேர்த்து இலங்கை மல்யுத்த வீரர்கள் இலங்கைக்கு 12 பதக்கங்களை பெற்றுக்கொடுத்துள்ளனர். இம்முறை முதன் முறையாக பங்குபற்றிய இலங்கை பெண்கள் மல்யுத்த வீராங்கனைகள் 5 வெள்ளிப்பதக்கம் 3 வெண்கலப்பதக்கக்களையும் பெற்று கொடுத்ததோடு,ஆண்கள்  மல்யுத்த அணி ஒரு வெள்ளிப்பதக்கமும் மூன்று வெண்கலப்பத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட இரு பிரிவிலும் இலங்கைக்கு தங்கபதக்கங்கள் கிடைக்கவிட்டாலும் கூட அடுத்த முறை இலங்கை ல்மல்யுத்த வீர வீராங்கனைகள் பதக்கங்களை கைப்பற்றுவார்கள் என் ஏதிர்ப்பர்க்கடுகிறது.

7.   அதிவேக வீர வீராங்கனைகள் இலங்கையில் ......
இந்த போட்டிகள் தங்க பதக்கங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்க  எல்லா நாடுகளும் கவனித்த மற்றுமொரு விடயம் இலங்கையில் தான் தெற்காசியாவிலேயே அதி வேக வீர வீராங்கனைகள் இருகின்றார்கள் என்பது,  இந்த யதார்த்தம் நிகழ்ந்தது கடந்த 09ம்  திகதி தான்.அதாவது ஆண்களுக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப்போட்டியில் ஹிமாஷ எஷான் 10.26 செக்கன்களில் ஓட்டத் தூரத்தை கடந்ததன் மூலம் புதிய அசதனையை படைத்ததோடு  தங்கப்பதக்கத்தை மகிழ்ச்சொயோடு கைப்பற்றினார்.இந்த சாதனையின் மூலம் இவர் தெற்காசியாவின் அதிவேக ஒட்டவீரர் என்பதை மற்றுமொரு உலக மக்கள் அரங்குக்கு பறை சாற்றியிருந்தார்.1999ம் ஆண்டு இலங்கை வீரர் சிந்தக்கவின் சாதனையை கிட்ட தட்ட 17 வருடங்களுக்கு பின்னர் எஷான் முறியடித்துள்ளமை மேலும் சிறப்பம்சமாகும்.

மேலும் பெண்களுக்கான 100மீற்றர் ஓட்டப்போட்டியில் ருமேஷிக்கா ரத்நாயக்க 11.60 செக்கன்களில் ஓடி தெற்காசிய சாதனையை நிலைநாட்டியதோடு தங்கப்பதக்கத்தையும் பெற்றார். இவர் 11.71 செக்கன்களில் அத்தூரத்தை கடந்திருந்தார்.

08.மஞ்சுல குமார- உயரம் பாய்தல்.
கடந்த 08ம் திகதி இடம்பெற்ற உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி உயரம் பாய்தல் போட்டியில்  பங்குபற்றிய மஞ்சுல குமார 2.17 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

09.கே.எல்.ஏ நிமாலி லியானாராச்சி- பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டி.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கே.எல்.ஏ நிமாலி லியானாராச்சி 2.09.40 நிமிடங்களில் போட்டித் தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றி மற்றுமொரு தங்கப்பதக்கத்தை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பெண் இரட்டை குழந்தைகளுடன் பதக்கம் வென்ற உபெக்ஷிகா மற்றுமொரு சாதனையாளர் இலங்கையை பொறுத்த வரையில்.
அதாவது தெற்காசிய போட்டிகளுக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்து இரட்டை குழந்தைகளை பிரசவித்தவர் குழந்தைகளை பிரசவித்த உடனே எவாறு போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என்பது சாத்தியப்படக் கூடிய  விடயமா என்று வாசகர்கள் சிந்திக்கலாம்.ஆனால் இது உண்மை தான்  தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் குறி பார்த்து சுடும் போட்டிகளில் தனது அயராத முயற்சியால் உபெக்ஷிகா எகோட வெல வெங்கலப்பதக்கதை வென்று கொடுத்துள்ளார். இன்னும் 04 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்ற நிலையில்  இலங்கை வீர வீராங்கனைகள் இன்னும் சற்று முயற்சி செய்வார்களாயின் இலங்கைக்கு இன்னும் சில தங்கப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.

Wednesday, February 10, 2016








ஒரு தலை சிறந்த பினிஷர் ஓய்வு பெற்றார்.

போட்டி ஆரம்பித்த மறு நிமிடமே இந்த வீரரை பார்த்து விட்டால் ரசிகர்களின் கை தட்டல் விசில் சத்தம் மட்டும் தான் மைதானத்தில் வரும். முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டும் மிக அரிதான வீரர்களில் ஒருவர், 360 டிகிரி கோணத்தில் பந்துகளை துவம்சம் செய்பவர், இந்த வீரரின் துடுப்பில்  பந்துமட்டும் பட்டு விட்டால் நிச்சயமாக அது ஆறு ஓட்டமாக மட்டும் தான் இருக்கும்.



அவர் தான் நியூசிலாந்து அணியின் பர்ண்டன் மெக்கலம். நான் தற்போதைய காலத்தில் ரசிக்கின்ற மற்றுமொரு மிக சிறந்த வீரர் . இனிமேல் அவரை நாம் ஒரு நாள் போட்டிகளில் பார்க்க முடியாது காரணம் இன்றோடு அவர் ஓய்வு பெறுகிறார்.அதுவும் தனது துடுப்பாட்டத்தில் தனது துடுப்பாட்ட வியுகத்தில் மாற்றங்களை கொண்டு வராமல் தனக்கே உரிய முறையில் கடைசி போட்டியிலும் 27 பந்துகளில் 47 ஓட்டங்களோடு.



அதிரடியாக கிரிக்கெட் விளையாடுபவர்களை  காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்று கூறுவோம். உண்மையிலேயே காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடக்கூடியவர்தான் இந்த மெக்கல்லம்.  பிச்சிக்கு நடுவில் வந்தே இருக்காது ஆனால் மெக்கலம் நாடு பிச்சில் இருப்பார். பிறகென்ன வருகின்ற பந்து ஆறு ஓட்டங்களை தொடும் அல்லது நான்கு ஓட்டங்களை தொடும் இது தான் மேக்கலமுக்கான அடையாளம். இனிமேல் ஏதாவது ஒரு போட்டி விறுவிறுப்பு இல்லாமல் சப்பையாக நடக்குமாயின்  அது நிச்சயம் மெக்கலமை நினைவு படுத்தும்.


கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டது. முதன் முதலாக அயல்நாட்டு வீரர்களும், இந்திய வீரர்களும் இணைந்து இந்தியாவில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கிறார்கள். நட்சத்திரப் பட்டாளங்கள் குவிந்த இந்த தொடர், உலகக்கோப்பை போட்டியை காட்டிலும் களை கட்டியது. ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி என்பதால் பெங்களூரு, சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.



இதன்படி முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் - பெங்களூரு அணியும் மோதிக் கொண்டன.  கொல்கத்தா அணியின் கேப்டன் கங்குலியுடன், பிரண்டன் மெக்குல்லம் களமிறங்கினார். முதல் ஓவரை பிரவீன் குமார் வீச, ஐந்து பந்துகளை சந்தித்த மெக்குல்லம் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. முதல் ஓவரில் ஒரு ரன் மட்டும் விட்டுக் கொடுத்து, டிராவிட்டின் முடிவு சரியானதே என ரசிகர்களுக்கு சொன்னார் பிரவீன் குமார்.







அடுத்த ஓவர், ஜாகீர்கான் பந்துவீச வந்தார், ஓவரின் முதல் பந்தில் ரன் இல்லை, அடுத்த நான்கு பந்துகளும் பவுண்டரி, சிக்சர் என நொறுக்கி தள்ளினார் மெக்குல்லம். ஐ.பி.எல் போட்டியில் முதல் ரன், முதல் பவுண்டரி, முதல் சிக்சர் மூன்றையும் அடித்தவர் மெக்குல்லம்தான். இரண்டாவது ஓவரோடு மெக்குல்லம் நின்றுவிடவில்லை. மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார். மறுமுனையில் கங்குலி, ரிக்கி பாண்டிங், ஹஸ்சி, ஹபீஸ் சொற்ப ஓட்டங்களில் நடயை கட்டிக் கொண்டிருக்க தனி ஒருவனாக  நின்று 73 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளையும், 13 சிக்சர்களையும் விளாசி தள்ளி 158 ரன்களை குவித்தார். பங்களூரு பந்து வீச்சாளர்களின்  பந்துகளை உடைத்து நொறுக்கி போட்டார். 20 ஓவரில் கொல்கத்தாவின் ஸ்கோர் 222.

மெக்குல்லத்தின் மரண விளாசலை கண்டு அத்தனை பேரும் ஆடி போனார்கள். மெக்குல்லத்தின்  அதிரடி  அந்த போட்டியில் இருந்துதான் தொடங்கியது. ஒரு தின போட்டியில் 150 ரன்கள் எடுப்பதே சாதனை என்ற காலக்கட்டத்தில், அனாயசமாக 20 ஓவரில் 158 ரன்களை குவித்திருந்தார் மெக்குல்லம். அந்த வகையில் கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ்க்கு எல்லாம் முன்னோடி இந்த மெக்குல்லம். சேஸிங்கில் களமிறங்கிய பெங்களூருக்கு அதிக ரன்கள் எப்படி வந்தது தெரியுமா? எக்ஸ்ட்ராஸ் மூலமாகத்தான் 19 ரன்கள் வந்தது. பிரவீன் குமாரை தவிர வேறு யாரும் இரட்டைப்படை எண்ணிக்கையில் ரன்கள் குவிக்கவில்லை. பரிதாபமாக 82 ரன்களில் பெங்களூரு அணியின் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வர, 140 ரன்கள் வித்தியாசத்தில்  மெகா வெற்றி பெற்றது கொல்கத்தா...






பிரண்டன் மெக்கல்லம் 2002-ம் ஆண்டே நியூசிலாந்து அணிக்காக விளையாட ஆரம்பித்து விட்டார். மிகச்சிறந்த விக்கெட் காப்பாளராக  இருந்த மெக்குல்லம், சிறந்த பேட்ஸ்மேனாக மாறியது ஐ.பி.எல்-க்கு பின்னர் தான். டி-20 மட்டுமல்ல டெஸ்ட் போட்டிகளிலும் மெக்குல்லம் சிறந்த வீரர்தான். இந்திய மண்ணில், வலுவான சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இரட்டைச் சதமடித்தார் மெக்குல்லம். கடந்த ஆண்டு இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆக்லாந்து மைதானத்தில் இரட்டை சதம் அடித்தார். அத்துடன் மெக்குல்லம் அடங்கவில்லை. அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே இரண்டாவது இன்னிங்க்ஸில், 13 மணி நேரம் களத்தில் நின்று 559 பந்துகளை (93 ஓவர்கள்) சந்தித்தது 32 பவுண்டரிகள், நான்கு சிக்சர் விளாசி முச்சதம் எடுத்து முத்திரை   பதித்தார். இந்தியாவுக்கு ஷேவாக் போல நியூசிலாந்துக்கு மெக்குல்லம். முச்சதம் எடுத்த ஒரே நியூசிலாந்து வீரர் அவர்தான். நான்கு முறை டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம்  அடித்திருக்கிறார்.

ஆக நியூசிலாந்து அணி இன்னும் தரவரிசையிலும் சரி விளையாடுகின்ற போட்டிகளிலும் சரி மிக சிறந்த வெற்றிகளை குவித்திருக்கின்றது என்றால் அதில் மெக்கலாமின் பங்கு அலாதியானது. மிக முக்கியமாக  இங்கு கவனிக்க வேண்டியது இந்த வருடம் உலக கிண்ண போட்டிகளில் நியூசிலாந்து அணி எந்த வருடமும் வராதது போல இறுதி போட்டிக்கு  முன்னேறியது என்றால் அதற்கு காரணம் ரியல் ஹீரோ மெக்கலம் தான்.




வெற்றியோடு தனது கிரிக்கெட் பயணத்தை முடித்திருக்கிறார் வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்பி வைப்போம் வாழ்த்துக்கள் தலைவா! நிகாஹயம் கிரிக்கெட் உலக நாளைய போட்டிகளில்  உன்னை மிஸ் செய்யும்.


Monday, February 8, 2016

விளையாட்டு உலகில் தமிழர்கள்.

உலகம் முழுக்க தமிழர்கள் பரவி சிதறிக் கிடக்கிறார்கள் ,எல்லா  துறையிலும் தமிழர்களின் சாதனைகள் வானை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறதென்றே கூறலாம்.எனினும் விளையாட்டு உலகில் தமிழர்களின் ஆதிக்கம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே இருக்கிறதென்பது கொஞ்சம் தமிழர்கள் மத்தியிலே அங்கலாய்க்கப்படுகின்ற ஒரு விடயமாக இருந்தாலும் கூட  இந்த கட்டுரையில் குறிப்பிட போகின்ற தமிழர்கள் அனைவருமே தம் தம் துறையில் சாதனைகளை குவித்தவைகள் என்றே கூறலாம்.
அப்படி தம் துறையில் சாதித்து ,இன்னும் சாதித்துக் கொண்டிருக்கின்ற தமிழர்கள் பற்றிய ஒரு அலசல் இது.

@.முத்தையா முரளிதரன்-கிரிக்கெட்.

உலக தமிழர்கள் அனைவரும்    800 என்ற இந்த இலக்கத்தை அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள் காரணம் இந்த உலக சாதனையாளன் உலக சாதனை படைத்து  ,தன் பெயரை கின்னஸ் புத்தகத்தில் அழுத்தமாக பதிக்கவும்,தன்னை கிரிக்கெட் உலகம் எப்பொதுமே நினைவு கூறவும் கைப்பற்றிய விக்கட்டுக்களின் எண்ணிக்கை அது.
முரளி இலங்கை கிரிக்கெட் அணிக்குள் ஒரு சகாப்தம்,133 டெஸ்ட் போட்டிகள் ஆடுகளங்களில் அனல் பறக்கும் பந்து வீச்சு,இதில் ஒரு போட்டியில் மட்டும் 5 விக்கட்டுக்களை கைப்பற்றிய சந்தர்பங்கள் 67 வும்,10 விக்கட்டுக்களை கைப்பற்றிய சந்தர்பங்கள் 22 வும் அடங்கும்.


1992ம் அகண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது கன்னி டெஸ்ட் போட்டியிலும் ,2010 ம் ஆண்டு  இந்திய அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும்  விளையாடி சாதனையோடு 2010 ஆம் ஆண்டு விடைபெற்றார்.

முரளியின் பந்து வீச்சு என்பது ஆடுகளங்களில் அசத்தல் மிகுந்தது.தான் விளையாடிய 18 ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட விருதுகள்,பல தடவைகள் ஐ.சி.சி யின் தேசிய அணியில் பிரதான சுழற்பந்து வீச்சாளராக அறியப்பட்டவர் என்பதோடு  சேர்த்து இலங்கை அணி வென்ற உலக கிண்ணத்தை  கைப்பற்ற மிகமிக முக்கிய பங்காற்றியவர்.
நிச்சயம் முரளி இலங்கை கிரிக்கேட்டுக்குள் மட்டுமல்ல உலக தமிழ் மக்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமான உதாரணமான விளையாட்டு வீரர் தான்.



@. விஸ்வநாதன் ஆனந்த்.

மற்றுமொரு தமிழ் விளையாட்டு உலகின் பொக்கிஷம் இந்திய தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். 1992ம் ஆண்டு ரஷ்ய மண்ணில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டிகள் வாசகர்களுக்கு சில சமயங்களில் நினைவில் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் இந்த போட்டி தான் விஸ்வநாதன் ஆனந்த் என்ற உலக சாதனையாளனை  உலகம் அறிய செய்த போட்டி.ஆறு வயதில் ஆரம்பித்த செஸ் வேட்கை அவரது 14வது வயதில் முதல் இந்தியா அளவிலான வெற்றியை தேடி தந்ததோடு   “மின்னல் சிறுவன்” என்று உலக மக்கள் போற்றும் அளவுக்கு பிரபலத்தை ஆனந்துக்கு தேடி தந்தது.


ஆனந்த் பிறப்பில் ஒரு பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். தனது தாயின் ஆசைப்படி சிறுவயது முதலே செஸ் போட்டிகளில் பங்கு பற்றியவர். ஆரம்பத்தில் மாநில அளவுகளுக்கு இடையிலான போட்டிகளில் கூட பங்கு பற்ற முடியாத அளவுக்கு மனதளவிலும் சரி,திறமையிலும் சரி தேங்கி போய் இருந்த ஆனந்துக்கு ஊக்கமும் உத்வேகமும் தந்தது 1991ம் ஆண்டு இடம்பெற்ற மாநில அளவிலான செஸ் போட்டிகள் தான்.



அதற்கு பின்பு ஆனந்தின் காட்டில் அடை மழை என்றே கூறலாம். பொறுமை விவேகம் என்று சொல்லி தான் பங்கு பற்றுகின்ற போட்டிகள் அனைத்திலும் நிதானமான அதே நேரத்தில் மிக சரியான வெற்றிகளை தேடி  கொண்டார். மேலும், 2003 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்று, “உலகின் அதிவேக சதுரங்க வீரர்” என்ற சிறப்பு பட்டமும் பெற்றார். பதினான்கு வயதில், ‘இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம்’, பதினைந்து வயதில் ‘அனைத்துலக மாஸ்ர் பட்டம், பதினெட்டு வயதில் ‘உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம் ஐந்து முறை ‘உலக சாம்பியன் பட்டம்’ என  சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை, இமயம் தொடச் செய்தவர்.

இதுவரைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’ மற்றும் ‘அர்ஜுனா விருது’ என பல விருதுகளுக்கும் சொந்தக்காரர்  என்பது பலருக்கு தெரியாத விடயம். மேலும், பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் ‘புக் ஆஃப் தி இயர்’, ‘சோவியத் லேண்ட் நேரு விருது’, 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான ‘சதுரங்க ஆஸ்கார் விருதுகள்’ என மேலும் பல விருதுகளை வென்றுள்ளார். உலகளவில் சதுரங்கப் விளையாட்டில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்துவரும் ஒரு தமிழர் ஆனந்த்.



@.ரவிச்சந்திரன் அஷ்வின்.



ரவிச்சந்திரன் அஷ்வின்... 
அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் வரிசையில் இந்திய
கிரிக்கெட் அணிக்குக் கிடைத்து இருக்கும் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர்! சுழற பந்து ஜாம்பவான்  முரளிதரனுக்கு 'தூஸ்ரா'போல ரவிச்சந்திரனுக்கு 'கேரம் பால்'!.


முதல் போடியிலே சாதனை 5 விக்கட்டுக்களை கைப்பற்றிய சாதனையோடு இந்திய அணையின் வரர்ந்து வருகின்ற நம்பிக்கை நட்சத்திரம் ரவி அஸ்வின். இது வரைக்கும் வெறுமனே 32 இரண்டு டெஸ்ட் போட்டிகள் கைப்பற்றியுள்ள விக்கட்டுக்களின்  எண்ணிக்கை 176. 5 ஒரே போட்டியில் 5 விக்கட்டுக்களை கைப்பற்றிய சந்தர்ப்பங்கள் 16உம் ஒரே போட்டியில் 10 விக்கட்டுக்களை கைப்பற்றிய சந்தர்ப்பங்கள் 4உம் அடங்கும்.
தவிர எதிர்கால இந்திய அணியின் சகலதுறை வீரராக பிரகாசிப்பார் என்கிறது இந்திய கிரிக்கெட் சபை தகவல்கள்.



@.தினேஷ் கார்த்திக்.
இந்த கட்டுரையில்  இடம்பிடித்திருகின்ற மற்றுமொரு தமிழர்  இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரும்,விக்கட்  காப்பாளருமான  தமிழகத்தின் தினேஷ் கார்த்திக். இவரது முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2004ம் ஆண்டும்,முதலாவது ஒரு நாள் போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக வும் முதல் டி20 போட்டி தென்னாபிரிக்க  அணிக்கு எதிராகவும் அமைந்தது.




ஒரு காலத்தில் இந்திய அணியில் நிரந்தர விக்கட் காப்பாளராக அறியப்படுவார் என நம்பப்பட்ட வேளையில், இந்திய அணி தலைவர் மகேந்திர சிங்க் தோனி யினால் இவருக்கான இடம் இந்திய அணியில் மறுக்கப்பட்டது என்றே கூறலாம். எனினும் சில போட்டிகளில் தனது மீள் பிரவேசத்தை  காட்டினாலும் சிறப்பான முறையில்  பிரகாசிக்க தவறியதால் இந்திய அணியில் இடம் கி0திக்காமல் தடுமாறி வருகிறார். தற்போது இந்திய அளவிலான போட்டிகளிலும் இந்த முறை இடம்பெற உள்ள  ஐ.பின் எல் போட்டிகளில் ராயல் சாலஞ்சர்ஸ்  பெங்களூரு அணிககவும் விளையாடுகிறார்.




@.   முரளி விஜய்.
திறமை இருந்தும் இந்திய அணியில்  சரியான இடம் கிடைக்காமல் தடுமாறி வருகின்ற மற்றுமொரு தமிழக வீரர் முரளி விஜய். தனது முதல் டெஸ்ட் போட்டியை 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், முதல் ஒரு நாள் போட்டியை தென்னாபிரிக்க அணிக்கு எதிராகவும் விளையாடி தனது கிரிக்கெட் வாழ்கையை தொடக்கிய முரளி விஜய் இதுவரைக்கும் ஐ.பி.எல் போட்டிகள் உள்ளடங்கலாக எல்லா போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 5693 ஓட்டனகளை மட்டுமே பெற்றுள்ள முரளி விஜய் டெஸ்ட் போட்டிகளில் 06 சதங்களையும் 14 அரை சதங்களையும் ,ஒரு நாள் போட்டிகளில் தலா ஒவ்வொரு சதங்களையும் அடித்துள்ளார்.




தவிர தற்போது காயம் காரணமாக ஓய்வில் உள்ள முரளி விஜய் இந்த ஐ.பி.எல் போட்டிகளில்  கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார்.எதிர்வரும் காலங்களில் திறமையான் துடுப்பாட்டத்தை வெளிபடுத்தினால் இந்திய அணியில் முரளி விஜய்க்கு நிரந்தரம் இடம் கிடைக்கும்.


Tuesday, February 2, 2016









நான் முயற்சி செய்வதை எபோதுமே நிறுத்தியது இல்லை.- டிராவிட்.


இந்திய அணியின் தடுப்பு சுவர் பற்றிய ஒரு இனிமையான பகிர்வு இது.



டிராவிட் இந்த அணியின் ப்கொக்கியசம் என்றே கூறலாம்.ஒரு  காலகட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியில் 3,4ம் இலக்கத்தில் துடுபெடுத்தாட சரியான அதே நேரத்தில் நிதானமாகவும் ஓட்டங்களையும் குவிக்கக்கூடிய ஒரு வீரர் இந்திய அணியில்  இல்லை என்ற நிலையில் இந்திய அணிக்கு கிடைத்த ஹீரோ டிராவிட் என்று நான் புகழாரம் சொல்வேன் .



இதோ டிராவிட் தான் விளையாடிய காலத்திலும் சரி தான் ஓய்வுபெற்ற காலத்திலும் சரி தான் பங்கு பற்றிய போட்டிகளின் முடிவில் அவர் கூறிய சில இன்றியமையாத வார்த்தைகளின் தொகுப்பு இது.  



@.        ஓய்வு பெற்ற பொழுது டிராவிட் பேசியது

கிரிக்கெட் குறித்த என்னுடைய அணுகுமுறை பொதுவாக எளிமையானது. அணிக்காக முழு அர்ப்பணிப்பையும் தருவது; கண்ணியத்தோடு ஆடுவது, ஆட்டத்தின் ஆன்மாவை காப்பது ஆகியவையே அவை. இவற்றில் சிலவற்றையேனும் நான் இறுதிவரை மேற்கொண்டேன் என்று நம்புகிறேன். நான் சமயங்களில் தோற்றிருக்கிறேன், ஆனால், எப்பொழுதும் முயல்வதை நிறுத்தியதே இல்லை. அதனால் தான் நான் சோகத்தோடு விடைபெற்றாலும் பெருமிதத்தோடும் விடை  கொடுக்கிறேன்!.



@.         பிசிசிஐ விழாவில் அணி குறித்தும். தன்னை உத்வேகப்படுத்தியவர்கள் குறித்தும் டிராவிட் குறிப்பிட்டது:

சமயங்களில் சில வீரர்கள் மிகப்பெரும் சாதனைகளைத் தங்களின் உழைப்பு, தியாகம் ஆகியவற்றால் அடைகிறார்கள். ஆனால், அவர்கள் அதிர்ஷ்டம் உடையவர்களாகவும் உள்ளார்கள் இந்திய கிரிகெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் என்று நீங்கள் எண்களைக் கொண்டேனும் கருதாத பலருடன் நான் விளையாடி இருக்கிறேன். ஆனால், என்னுடைய பார்வையில் இந்த விளையாட்டை என்னுடைய ஆடிய அனைவரும், வெற்றிப் பெறவேண்டும் என்று போராடிய அனைவரும், வெல்ல வேண்டும் என்கிற உத்வேகத்தோடு தங்களாலான அனைத்தையும் தந்த அனைவருமே நாயகர்கள் தான். உங்களிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து ஓயாமல் உழைத்தும் தாங்கள் விரும்பியது கிடைக்காமல் போனாலும், மீண்டும், மீண்டும் துவளாது போராடும் உங்களைக் காண்பதே எனக்கு உத்வேகத்தை எப்பொழுதும் தந்தது... இந்திய கிரிக்கெட் அணியின் அங்கமாக இருப்பதை நான் நிச்சயம் மிஸ் செய்வேன். அதை மட்டுமல்ல வெகுகாலம் நம்மிடையே இருந்த பரஸ்பர நம்பிக்கை, நட்பு, குறும்பாக ஒருவரை ஒருவரை வாரிக்கொண்ட கணங்கள், அந்த ஓயாத தேடல் எல்லாவற்றின் இன்மையையும் ஆழமாக உணர்வேன்...ஆனால், தாளமிடவைக்கும் இசை என்னோடு இருக்கும் என எண்ணுகிறேன்.




@.பிராட்மான் நினைவு சொற்பொழிவில் தனக்கும். பிராட்மானுக்கும் இடையேயான தொடர்பு பற்றி கூறியது.

அவரும் என்னைப் போலவே மூன்றாவதாகக் களமிறங்கும் மட்டையாளர். அது மிக, மிகக்கடினமான பணியாகும்.நாங்கள் தான் கிரிக்கெட்டின் அரசர்களுக்கான வழிப்பாதையைச் செப்பனிட்டு, எளிமையாக்கி தருகிறோம். என்னைவிடப் பிராட்மான் அதனை அதிக வெற்றி, அலாதியான பாணியோடு செய்தார். அவர் பல்வேறு பந்து வீச்சாளர்களைச் சிதறடித்து, இருக்கையின் நுனிக்கே பார்வையாளர்களைக் கொண்டுசென்றார். நான் எவ்வளவு நேரம் ஆடினாலும். மக்கள் சலிப்புற்று உறங்கப்போய்விடும் வாய்ப்புகளே அதிகம். என்றாலும், இப்படிப்பட்ட ஒரு இடத்தில் நெடுங்காலம் ஆடியதே பெருமைதான். அதன் அளவுகோல் என்பது தான் மிகச்சேர்ந்த மட்டையாளருக்கான அளவுகோல் என்று நான் அறிவேன். அது போதும் எனக்கு!


@. பிட்ஸ் பிலானி பட்டமளிப்பு விழாவில் பேசிய 'காத்திருப்பு' பற்றிய உரை:

என் தலைமையாசிரியர் என் பெற்றோர்கள் சொன்னதைக்கேட்டுஎன்னைக் கிரிக்கெட் ஆடாமல் செய்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். “நீங்கள் அவனின் கிரிக்கெட்டை பார்த்துக்கொள்ளுங்கள் ; நாங்கள் அவன் கல்வியைப் பார்த்துக்கொள்கிறோம் “என்றார் அவர்.தேர்வுகளுக்கு என் நண்பர்களின் குறிப்புகள் தான் உதவும் ; அதை அவசர அவசரமாகப் படித்துவிட்டு தேர்வுகளை எழுதினேன் நான். தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் ஆடிக்கொண்டு தான் இருந்தேன்.




டென்னிஸ் பந்தை பதினைந்து கஜங்களில் இருந்து வீசச்செய்து பயிற்சி செய்து வேகப்பந்து வீச்சாளர்களை இன்னமும் சிறப்பாக எதிர்கொள்ள என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். அண்டர் 19 இந்திய அணியின் கேப்டனாக ஆகியிருந்தேன். சிறந்த பந்துவீச்சுகளைச் சந்தித்துச் சிறப்பாகவே ஆடினேன் . ஆனாலும் நான் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. ஐந்து வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் தான் ஆடிக்கொண்டு இருந்தேன் நான். என்னுடைய கைனடிக் பைக்கில் இப்படி எழுதிக்கொண்டேன்.

@.கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”(“God’s delays are not God’s denials.” ).

திரும்பிப்பார்க்கிற பொழுது அந்த ஐந்து வருடம் அப்படி இருந்திருக்காவிட்டால் இப்பொழுது பெற்றிருக்கும் வெற்றிகளை என்னால் எதிர்கொண்டு இருக்க முடியாது என்பதே உண்மை என்று உணர்கிறேன். இதுவே என்னை வார்னே,முரளிதரன் மாதிரியான சுழல்பந்து வீச்சாளர்களைத் தைரியமாக எதிர்கொள்ளச் செய்தது. டென்னிஸ் பந்து பயிற்சி தான் அக்ரம்,மெக்ராத்,டொனால்ட் என எல்லாரையும் ஆடக்கடினமான பிட்ச்களில் கம்பீரமாகச் சந்திக்க உதவியது. நான் இளைஞர்களுடன் பேசுகிற பொழுது இந்தக் காத்திருத்தல் பற்றிதான் அழுத்தி சொல்வேன். ஒரு செடியின் கதை உங்களை ஈர்க்கப்போகிறது இப்பொழுது …



ஒரு சீன மூங்கில் விதையை நிலத்தில் நட்டு ஒரு வருடம் நீர் விட்டு பராமரித்து வளர்த்தாலும் அது முளைக்காது. ஐந்து வருடங்கள் வரை அது நிச்சயம் முளைக்காது. ஒருநாள் சின்னதாக ஒரே ஒரு சின்னஞ்சிறு செடி முளைக்கும். அடுத்த ஆறே வாரத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும் அது. ஒரே நாளில் 39 அங்குலம் கூட வளரும் அது. நீங்கள் செடி வளர்வதைக் கண்களால் பார்க்க முடியும் அந்த ஐந்து வருடங்கள் அந்தச் செடி என்ன செய்து கொண்டிருந்தது ? அது தன்னுடைய வேர்களை வளர்த்துக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்களாகப் பெருவளர்ச்சிக்கு அது தன்னைத் தயார்படுத்திக்கொண்டு இருந்தது. அந்த வேர்களைக்கொண்டுஅது தன்னைக் காப்பாற்றிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. ஆறே வாரத்தில் 90 அடிகள் வளர்ந்து நிற்கிறது என்று சிலர் சொல்வார்கள்.அது ஐந்து வருடம்,ஆறு வாரங்களில் 90 அடிகள் வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன் . அந்த ஐந்து வருடங்கள் என்னுடைய நம்பிக்கை,ஆர்வம்,என் திறமையின் மீதான என்னுடைய பிடிப்பு ஆகியவற்றைச் சோதித்தது என்றே சொல்வேன் – ராகுல் திராவிடின் BITS Pilani பட்டமளிப்பு உரையில் இருந்து ஒரு பகுதி

“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”((“God’s delays are not God’s denials.” ).

இந்த வாய்மொழிக் கதைகளில் நம்பிக்கைகள், அணுகுமுறைகள், அறிவின் சேமிப்புக் கிடங்குகள் எல்லாம் இணைந்து நம்முடைய கிரிக்கெட்டின் அடையாளத்தைத் தருகின்றன...இந்தியாவின் வண்ணமயமான கிரிக்கெட் கதை இன்னமும் எழுதப்படுகிறது...அதை மேலும் வளப்படுத்துங்கள்.

இந்த பகிர்வு பற்றி எனக்கு நீங்கள் என்ன நினைக்கிறேர்கள் என்பது பற்றி எனக்கு துளி கூட தெரியாது ஆனால் கிரிகெட்டை நேசிக்கிற  உண்மையான ரசிகர்கள் இந்த பகிர்வைநிச்சயம் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையில் நான்..