Sunday, August 23, 2015

நண்பர்களே நான் படித்து ரசித்த, என்னை சிந்திக்க வைத்த சிறந்த நூல்களை இங்கே தொகுப்பு செய்கிறேன். முடிந்தால் நல்ல நூல்களை வசித்து பயன் பெறுங்கள். நல்ல விடயங்களை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நெல்சன் மண்டேலா

மனிதனும் அல்லாத விளங்கும் அல்லாத நிலையில் தென்னாபிரிக்க கறுப்பின மக்கள் அடக்கி ஓடுகபட்டனர்.அவர்களது சுதந்திரம் பரிகபட்டது.செல்வங்கள் சுரண்டபட்டன.ஒரு உயிர் மனிதனாக மாற சுதந்திரம் தேவை என்பதை உணர வைத்து தென்னாபிரிக்க கறுப்பின மக்களுடைய சுதந்திரத்துக்கு இன்றியமையாத காரணமாக விளங்கியவர் நெல்சன் மண்டேலா.

தமது வாழ்நாளில் கிட்டத்தட்ட 27 வருடங்கள் சிறையில் கழித்த இந்த நூற்றாண்டின் மாபெரும் மானுட போராளி .1958 ஆம் ஆண்டு காலபகுதியில் வெள்ளையின அரசுக்கு எதிராக கறுப்பின மக்கள் சார்பில் குரல் கொடுக்க ஆரம்பித்த போது இன வெறி த்வேனபிரிக்க மண்ணில் செறிந்து கிடந்தது.கறுப்பின மக்கள் நெஞ்சத்தில் ரத்தம் சொட்ட,கண்களில் கண்ணீர் சொட்ட போராடிய கால கட்டம் அது.இதனை எதிர்த்து போராடிய போது தான் ஆயுத போரட்ட தலைவனாக,தேச துரோகியாக குற்றம் சுமத பட்டு ரப்ஹன் சிறையில் வைக்கப்பட்டார்.இந்த அகிம்சை வலி போராட்டம் தான் இன்றைய தென்னாபிரிக்க மக்களின் விடுதலை வேட்கை.

மண்டேலாவை போல மிக நீண்ட காலம் சிறையில் வாடிய உலக தலைவர்கள் கிடையாது. இவ்வாறு  பக்கத்துக்கு பக்கம் விடுதலை என்ற உணர்வோடு நெல்சன் மண்டேலா வினுடைய விடுதலை வேட்கையை மையமாக வைத்து எழுத்தாளர் மருதணினால் தொகுகபட்ட மிகசிறந்த தேடல் மிக்க நூல் இது.வரலாற்றின் மிக நீண்ட சிறைவாசியாக,கறுப்பின மக்களின் மீட்பராக, அநிதிகளுக்கு எதிரான எதிரபாளராக மானிடத்தின் அடையாளமாக நெல்சன் மண்டேலா அறியபடுகிறார்.
இந்த புத்தகம் நெல்சன் மண்டேலாவின் வாழ்கையின்  ஊடாக தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலை  போரட்டத்தின் வரலாறு.நிச்சயமாக நம்மில் பலர் வாசிக்க வேண்டிய நூல் இது.