Friday, October 2, 2015

ஜின்னா  தேசியவதியா? பிரிவினை வாதியா?


நம்மில் பலருக்கு காந்தியை பற்றிய அறிமுகம் மிக இருந்தாலும்,ஜின்னா என்பவரை
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இன்று உலக நாடுகளுக்கிடையில் தனி ஒரு முஸ்லிம் நாடாக பரிணமித்திருக்கின்ற பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் உருவாக காரணமானவரே  அவர் தான்.

மேலைத்தேய வீரிய கொடும் சமூகம் இந்தியாவை அடக்கி ஆண்டுக்கொண்டிருந்த போது இந்தியத் துணைக்கண்டத்தின் மிக முக்கிய  இஸ்லாமிய தலைவர்களில்  முதன்மையானவர் தான் முஹமது அலி ஜின்னா.இத்தனைக்கும் அவர் முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் யாத்திரையை கூட  மேற்கொண்டது கிடையாது.

இறக்கும் வரைக்கும் அவர் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்ததில்லை.மசூதிக்கு போவதை வழக்கமாக கொண்டதில்லை.குரானுக்கும் அவருக்கும் வெகு தூரம்.ஜின்னாவின் குடும்பம் எல்லா மதத்தவர்களையும் உள்ளடக்கியது.

இப்படி ஜின்னாவை சுற்றி நடைபெற்றிருக்கும் சர்ச்சைகள் தான் மெய் சிலிர்பூட்டுபவை. ஆனால் அவர் இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கினார்.அது எப்படி சாத்தியமாயிற்று அந்த கேள்விக்கான பதில்தான் இந்தப்புத்தகம்.

ஜின்னா பற்றி பல்வேறு அத்தியாயங்களில் பல்வேறு விதமாக, ஜின்னா பற்றிய விடை காணா வினாக்களுக்குரிய விடைகளை தகுந்த ஆதரங்களோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் ச. ராசமாணிக்கம்.

காங்கிரஸ் கட்சிகளை மிரட்டி ஜின்னா நடத்திய பிரிவினைவாதம் இந்த நூலில் தெட்டத்தெளிவாக காட்டப்பட்டுள்ளது.எல்லாவற்றையும் தவிர இந்திய முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் எனும் தனி நாடு ஏன் தேவைப்பட்டது என்பதற்கான கேள்விகளோடு புத்தகத்தின் சுவாரசியம் நீள்கிறது.

இவ்வாறு ஜின்னாவை பற்றி முற்றிலும் புதியக் கோணத்தில் இதுவரை அறியப்படாத எராளமான தகவல்களுடன் தக்கசான்றாய் விளங்குகிறது இந்தப் புத்தகம்.
வரலாறு பற்றிய தேடல் மிகுந்தவர்கள், அரசியல் விரும்பிகள், என வாசிப்பு மீதான தீராத வேட்கை கொண்டோருக்கான அறுசுவை விருந்து இந்த புத்தகம்..

உலகில் பிறந்த யாருமே மிக சிறந்த அறிவாளிகள் இல்லை. நான் படித்த
சிறந்த நூல்கள் பற்றிய அறிமுகங்களை இங்கே எழுதுகின்றேன். தயவு செய்து நீங்கள் என்னில் கண்ட பிழைகளை சூட்டிகாட்டுங்கள். அது எனது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். நன்றி....

No comments:

Post a Comment