Friday, September 25, 2015

எனது நூல் கிறிஸ்தவம்



மதங்களின் வேர் விசுவாசத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது.அதன் கிளைகள் மனிதத்தின் மீது மலர் சொரிய வேண்டும்.மனிதத்தின் மையத்தில் புயலாய் மையம் கொண்டு சமுதாயக் கரைகளை கருணையின்றி கடக்கும் எந்த மதமும் அதன் அர்த்தத்தை தொலைத்து விடுகிறது.
கிறிஸ்தவம் அது எப்போதுமே அன்பின்  அடிச்சுவடுகளில் பாதம் பதிந்து அயலானின் கண்ணீர் ஈரம் துடைக்கும் கைக்குட்டையோடு காத்திருக்கும் மதம்.

வரலாறுகள் சிலிர்பூட்டுபவை மட்டுமல்ல நிகழ்காலத்தில் நமக்கு முன்னால் அலட்சியமாய் விரிக்கபட்டிருக்கும் காலத்தின் அகோரமான சுவடுகளையும்,வழிகளையும் நம் முன்னால் விபரிப்பவையும் கூட.மதமும் அதன் கோட்பாடுகளும் வலுவாக ஊன்றபட்டிருக்கும் ஒரு சமூகத்தில் முலைதெலும் எந்த ஒரு புதிய மதமும் மனதில் நெருக்கப்படும் கீரைசெடி போல கிழிபட்டே ஆகவேண்டும். நிராகரிப்புகளும் அவமானங்களும்,துரத்தல்களும்,மட்டுமே இந்த மதத்துக்கு காலம் காலமாக அடையாளமாக திகழ்கின்றன.தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு கோட்பாடோ,மதமோ பல நூற்றாண்டுகள் போராட வேண்டி இருக்கும் என்பதன் சாட்சியாய் நிற்கிறது கிறிஸ்தவ மதம்.

 எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்கும் உரித்தான நிகழ்வுகளும், வியப்பும்,வழியும்,பிரமிப்பும் கிறிஸ்தவ வரலாற்றுக்கும் உண்டு.கிறிஸ்தவம் கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பி பார்கையில் இது நன்றாகவே புரியும்.
கிறிஸ்தவம் எல்லா மதங்களுக்கும் உள்ள பலத்தோடும், பலவீனத்தோடும் தான் பரவி வந்திருகிறது என்பதை வரலாற்றின் கரை படிந்த பக்கங்கள் விளக்குகின்றன.யார் பெரியவன், எது சரியானது,எனும் போராட்டங்களின் பிள்ளையாக இன்று உலகெங்கும் பரவிக்கிடக்கும் கிறிஸ்தவக் குழுக்களில் எது சரியானது ? எல்லாம் சரியானதெனில் ஏன் இத்தனை பிரிவுகள்? கிறிஸ்தவம் புனிதமா? அவமானமா ? என வரலாறு சொல்லும் விடயங்களை தக்க சான்றுகளோடு நிருபித்து நிற்கிறது இந்நூல் என்று என்னால் கூற முடியும்.

இவ்வாறு எந்த பிரிவு கிறிஸ்தவத்தையும் சாராமல் உண்மை நிலையை அதன் புனிதக் கூறுகளோடும், புளுதிக் கூறுகளோடும் அமைதி வாசனையோடும், போரின் நெடியோடும் எழுத்தாளர் சேவியரால் எழுதப்பெற்ற நூல் இது. வாசிப்பை நேசிப்பவர்களுக்கான மிக சிறந்த நூல் இது.

No comments:

Post a Comment