Tuesday, September 22, 2015

மொசாட் நூல் விமர்சனம்.

இயேசு கிறிஸ்துவின் காலத்திலிருந்தே யூதர்களை சுற்றி வரும் ஒரு சாபத்தை பற்றி சிலர் பேச
கேட்டிருக்கிறேன்.தங்களுக்கென ஒரு தூண்டு நிலம் கூட இன்றி திண்டாடுவார்கள் என்பதுவே அது.இன்று இஸ்ரேல் என்ற யூதர்களுக்கான தேசம் உருவாகி இருந்தாலும் அவர்களை சுற்றி ஆயிரம் பிரட்சினைகள் சூழ்ந்து  நிற்கின்றன இயேசு கிறிஸ்துவின் வரலாற்றில் கூட யூதர்களை யேசுவிற்குஎதிரான ஆளுமைகளாகத்தான் நாம் பார்கிறோம்.

ஹிட்லர் காலத்தில் யூதர்கள் கூட்டம் கூட்டமாக கொன்று அழிக்கப்பட்டதனை இந்த உலகம் நன்கு அறியும்.இப்போதும் சமிபத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இனம் தெரியாத நபர்கள் சிலரால் யுத்தப் பள்ளிக்கூடம் ஒன்றும், யூத ஆசிரியை ஒருவரும் கொல்லப்பட்டது வரை யூதர்களின் மீதான இந்த உலகின் வன்மம் தொடர்கிறது.

இது எங்கே தொடங்கியது,எங்கே தொடர்கிறது,இவற்றின் மூலம் என்ன, யூதர்கள்  அடிப்படையில் நல்லவர்களா?, கெட்டவர்களா? என்ற விடை தெரியாத கேள்விகளுக்கு  எல்லாம் விடை காணுதல் அத்தனை எளிமை அல்ல.

எது எப்படியோ, தன்னை சுற்றி காலம் காலமாக தொடர்ந்து வரும் பிரட்சினைகளை சமாளிக்கவும், நேரத்தில் சரியான பதிலடி தரவும் இஸ்ரேல் உருவாக்கிய உளவு நிறுவனம் தான் மொசாட்.அந்த உளவு நிறுவனத்தின் சவால்கள் மீதான பார்வை தான் இந்த நூல்.

ஒரு விடயத்தை உறுதிபட கூறலாம் இந்த புத்தகத்தை கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்று தோன்றும்.அத்தனை சுவாரஸ்யம் நிறைந்ததாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் என்.சொக்கன் அதில் தங்கியுள்ளது இவரின் வெற்றி.

உலகை கிடுகிடுக்க வைக்கும் இஸ்ரேலிய உளவுத்துறை குறித்த விரிவான அறிமுகம் என்ற அட்டை பட தகவலோடு தொடங்குகிறது புத்தகம்.பொதுவாக உளவுத்துறை சார்ந்த தகவல்கள்,அவர்களின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்தல் அத்தனை எளிய காரியம் அன்று.

அதிலும் இஸ்ரேல் போன்ற உணர்ச்சி வசப்படும் தேசத்தின் உளவு நிறுவனம் பற்றி புத்தகமெல்லாம் எழுத முடியும் என்று புத்தகத்தை கையில் எடுக்கும் போது யோசிக்க  தோன்றும். புத்தகத்தின் சுவாரஸ்யத்தில் கடைசி அத்தியாயம் வாசிக்கும் வரை அப்படி ஒரு யோசனை மீண்டும் வராது.கடைசி அத்தியாயமும், புத்தகத்தின் முடிவில் நன்றியும் ஆதாரங்களோடுவாசித்த பின்னர் தான் இந்த புத்தகம் உருவான பின்னணியை அறிய முடிந்தது.

மிகச்சிறந்த தகுந்த ஆதாரங்களோடு உறுதிபடுத்த பட்ட தகவல்களோடும் இந்நூல் அமையப் பெற்றுள்ளது.இஸ்ரேல் என்ற நாட்டின் கொடூரத்தின் உச்சங்களை சரியான விதத்தில் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.நம்மில் பலர் வாசிக்க வேண்டிய நூல்  இது என என்னால் கூற முடியும்.

No comments:

Post a Comment