Sunday, September 13, 2015

கிளியோபேட்ரா.

மொத்தம் எழுநூறு கழுதைகள் அலெக்ஸ்சாண்ட்ரியாவின் அரண்மனை வளாகத்தில்அவற்றை பராமரிக்கவே தனி தொழுவம் இருந்தது.கழுதைப்பால் கரப்பவர்களின் வேளை காலை முதலே ஆரம்பமாகி விடும்.தூசு துரும்புகள் எதுவுமற்ற கழுதைப்பால் மதிய நேரத்தில் அந்தபுரத்தில் தயாராக
வைக்கப்பட தோழிகள்  புடை சூழ அந்த கழுதைப்பால் குளியல் தொட்டிக்குள் கிளியோபேட்ரா இரங்கி ஊற ஆரம்பிப்பாள்.

அழகென்றால் அழகு அப்படி ஒரு அழகு.உலகம் வியக்கும் பேரழகியின் சர்ச்சைக்குரிய
சரித்திரம் என அறிமுகப்படுத்தப்படும் இந்த புத்தகம் சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஓர் அரசியை அழகியை,அவள்,ஆளுமையை குறித்து அறியத்தரும் மிகச்சிறந்த நூல் என என்னால் அடையாளபடுத்த முடியும்.

கிளியோபேட்ரா தனது தந்தையின் மறைவை அடுத்து எகிப்தின் அரசியாக முடிசூடி கொண்ட போது
எதிரி நாட்டு மன்னர்கள் அந்த நாட்டின் மீது போர்தொடுத்த கணத்தில் கிளியோபேட்ரா என்ற அத்தனை ஆளுமை பொருந்திய அரசி எதிரி நாட்டு மன்னர்களிடம் அடிபணிய நேரிட்டது.அந்த சமயத்தில் ஜுலிய சீசர் பற்றி கேள்வி பட்டு அவரிடம் எனக்கு உதவி செய்ய மாட்டர்களா ? என்று உதவி கேட்டிருக்கிறாள்.உடனே சீசரும் க்ளியோபெற்றாவுக்கு உதவி செய்து இழந்த நாட்டை,வளங்களை மீட்டுகொடுக்கிறார்.

அந்த சமயத்தில் அவளது அழகில் மயங்கி சீசரும் அவளுடன் காதல் கொள்ள,க்ளியோபெற்றாவும் சீசரின் வீரத்தில் மயங்கி அவருடன் காதல் கொள்ள ஆரம்பிக்கிறாள்.வரலாறு கொண்ட மிக சிறந்த காதல் அத்தியாயங்களில் இதுவும் ஒன்று.சில காலங்கள் செல்ல இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

வாழ்கை இனிமையாக நகர,கிளியோபேட்ரா அவரது நாட்டையும் அதே நேரத்தில் சீசரின் மனைவியாகவும் இருந்ததாக புத்தகம் சான்று பகர்கிறது.
சில காலங்களில் க்ளியோபெற்ற சீசரின் வாரிசை தனது வயற்றில் சுமக்க,அந்த வாரிசை சீசர் க்ளியோபெற்றவின் வயிற்றை கிழித்து எடுத்ததாகவும்,இது தான் நவீன மருத்துவ முறையின் செசரியன் முறை என அழைக்கபடுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அழகை தன் ஒரே ஆயுதமாக கொண்டு கம்பீரம்,நாகரிகம்,நளினம்,அகங்காரம்,பிரமாண்டம்,என அனைத்தையும் கலந்து தன் அறிவாற்றலால்
ஆயுதங்களை பிரயோகித்து நண்பர்களை உருவாக்கவும்,எதிரிகளை வீழ்த்தவும் செய்த சரித்திரம் கண்ட வியக்க வைக்கும் ஆளுமை கிளியோபேட்ரா.

சீசர்,அகிலேஷ் என்ற இரு மாபெரும் பேரரசர்கள் தாம் யார் என்பதை மறந்து, தமது வீரத்தை,விவேகத்தை மறந்து அவள் அழகினால்,காதலி  மட்டுமே கதி என்று அவளை சரணடைந்து கிடந்தார்கள் என்றால் அவள் எப்படிப்பட்ட பேரழகியாக இருந்திருக்க வேண்டும் என்ற கேள்வி  இன்று
வரை விடை காணாமல் உயிரோடு இருக்கிறது.

 சீசரின் மறைவுக்கு பின்னால் துவண்டு போய் இருந்த கிளியோபேட்ரா மறுபடியும் அகிலேஷ் என்ற பேரரசரை காதலித்த வரலாறு நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.எப்பேற்பட்ட அழகியாக இருந்தாலும் நாட்டு மக்களை பாதுகாத்த இன்றியமையாத ஒரு அரசி கிளியோபேட்ரா.ஈதோ ஒரு தருணத்தில் அகிலேசும் மறித்து போக மறுபடியும் வாழ பொறுக்காத கிளியோபேட்ரா காட்டில் உள்ள விஷ பாம்புகளை கொண்டு வர சொல்லி அவற்றை தம் மீது படர வைத்து இறந்து போனதாக நூலில் குறிப்பிடபட்டுள்ளது.

அத்தோடு கிளியோபேட்ரா என்ற பேரழகியின் ராச்சியம்  முடிந்து விட்டது. ஆனால்  இப்போதும் கிளியோபேட்ரா வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

எகிப்துக்கும் ரோமுக்கும் ஒரு சிறப்பான சரித்திர அனுபவத்தை தருகிறது இந்நூல்.நூலாசிரியர் முகில் பக்கத்துக்கு பக்கம் கடல் போர்கள்,நைல்நதி பயணம்,என எழுத்துக்கள் ஒரு புறம் இருக்க கற்பனையிலே க்ளியோபெற்றாவை வரலாற்று அரசியாக நிலைநிறுத்தி இருக்கிறார் .

ஜுலிய சீசர்,அகிலேஷ்,போம்போ,ப்ரூட்டஸ்,தால்மிக்கள்,என க்ளியோபெற்றாவை சுற்றி நடைபெற்றிருக்கும் அனைத்தும் இந்நூலில் சுவையாக சொல்லபட்டிருக்கிறது.
வெறுமனே ஒரு அரசியின் வரலாற்றை சொல்லும் நூல் என்பது மாட்டுக் அல்லாமல் காதல், பெண்மை,வீரம்  என அனைத்தையும் கலந்த ஒரு அறிவு பெட்டகம் இந்நூல்.நம்மில் பலர் வாசிக்க வேண்டிய நூல் இது.

No comments:

Post a Comment