Friday, September 18, 2015


                       

அறிவின் தேடல்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது.எல்லாம் அவன் செயல், அவன் ஆட்டுகிறான் மனிதன் ஆடுகிறான் இன்றைய நவீன யுக வாழ்கையில் இவை தவிர்க்க முடியாத வசனங்கலாகி விட்டன.உலக உயிர்களின் தேடலில் தான் அதன் வாழ்வு அமைகிறது.இந்த வரிசையில் மனிதனும் தான் வாழ்க்கைக்குரிய தேடலை தொடங்குகிறான்.

அதில் சில நேரங்களில் துவளும் போது கடவுளையோ அதை சார்ந்த கொள்கைகளையோ அல்லது அது சார்ந்தவற்றை குறை கூறுவதோடு அக் கொள்கைகளை துணைக்கு அழைத்து கொள்கிறான்.அப்போதும் தோல்விகள் ஏற்படுமிடத்து அதையே விதி,கர்மம்,பூர்வ ஜென்மத்து பலன் என்று தான் இயலாமைக்கு தானே காரணம் என சொல்லிக்  கொள்கிறான்.

அறிவை தேடி மனித மனம் பயணிக்கும் பாதைகள் தான் விஞ்ஜானமும் மெய் ஜானமும்.தான் வாழ்வுக்காக தனக்கேற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது,விஞ்ஜானம் விஞ்சாநிகளுடைய ஆக்கிரமித்த செயற்பாடுகளினால் தன்னை வளைத்து கொள்வது ,மெய் ஜானம் இவை இரண்டுமே அறிவின் பயணங்களே.

நடைமுறை விடயங்களோடு சேர்த்து யதார்த்தத்தின் இன்றியமையாத பண்புகளோடு யதார்த்த வாழ்வை காண நல்லதொரு வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது.

நாம் யார் இந்த உலகம் எப்படி உருவானது,உலகத்து உயிர்களில் மனிதனின் நிலை என்ன, கடவுள்,மனிதன்,மதம்,ஆன்மா,விதி,ஆவி,மறுபிறவிகள்,மோட்சம்,நரகம்,சடங்குகள்,கனவுகள்,பேய் பிசாசு, என்பவற்றோடு அமானுஷ்ய உண்மைகள்,சகுனங்கள் ஜோதிடம் என்பவற்றின் பின்னணி என்ன? போன்ற பல்வேறு விடை காணா கேள்விகளுக்கு இந்நூல் சரியான விடையை தேடித்தரும் என்பது நிதர்சனம்.

இவ்வாறு மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தகூடிய மேட்குறிபிட்ட 15 க்கும் மேற்பட்ட விடை காணா வினாக்களுக்குரிய அறிவு பூர்வமான விடைகளோடு நூலை விளக்கியுள்ளார் நூலாசிரியர் மா.பாபு 

மாய வாழ்க்கையின் நிலையை சற்று விளக்கி பார்த்தால் நமக்குள்ளேயும்  உண்மையான ,உன்னதமான பேரானந்த மெய்யறிவு  ஒளிர்வதை உணரலாம்.மனித சிந்தனையில் எழும், குடி கொண்டு வாழும் ஐயங்களுக்கு பதில் தரும் தெளிவான நூல் இது.கண்டிப்பாக தேடலார்வம் கொண்டவர்களால் தேடி வாசிக்கபடவேண்டிய மிக முக்கிய நூல் இது 

No comments:

Post a Comment