Saturday, March 5, 2016

வங்கப்புலிகளா? சீறும் சிறுத்தைகளா? அனல் பறக்கும் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி இன்று.






கடந்த புதன்கிழமையிலிருந்து இணையவெளி எங்கும் ஆக்ரோஷமான சொல்லாடல்கள், இனிய கலாய்த்தல்கள் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் அணியைப் பற்றித்தான் பேச்சு காரணம் ஒன்று , பாகிஸ்தான் அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணி பெற்றுக்கொண்ட சாதனை வெற்றி இரண்டாவது , இன்று அசுரபலம் கொண்ட இந்திய அணியை எதிர்தாடுகின்ற 2016ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி. இது மிக பெரிய உந்துதல் பங்களாதேஷ் அணியை பொருத்த வரையில்.    இதுவரைக்கும் நடந்துள்ள 13 ஆசியத் கிண்ண தொடர்களில் இந்தியா, 05 தடவைகளும், இலங்கை 05 தடவைகளும், பாகிஸ்தான் இரு தடவைகளும் சம்பியனாகியிருக்கின்றன.




இதே அழுத்தத்துடனும் சொந்த மண்ணில் முதல் முறையாக ஆசியக் கிண்ணத்தை வெல்லும் முனைப்புடனும் இந்திய அணியுடன் பங்களாதேஷ் அணி இன்று இறுதிப் போட்டியில் களம் காண்கிறது.இந்த ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் மிகப் பெரிய, அதே நேரத்தில் மிகப் பரபரப்பாகப் பேசப்படுகின்ற பேசப்படப் போவது மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இருக்கின்ற கிரிக்கெட் ரசிகர்களைக் இந்தப் போட்டி கட்டிப் போட்டிருக்கின்றது.



கடந்த வருடத்திலிருந்து பங்களாதேஷ் அணி, இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சந்திக அதுருசிங்கவின் மிக சிறப்பான வழிநடத்தலுடன் பல இன்றியமையாத வெற்றிகளைக் குவித்துக் கொண்டு வருகின்றது.



இதன்படி  முதலில் பங்களாதேஷ் அணி சிம்பாபே அணிக்கு எதிராகப் பெற்ற 5-0 என்ற தொடர் வெற்றி, அதற்கு பின்பு மகேந்திர சிங் டோனி தலைமையிலான பலம் பொருந்திய இந்திய அணியைச் சொந்த மண்ணில் வைத்து மண் கௌவ்வ  செய்த விதம், எல்லாவற்றுக்கும் மேலாக யாருமே எதிர்ப்பார்க்கா விதமாக ஏ.பி.டி. வில்லியர்ஸ், அம்லா போன்ற தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களும் ஸ்டெய்ன் ரபாடா போன்ற தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் இருக்கின்ற தென்னாபிரிக்க அணியையே அதனது சொந்த மண்ணில் வைத்து 2015 டி20 தொடரில் மண் கௌவ்வ வைத்தது. அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றி என்று சொல்லி பங்களாதேஷ் அணியின் எழுச்சி மிகுந்த வெற்றிகள் கடந்த வருடத்திலிருந்து தொடர்ந்துக் கொண்டே வருகின்றது.




 அடுத்து ஆசியக் கிண்ணத் தொடரில் கடந்து ஞாயிற்றுக்கிழமை (28.02.2016) நடப்பு சம்பியன் இலங்கை அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி என்று சொல்லி இறுதிப் போட்டியில் இந்திய அணியைச் சந்திக்கும் பங்களாதேஷ் அணி பலமான அணிதான் என்பதை பறை சாற்றி நிற்கின்றன மேற்கூறிய வெற்றிகள் அனைத்தும்.


சொந்த  மைதானம் என்கின்ற படியால் பங்களாதேஷ் அணியைப் பொருத்தமட்டில் சமநிலை வாய்ந்த தன்மை, சகி புல் ஹசன்,புஸ்பிகுர் ரகிம், மஹமுதுல்லா, தவிர பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபி மொர்தாசா போன்ற வீரர்கள் இப்போது பெற்றிருக்கும் முதிர்ச்சியான கிரிக்கெட் ஞானம் சரியான முறையில் இந்திய பந்து வீச்சாளர்களைத் துவம்சம் செய்யக்கூடிய ஆற்றல் என்பன இவர்களுக்கு வெற்றியை தேடி தரக்கூடும்.



மேலும், இந்திய அணி இந்தத்தொடரில் எந்த அணியுடனும் தோற்றதில்லை என்ற  வீராப்பான மன நிலையில் களம் காண்தோடு, இந்திய அணியில் நெஹரா, பும்ரா,அஸ்வின்  போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்களோடு ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி,டோனி  போன்ற அசத்தலான துடுப்பாட்ட வீரர்கள் இருப்பதும்,யுவராஜ் சிங் கடந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக வழமைப் போலவே தனது மிரட்டும் துடுப்பாட்டத்தைக்காட்டி போமுக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.



சொந்த மண்ணில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கின்ற படியால் மிகக் கடுமையாக, மிகப்பலமாக பங்களாதேஷ் அணி கிண்ணத்தை வெல்ல போராடும் என்பதை விடவும் இந்த போட்டி மிகப் பெரிய மாறுதலைப் பங்களாதேஷ் அணிக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.  எது எப்படி  இருந்தாலும் விறுவிறுப்பான போட்டியாக இந்தப் போட்டி அமையும்.எதிர்பாருங்கள் இலங்கை நேரப்படி இன்று இரவு சரியாக 07 மணிக்கு.


No comments:

Post a Comment