Thursday, March 17, 2016


இந்தியாவின்  அதிர்ச்சி  தோல்வியும்,  நாக்பூர் ஆடுகளம் பற்றிய சர்ச்சையும்.


உண்மையில் இந்த பதிவை நேற்றய தினமே இணையத்தில் உலாவ  விட்டிருக்க வேண்டும். சில பல வேலைபாடுகள்  காரணமாக  சற்று நேரம் கிடைக்கவில்லை. இனிய கலைத்தால் களோடு ஆரம்பமாகியிருந்தது இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாக்பூர் மைதானத்தில். மைதானத்தை பற்றியும் சற்று அல்ல நிறையவே கூறியாக வேண்டும் தொடர்ந்து வாசியுங்கள்.



முதலில் அசுர பலம் மிக்க இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்ட போது முழு கிரிக்கெட் உலகமுமே அதிர்ந்து போனது கரணம் உலகின் தலைசிறந்த வேகப்  பந்து வீச்சாளர்களான டிம் சௌதி மற்றும்   ட்ரென்ட் போல்ட் ஆகியோரை பயன்படுத்தாமல் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக சோதி, நேதன் மக்கலம்,சன்ட்னரை பயன்படுத்தி இந்திய அணியை நிலை குலைய வைத்திருந்தது இளம் நியூசிலாந்து அணி. இதில் மிக முக்கியமான விடயம் என்ன வென்றால் பிரண்டன் மெக்கலம் ஓய்வு பெற்ற பிறகு சரியான பாதையில் தான் நியூசிலாந்து  அணி பயணிக்கிறது என்பதை காட்டியிருந்தது.




இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அதிரடி தொடக்கத்தை கொடுக்கும் என நான் உட்பட பல கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்திருப்பார்கள் காரணம் அஸ்வினின் முதலாவது பந்து வீச்சையே இடது கை துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மார்டின் கப்டில் ஆறு ஓட்டத்துக்கு விரட்டியது போட்டியை இன்னும் கொஞ்சம் கலகலப்பாக்கும் என எதிர்பார்த்திருந்த சமயம் அடுத்த பந்திலேயே கப்டில் ஆட்டமிழந்தது இந்திய அணியின் பக்கம் வெற்றி முழுமையாக சைவத்தை வெளிப்படையாகவே காட்டியிருந்தது.



தொடர்ந்து இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள 126 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அதிக பட்சமாக கோரி அண்டர்சன் மட்டுமே 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். இதில் கவனிக்கத்தக்கது இறுதி நேரத்தில் அதிரடியாக துடுபெடுத்தாடிய கோரி அண்டர்சன் இறுதி ஓவரை வீசிய நெஹ்ராவின்  ஓவரை 02 ஆறு ஓட்டங்களோடு முடித்திருந்தார்.



இந்திய அணி இலகுவாக இந்த வெற்றி இலக்கை கடக்கும் என எதிர்பார்த்திருந்த சமயம் நேதன் மெக்கலம் தவனின் விக்கட்டை உடைத்து போட தொடர்ந்து ரோஹித் சர்மாவும் பவிலியன் திரும்ப ரெய்னாவும் துரதிஷ்ட வசமாக பிடி கொடுத்து அடமிளக்க முற்று முழுதாக போட்டியின் வெற்றி நியூசிலாந்து அணியின் பக்கம் சாய்ந்திருந்தது.

ஜோடி சேர்ந்த கோஹ்லி, யுவராஜ்  ஜோடி சற்று ஆறுதலான மெதுவான துடுப்பாட்டத்தை வழங்கினாலும் யுவராஜ் போட்டியின் போக்கை மாற்றுவார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சமயம் அவரும் ஆட்டமிளந்திருந்தார்.

தொடர்ந்து விராத் கோஹ்ளியும் ஏமாற்ற இறுதிவரை காலத்தில் நின்ற டோனி மட்டும் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இந்திய அணி சகல விக்கடுகலைஅயும் இழந்து வெறுமனே 79 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டதோடு துன்பகரமான ஒரு தோல்வியை பரிசளித்திருக்கிறது இந்திய ரசிகர்களுக்கு.

பந்து வீச்சில் மிட்செல் சட்னர் இந்திய விக்கட்டுக்களை உடைத்துப் போட்டிருந்தார். மொத்தமாக 04 விக்கடுககளை கைப்பற்றி இருந்தார் வெறும் 11 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து. போட்டியின் சிறப்பாட்ட கரரகவும் அவரே தெரிவாகியிருந்தார். இதன்படி இந்த வெற்றியுடன்  முதல்  வெற்றியை பதிவு செய்து முதலிடத்தில் இருக்கின்றது நியூசிலாந்து தனது குழுவில்.

இந்த போட்டியில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் டோனி தனது சொந்த மண்ணில் இந்த ஆடுகளத்தை சரியாக கணிக்க தவறி விட்டார் என்று தான் கூற வேண்டும் நியூசிலாந்து அணி தலைவர் கேன் வில்லியம்சன் புரிந்துக் கொண்டு சரியாக விளையாடியதை போல இந்தியாவும் இந்திய வீரர்களும் சரியாக இந்த ஆடுகளத்தை புரிந்துக் கொண்டிருக்கலாம் என்பது தான் இந்திய ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கின்றது. தவிரவும் அனைவரும் கவனித்த விடயம் கேன் வில்லியம்சனின் மதியுகமான  விளையாட்டு திறன்.

எனினும் இந்தப் போட்டிக்கு முன்னதாக  நினைவுகூரப்பட்ட முன்னாள் நியூசீலாந்து அணித் தலைவர் மார்ட்டின் க்ரோ 1992 உலகக்கிண்ணத்தில் சுழல்பந்தையும் களத்தடுப்பு, மிதவேகப் பந்துவீச்சையும் வைத்து செய்த புதுமை போல வில்லியம்சனும் ஆரம்பித்திருக்கிறார் என்பது ஒரு சுவாரஸ்யமாக இருந்தாலும் கூட அவரை நினைத்து மைதானத்தில் குப்டில், டெய்லர் ஆகியோர் மைதானத்தில் கண் கலங்கி நின்றதை இங்கு கூறவிரும்புகிறேன். எனக்கு நினைவில் நிற்கின்ற நாட்களை பொறுத்த மட்டில் ஒரு தடவை  ஒரு பேட்டியில் கூட மார்ட்டின் குரோவ், ‘குப்தில், ரோஸ் டெய்லரை தன் குழந்தைகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.ஆகா ஒட்டு மொத்தத்தில் சிறந்த வெற்றிகள் பலவற்றை குவிக்க வாழ்த்துக்கள் நியூசிலாந்தின் இளம் சிங்கங்களுக்கு.

அடுத்தது மேலே சொன்ன மைதானம் பற்றிய விமர்சனத்தை இங்கு முன் குவிப்பது சரியாக இருக்கும்.


 

கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் இந்தியா தென் ஆபிரிக்க அணியை இதே நாக்பூரில் சுழல்பந்து வீச்சாளர்களை வைத்து 3 நாட்களுக்குள் உருட்டி போட்டு ஒரு டெஸ்ட் போட்டியை வென்றது?
மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய அந்த 3 நாள் டெஸ்ட் போட்டியில்  இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்களை கிள்ளி எடுத்திருந்தார்கள் இதில்  அஷ்வின் மட்டும் 12 விக்கட்டுக்களை உடைத்து எடுத்திருந்தார். தவிரவும் தென் ஆபிரிக்காவின் சுழல்பந்து வீச்சாளர்கள் 13 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இருந்தார்கள்.போட்டித் தீர்ப்பாளர்கள், நடுவர்கள் , ஏன் விமர்சகர்கள் என்று எல்லோருமே கடுமையான அதிருப்தியை நாக்பூர் ஆடுகளம் பற்றி வெளிப்படுத்தியிருந்தனர் அந்த நேரத்தில் நான் கூட இந்த ஆடுகளம் பற்றி எனது வதனப் புத்தகத்திலும்  ஒரு கருத்தை முன் வைத்திருந்தேன்.

இதனையடுத்து 15000 அமெரிக்க டொலர்  தொகையை பிசிசிஐ இந்த மைதான பராமரிப்பாளர்களுக்கு தண்டப் பணமாக வழங்கியிருந்தது. ஆனால் தண்டப்பணத்தை பற்றி மட்டுமே கருத்துக்களை கூறியிருந்த பிசிசிஐ ஏன் உலகக் கிண்ண போட்டிகளை இவ்வகையான மைதானங்களில் வைக்க அனுமதி அளித்திருந்தது என்பது மட்டும் இது வரைக்கும் வெளிப்படாத உண்மையாக பார்க்கப்படுகிறது.இப்போது இந்தியாவின் தோல்வியை அடுத்து, அதிலும் சுழல்பந்து வீச்சில் சுருண்டு வீழ்ந்ததை அடுத்து மீண்டும் இந்த நாக்பூர் மைதான விவகாரம் துருவப்படும் என எதிர்பார்க்கின்றேன்.




மேலும் இன்னும் 02 பிரதானமான போட்டிகள் இந்த மைதானத்தில் இடம்பெற இருப்பது கொஞ்சம் யோசிக்க வைத்திருகிறது ரசிகர்களை. அந்த இரண்டு போட்டிகளும்,
                              மேற்கிந்தியத் தீவுகள் எதிர் தென் ஆபிரிக்காவும்
                             ஆப்கானிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்வும்
என்பதையும் இங்கு  கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

மிக முக்கியமாக இனிமேல் விளையாடுகின்ற ஒவ்வொரு போட்டிகளையும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில்  இருக்கின்றது. இந்திய அணியுன் எதிர்த்து விளையாடப் போகின்ற அணிகள் யார் யார் என்று தெரியும் தானே ஆஸ்திரேலிய. பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான். நிலைமை புரிந்து செயற்பட்டால் சரி இந்திய அணி.



No comments:

Post a Comment