Thursday, March 31, 2016

கிவிக்களுக்கு உலகக் கிண்ணம் சாபமா?


இப்பொழுது எல்லாம் அதிகம் எழுதுவதற்கு நேரம் கிடைக்கின்ற படியினால் நிறையவே எழுதலாம் என்று நினைக்கின்றேன். கிரிக்கெட் போட்டிகள் பற்றி பேசுவது, எழுதுவது என்றாலே எனக்கு அலாதி பிரியம். தொடர்கின்றேன் எனது சொற்களை நேற்றைய போட்டிகளை பற்றி.

முதலில் நம் எல்லோருக்கும் தெரியும் இந்த போட்டியில் இங்கிலாந்தை நிச்சயம் வெற்றிக் கொண்டு இந்த போட்டியில் நியூசிலாந்து ( கிவிக்கள்) வெல்வார்கள் என்று. ஆனால் நடந்ததோ வேறு மாதிரி. அதிகமாகவே  இந்த தொடரில் நியூசிலாந்தின் அணி தலைவர் கேன் வில்லியம்சனை நான் உட்பட பல கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாகவே புகழ்ந்து தள்ளி விட்டோம் என்றே நினைக்கின்றேன்.காரணம் அவர் அவரது அணி இந்த தொடரில் தாங்கள் விளையாடிய போட்டிகளிலும் அனைத்திலுமே வெற்றி பெற்றிருந்தது.
(இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ). நேற்றைய தினம் கேன் வில்லியம்சனின் வியூகம் பலிக்க வில்லையோ தெரியவில்லை. நேற்றய தினம் இங்கிலாந்து அணியின் தலைவர் ஒய்ன் மோர்கனுக்கான நாளாகவும், ஜேசன் ரோய் க்கான நாளாகவும் மாறி போனது.




முதலில் ஸ்கோர் விபரங்களை சொல்லி விட்டு மற்ற விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.நாளைய சுழற்சியில் வென்று நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி  நிர்ணயிக்கப்பட்ட  20 பந்து வீசு ஓவர்களில் 08 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக்க் கொண்டது. தொடர் முழுவதும் பிரகாசித்த மார்ட்டின் குப்டில்  ஓட்டங்கலோடும், அணி தலைவர் கேன் வில்லியம்சன்  ஓட்டங்கலோடும் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தது, ஆரம்பத்திலேஇங்கிலாந்து வெற்றியை நோக்கி தான் கம்பீரமாக நடை போடுகின்றது என்பதை சரியாக சொல்லியிருந்தது.



தொடர்ந்த முன்ரோ  ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை கலங்கடித்திருந்தாலும், தொடர்ந்து வந்த கோரி அண்டர்சன், மற்றும் ரோஸ் டெயிலர் போன்ற அனுபம்  வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் தங்களது பணியை சரியாக செய்ய தேவை இருந்தார்கள் .ஒட்டு மொத்தத்தில்  கிவிக்கள் நொண்டி நொண்டி 158 ஓட்டங்களை பெற்றக் கொண்டார்கள்.பந்து வீச்சில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கலக்கியிருந்தார்கள் டேவிட் வில்லி, கிரீஸ் ஜோர்டான்,  ப்ளுன்கேத்ட், மொயின் அலியின் பந்து வீச்சு என்று இவர்களது மிக கட்டுப்பாடான பந்து வீச்சுடன் பென் ஸ்டோக்ஸ் சின் பந்து வீச்சு அதி அற்புதமாக அமைந்திருந்தது.




தொடர்ந்து துடுப்படுத்தாடிய ரோயும் அலக்சும் கிவிகளின் பந்து வீச்சை போட்டு துவைத்து எடுத்த்திருந்தார்கள். ஆரம்பம் முதலே ரோயின் அதிரடி தொடர்ந்தது. எனக்கு ஞாபகம் இருக்கின்ற வகையில் 04 ஓவரில் முதல் 03 பந்துகளையும் ஓட்டமற்ற பந்துகளாக மாற்றி விட்டு அடுத்த 03 பந்துகளையும் 04 ஓட்டங்களுக்கு மாற்றிய விதமும் அடுத்த ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் 04 ஓட்டங்களுக்கு விரட்டிய விதம் ரோயின் அதிரடி மீண்டும் ஒரு முறை காட்டியிருந்தது. இதில் மொத்தமாக (11) 04 ஓட்டங்களும், 02 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.

 ரோய் அவரது அதிரடியும்  இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைய அலெக்ஸ் ஹோல்ஸ்(20), ரூட் ( 27) ஆகியோர் பெற்ற ஓட்டங்களும் ஒரு பக்கம் உறுதுணையாக இருந்த போதிலும் அணியின் தலைவர் ஒய்ன் மோர்கன் வந்த முதல் பந்திலேயே எல்பிடபல்யு மூலம்  ஆட்டமிழந்த நிலையிலும் இறுதி நேரத்தில் 03 ஆறு ஓட்டங்கள், 02 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 32 ஓட்டங்களை  அதிரடியாக ஆடி பெற்றுக் கொண்டது அற்புதம்.




மொத்தத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுக் கொண்டது. இந்த நேரத்தில் மிக முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று இருக்கின்றது அதாவது முனைய போட்டிகளில் பந்து வீச்சில் கலக்கிய கிவிக்களின் பந்து வீச்சும் இந்த போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களின் சமயோசிதமான துடுப்பாட்டத்துக்கு முன் எடுபடவில்லை.

இந்த வருடமும் ஒரு உலகக் கிண்ண வாய்ப்பு நியூசிலாந்து (கிவிக்களுக்கு) நழுவி போய் இருக்கிறது. இது சாபமா அதிஸ்டமா என்பதும் உங்கள் போலவே எனக்கும் இருக்கின்ற சந்தேகம். எனக்குள் இருக்கின்ற ஒரே ஒரு கவலை அண்மையில் இறந்த நியூசிலாந்தின் கிரிக்கெட் சொத்து மார்டின் க்ரோவுக்ககாவாவது கிவிக்கள் சற்றுப் பொறுமையாக விளையாடி இருக்கலாம்.


மேலுமொரு விடயம் இலங்கை அணியின் முன்னால் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவின் மிக சிறந்த துடுப்பாட்ட ஆலோசனையின் கீழ் இங்கிலாந்து அணி செம்மையான சரியான ஒரு பாதையில் தான் பயணிக்கிறது என்பதை இந்த வெற்றி மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. மேலும் இங்கிலாந்தின் சாரே பிராந்தியதுக்காக இலங்கை அணியின் முன்னால் தலைவர் குமார் சங்ககார விளையாடும் போது ரோய் வருகின்ற இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் என்று ஒரு முறை சொல்லியிருந்ததையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இவர்கள் இருவரும் சாரே பிராந்தியதுக்க்காகவே தொடர்ந்து விளையாடி வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் இங்கிலாந்து வீரர்களுக்கு. இறுதி போட்டியில் (இந்தியா, மேற்கிந்திய தீவுகள்) ஆகிய அணிகளில் ஒரு அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கும். மீண்டும்  ஒரு முறை கிண்ணம் வெல்வதற்கான சூழ்நிலை இங்கிலாந்து அணிக்கு அமைந்திருக்கிறது மீண்டும் ஒரு கிண்ணம் 2010 போல அமைந்தால்..............

அடுத்த பதிவு இந்திய மேற்கிந்திய தீவுகள் பற்றி ..............



No comments:

Post a Comment