Friday, March 18, 2016

போலிவுட்டின் தனி ஒருவன்.

போலிவுட்டின்  தனி ஒருவனுக்கு பிறந்த நாள்.



சிறுவயதாக இருந்த போது ஒருநாள் எனக்குள் இருந்த அதீத கிரிக்கெட் ஈடுபாட்டினால் ஒரு நாள் இறுவட்டு (CD ) கடையில் வெறும் கிரிக்கெட் படங்களாக தேடிக்கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் "க்ரிதிக் ரோஷன்"  நடித்த "விக்டரி" ஒரு படத்தை  வாரு தேடி எடுத்துக் கொண்டேன். அந்த திரைப்படத்தை  தேடி எடுத்த நேரம் அமீர்கானின் "லகான்" திரைப்படம் கிடைத்தது. திரைப்படத்தை எடுத்ததும் என்னடா!பெரிய படமாக இருந்து விட போகிறது இந்த படம், என நினைத்துக் கொண்டு சரி பரவா இல்ல கிரிக்கெட் படம் தானே பாப்போம் என நினைத்துக் கொண்டு மாலை வேளையில் படம் பார்க்க தொடங்கினேன்.

முன்னர் என்னடா இந்த படம் என நினைத்ததற்கு பதிலாக, படத்தை பார்த்து முடித்த தருணம் என்னை நானே நான் நொந்துக் கொண்டேன். "அந்த  லகான் படம் அப்படி. லகான் தி பெஸ்ட்".  பார்த்தவர்களுக்கு இந்த படம் பற்றி சொல்ல தேவை இருக்காது. அன்றிலிருந்து ஆரம்பித்தேன் தனி ஒருவன் அமீர்கான் பற்றி தேட, அன்றிலிருந்தே அவரது ரசிகனாகவும் ஆகி விட்டேன்.


ஒரு நாள் தமிழ் திரைப்பட துறையின் தனிகரில்லா இயக்குனராக இன்று வளர்ந்திருக்கின்ற ஷங்கர் ஒரு  நாள் அமீர் கானின் ஒரு திரைப்படத்தை பார்க்கிறார் எவ்வளவு நேரம் சென்றும் அவரால் அந்த படத்தின் நினைவுகளில் இருந்து மீளவே முடியவில்லை அந்த திரைப்படத்தை உடனே தமிழில் உருவாக்க வேண்டும் என முடிவு செய்தார்.


அந்த இன்றியமையாத படைப்பாளியின் முதல் ரீமேக் படம் ஹிந்தியில் அமீர் கானின் கூட்டணியில் உருவாகி, பட்டையை  கிளப்பிய 03 இடியட்ஸ் தமிழில்  நண்பனாக பரிணாமம் அடைந்தது.நண்பன் படத்தை ரசித்தவர்கள் உண்மையில் ஷங்கரை  மனதார பாராட்டியதை பல தடவைகள் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். அனால் உண்மையில் அந்த பாராட்டுதல்களும் கை தட்டல்களும் சேர்ந்திருக்க வேண்டியது அமீர் கான் என்ற தனி ஒருவனுக்கு தான். (அதற்காக நட்பூக்கள் ஷங்கர் திறமையானவர் இல்லை என்றும் நான் கூற வில்லை அவ்வாறு தவறாகவும் புரிந்துக் கொள்ள வேண்டாம். )



இதுவரைக்கும் தனி ஒருவன் மாத்திரம் இந்தியாவிலேயே ஒட்டு மொத்த இந்தியாவிலேயே 04 தேசிய விருதுகள், ஏழு ஃப்லிம் ஃபேர் விருதுகள். பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று எல்லா வகையான விருதுகளையும்  கையில் வாங்கிக் கொண்டு தான் நான் இன்னும் ஒன்றுமே பெரிதாக செய்ய வில்லையே என்று பௌவியமாக இருந்துக் கொண்டு வேகமாக இன்னும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஓட்ட பந்தய வீரன். 

தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைகள் மூலமும்  சமூகத்திற்கு ஏதேனும் ஒரு செய்தியை சொல்லும் ஆர்வமுள்ள படைப்பாளி.
இந்த தனி ஒருவன் நடித்த 3 இடியட்ஸ் திரைப்படம், இந்திய மாணவர் சமூகத்தில் மிக  பெரிய தாக்கத்தை உண்டாக்கியது என்பதை விட  பல இளைஞர்கள்  அதற்கு பின் தான் தமக்கான ஒரு பாதையை தேடி செல்ல முட்பட்டிருந்தார்கள். அதன் பின் அவரது குறிப்பிட தக்க படைப்புக்களில் முக்கியமானது "பிகே" அந்த படத்தில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் சொல்ல வார்த்தைகளே இல்லை. 



மதம் என்ற பிடியில் பாரத நாடு  எப்படி குழம்பிப் போயுள்ளது என்பதை  யாரையும் எதிர்பார்க்காமல் மிக தைரியமாகவே சொன்னவர். இப்படி சமூக சிந்தனைகளோடு கூடிய கமர்ஷியல் படங்களைக் கொடுப்பதில் அமீர்கான் ஒரு ரியல் ஹீரோ நமது இளைஞர்களை பொறுத்த வரையில்.
திரைப்படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரையில் அவர் நடத்திய 'சத்தியமேவ ஜெயதே' எனும் தொடர் அவருக்கு வெள்ளித்திரையில் கிடைத்திராத, பெயரையும், புகழையும், எல்லாவற்றிற்கும் மேல் அவர் மீது ஒரு பெரிய மரியாதையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. 


சமூகத்தில் நமக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றியும், அதை மாற்றும் வழிமுறைகளையும் காட்டிய அந்தத் தொடரால் உண்மையிலேயே பல மாறுதல்கள் ஏற்பட்டன, இன்றும் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
இவரது படத்துக்கு 1000, 2000,3000,4000,5000 என்று டிக்கெட் விலை உயர்ந்துக் கொண்டே இருந்தாலும் அது ரசிகர்களுக்கு கவலையை தராது மாறாக அமீர்கானின் படத்தை பார்த்து விட்டோமே என்ற மாறுதலை மட்டும் தான் தரும் அப்படி ஒரு ரசனை மிகுந்த யதார்த்தமான ஒரு ஒரு நடிகர் அமீர் கான்.


அப்படி பட்ட நடிகருக்கு இன்று 51 வயதாகிறது. அந்த நடிப்பு சகாப்தம் நடிக்க தொடங்கியது 1973ம் ஆண்டு காலப்பகுதியில்.
மும்பையில் தயாரிப்பாளர் தாகிர் ஹுசெயின், சீனத் ஹுசெயின் தம்பதியினருக்கு பிறந்த இவர், இன்றைய நாளில்  பாலிவுட்டின்  மோஸ்ட் வாண்டட் நடிகர். இந்திய மொழிகள் எல்லாவற்றிலுமே தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர். 

தனக்கான ஒரு தனியான இடத்தை வைத்திருப்பவர். நான்கு குழந்தைகளுள் மூத்தவரான அமீர் தனது முதல் திரையுலக பிரவேசத்தை 1973ஆம் ஆண்டு தனது உறவினரும், இயக்குனருமான நாசிர் ஹுசைனின் "யாதோன் கி பாரத்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக துவங்கினார். அதன் பிறகு 1988ல் இவர் நடித்த ‘கயாமத் சே கயாமத் தக்’ இந்திய அளவில் மாஸ் ஹிட்டடித்த படம். அதில் பல விருதுகளை அள்ளி, தனக்கென ஒரு சிம்மாசனத்தைப் பிடித்தார்.


 பின், பல திரைப்படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, இளையவர்கள் முதல் பல்லு  போன கிழவர்கள் வரை அணைத்து தரப்பினர்களையும் தனக்கு ரசிகர்களாக மாற்றினார்.
ஒரு முழுமையான நடிகர் என கூறும் அளவிற்கு இவரது நடிப்பும், திரையில் இவரது செயல்பாடுகளும் நிச்சயம் அமைந்திருக்கும். அப்படி அமையாமல் ஒரு திரைப்படம் கூட இந்த தனி ஒருவனின் படத்தில் நான் பார்த்தது கிடையாது. 

ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை சலிப்பில் ஆழ்த்தாமல் ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய கதைக்களம், புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மட்டும் அல்லாமல் ஒரு புதிய தேடலை வெளிப்படுத்தும் நடிகர்களில் இன்றியமையாத ஒரு இடம் இந்த தனி ஒருவனுக்கு தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.


எழுபதுகளில் சினிமா பார்க்க தொடங்கிய  முதல் இளம் பெண்கள்  தொடக்கி  இந்தக் கால இளம்பெண்கள் வரை அனைவரின் கனவு நாயகனாகவும், ஆண் ரசிகர்களுக்கு நல்ல நடிகனாகவும்,  ஒரு ஆசிரியராகவும்,குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கின்ற இவர் இதுவரைக்கும்  திரையுலகிற்கு அளித்த திரைப்படங்கள்  57. நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளர், உதவி இயக்குனர் என  பண் முகங்களைக் கொண்டவர் இந்த தனி ஒருவன்.



'அமீர் கான்' எனும் பெயரைக் கேட்ட உடன் பலரது மனதிற்கும் வரும் சில திரைப்படங்கள் "லகான், மங்கள் பாண்டே, தாரே ஜமீன் பர், 3 இடியட்ஸ், பிகே"  ஒவ்வொன்றிலும் தனது நடிப்பால் பல கோடி ரசிகர்களையும், பல கோடிகளில் கலெக்ஷனையும் ஈர்த்தவர் என்பதையும் தாண்டி பலரது இதயங்களில் வாழும் ஒரு சினிமா ஆதர்ச நாயகன் அமீர் கான் என்ற தனி ஒருவன். வாழ்த்துக்கள் இனிமையான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


தொடரட்டும் தனி ஒருவனது சாதனைகள், உனது படைப்புகளை பார்த்து இளம் இளைஞர்கள் தமக்கான பாதையை தேடி கொள்ளட்டும், உனது படைப்புக்கள் எப்போதுமே கை தட்டல்களை வாங்கி குவிக்கட்டும். "தலைவா யு ஆர் கிரேட் என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க". 


No comments:

Post a Comment