Wednesday, March 2, 2016

கிரிக்கெட் உலகம் கண்ட மரணங்கள் ஒரு பகிர்வு.

கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டு என்று ஒரு பக்கம் விபரித்தாலும் கூட அதில் அவ்வப்போது  இடம்பெறுகின்ற வீபரீதங்கள் கிரிக்கட் ரசிகர்களைப் பொருத்தமட்டில் என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
ஒரு பக்கம் தினமும் கிரிக்கெட்டில் சாதனைகள் ,சரித்திரங்கள்  படைக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தின் பக்கங்கள் புதுப்பிக்கப்பட்டாலும் கூட இது வரை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள மரணங்கள் பற்றிய ஒரு பகிர்வு இது.

01. பிலிப் ஹியூஸ்.





உன்னிப்பாக ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிகளையும்  ரசிக்கின்ற, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனாலும் இன்றும் ஜீரணிக்க முடியாத ஒன்று ஆஸ்திரேலியாவின்  துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூசின் மரணம் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மனதால் நொந்துப்போன  ஒரு நாள்.ஆம் அன்று தான் பிலிப் ஹியூஸ் பிராந்தியப் போட்டிகளில்  பங்குபற்றிக் கொண்டிருந்தப்போது , துரதிஷ்டவசமாகப் பந்து தலையில் பட்டு மைதானத்திலே சிதறி விழுந்தார்.





 சிட்னி வின்சென்ட்  வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சை  பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சிகிச்சை பயனின்று பிலிப்ஹியூஸ் இறந்து விட்டார்.


கடந்த 2009ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிலிப் ஹியூஸ் அறிமுகப் போட்டியிலேயே சதம் கடந்து  சாதனைப்  படைத்திருந்தார். தவிர கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக தனது ஒரு நாள் கன்னிப் போட்டியில்  விளையாடியிருந்தார்.






பிலிப் ஹியூஸ் இதுவரைக்கும் 26 டெஸ்ட் @பாட்டிகளில் விளையாடி 1535 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 03 சதங்களையும் ,7 அரை சதங்களையும்,25 ஒருநாள் போட்டிகளில்  826 ஓட்டங்களையும் 02 சதம் , 4அரைச்சதம் உள்ளடங்கலாகப் பெற்றுள்ளார்.
உண்மையிலேயே  பிலிப் ஹெயுசின்  மரணம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களாலும் இன்றும் ஜீரணிக்க முடியாத ஒன்று என்று தான் கூறவேண்டும்.
இதில் வருந்தத்தக்க விடயம் என்னவென்றால் பிலிப் ஹியூக்ஸ் மரணத்தைத் தழுவிய நாள் தான் அவரது பிறந்த நாள்.


02.  டெரன் ரன்டல்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக் கண்ட சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த விக்கெட் காப்பாளர்கள் வரிசையில் எப்போதுமே  டெரன் ரன்டலுக்கும் மிகப் பிரதானமான இடம் இருக்கிறது எனலாம். கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்@டாபர் 27ஆம் திகதி யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக டெரன் ரண்டல் மைதானத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது  தலையில் பந்து பட்டு உயிர்ழந்திருந்தார்.



04 டெஸ்ட் போட்டிகளில்  688 ஓட்டங்களையும், 04 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 198 ஓட்டங்களையும் டெரன் குவித்துள்ளார். கிரிக்கெட் உலகம் கண்ட மற்றுமொரு துர்மரணம் டெரன் ரன்டலுடையது.






03.  வசிம்   ராஜா.
மைதானத்தில் துடிப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போதே  திடீரென மாரடைப்பினால் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்  வசிம் ராஜா மரணமடைந்திருந்தார். இந்த மரணம் நடந்தது கடந்த 2006ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்து.
தனது தனிப்பட்ட துடுப்பாட்ட திறமையினால் போராடி  பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தவர்களில் வசிம் ராஜாவும் ஒருவர். முதன் முதலாக கடந்த 1993ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தனது கன்னி டெஸ்ட் போட்டியில்  விளையாடி வசிம் ராஜா 03 டெஸ்ட் சதங்களை  குவித்துள்ளார்.இன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தாம் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றிகளுக்கும் வசிம் ராஜா பெயரை நினைவுக் கூறுவது சிறப்பானது.





04.  ராமன் லம்பா.
கிரிக்கெட் உலகில் மற்றுமொரு இறப்பு கடந்த 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெற்றது. இது இந்தியா துடுப்பாட்ட வீரர் ராமன் லம்பாவினுடையது. இந்திய கிரிக்கெட் சபை கண்ட வேதனையான  இறப்புக்களில் ஒன்றாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இன்றும் நினைவுக் கூறப்படுகிறது.
04டெஸ்ட் போட்டிகளில்  102 ஓட்டங்களையும், 32 ஒருநாள் போட்டிகளில் 783 ஓட்டங்களையும், பெற்றுள்ளதோடு, ஒரு நாள் போட்டிகளில் 15 விக்கெட்க்களையும் ராமன் லம்பா வீழ்த்தியிருக்கிறார்.
 இறுதியாகப் பாகிஸ்தான் அணிக்கு எதிராக துடுப்பெடுத்தாடித் கொண்டிருக்கும் போதே பந்து பட்டு தலையில் பட்டு எதிர்பாரா விதமாக ராமன் லம்பா  மைதானத்திலேயே  உயிரிழந்திருந்தார்.







05.  கியன் பூலி
மாரடைப்பினால் மைதானத்திலேயே  இறந்தவர்கள் வரிசையில்  மற்றுமொரு துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் கியன் பூலியும் ஒருவர். ரசிகர்கள் பெறும்பாலும் கியன் பூலியைச் சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம் கியன் பூலி விளையாடியது  எல்லாம் இங்கிலாந்தின் லங்கா சியர்  பிராந்தியத்துக்காகத்தான்.
140 டெஸ்ட் போட்டிகளில் 1485 ஓட்டங்களை 01 அரைச்சதம்  உள்ளடங்கலாக கியன் பூலி பெற்றிருக்கிறார். பந்து வீச்சில் 287 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ள பூலி கடந்த 1993ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி மாரடைப்பினால் மைதானத்திலேயே இறந்திருந்தார்.





06. வில்ப்ஸ் ஸ்லாக்.
கிரிக்கெட் உலகம் கண்ட மற்றுமொரு சகித்துக் கொள்ள  முடியாத இறப்பு மேற்கிந்திய தீவுகள் அணியின் வில்ப் ஸ்லாக்கினுடையது. கடந்த 1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது  எதிர்பாரா விதமாக பந்து நெஞ்சில் பட்டு உயிரிழந்திருந்தார்.
மேற்கிந்திய  தீவுகள் அணிக்கு 02 ஒரு நாள் போட்டிகளிலும்  03 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள வில்ப் ஸ்லாக் 97 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இவ்வளவு மரணங்கள் கிரிக்கெட் உலகத்துக்குள் இடம் பெற்றிருக்கின்றன நிச்சயமாக இவ்வளவு இறப்புக்களும் கிரிக்கெட் உலகில் என்றுமே   ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத இறப்புக்களாக இருக்கும் கிரிக்கெட் போட்டிகள் உலகில் இருக்கும்  வரை.





1 comment:

  1. Play free slots online for real money in casinos today
    The kadangpintar best 인카지노 free casino slots sites in the UK offer hundreds of free spins no deposit and other choegocasino bonuses and free spins offers. Here at ChoEcasino we are dedicated to

    ReplyDelete