Wednesday, March 30, 2016

நம்பிக்கை தான் கையும் காலும்.

நமக்குள் ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை, வாழ்கையே முடிந்துவிட்டது, எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கவேண்டுமா, என்றெல்லாம் நம்மை நாமே நொந்திக் கொண்ட சந்தர்ப்பங்கள் நமக்குள் அதிகமாகவே இருக்கும்.ஆனால், வாழ்க்கையில் எப்போதும் வீசும் சோதனைகளை கடந்து சாதனை படைக்கின்றவர்களை இந்த உலகம் எப்போதுமேர் நினைவில் வைத்துக் கொள்ளும்.

அப்படி ஒரு விபத்தில் தன் இரண்டு கைகளையும்  இழந்த ஒரு இளைஞர் தன் கனவான கிரிக்கெட் விளையாட்டை இன்னும் விளையாடி வருகிறார், அதுவும் சிறந்த முறையில் என்றால் நம்ப முடிகிறதா?

ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்னாக் மாவட்டத்தை சேர்ந்த அமீர் ஹுசைன். எட்டு வயது சிறுவனாக இருந்தப் நடந்த கோர விபத்தில் இரு கைகளையும் இழந்துவிட்டார். மூன்று வருடங்கள் சொல்லமுடியாத வேதனைகளை அனுபவித்த அமீரை காப்பாற்ற அவரின் தந்தை அவரின் தொழிலை விட்டு நிலத்தை கூட விற்கவேண்டி இருந்தது. 

இதனால் பலரும் இவரை சாடவே, ‘மகனை இழந்து நிலபுலம் வைத்திருந்து நான் எதற்காக வாழ வேண்டும்’ என்று பதிலளித்த அமீரின் தந்தை தான் அமீரின் முழு பலமும். இயல்பான பள்ளியில் சேர்க்கப்பட்ட போது ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டார் அமீர். 

எனினும் இவை எதுவுமே அமீரை பின்னுக்கு தள்ளவில்லை. வாழ்க்கை வழி நெடுக்க பிரச்சனைகளை அனுப்ப அவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளி உந்திக்கொண்டே முன்னேறியுள்ளார் அமீர். 

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சிறு வயதிலிருந்தே தன்  கனவாக இருந்த கிரிக்கெட்டை ஏன் தொடரக் கூடாது என்று யோசித்திருகிருக்கிறார். யோசனையுடன் நின்றுவிடவில்லை. அதற்காக கடுமையாக பயிற்சி செய்துள்ளார். விளைவு, இன்று அவர் வாழும் பகுதியில் அமீர் தான் மிக சிறந்த துடுப்பாட்ட வீரர்மற்றும் பந்து வீச்சாளர். 

இவர் துடுப்பை  தன் கழுத்துக்கும், தோள்பட்டைக்கும் இடையே வைத்து பிடித்து விளையாடுவதை பார்க்கும் எவருக்கும் இவர் மேல் பரிதாபத்திற்கு பதில் மரியாதை தான் வருகிறது. பந்துகளை வீசுவதற்கு தன் கால்களை உயர்த்தி கைகளை போல பயன்படுத்திகொள்கிறார். 

இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக அவர் மாநிலத்தின் ஊனமுற்றோர் கிரிக்கெட் அணியும் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் மட்டுமல்லாமல் நீச்சல், என அசத்தும் அமீர் விளையட்டு மட்டுமே தனது வாழ்க்கை என்று சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்சியாய் சிரிக்கவைத்துக் கொண்டு   இருக்கிறார். வாழ்த்துக்கள் சகோதரா!




No comments:

Post a Comment