Monday, February 8, 2016

விளையாட்டு உலகில் தமிழர்கள்.

உலகம் முழுக்க தமிழர்கள் பரவி சிதறிக் கிடக்கிறார்கள் ,எல்லா  துறையிலும் தமிழர்களின் சாதனைகள் வானை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறதென்றே கூறலாம்.எனினும் விளையாட்டு உலகில் தமிழர்களின் ஆதிக்கம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே இருக்கிறதென்பது கொஞ்சம் தமிழர்கள் மத்தியிலே அங்கலாய்க்கப்படுகின்ற ஒரு விடயமாக இருந்தாலும் கூட  இந்த கட்டுரையில் குறிப்பிட போகின்ற தமிழர்கள் அனைவருமே தம் தம் துறையில் சாதனைகளை குவித்தவைகள் என்றே கூறலாம்.
அப்படி தம் துறையில் சாதித்து ,இன்னும் சாதித்துக் கொண்டிருக்கின்ற தமிழர்கள் பற்றிய ஒரு அலசல் இது.

@.முத்தையா முரளிதரன்-கிரிக்கெட்.

உலக தமிழர்கள் அனைவரும்    800 என்ற இந்த இலக்கத்தை அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள் காரணம் இந்த உலக சாதனையாளன் உலக சாதனை படைத்து  ,தன் பெயரை கின்னஸ் புத்தகத்தில் அழுத்தமாக பதிக்கவும்,தன்னை கிரிக்கெட் உலகம் எப்பொதுமே நினைவு கூறவும் கைப்பற்றிய விக்கட்டுக்களின் எண்ணிக்கை அது.
முரளி இலங்கை கிரிக்கெட் அணிக்குள் ஒரு சகாப்தம்,133 டெஸ்ட் போட்டிகள் ஆடுகளங்களில் அனல் பறக்கும் பந்து வீச்சு,இதில் ஒரு போட்டியில் மட்டும் 5 விக்கட்டுக்களை கைப்பற்றிய சந்தர்பங்கள் 67 வும்,10 விக்கட்டுக்களை கைப்பற்றிய சந்தர்பங்கள் 22 வும் அடங்கும்.


1992ம் அகண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது கன்னி டெஸ்ட் போட்டியிலும் ,2010 ம் ஆண்டு  இந்திய அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும்  விளையாடி சாதனையோடு 2010 ஆம் ஆண்டு விடைபெற்றார்.

முரளியின் பந்து வீச்சு என்பது ஆடுகளங்களில் அசத்தல் மிகுந்தது.தான் விளையாடிய 18 ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட விருதுகள்,பல தடவைகள் ஐ.சி.சி யின் தேசிய அணியில் பிரதான சுழற்பந்து வீச்சாளராக அறியப்பட்டவர் என்பதோடு  சேர்த்து இலங்கை அணி வென்ற உலக கிண்ணத்தை  கைப்பற்ற மிகமிக முக்கிய பங்காற்றியவர்.
நிச்சயம் முரளி இலங்கை கிரிக்கேட்டுக்குள் மட்டுமல்ல உலக தமிழ் மக்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமான உதாரணமான விளையாட்டு வீரர் தான்.



@. விஸ்வநாதன் ஆனந்த்.

மற்றுமொரு தமிழ் விளையாட்டு உலகின் பொக்கிஷம் இந்திய தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். 1992ம் ஆண்டு ரஷ்ய மண்ணில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டிகள் வாசகர்களுக்கு சில சமயங்களில் நினைவில் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் இந்த போட்டி தான் விஸ்வநாதன் ஆனந்த் என்ற உலக சாதனையாளனை  உலகம் அறிய செய்த போட்டி.ஆறு வயதில் ஆரம்பித்த செஸ் வேட்கை அவரது 14வது வயதில் முதல் இந்தியா அளவிலான வெற்றியை தேடி தந்ததோடு   “மின்னல் சிறுவன்” என்று உலக மக்கள் போற்றும் அளவுக்கு பிரபலத்தை ஆனந்துக்கு தேடி தந்தது.


ஆனந்த் பிறப்பில் ஒரு பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். தனது தாயின் ஆசைப்படி சிறுவயது முதலே செஸ் போட்டிகளில் பங்கு பற்றியவர். ஆரம்பத்தில் மாநில அளவுகளுக்கு இடையிலான போட்டிகளில் கூட பங்கு பற்ற முடியாத அளவுக்கு மனதளவிலும் சரி,திறமையிலும் சரி தேங்கி போய் இருந்த ஆனந்துக்கு ஊக்கமும் உத்வேகமும் தந்தது 1991ம் ஆண்டு இடம்பெற்ற மாநில அளவிலான செஸ் போட்டிகள் தான்.



அதற்கு பின்பு ஆனந்தின் காட்டில் அடை மழை என்றே கூறலாம். பொறுமை விவேகம் என்று சொல்லி தான் பங்கு பற்றுகின்ற போட்டிகள் அனைத்திலும் நிதானமான அதே நேரத்தில் மிக சரியான வெற்றிகளை தேடி  கொண்டார். மேலும், 2003 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்று, “உலகின் அதிவேக சதுரங்க வீரர்” என்ற சிறப்பு பட்டமும் பெற்றார். பதினான்கு வயதில், ‘இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம்’, பதினைந்து வயதில் ‘அனைத்துலக மாஸ்ர் பட்டம், பதினெட்டு வயதில் ‘உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம் ஐந்து முறை ‘உலக சாம்பியன் பட்டம்’ என  சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை, இமயம் தொடச் செய்தவர்.

இதுவரைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’ மற்றும் ‘அர்ஜுனா விருது’ என பல விருதுகளுக்கும் சொந்தக்காரர்  என்பது பலருக்கு தெரியாத விடயம். மேலும், பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் ‘புக் ஆஃப் தி இயர்’, ‘சோவியத் லேண்ட் நேரு விருது’, 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான ‘சதுரங்க ஆஸ்கார் விருதுகள்’ என மேலும் பல விருதுகளை வென்றுள்ளார். உலகளவில் சதுரங்கப் விளையாட்டில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்துவரும் ஒரு தமிழர் ஆனந்த்.



@.ரவிச்சந்திரன் அஷ்வின்.



ரவிச்சந்திரன் அஷ்வின்... 
அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் வரிசையில் இந்திய
கிரிக்கெட் அணிக்குக் கிடைத்து இருக்கும் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர்! சுழற பந்து ஜாம்பவான்  முரளிதரனுக்கு 'தூஸ்ரா'போல ரவிச்சந்திரனுக்கு 'கேரம் பால்'!.


முதல் போடியிலே சாதனை 5 விக்கட்டுக்களை கைப்பற்றிய சாதனையோடு இந்திய அணையின் வரர்ந்து வருகின்ற நம்பிக்கை நட்சத்திரம் ரவி அஸ்வின். இது வரைக்கும் வெறுமனே 32 இரண்டு டெஸ்ட் போட்டிகள் கைப்பற்றியுள்ள விக்கட்டுக்களின்  எண்ணிக்கை 176. 5 ஒரே போட்டியில் 5 விக்கட்டுக்களை கைப்பற்றிய சந்தர்ப்பங்கள் 16உம் ஒரே போட்டியில் 10 விக்கட்டுக்களை கைப்பற்றிய சந்தர்ப்பங்கள் 4உம் அடங்கும்.
தவிர எதிர்கால இந்திய அணியின் சகலதுறை வீரராக பிரகாசிப்பார் என்கிறது இந்திய கிரிக்கெட் சபை தகவல்கள்.



@.தினேஷ் கார்த்திக்.
இந்த கட்டுரையில்  இடம்பிடித்திருகின்ற மற்றுமொரு தமிழர்  இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரும்,விக்கட்  காப்பாளருமான  தமிழகத்தின் தினேஷ் கார்த்திக். இவரது முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2004ம் ஆண்டும்,முதலாவது ஒரு நாள் போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக வும் முதல் டி20 போட்டி தென்னாபிரிக்க  அணிக்கு எதிராகவும் அமைந்தது.




ஒரு காலத்தில் இந்திய அணியில் நிரந்தர விக்கட் காப்பாளராக அறியப்படுவார் என நம்பப்பட்ட வேளையில், இந்திய அணி தலைவர் மகேந்திர சிங்க் தோனி யினால் இவருக்கான இடம் இந்திய அணியில் மறுக்கப்பட்டது என்றே கூறலாம். எனினும் சில போட்டிகளில் தனது மீள் பிரவேசத்தை  காட்டினாலும் சிறப்பான முறையில்  பிரகாசிக்க தவறியதால் இந்திய அணியில் இடம் கி0திக்காமல் தடுமாறி வருகிறார். தற்போது இந்திய அளவிலான போட்டிகளிலும் இந்த முறை இடம்பெற உள்ள  ஐ.பின் எல் போட்டிகளில் ராயல் சாலஞ்சர்ஸ்  பெங்களூரு அணிககவும் விளையாடுகிறார்.




@.   முரளி விஜய்.
திறமை இருந்தும் இந்திய அணியில்  சரியான இடம் கிடைக்காமல் தடுமாறி வருகின்ற மற்றுமொரு தமிழக வீரர் முரளி விஜய். தனது முதல் டெஸ்ட் போட்டியை 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், முதல் ஒரு நாள் போட்டியை தென்னாபிரிக்க அணிக்கு எதிராகவும் விளையாடி தனது கிரிக்கெட் வாழ்கையை தொடக்கிய முரளி விஜய் இதுவரைக்கும் ஐ.பி.எல் போட்டிகள் உள்ளடங்கலாக எல்லா போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 5693 ஓட்டனகளை மட்டுமே பெற்றுள்ள முரளி விஜய் டெஸ்ட் போட்டிகளில் 06 சதங்களையும் 14 அரை சதங்களையும் ,ஒரு நாள் போட்டிகளில் தலா ஒவ்வொரு சதங்களையும் அடித்துள்ளார்.




தவிர தற்போது காயம் காரணமாக ஓய்வில் உள்ள முரளி விஜய் இந்த ஐ.பி.எல் போட்டிகளில்  கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார்.எதிர்வரும் காலங்களில் திறமையான் துடுப்பாட்டத்தை வெளிபடுத்தினால் இந்திய அணியில் முரளி விஜய்க்கு நிரந்தரம் இடம் கிடைக்கும்.


No comments:

Post a Comment