Friday, February 19, 2016

நரிக்குறவர்கள் ..



நரிக்குறவர்களின் இனவரலாறு, தோற்றம், இடப்பெயர்ச்சி, சமூக அமைப்பு, மொழி, வாழ்க்கைமுறை, சமூக மாற்றம் இவற்றுடன் அவர்களுடைய திருமணம், சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், புழங்குபொருட்கள், வழக்காறுகள் என அனைத்து விவரங்களையும் மிக எளிமையாகவும் சுவையாகவும் இந்த நூலில் அறிந்துக் கொள்ள முடியும். 

உண்மையில் யார் இந்த  நரிக்குறவர்கள் என்று தேடி பார்த்தால், அவர்களின் வாழ்க்கை நமக்கு பல துன்பங்களை கற்று தருகிறது. அதாவது இந்திய ஆரிய வழி சமூகத்தில்  தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு,இம்சைகளை தொடர்ந்து அனுபவித்து   வருகின்ற ஒரு இனம்இந்த நரிகுறவர்கள் . நாகரிகமற்ற நிலை, உடல் துர்நாற்றம், சுத்தமில்லாத ஆடை போன்றவையும் , பார்த்த உடனேயே குமட்டலைத் தந்து வாந்தியெடுக்கும் உணர்வை ஏற்படுத்துமாரான ஒரு அடையாளம் தான் இந்த நரிகுறவர்களினுடையது.

மேலும் இந்த இனத்தைப்பற்றி இன்னொரு மிக முக்கியமான விடயத்தையும் கூறியாக வேண்டும் சுறுசுறுப்பு, கடின உழைப்பு, கூடி மகிழும் இயல்பு, பொறுமை, இருக்கும் சூழலில் இன்புற்று வாழும் நிலை போன்றன இயல்பான ஆறறிவு மனிதனில் வேறுபட்டு இவர்களுக்கு மட்டுமே உரிய இயல்புகள்.

 இந்த நூலிலிருந்து இந்த இனத்தின் ஒரு அடையாளம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது அதாவது வேடுவர்களை  போலவே இவர்களும் வேட்டையாடுதலை மிக முக்கிய தொழிலாக கொண்டவர்கள்.வேட்டையாடினால்தான் அன்றைய பிழைப்பு இவர்களுக்கு.

பொதுவாக குறவர்கள் என்று வழங்கப்படும் இனத்துக்கும் இந்த நரிக்குறவர் இனத்துக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. குறவர்கள் என்பவர்கள் பண்டைக்கால தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மலையும் மலை சார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்தவர்கள்.. குற்றாலக்குறவஞ்சி போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக அறியப்பட்டவர்கள். ஆனால் நரிக்குறவர்கள் என்பவர்கள் வேறுவகையானவர்கள். அவர்கள் நாடோடிகள். தமிழகத்தில் குடியேறிய சமூகத்தினர்.


நரிக்குறவர்கள் குஜராத், மேவார் போன்ற பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பது இந்த நூலில் இருந்து தெரிய வருகிறது. மேலும் அவர்களின் பூர்வீகமும் அது தான்.முகலாயப் படையெடுப்பின் பிறகு அவர்களுக்குப் பயந்து காடுகளில் வசிக்கத் தொடங்கிய அவர்கள் காடுகளைச் சார்ந்தே தங்களுடைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டனர் போன்ற தகவல்கள் இந்த நூலில் பெண் எழுத்தாளர்  கரசூர் பத்மபாரதியினால் கூறப்பட்டுள்ளன. 

 தமிழகத்தில் ஏறக்குறைய எழுபது வகையான குறவர்கள் இருந்தாலும் தொழில் அடிப்படையில் பூனைகுத்தும் குறவர், உப்புக் குறவர், மலைக்குறவர் போன்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.நரிகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உண்பதாலும் நரித்தோல், நரிப்பல், நகம் வால் கொம்பு முதலியவற்றை விற்பதாலும் குறிப்பிட்ட இனத்தை நரிக்குறவர் இனம் என்பதாகத் தெரிகிறது.

இவ்வாறு இந்நூலில் பரவலாகக் காணப்படும் பல தகவல்கள் நரிக்குறவர் வாழ்க்கை பற்றிய ஒரு முழுமையானக் கண்ணோட்டத்தை நமக்கு வழங்கக்கூடியவை எனலாம்.நாம் முற்றிலும் அறிந்துகொள்ள விரும்பாது ஒதுக்கியும் உதாசீனப்படுத்தியும் வைத்துள்ள ஒரு சமூகத்தை, அதனுள் இருந்து பார்ப்பது போன்ற உணர்வைத் இந்த நூல் தருவதுடன் வாசித்து முடித்ததும் அவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் நமக்கு உண்டாவது  போன்றதான ஒரு புரிதல் இந்த நூலில் நிச்சயம் வெளிப்படும்.



No comments:

Post a Comment