Friday, February 12, 2016


தெற்காசிய  விளையாட்டுப்  போட்டிகள் ஒரு பார்வை.

கடந்த வாரம் 5ம் திகதியிலிருந்து தெற்காசிய நாடுகளுக்கு கொண்டாட்டம் தான் காரணம் தெற்காசிய வளையாட்டு போட்டிகள் ஆரம்பித்து களைகட்டிக் கொண்ருக்கின்றன.சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கின்ற இலங்கை ,இந்தியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் ,வங்கதேசம்,பூட்டான்,நேபாளம்,மாலைதீவு ஆகிய நாடுகளை சேர்ந்த 2500 வீர வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கு பற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டிகளை தொடக்கி வைத்தார்.





இம்முறை 12வது முறையாகவும் நடைபெறும் இத் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் குவாஹொட்டி இந்திரா காந்தி மைதானத்தில் ஆரம்பமானதோடு இந்தப் போட்டிகள் இந்தியாவில் இடம்பெறுவது இது 3வது சந்தர்ப்பமாகும்.

இதன்படி தடகளம்,கூடைபந்து,சைக்கிள் ,கால்பந்து,ஹன்ட்பால்,கபடி,கோ-கோ,துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ்,நீச்சல்,டென்னிஸ்,ட்ரையத்லான்,கைபந்து,பளுதூக்குதல்,மல்யுத்தம்,ஆடவர் கால்பந்து,ஆகிய விளையாட்டுக்கள் மிக பிரதான விளையாட்டுக்களாக விளையாடபடுவதோடு  இதற்கு மேலதிகமாக வில்வித்தை,பாட்மிட்டன்,குத்துசண்டை, ஜூடோ,டேபிள் டென்னிஸ்,தேக்வாண்டோ,வூசு (பெண்கள் ), ஆகிய போட்டிகளும் இடம்பெறுகின்றன.




நதிகளின்  பெயர்களில்  நிகழ்சிகள்.

தெற்கு ஆசிய நாடுகளில் ஓடும் நதிகளை நினைவுகூரும் முகமாக அல்லது பாரம்பரியத்தை போற்றும் முகமாகவும் இம்முறை நதிகளின் பெயர்களை ஒவ்வொரு நிகழ்சிகளின் பெயர்களும்  குறிபிடப்படிருந்தன.

இதன்படி பிரம்மபுத்திரா (இந்தியா), சிந்து நதி (பாகிஸ்தான்), காபுல் நதி (ஆப்கானிஸ்தான்), கோஸி (நேபாளம்), பத்மா நதி (வங்கதேசம்), மகாவலி (இலங்கை ), மாலை தீவு ( ஏரி) காரணம் மாலை தீவுகளில் ஆறுகள் கிடையாது ஆகிய   நதிகளை மையமாக வைத்து நிகழ்சிகள் நடத்தப்பட்டன.

லோகோ (இலட்சனை).



12வது தெற்காசிய விளையாட்டு போட்டியின் சின்னமாக இந்த முறை திஹொர் வடிவமைக்கப் பட்டிருந்தது.இந்த சின்னமானது தெற்காசிய நாடுகளுக்கிடையில் அமைதி ,முன்னேற்றம்,வலிமை ஆகியவற்றை வலியுறுத்துவதாக அமைந்தது.

இந்தியாவின் ஆதிக்கம்.




இதுவரை 12 முறை நடத்தப்பட்டுள்ள தெற்காசியப் போட்டிகளில் இந்தியா இதுவரை 7 முறை பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.தவிர பெரும்பாலான போட்டிகளில் பாகிஸ்தானே அதிக இரண்டாமிடன்களை பிடித்திருக்கின்றது.எனினும் கடுமையாகப்  போராடி இலங்கை இந்த முறை இரண்டாமிடத்துக்கு தரப்ப்படுத்தப்படுள்ளதுடன் இன்னும் கடுமையாகப் போராடுகின்ற சந்தர்ப்பங்களில் இலங்கை முதலிடத்துக்கு முன்னேறக்கூடிய சந்தரங்கள் அதிகம் இருக்கின்றன.கடந்த கால தோல்விகளும் எழுச்சி கண்ட இலங்கையும்.

கடந்த இரு வருடங்களை போல  இல்லாமல்  தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கையை பிரதிநிதுவப்படுதுகின்ற இலங்கை வீரர்கள் மிக சிறந்த பருதிகளை மிக சிறந்த வெற்றிகளை தேடி கொடுத்திருகின்றனர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இந்நிலையில் இது வரையான  போட்டிகளின் அடிப்படையில் இந்தியா 146 தங்கம் ,79 வெள்ளி,23 வெண்கல பதக்கங்களை கைப்பற்றி தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்க இந்தியா பாகிஸ்தான் போன்ற மிக பெரிய நாடு வீரர்களிடம் சவால் விடும் அளவுக்கு இலங்கை 25 தங்கம் ,53 வெள்ளி,79 வெண்கல பதக்கங்களை கைப்பற்றி  பதக்கப்படியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது.


இதன்படி இதுவரை நடந்துள்ள  போட்டிகளின் அடிப்படையில் இலங்கை 25 தங்க பதக்கங்களை கைப்பற்றி எமது  தாய் நாட்டுக்கு பெருமை தேடி தந்த தங்க நாயகர்கள் பற்றிய தேடல்  இது.

01. மெத்திவ் அபேசிங்க.
அண்மைய காலமாகவும் சரி இனிமேல் நடைபெற போகின்ற போட்டிகளிலும்  சரி  நீச்சல் போட்டிகளில் இந்திய வீரர்களை இந்திய நீச்சல் வீர,வீராங்கனைகளை வீழ்த்த முடியாமல் இருக்கின்றதே என்ற ஏக்கம் பலருக்கும் இருந்தது. ஆனால் இந்தமுறை இந்த கனவு பளித்திருக்கின்றது.ஆம் இலங்கையை  பிரதிநிதித்துவப்படுத்தி நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றிய மெத்திவ் அபேசிங்க தங்க பதக்கங்களை வென்றது  மட்டும் அல்லாமல் புதிய சாதனை ஒன்றையும் நிலைநாட்டியிருந்தார்.

அதாவது கடந்த 10ம் திகதி இடம்பெற்ற ஆண்களுக்கான குறுந்தூர மற்றும் நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றிய மெத்திவ் அபேசிங்க 200மீற்றர் நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கபதக்கத்தை கைப்பற்றி கொண்டதோடு, ஆண்களுக்கான 100மீற்றர் ப்ரி ஸ்டைல் (Free Style) நீச்சல் போட்டியிலும் அவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி  மொத்தமாக 7 தங்கப் பதக்கங்களை கைப்பற்றிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.கடந்த 1991 ம்ஆண்டு இடம்பெற்ற தெற்காசிய போட்டிகளில் நீச்சல் வீரர் ஜுலியன் போலிங் 6 தங்கப்பதக்கத்தை பெற்றிருந்ததே, இது வரை  தனிநபர் சாதனையாக  இருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த முறை மெத்திவ் அபேசிங்க கைப்பற்றிய தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 05 என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

2. சுரஞ்சித் 200 மீ.ஓட்டப்போட்டிகள்.

கடந்த 2ம் திகதி இடம்பெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் சுரன்ஜித் த சில்வா 21:00 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து இலங்கைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்திருந்தார்.

3. சந்தருவான்- கோலுன்றி பாய்தல்.
கடந்த 10ம்  இடம்பெற்ற கோலுன்றி பாய்தல் போட்டியில் இலங்கை வீரர் எம்.எச்.ஐ.  சந்தருவான் இலங்கைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.இதன்படி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சந்தருவான் 4.90 மீற்றர் பாய்ந்து தங்கப்பதக்கத்தை  வெற்றிக் கொண்டிருந்தார்.மேலும் கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் முகம்மது ஐயூபின் தெற்காசிய சாதனையை முறியடித்திருந்ததோடு பாகிஸ்தான் வீரர்   ஐயூப் 4.81 மீற்றர் உயரம் பாய்ந்திருந்தார்.என்பதும் இங்கு கவனிக்கக்கூடியது. மேலும் இலங்கைக்கு மொத்தமாக இலங்கைக்கு மொத்தமாக 09 தங்கப்பதக்கங்கள் தடகள போட்டிகளில் மட்டும் கிடைத்துள்ளன.

4.இந்துனில் ஹேரத் - 800 மீற்றர்.
இலங்கையை பிரதிநிதிதுவப்படுத்தி இந்த முறை 800 மீட்டர் ஓட்டப்போட்டிகளில் பங்குபற்றிய இந்துனில் ஹேரத் குறிப்பிட்ட தூரத்தை 1:51.46 என்ற மணித்தியாலத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியிருந்தார்.

5.கிமிகோ ரஹிம் - 100 மீட்டர் ஓட்டப்போட்டிகள்.

பெண்களுக்கான 100 மீற்றர் பிரிஸ்டைல் போட்டியில் கிமிகோ ரஹிம்  தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.இதன்படி குறிப்பிட்ட தூரத்தை அவர் 57.20 என்ற நிமிடங்களிலேயே கடந்து தங்க பதக்கத்தை தனதாக்கியிருந்தார்.இந்த பதக்கத்தோடு சேர்த்து இவர் கைப்பற்றிய தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 03. ஏற்கனவே 50 மீட்டர் நீச்சல் போட்டியில்  குறிப்பிட்ட தூரத்தை 26.49 நிமிடத்தில்  கடந்ததோடு, 50 மீற்றர் பின்நோக்கி நீந்தும்  நீச்சல் போட்டியில்    தங்கப்பதக்கத்தை கைப்பற்றியிருந்தார்.

6.ஜீவன் ஜயசிங்க - வீதியோர சைக்கிளோட்டம்.

இலங்கை வீர வீராங்கனைகளில் கவனிக்கப்படக் கூடிய ஒரு மெய்வல்லுனர் தான் இந்த ஜீவன் ஜயசிங்க, அதாவது கடந்த 10ம் திகதி இடம்பெற்ற வீதியோர சைக்கிளோட்டபோட்டிகளில் இலங்கைக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்காது என்ற மனநிலையில் இலங்கை ரசிகர்கள் இருக்க யாரும்  எதிர்பார்க்காத நேரத்தில்  ஜீவன் ஜயசிங்க  இலங்கைக்கு தங்கபதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.

இதோடு சேர்த்து இலங்கை மல்யுத்த வீரர்கள் இலங்கைக்கு 12 பதக்கங்களை பெற்றுக்கொடுத்துள்ளனர். இம்முறை முதன் முறையாக பங்குபற்றிய இலங்கை பெண்கள் மல்யுத்த வீராங்கனைகள் 5 வெள்ளிப்பதக்கம் 3 வெண்கலப்பதக்கக்களையும் பெற்று கொடுத்ததோடு,ஆண்கள்  மல்யுத்த அணி ஒரு வெள்ளிப்பதக்கமும் மூன்று வெண்கலப்பத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட இரு பிரிவிலும் இலங்கைக்கு தங்கபதக்கங்கள் கிடைக்கவிட்டாலும் கூட அடுத்த முறை இலங்கை ல்மல்யுத்த வீர வீராங்கனைகள் பதக்கங்களை கைப்பற்றுவார்கள் என் ஏதிர்ப்பர்க்கடுகிறது.

7.   அதிவேக வீர வீராங்கனைகள் இலங்கையில் ......
இந்த போட்டிகள் தங்க பதக்கங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்க  எல்லா நாடுகளும் கவனித்த மற்றுமொரு விடயம் இலங்கையில் தான் தெற்காசியாவிலேயே அதி வேக வீர வீராங்கனைகள் இருகின்றார்கள் என்பது,  இந்த யதார்த்தம் நிகழ்ந்தது கடந்த 09ம்  திகதி தான்.அதாவது ஆண்களுக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப்போட்டியில் ஹிமாஷ எஷான் 10.26 செக்கன்களில் ஓட்டத் தூரத்தை கடந்ததன் மூலம் புதிய அசதனையை படைத்ததோடு  தங்கப்பதக்கத்தை மகிழ்ச்சொயோடு கைப்பற்றினார்.இந்த சாதனையின் மூலம் இவர் தெற்காசியாவின் அதிவேக ஒட்டவீரர் என்பதை மற்றுமொரு உலக மக்கள் அரங்குக்கு பறை சாற்றியிருந்தார்.1999ம் ஆண்டு இலங்கை வீரர் சிந்தக்கவின் சாதனையை கிட்ட தட்ட 17 வருடங்களுக்கு பின்னர் எஷான் முறியடித்துள்ளமை மேலும் சிறப்பம்சமாகும்.

மேலும் பெண்களுக்கான 100மீற்றர் ஓட்டப்போட்டியில் ருமேஷிக்கா ரத்நாயக்க 11.60 செக்கன்களில் ஓடி தெற்காசிய சாதனையை நிலைநாட்டியதோடு தங்கப்பதக்கத்தையும் பெற்றார். இவர் 11.71 செக்கன்களில் அத்தூரத்தை கடந்திருந்தார்.

08.மஞ்சுல குமார- உயரம் பாய்தல்.
கடந்த 08ம் திகதி இடம்பெற்ற உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி உயரம் பாய்தல் போட்டியில்  பங்குபற்றிய மஞ்சுல குமார 2.17 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

09.கே.எல்.ஏ நிமாலி லியானாராச்சி- பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டி.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கே.எல்.ஏ நிமாலி லியானாராச்சி 2.09.40 நிமிடங்களில் போட்டித் தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றி மற்றுமொரு தங்கப்பதக்கத்தை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பெண் இரட்டை குழந்தைகளுடன் பதக்கம் வென்ற உபெக்ஷிகா மற்றுமொரு சாதனையாளர் இலங்கையை பொறுத்த வரையில்.
அதாவது தெற்காசிய போட்டிகளுக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்து இரட்டை குழந்தைகளை பிரசவித்தவர் குழந்தைகளை பிரசவித்த உடனே எவாறு போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என்பது சாத்தியப்படக் கூடிய  விடயமா என்று வாசகர்கள் சிந்திக்கலாம்.ஆனால் இது உண்மை தான்  தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் குறி பார்த்து சுடும் போட்டிகளில் தனது அயராத முயற்சியால் உபெக்ஷிகா எகோட வெல வெங்கலப்பதக்கதை வென்று கொடுத்துள்ளார். இன்னும் 04 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்ற நிலையில்  இலங்கை வீர வீராங்கனைகள் இன்னும் சற்று முயற்சி செய்வார்களாயின் இலங்கைக்கு இன்னும் சில தங்கப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.

No comments:

Post a Comment