Wednesday, February 10, 2016








ஒரு தலை சிறந்த பினிஷர் ஓய்வு பெற்றார்.

போட்டி ஆரம்பித்த மறு நிமிடமே இந்த வீரரை பார்த்து விட்டால் ரசிகர்களின் கை தட்டல் விசில் சத்தம் மட்டும் தான் மைதானத்தில் வரும். முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டும் மிக அரிதான வீரர்களில் ஒருவர், 360 டிகிரி கோணத்தில் பந்துகளை துவம்சம் செய்பவர், இந்த வீரரின் துடுப்பில்  பந்துமட்டும் பட்டு விட்டால் நிச்சயமாக அது ஆறு ஓட்டமாக மட்டும் தான் இருக்கும்.



அவர் தான் நியூசிலாந்து அணியின் பர்ண்டன் மெக்கலம். நான் தற்போதைய காலத்தில் ரசிக்கின்ற மற்றுமொரு மிக சிறந்த வீரர் . இனிமேல் அவரை நாம் ஒரு நாள் போட்டிகளில் பார்க்க முடியாது காரணம் இன்றோடு அவர் ஓய்வு பெறுகிறார்.அதுவும் தனது துடுப்பாட்டத்தில் தனது துடுப்பாட்ட வியுகத்தில் மாற்றங்களை கொண்டு வராமல் தனக்கே உரிய முறையில் கடைசி போட்டியிலும் 27 பந்துகளில் 47 ஓட்டங்களோடு.



அதிரடியாக கிரிக்கெட் விளையாடுபவர்களை  காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்று கூறுவோம். உண்மையிலேயே காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடக்கூடியவர்தான் இந்த மெக்கல்லம்.  பிச்சிக்கு நடுவில் வந்தே இருக்காது ஆனால் மெக்கலம் நாடு பிச்சில் இருப்பார். பிறகென்ன வருகின்ற பந்து ஆறு ஓட்டங்களை தொடும் அல்லது நான்கு ஓட்டங்களை தொடும் இது தான் மேக்கலமுக்கான அடையாளம். இனிமேல் ஏதாவது ஒரு போட்டி விறுவிறுப்பு இல்லாமல் சப்பையாக நடக்குமாயின்  அது நிச்சயம் மெக்கலமை நினைவு படுத்தும்.


கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டது. முதன் முதலாக அயல்நாட்டு வீரர்களும், இந்திய வீரர்களும் இணைந்து இந்தியாவில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கிறார்கள். நட்சத்திரப் பட்டாளங்கள் குவிந்த இந்த தொடர், உலகக்கோப்பை போட்டியை காட்டிலும் களை கட்டியது. ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி என்பதால் பெங்களூரு, சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.



இதன்படி முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் - பெங்களூரு அணியும் மோதிக் கொண்டன.  கொல்கத்தா அணியின் கேப்டன் கங்குலியுடன், பிரண்டன் மெக்குல்லம் களமிறங்கினார். முதல் ஓவரை பிரவீன் குமார் வீச, ஐந்து பந்துகளை சந்தித்த மெக்குல்லம் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. முதல் ஓவரில் ஒரு ரன் மட்டும் விட்டுக் கொடுத்து, டிராவிட்டின் முடிவு சரியானதே என ரசிகர்களுக்கு சொன்னார் பிரவீன் குமார்.







அடுத்த ஓவர், ஜாகீர்கான் பந்துவீச வந்தார், ஓவரின் முதல் பந்தில் ரன் இல்லை, அடுத்த நான்கு பந்துகளும் பவுண்டரி, சிக்சர் என நொறுக்கி தள்ளினார் மெக்குல்லம். ஐ.பி.எல் போட்டியில் முதல் ரன், முதல் பவுண்டரி, முதல் சிக்சர் மூன்றையும் அடித்தவர் மெக்குல்லம்தான். இரண்டாவது ஓவரோடு மெக்குல்லம் நின்றுவிடவில்லை. மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார். மறுமுனையில் கங்குலி, ரிக்கி பாண்டிங், ஹஸ்சி, ஹபீஸ் சொற்ப ஓட்டங்களில் நடயை கட்டிக் கொண்டிருக்க தனி ஒருவனாக  நின்று 73 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளையும், 13 சிக்சர்களையும் விளாசி தள்ளி 158 ரன்களை குவித்தார். பங்களூரு பந்து வீச்சாளர்களின்  பந்துகளை உடைத்து நொறுக்கி போட்டார். 20 ஓவரில் கொல்கத்தாவின் ஸ்கோர் 222.

மெக்குல்லத்தின் மரண விளாசலை கண்டு அத்தனை பேரும் ஆடி போனார்கள். மெக்குல்லத்தின்  அதிரடி  அந்த போட்டியில் இருந்துதான் தொடங்கியது. ஒரு தின போட்டியில் 150 ரன்கள் எடுப்பதே சாதனை என்ற காலக்கட்டத்தில், அனாயசமாக 20 ஓவரில் 158 ரன்களை குவித்திருந்தார் மெக்குல்லம். அந்த வகையில் கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ்க்கு எல்லாம் முன்னோடி இந்த மெக்குல்லம். சேஸிங்கில் களமிறங்கிய பெங்களூருக்கு அதிக ரன்கள் எப்படி வந்தது தெரியுமா? எக்ஸ்ட்ராஸ் மூலமாகத்தான் 19 ரன்கள் வந்தது. பிரவீன் குமாரை தவிர வேறு யாரும் இரட்டைப்படை எண்ணிக்கையில் ரன்கள் குவிக்கவில்லை. பரிதாபமாக 82 ரன்களில் பெங்களூரு அணியின் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வர, 140 ரன்கள் வித்தியாசத்தில்  மெகா வெற்றி பெற்றது கொல்கத்தா...






பிரண்டன் மெக்கல்லம் 2002-ம் ஆண்டே நியூசிலாந்து அணிக்காக விளையாட ஆரம்பித்து விட்டார். மிகச்சிறந்த விக்கெட் காப்பாளராக  இருந்த மெக்குல்லம், சிறந்த பேட்ஸ்மேனாக மாறியது ஐ.பி.எல்-க்கு பின்னர் தான். டி-20 மட்டுமல்ல டெஸ்ட் போட்டிகளிலும் மெக்குல்லம் சிறந்த வீரர்தான். இந்திய மண்ணில், வலுவான சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இரட்டைச் சதமடித்தார் மெக்குல்லம். கடந்த ஆண்டு இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆக்லாந்து மைதானத்தில் இரட்டை சதம் அடித்தார். அத்துடன் மெக்குல்லம் அடங்கவில்லை. அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே இரண்டாவது இன்னிங்க்ஸில், 13 மணி நேரம் களத்தில் நின்று 559 பந்துகளை (93 ஓவர்கள்) சந்தித்தது 32 பவுண்டரிகள், நான்கு சிக்சர் விளாசி முச்சதம் எடுத்து முத்திரை   பதித்தார். இந்தியாவுக்கு ஷேவாக் போல நியூசிலாந்துக்கு மெக்குல்லம். முச்சதம் எடுத்த ஒரே நியூசிலாந்து வீரர் அவர்தான். நான்கு முறை டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம்  அடித்திருக்கிறார்.

ஆக நியூசிலாந்து அணி இன்னும் தரவரிசையிலும் சரி விளையாடுகின்ற போட்டிகளிலும் சரி மிக சிறந்த வெற்றிகளை குவித்திருக்கின்றது என்றால் அதில் மெக்கலாமின் பங்கு அலாதியானது. மிக முக்கியமாக  இங்கு கவனிக்க வேண்டியது இந்த வருடம் உலக கிண்ண போட்டிகளில் நியூசிலாந்து அணி எந்த வருடமும் வராதது போல இறுதி போட்டிக்கு  முன்னேறியது என்றால் அதற்கு காரணம் ரியல் ஹீரோ மெக்கலம் தான்.




வெற்றியோடு தனது கிரிக்கெட் பயணத்தை முடித்திருக்கிறார் வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்பி வைப்போம் வாழ்த்துக்கள் தலைவா! நிகாஹயம் கிரிக்கெட் உலக நாளைய போட்டிகளில்  உன்னை மிஸ் செய்யும்.


No comments:

Post a Comment