Wednesday, September 28, 2016

நூல் அறிமுகம். 
பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல்.

பாகிஸ்தானில் வருடம் முழுதும் உள்நாட்டு யுத்தம்,  கலவரம்,  தீ-வைப்பு, இனி இல்லை என்ற அளவுக்கு அநியாயங்கள்.  இவை அனைத்துக்கும் காரணம் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி   பர்வேஸ் முஷரஃப்தான் என்கிறார்கள் மக்கள்.  யார் இந்த முஷாரப்  என்ற கேள்விக்கு சரியான அறிமுகத்தை வழங்குகின்ற  இந்த நூல் இராணுவ புரட்சி மூலம் உலகில் ஆட்சியை பிடித்த தலைவர்களில் முஷாரப்பியையும் கூறி நிற்பது சிறப்பானது.

1999ல் நவாஸ் ஷெரீஃபை ஆட்சியை விட்டு நகர்த்தி எரிந்து விட்டு முஷரஃப் ஆட்சிக்கு வந்தபோது பாகிஸ்தான் மக்கள் சந்தோஷமாகவே அவரை வரவேற்றார்கள். ஆனால் மிக விரைவில் அந்த சந்தோஷம் வெறுப்பின் உச்ச கட்டமாக  மாறிப்போனது. இதற்கான காரணங்கள் அடுக்கடுக்காக இந்த நூலில் திறம்பட கூறப்பட்டுள்ளது. 

ஆப்கனிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்பின் போது ஜார்ஜ் புஷ்ஷின் ஆதரவாளராக அவர் நின்றதில் தொடங்குகிறது இந்த வன்மம். பாகிஸ்தான் அடிப்படைவாதிகளால் முஷரஃபின் எந்த ஒரு முற்போக்கு முயற்சியையும் சகிக்கமுடியவில்லை. அவரை அடியோடு அளித்து விட அல்லது வேரோடு சாய்த்து விட பாகிஸ்தானில் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் மிக முக்கியமாக  ரஸ்யாவால்  கூட  ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆட்சியில் நிலைப்பதற்காக முஷரஃபும் ஏராளமான தகிடுதத்தங்கள் செய்யவேண்டியதானது. அதற்கு   அமெரிக்காவின் கொடுமையான ஜனாதிபதியாக இன்றும்  அந்த நாட்டு மக்களால்   நிலை நிறுத்தப்படும் ஜார்ஜ்  புஷ்சும் மிக முக்கியமானதொரு காரணம். அவர் செய்த பல திகிடு திட்டங்களுக்கு முஷாரப்பும் உடந்தையாக  அருகில் நின்றார்.   இதன் போது தான் முஷாரப்  உலக நாடுகளின்  பழி சொல்லுக்கு ஆளாக்கப்பட்டார் . அவர் அத்தனை காலமும் சம்பாதித்து வைத்த பெயர் புகழ் மங்க தொடங்கியது.அந்தக் கணத்திலிருந்துதான்.

 அதனாலேயே அவர் உருப்படியாகச் செய்த பல நல்ல காரியங்கள் அடையாளமில்லாமல் போயின. 2007ம் வருடத் தொடக்கத்திலிருந்து முஷரஃபை முன்வைத்து பாகிஸ்தானில் நிகழ்ந்த பல சம்பவங்கள் அத்தேசத்தின் சரித்திரத்தை ரத்தப் பக்கங்களால் நிரப்புபவை. வாஜிரிஸ்தான் போர்களும் லால் மசூதித் தாக்குதலும் பாகிஸ்தானின் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி நீக்கத்தை அடுத்து நடைபெற்ற ஏராளமான கலவரங்களும் இன்னபிறவும் இன்றும் நெஞ்சை  பாதை பதைக்கச் செய்யும் கோர நிகழ்வுகள்.

மிக முக்கியமாக பாகிஸ்தானின் முன்னாள்  அதிபர் பர்வேஸ் முஷர·பின் இந்த சுயசரிதை நூல் நமக்கு எடுத்துக்காட்டும் அறிமுகம்  யாதெனில் இந்த உலகம், பயங்கரங்களால் ஆனது என்பது மட்டும் இந்த நூலில் மிக நேர்த்தியாக விளங்கும். இப்படி அவர்  ஜார்ஜ்  புஷ்சும்டன்  நிரந்தரமான பிரிவை ஏற்படுத்திக் கொண்டு    பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத தேசமல்ல என்று பல முறை அழுத்தமாக உலகுக்கு கூற முயன்றாலும் , மத அடிப்படைவாதிகள் தொடங்கி, மண்ணை ஆண்ட மனிதர்கள் வரை அதனை ஏற்றுக் கொள்ள வில்லை. மிக முக்கியமாக இந்த நூலில் நூலாசிரியர் ........  தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட உலகு தழுவிய யுத்தத்தில் பாகிஸ்தான் பங்கெடுக்க நேர்ந்ததன் பின்னணியை வெகு நேர்த்தியாக விபரித்திருக்கிறார்.

இந்த நூலில் மூலமாக முஷாராஃபீன் பல முகங்கள் வெளியில் வரும். உதாரணமாக  , ராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் அவர் பயணம் செய்த விமானத்தை பாகிஸ்தான் பிரதமரே கடத்தச் சொல்லி உத்தரவிட்டு நடத்திய நாடகம், விமான எரிபொருள் தீர்ந்துகொண்டிருந்தபோது வானவெளியில் அவர் அனுபவித்த  விவரிப்புக்கு அப்பாற்பட்ட பதற்றம், மண்ணுக்கு வந்தபோது நிகழ்ந்திருந்த மாபெரும் ராணுவப் புரட்சி. முஷரஃப் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராகவும் இந்நூலின் மூலம் அறிமுகமாகிறார்.
தனது நினைவுத்தொகுப்பு நூலான 'In the Line of Fire' ல் முஷரஃப் சொல்லாமல் விடுத்த விஷயங்களையும் 'மாற்றி'ச் சொன்ன விஷயங்களையும் இந்த நூலை வைத்து நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  முஷரஃபின் முழுமையான அரசியல் வாழ்க்கை  மாத்திரமன்றி சர்வதேச அரசியலில் ஆர்வம்  கொண்டர்வர்களுக்கான ஒரு பெட்டகம் இந்த நூல் என்பேன்.

No comments:

Post a Comment