Saturday, November 21, 2015

ச்லட்ஜிங் சிறுத்தை ஓய்வு பெற்று விட்டது.

எனக்கு தெரிந்த ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர்களில் பிரெட்லீக்கு அடுத்து நான் அதிகம் ரசித்தது மிச்சல் ஜோன்சன் என்ற ச்லட்ஜிங் புயலைதான்.எந்த துடுப்பாட்ட வீரராக இருந்தாலும் சரி அவரது பவுன்சர் பந்துகள்.வேகம் எதிர்த்து துடுப்பெடுத்தாடும் வீரரை ஒரு நிமிடமா கதி கலங்க வைத்துவிடும்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பல முறை உலக கிண்ணம் வெல்வதற்கும்,பல தொடர்களை வெல்வதற்கும் மிக முக்கியமான ஒரு வேக பந்து வீச்சாளர் என்றால் என்னை பொறுத்தவரை அது மிச்சல்  ஜோன்சன் தான் என்று கூறுவேன்.அவர் நவம்பர் 17-ம் திகதி  தனது ஓய்வை அறிவித்து விட்டார்.
சில நிமிடம் அவர் செய்தது சரியாய் என்று யோசித்தேன் கரணம் கிரிக்கட்டை உண்மையாக நேசிக்கிற ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு மிக சிறந்த வீரர் தனது ஓய்வை அறிவிக்கிறார் என்றால் மனதில் பல கேள்விகள் எழும் அந்த கேள்வி தான் எனது அந்த யோசனைக்கும் காரணம்.


மிச்சல் ஜோன்சன் பற்றிய சிறு பகிர்வு.
ஒருநாள் போட்டிகள் என்றாலும் சரி மிச்சல் ஜான்சனின் 10 ஓவர் எப்போது முடியும் என்பதுதான் எதிரணியின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதுவே, டெஸ்ட் போட்டி என்றால் இன்று யாரை வம்பிழுக்கப் போகிறார், இவரது பவுன்சரில் யார் யார் நிலைகுலையப் போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். கிட்டத்தட்ட 10 வருட காலம் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ள  மிட்சல் ஜான்சன் பல பல சாதனைகளுக்கு  சொந்தக்காரர்.


ஆஸ்திரேலிய அணியில் பிரட்லீ, மெக்ராத், ஃப்ளெம்மிங் போன்றவர்கள் ஓய்வு பெற்றதற்கு பின்பு,  ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் முக்கிய இடம்பிடித்தவர்களில் முதன்மையானவர் மிட்சல் ஜான்சன். ஓடிவரும் ஸ்டைல் துவங்கி, பந்தை ஆடுகளங்களில் அடித்து தலைக்கு மேலே பவுன்ஸர்களாக மாற்றுவது வரை பேட்ஸ்மேனை ஒரு நிமிடம் நிலைகுலைய வைப்பவர். உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர்களான சச்சின், தோனி, காலிஸ் போன்றவர்களை கலங்கடித்தவர் ஜான்சன்.

ஆஸ்திரேலிய அணியின் ஆஸ்தான ஆயுதமான ஸ்லெட்ஜிங்கை சிறப்பாக செய்தவர் ஜான்சன். அந்த  ஸ்லெட்ஜிங் மூலம் பல வெற்றிகளை ஆஸி அணி பெற்றுக்கொண்டது. சைமண்ட்ஸ், பிரெட்லீக்கு இணையாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டவர் ஜான்சன்தான். 2013 /2014 ஆம் ஆண்டுகளில்  இடம்பெற்ற ஆஷஸ் தொடரின்போது ஜோ ரூட்டை வம்பிழுத்ததுதான் இவரது ஸ்லெட்ஜிங்கின் உச்சக்கட்டம். ஜான்சனின் அனல் பறக்கும் பந்துவீச்சு, சரியான நேரத்தில் கைகொடுக்கும் பேட்டிங் இதனையெல்லாம் தாண்டி இவரது ஸ்லெட்ஜிங்கிற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

களத்தில் எப்போதும் அக்ரஸிவாக இருந்தால்தான் ஒரு வேகப்பந்து வீச்சாளரால் வேகமாக பந்துகளை வீச முடியும் என்பது அக்தர் காலத்து ட்ரிக்ஸ் அதனை இன்னும் ஒருபடி சிறப்பாக செய்தவர் ஜான்சன்.   பிலிப் ஹூயூக்ஸ், பவுன்ஸர் தாக்கி உயிரிழந்தார் அந்த சோகம் ஆஸி  வீரர்களை அதிகமாக தாகி விட்டது.அதன் பின்பு சுற்றுலா இந்திய அணிக்கு  எதிரான போட்டியில்     முதல் டெஸ்ட் போட்டியில்  ஜான்சன் இந்திய அணியின் தலைவர்  விராட் கோலிக்கு வீசிய பந்து ஹெல்மெட்டை தாக்கிய சந்தர்ப்பத்தில், சற்று நேரம் நிலைகுலைந்தார் கோலி. அந்த பவுன்ஸர் தான் ஆஸ்திரேலியா தொடரை வெல்ல ஆஸி வீரர்களை மனதளவில் தயார்படுத்தியது என்றே சொல்லலாம்.


ஆஸ்திரேலிய அணியின் அனைத்து போட்டிகளிலும் ஜான்சனின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், அதே போல் அவரது ஆட்டமும் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் கண்டிப்பாக ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் கண்டிப்பாக இருக்கும். ஒற்றை ஆளாக அணியை வெற்றிப்பாதைக்கு  அழைத்து செல்வார் ஜோன்சன்.மேலே குறிப்பிட்ட கூற்றுக்கு  2013-2014 ம் ஆண்டில் இடம்பெற்ற ஆஷஸ் தொடரில் ஜோன்சன் கைப்பற்றிய விக்கட்டுகளே சான்று.

ஜான்சனின் பலமே பவுன்சர் பந்துகள் தான் . டெஸ்ட் போட்டிகளில் புதிதாக களமிறங்கும் வீரர் ஜான்சன் பந்துவீசும் போது துடுப்பெடுத்தாட  பயப்படுவார் காரணம் அவர் சந்திக்கும் முதல் பந்தை கணிக்க முடியாத பவுன்ஸராக்கி ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் எளிதில் திருப்பும் திறன் கொண்டவர் ஜான்சன். டென்னிஸ் லில்லி புகழ்ந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஜான்சனும் ஒருவர். ஓய்வை அறிவித்த பின்பு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் 'இங்கிலாந்து வீரர்கள் மகிழ்ச்சியடைவார்கள் காரணம் இனி அவர்கள் ஜான்சனை எதிர்கொள்ளமாட்டார்கள்' என புகழ்ந்துள்ளார் அந்த அளவுக்கு ஜோன்சனின் வேகபந்து வீச்சும்,பவுன்சர் பந்துகளும் எதிரணி வீரர்களை தாக்கியிருக்கிறது ,அதிலும் இங்கிலாந்து அணி துடுப்பாட்ட வீரர்களை சொல்லே வேண்டாம்.


ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களில் விக்கெட் மெஷின் ஜான்சன் தான். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களில் 4வது இடத்திலும், வேகப்பந்துவீச்சாளர்களில் 3வது இடத்திலும் உள்ளார். கடைசி போட்டியில் ( அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிராக  அவர் எடுத்த விக்கெட்) ஆஸியின் வேகப்பந்து  ஜாம்பவான் பிரெட்லீயின் சாதனையை முறியடித்தது. கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிநாளில் கூட சாதனை படைத்தார் ஜான்சன். மூன்று (ஒரு நாள்,டி20,டெஸ்ட்) போட்டிகளிலும் சேர்த்து ஜான்சன் 590 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2008ம் ஆண்டு தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான போட்டியில் 8 வீரர்களை ஒரே இன்னிங்ஸில் வீழ்த்தியதே அவரது சிறப்பான பந்துவீச்சு.

ஓய்வை அறிவித்த பின்பு இதுதான் பிரபலங்கள் அவருக்கு கூறும் வாழ்த்து.
1. சச்சின் டெண்டுல்கர்.
#. ஜான்சன் ஒரு ஸ்பெஷல் பந்துவீச்சாளர், அவரது ஆக்ரோஷமான பந்துவீச்சை ரசித்துள்ளேன்.

2. மைக்கேல் கிளார்க்
#.நான் விளையாடிய வீரர்களிலேயே மிகச் சிறந்த வீரர்.வாழ்த்துக்கள் கூறி ஒரு சிறந்த வீரனை வழியனுப்பி வைப்போம்.
3. ஏபி.டி. வில்லியர்ஸ்.
#.அவரது ஓய்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
4.ஷேன் வாட்சன்.
#.ஜான்சனுடன் மறுபடியும் விளையாட முடியாததை நினைத்த போது எனது கண்கள் கலங்கிவிட்டன, சிறந்த நண்பர்.
ஒரு சிறந்த வீரனுக்கு வாழ்த்துக்கள் கூறி வழியனுப்பி வைபோம்.சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தலும் அவரது கிரிக்கெட் வாழ்க்கை உள்ளூர்,ஐ.பி எல் போன்ற போட்டிகளில் தொடரட்டும்.
வாழ்த்துக்கள் தலைவா.

No comments:

Post a Comment