Thursday, March 31, 2016

 தோனி vs  சமி. அனல் பறக்கும் ஆட்டம் இன்று.


ஒரு பக்கம் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு முறை கிண்ணம் வென்றிருக்கின்றன. (இந்தியா 2007, மேற்கிந்திய தீவுகள் 2012).  சொந்த ஆடுகளங்கள், அணியின் மொத்த பலமும் துடுப்பாட்ட வீரர்களை நம்பி, இந்தியா வெல்லுமா மாறாக அணைத்து போட்டிகளும் அடித்தாடி வெற்றிகளை குவிக்கின்ற மேற்கிந்திய தீவுகள் வெல்லுமா என்று பலரும் தமக்குள்ள சிலாகித்துக் கொண்டிருக்க இந்த போட்டி பற்றி எனத் தனிப்பட்ட கருத்தை முன்வைக்க எத்தனிக்கின்றேன்.

சொந்த மண்ணில் இந்திய அணி.


2007 ம் ஆண்டு கிண்ணம் வென்ற குதூகலத்துடன் முதல் சுற்றில் இறுதிப் போட்டியில் பல பொருந்திய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய பெருமிதத்துடனும் டோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு நுழையலாம் என்று முழு பலத்துடனும் முழு நம்பிக்கையுடனும் இருக்கிறது. அணியின் மிக பெரிய பலமே துடுப்பாட்ட வீரர்கள் உள்ளடங்கலான அஷ்வின், நெஹ்ரா ஆகியோரின் பணமது வீச்சு அனுபம்  தான். ரோஹித் ஷர்மா, தவான், விராட், யுவராஜ் ( சிலவேளைகளில்), டோனி, ரெய்னா, ஜடேஜா, பெரிய விதத்தில் பல வெற்றிகளுக்கு பங்களித்திருக்கின்ற பாண்டியா, மற்றும் அஷ்வின் வரைக்கும் துடுப்பாட்ட வீரர்கள் இருப்பதும் அணிக்கு கூடுதல் பலம்.



யுவராஜ் சிங்குக்கு கடந்தப் போட்டியில் காலில் ஏற்பட்டிருந்த தசைபிடிப்பு  காரணமாக இன்ற போட்டியில் அவர் பங்கு பற்ற மாட்டார் என்று இன்று அதிகாலை வேளையில் அறிய கிடைத்தது. அவருக்கு பதிலாக டோனி ஒரு சகலதுறை வீரரை பயன்படுத்தலாம் என்று நான் யோசித்திருந்த தருணம் யுவிக்கு பதில் (மனிஷ் பாண்டி, ரஹானே, நேகி) ஆகியோரில் ஒருவர் விளையாடலாம்.என்னுடைய யூகத்தின்  படி மனிஷ் பாண்டி விளையாடக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன அவர் சகல துறை வீரராக இருக்கின்ற படியினால்.




தவிரவும் இன்றைய போட்டியில் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் சறுக்கி வருகின்ற ஆரம்ப துடுபாட்ட ஜோடி (தவான், ரோஹித்) ஜோடியும், சுரேஷ் ரெய்னாவும் தன்னை தனது துடுப்பாட்டத்தை இன்றைய போட்டியில்
  சற்று அதிகமாகவே நிரூபிக்க வேண்டி இருக்கும். கடந்த போட்டிகளை  விட தவறுகளை சரியோ செய்து ஆக்ரோசத்துடன்  இந்த போட்டியில்  இந்திய அணி விளையாடுவது மட்டுமன்றி டோனி அஷ்வினை வைத்து கெய்லை  ஆட்டமிலப்பு செய்ய அதிகம் முயற்சி செய்வார் என்று நினைக்கின்றேன்.



வெற்றி வேட்கையுடன் மேற்கிந்திய தீவுகள் அணி.


இந்தப் போட்டிகள் ஆரம்பிக்க முன்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.நாங்கள் இந்த ஆண்டு கிண்ணத்தை கைப்பற்றத்தான் வந்தோம் அந்த இலக்கை நோக்கி நிச்சயம் பயணிப்போம் என்று.



இந்த கருத்து சில வேளைகளில் மெய்யாகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன. காரணம் மேற்கிந்திய தீவுகள் அணி இந்த டி20 தொடரில் விளையாடி வருகின்ற விதம் அற்புதம் அதி அற்புதம். தான் பங்கு பற்றிய முதல் சுற்றுப் போட்டிகளில்( ஆப்கான் தவிர்த்த) மிக முக்கிய 03 அணிகளை (இலங்கை, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா) ஆகிய அணிகளை வெற்றிக் கொண்டு அசுர பலத்துடன் அரையிறுதிக்குள் நுழைந்திருகின்றது.


அணியின் முழு பலம் பல சகல துறை வீரர்கள் இருப்பது தான் கிரீஸ் கெயில் மட்டுமே போதும் எதிரணிகளை சிதறடிக்க,தவிரவும் டெரன் சமி,  சாமுவேல்ஸ், ப்ராவோ,ரசல், மாத்திரம் அன்றி இலங்கை அணியை சிதறடித்த ப்ளட்ச்சர் என்று ஒரு பலம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் பக்கம். மேலும் ஐ.பி.எல் போட்டிகளின் மூலம் இந்திய ஆடுகளங்கள் பற்றிய சரியான புரிதல் அதிகமாகவே பிராவோ, கெயில், சமி ஆகியோருக்கு இருப்பதால் இந்த காரணியும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதாக அமையும்.




மேலும் இன்றைய தினம் மேற்கிந்திய தீவுகள் அணியில் ப்லட்சருக்கு பதிலாக ப்லண்டன் சீமன்ஸ் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.  ப்லட்சருக்கு காயம் காரணமாக இந்த போட்டியில் ஓய்வு வழங்கப் பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக நான் என்ன செய்யப் போகிறேன் என்று பாருங்கள் என்று கெய்லும் சவால் விடுத்துள்ளதும், நேற்றய தினம் கெயில் எனக்கு அவசரமாக ஒரு சதம் தேவைப்படுகிறது என்று ஒரு பட்டாசை கொளுத்தி போட்டு டுவிட் செய்திருந்ததும் இன்றைய போட்டியை அதிகம் ரசிகர்களின் பால் ஈடுபாடு ஏற்படுத்த உதவலாம்.




மேலும் மிக சிறந்த 02 விடயங்களும் இந்த போட்டியில் அதிகம் அவதானிக்கப்படும் என நினைக்கின்றேன். முதலாவது இந்திய அணியின் தடுப்பு சுவர் விராட் கொஹ்லி டி20 தரப்படுத்தலில் முதல் இடத்துக்கு வந்திருந்தார் கடந்த போட்டியில்  வெளுத்து வாங்கியிருந்ததன் மூலமும் இந்த தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்களின் பட்டியலில் விராட் கோஹ்லி இரண்டாமிடத்தில் (முதலிடத்தில் நேற்றைய போட்டியின் நாயகன் ரோய்*72 ) இருகின்றமையும் விராட் கோஹ்ளியின் தனிப்பட்ட துரத்தியடிக்கும் தன்மை காட்டி நிற்கின்றது.





மேலும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஐ. சி.சி யின் பந்து வீச்சாளர்களுக்கான   டி20 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பத்ரி இருக்கின்றமையும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கூடுதல் பலம்.எல்லாவற்றையும் விட இன்றைய போட்டி நடைபெறுகின்ற மும்பை வன்கடெ மைதானம் முற்று முழுதாக துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானம் என்கிற படியினாலும் இந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்களாகவே 172 ஓட்டங்கள் ஆப்கானிஸ்தான் அணியினால் பெற்றுக் கொள்ளப்படிருக்கின்றன்மையும் இந்த மைதானம் பற்றிய புரிதலை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும். இந்த மைதானத்தில் இந்த தொடரில் மட்டும் பெறப்பட்ட ஓட்டங்கள் இதோ ( 230-8) , (229-4) , (209-5) , (183-4) , (182-6) , (172).




எது எப்படி இருந்தாலும் இன்றைய போட்டி இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையில் ரசிகர்களின் கிரிக்கெட் ரசனைக்கு   தனியாக அமைகின்றதோ என்னவோ விறுவிறுப்புக்கு சற்றும் குறைவு இல்லாமல் இருக்கும். கெயிலின் அந்த புதிய நடனமும், கோஹ்ளியின் ஆக்ரோஷமும் சேசிங் செய்கின்ற முறையும் பெரிதும் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.




No comments:

Post a Comment