Sunday, December 27, 2015

நூல் அறிமுகம்
கிறிஸ்தவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும்,மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும் நூல்

கடந்த 2000 ஆண்டு கால உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதத்துக்கான தாக்கம் மிகவும் வலுவானது.உலக வரலாறே கிறிஸ்துவுக்கு பின் என்று தான் வகுக்கப்பட்டு இலக்கியங்களில் விபரிக்கப்படுகிறது.
தேவ மைந்தன்  இயேசுவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம்  ஏக போதித்ததுபோல அன்பை மட்டும் விதைக்கவில்லை.உலக வரலாற்றை படிக்கும் எவரும், அந்த வரலாற்றை  தெரிந்த எவரும் மத பரப்பலுக்காக சிந்திய ரத்தம் கொஞ்சம் நஞ்சமில்லை.இந்த பின்னணியில் கிறிஸ்தவத்தை பைபிள் ஆதரங்களுடன் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கும் நூல்கள் பல ஏற்கனவே மேற்கத்தேய நாடுகளில் எழுதப்பட்டுள்ளன.ஆயினும் தமிழில் அதை போன்ற விரிவான நூல் வெளிவரவில்லை.அந்த குறையை இந்த நூல் நிவர்த்தி செய்திருக்கிறது என்று கூறலாம்.
பரிசுத்த வேதாகமத்திலிருந்து மேற்கோள்கள் காட்டுவதில் தொடக்கி பலநூறு நூல்களிலிருந்தும் கருத்துக்களை உள்வாங்கி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

பத்து பகுதிகள் கொண்ட இந்த நூலில் கிறிஸ்தவ சமயத்தின் வளர்ச்சி,நோக்கம்,விஞ்ஞானம் கூறும் உலகத்தோற்றத்திற்க்கு­­ முரண்பட்ட கிறுஸ்தவ கோட்பாடு,உலகின் பல்வேறு  நாகரிகங்களின் வரலாறு,இந்து சமவெளி நாகரிகத்தின் தொன்மை,அழியாத்தன்மை,செமிட்டிக் மதங்களின் தாயகமான பலஸ்தினத்தின் வரலாறு,உலக நாடுகளில் கிறிஸ்தவம் பரவிய வரலாறு,பிரிவினை வாதத்தை வளர்க்கும் மத குருமார்கள் என பல விடயங்கள் இந்த நூலில் தெள்ள தெளிவாக கூறப்பட்டும் ,பல உண்மைகள் தோலுரித்து காட்டப்படும் இருக்கின்றன.

இந்த வகையில் எழுத்தாளர் உமரி காசிவேலு மிக சிறந்த ஆதாரங்களை புத்தகத்தின் பக்கத்துக்கு பக்கம் தவள விட்டிறிக்கிறார்.பக்கத்துக்கு பக்கம் கிறிஸ்தவ மதம் பற்றிய மிக தெளிவான தரவுகள் கூறப்பட்டுள்ளன.வரலாற்றை சரியாக தெரிந்து கொண்டு இந்த நூலை வாசிக்கும் போது ஒரு மதத்தின் தெளிவான பல உண்மைகளை தெரிந்து கொள்ள முடியும்.வசிப்பளர்கள் வாசிக்க வேண்டிய சிறந்த நூல் என்று இந்த நூலை கூறலாம்.


No comments:

Post a Comment