இன்னும் சிலுவையில் அறயப்படாத இயேசு நான். கடவுளின் படைப்பில் விமோசனமே இல்லாத சாபம் நான்.
Wednesday, March 23, 2016
Friday, March 18, 2016
விளையாட்டு உலகின்
பொன்னான தருணங்கள்
2015ஆம் ஆண்டு வருடத்துக்கு இன்று விடை கொடுக்க நாம் எத்தனித்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்த வருடம் உலக விளையாட்டு வரலாற்றில் நடந்த இனிமையான தருணங்கள் பற்றிய ஓர் அலங்ல் இது.
இவ்வாண்டு சர்வதேச ரீதியில் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகள் தம் வரலாற்றில் தமது துறை சார்ந்த விளையாட்டுக்களின் மீண்டுமொரு முறை தமது பெயரை ரசிகர்கள் மனதில் அழுந்தப் பதித்திருக்கின்றன. மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளும் உலகக்கிண்ணங்களை கைப்பற்றிய அதே வேளை டென்னிஸ் போட்டிகளில் உலகக்கிண்ணம் எனக் கொண்டாடப்படும் டேவிஸ் கிண்ணம் சம்மேளனக் கிண்ணங்களை பிரித்தானியாவும் செக்குடியரசும் கைப்பற்றிக்கொண்டன.
அவுஸ்திரேலிய வீரர்களின் கைகளில் தொடர்ந்து 6ஆவது தடவையாக உலகக்கிண்ண கிரிக்கட் கிண்ணம் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன அதே தருணத்தில் உலக கிண்ண வலைப்பந்தாட்டத்திலும் அவுஸ்திரேலியா கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது.
தவிர ரக்பி உலகக் கிண்ணத்தை பொருத்த மட்டில் அவுஸ்திரேலியா இறுதிப்போட்டி வரை போராடி முன்னேறியிருந்தாலும் ரக்பி உலக்கிண்ணத்தை ஒல் பிளாக்ஸ் என்று வர்ணிக்கப்படும் நியூசிலாந்து கைப்பற்றியிருந்தது.
கங்காரு வீரர்களின் வெற்றி வேட்கை
இவ்வருடம் பெப்ரவரி,மார்ச் மாதங்களில் அவுஸ்திரேலியா,நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற உலக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில் தொடர்ந்து 6ஆவது தடவையாகவும் மைக்கல் கிளார்க் தலைமையில் கிண்ணத்தை அவுஸ்திரேலியா கைப்பற்றியிருந்தது.
கிட்டத்தட்ட 41 வருட கிரிக்கட் வரலாற்றில் அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக 6ஆவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
வலைப்பந்தாட்ட உலக கிண்ணமும்
அவுஸ்திரேலிய
வீராங்கணைகள் கைகளில்....
அவுஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணி உலக்கிண்ணத்தை வென்று தாம் ங்ாதனையாளர்கள் என்று மார்தட்டிக் கொண்டிருந்த ங்ந்தர்ப்பத்தில் தாமும் ங்ளைத்தவர்கள் இல்லை என்பதை அவுஸ்திரேலியா பெண்கள் அணி நிருபித்து 2015ஆம் ஆண்டு வலைப்பந்தாட்ட கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
சிட்னி உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குறித்த போட்டிகளில் இலங்கை அணி உள்ளிட்ட 16 அணிகள் பங்குபற்றியிருந்ததோடு துர்திஷ்டவங்மாக இலங்கை அணி ங்கல போட்டிகளிலும் தோல்வித்தழுவி நாடு திரும்பியிருந்தது.
அவுஸ்திரேலியா,நியுசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.நியூசிலாந்தை வெற்றி கொண்டு அவுஸ்திரேலியா ஜெயித்தது.
மீண்டுமொருமுறை ஓல் பிளாக்ஸ்
லண்டன் மாநகரில் 90 ஆயிரம் ரசிகர்களின் ஏகோபித்த கரகோங்ங்களோடு மீண்டுமொரு முறை நியூசிலாந்து ரக்பி அணி தம் திறமையை நிரூபித்து கிண்ணத்தை சீவீகரித்தது.
தன்னை எதிர்த்தாடிய அவுஸ்திரேலிய அணியை 34க்கு 17 என்ற புள்ளிகள் அடிப்படையில் பதம் பார்த்த நியுசிலாந்து தோல்வி அடையா அணி என்ற பெருமையைபெற்றுக் கொண்டது.
இந்த வெற்றியோடு நியுசிலாந்து ரக்பி உலகக் கிண்ணத்தை 4ஆவது முறையாகவும் கைப்பற்றிய அதே வேளை இந்த வெற்றிக்கு மிக பிரதான காரணம் டான் கார்ட்டர்,70 ஆவது நிமிடத்தில் பெற்ற இந்த அற்புதமான கோல் தான். இத்தோடு ஙே்ர்த்து கார்டர் சிறந்த ரக்பி வீரர் என்ற விருதையும் தட்டிச்ஙெ்ன்றார்.
மீண்டும் கால்பந்தாட்ட உலககிண்ணம்
ஐக்கிய அமெரிக்க வீராங்கனைகள் வங்ம்
மொத்தமாக 24 நாடுகளுக்கு பங்கு பற்றிய மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் 5 க்கு 2 என்ற கோல்கள் அடிப்படையில் ஐப்பான் அணியை வீழ்த்தி ஐக்கிய அமெரிக்க பெண்கள் அணி உலக ங்ம்பியனானது.
கனடாவில் வன்கூவர் மைதானத்தில் நடாத்த இப்போட்டிகளில் இறுதிப்போட்டி கிட்டத்தட்ட 60,432 ரசிகர்களின் மனதுக்கு இனிமை தந்த மற்றுமொரு உலக்கிண்ணப் போட்டியாக அமைந்தது.
உலகக்கிண்ணம் இங்கிலாந்தின் கைகளில்
டென்னிஸ் உலகில் உலக்கிண்ணம் என வர்ணிக்கப்படும் ஆடவர்களுக்கான டேவிஸ் கிண்ணத்தை இம்முறை இங்கிலாந்து கைப்பற்றியதோடு 79 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து கைப்பற்றிக் கொண்டது.
மேற்குறிப்பிட்ட இத்தனை உலகக் கிண்ணங்கள் கைப்பற்றப்பட்டன.ஆனால் மொத்த விளையாட்டு உலகையும் உலுக்கிய ஒரு விடயம் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூக்ஸ் துர்திஸ்டவங்மாக பந்து தலையில் பட்டு மரணத்தை தழுவியது.ஒரு உன்னதமான விளையாட்டு ரசிகர்களாக இத்தனை பொன்னான தருணங்களையும் கொண்டாடிய நாம் அந்த ங்ாதனை வீரரின் இறப்புக்காக ஒரு நிமிடம் பிரார்தனை ஙெ்ய்வோம்.
விளையாட்டு என்பது உணர்வு பூர்வமானது அதனை வெறுமனே மகிழ்ச்சிக்காக மட்டும் பயன்படுத்தாமல் இது போன்ற துக்கக்களுக்காகவும் பயன்படுத்தும் போது உள்ளார்ந்த விளையாட்டு ரசிகர்களாக நாம் உருவெடுக்கலாம்.
பொன்னான தருணங்கள்
2015ஆம் ஆண்டு வருடத்துக்கு இன்று விடை கொடுக்க நாம் எத்தனித்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்த வருடம் உலக விளையாட்டு வரலாற்றில் நடந்த இனிமையான தருணங்கள் பற்றிய ஓர் அலங்ல் இது.
இவ்வாண்டு சர்வதேச ரீதியில் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகள் தம் வரலாற்றில் தமது துறை சார்ந்த விளையாட்டுக்களின் மீண்டுமொரு முறை தமது பெயரை ரசிகர்கள் மனதில் அழுந்தப் பதித்திருக்கின்றன. மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளும் உலகக்கிண்ணங்களை கைப்பற்றிய அதே வேளை டென்னிஸ் போட்டிகளில் உலகக்கிண்ணம் எனக் கொண்டாடப்படும் டேவிஸ் கிண்ணம் சம்மேளனக் கிண்ணங்களை பிரித்தானியாவும் செக்குடியரசும் கைப்பற்றிக்கொண்டன.
அவுஸ்திரேலிய வீரர்களின் கைகளில் தொடர்ந்து 6ஆவது தடவையாக உலகக்கிண்ண கிரிக்கட் கிண்ணம் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன அதே தருணத்தில் உலக கிண்ண வலைப்பந்தாட்டத்திலும் அவுஸ்திரேலியா கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது.
தவிர ரக்பி உலகக் கிண்ணத்தை பொருத்த மட்டில் அவுஸ்திரேலியா இறுதிப்போட்டி வரை போராடி முன்னேறியிருந்தாலும் ரக்பி உலக்கிண்ணத்தை ஒல் பிளாக்ஸ் என்று வர்ணிக்கப்படும் நியூசிலாந்து கைப்பற்றியிருந்தது.
கங்காரு வீரர்களின் வெற்றி வேட்கை
இவ்வருடம் பெப்ரவரி,மார்ச் மாதங்களில் அவுஸ்திரேலியா,நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற உலக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில் தொடர்ந்து 6ஆவது தடவையாகவும் மைக்கல் கிளார்க் தலைமையில் கிண்ணத்தை அவுஸ்திரேலியா கைப்பற்றியிருந்தது.
கிட்டத்தட்ட 41 வருட கிரிக்கட் வரலாற்றில் அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக 6ஆவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
வலைப்பந்தாட்ட உலக கிண்ணமும்
அவுஸ்திரேலிய
வீராங்கணைகள் கைகளில்....
அவுஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணி உலக்கிண்ணத்தை வென்று தாம் ங்ாதனையாளர்கள் என்று மார்தட்டிக் கொண்டிருந்த ங்ந்தர்ப்பத்தில் தாமும் ங்ளைத்தவர்கள் இல்லை என்பதை அவுஸ்திரேலியா பெண்கள் அணி நிருபித்து 2015ஆம் ஆண்டு வலைப்பந்தாட்ட கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
சிட்னி உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குறித்த போட்டிகளில் இலங்கை அணி உள்ளிட்ட 16 அணிகள் பங்குபற்றியிருந்ததோடு துர்திஷ்டவங்மாக இலங்கை அணி ங்கல போட்டிகளிலும் தோல்வித்தழுவி நாடு திரும்பியிருந்தது.
அவுஸ்திரேலியா,நியுசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.நியூசிலாந்தை வெற்றி கொண்டு அவுஸ்திரேலியா ஜெயித்தது.
மீண்டுமொருமுறை ஓல் பிளாக்ஸ்
லண்டன் மாநகரில் 90 ஆயிரம் ரசிகர்களின் ஏகோபித்த கரகோங்ங்களோடு மீண்டுமொரு முறை நியூசிலாந்து ரக்பி அணி தம் திறமையை நிரூபித்து கிண்ணத்தை சீவீகரித்தது.
தன்னை எதிர்த்தாடிய அவுஸ்திரேலிய அணியை 34க்கு 17 என்ற புள்ளிகள் அடிப்படையில் பதம் பார்த்த நியுசிலாந்து தோல்வி அடையா அணி என்ற பெருமையைபெற்றுக் கொண்டது.
இந்த வெற்றியோடு நியுசிலாந்து ரக்பி உலகக் கிண்ணத்தை 4ஆவது முறையாகவும் கைப்பற்றிய அதே வேளை இந்த வெற்றிக்கு மிக பிரதான காரணம் டான் கார்ட்டர்,70 ஆவது நிமிடத்தில் பெற்ற இந்த அற்புதமான கோல் தான். இத்தோடு ஙே்ர்த்து கார்டர் சிறந்த ரக்பி வீரர் என்ற விருதையும் தட்டிச்ஙெ்ன்றார்.
மீண்டும் கால்பந்தாட்ட உலககிண்ணம்
ஐக்கிய அமெரிக்க வீராங்கனைகள் வங்ம்
மொத்தமாக 24 நாடுகளுக்கு பங்கு பற்றிய மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் 5 க்கு 2 என்ற கோல்கள் அடிப்படையில் ஐப்பான் அணியை வீழ்த்தி ஐக்கிய அமெரிக்க பெண்கள் அணி உலக ங்ம்பியனானது.
கனடாவில் வன்கூவர் மைதானத்தில் நடாத்த இப்போட்டிகளில் இறுதிப்போட்டி கிட்டத்தட்ட 60,432 ரசிகர்களின் மனதுக்கு இனிமை தந்த மற்றுமொரு உலக்கிண்ணப் போட்டியாக அமைந்தது.
உலகக்கிண்ணம் இங்கிலாந்தின் கைகளில்
டென்னிஸ் உலகில் உலக்கிண்ணம் என வர்ணிக்கப்படும் ஆடவர்களுக்கான டேவிஸ் கிண்ணத்தை இம்முறை இங்கிலாந்து கைப்பற்றியதோடு 79 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து கைப்பற்றிக் கொண்டது.
மேற்குறிப்பிட்ட இத்தனை உலகக் கிண்ணங்கள் கைப்பற்றப்பட்டன.ஆனால் மொத்த விளையாட்டு உலகையும் உலுக்கிய ஒரு விடயம் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூக்ஸ் துர்திஸ்டவங்மாக பந்து தலையில் பட்டு மரணத்தை தழுவியது.ஒரு உன்னதமான விளையாட்டு ரசிகர்களாக இத்தனை பொன்னான தருணங்களையும் கொண்டாடிய நாம் அந்த ங்ாதனை வீரரின் இறப்புக்காக ஒரு நிமிடம் பிரார்தனை ஙெ்ய்வோம்.
விளையாட்டு என்பது உணர்வு பூர்வமானது அதனை வெறுமனே மகிழ்ச்சிக்காக மட்டும் பயன்படுத்தாமல் இது போன்ற துக்கக்களுக்காகவும் பயன்படுத்தும் போது உள்ளார்ந்த விளையாட்டு ரசிகர்களாக நாம் உருவெடுக்கலாம்.
போலிவுட்டின் தனி ஒருவன்.
போலிவுட்டின் தனி ஒருவனுக்கு பிறந்த நாள்.
சிறுவயதாக இருந்த போது ஒருநாள் எனக்குள் இருந்த அதீத கிரிக்கெட் ஈடுபாட்டினால் ஒரு நாள் இறுவட்டு (CD ) கடையில் வெறும் கிரிக்கெட் படங்களாக தேடிக்கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் "க்ரிதிக் ரோஷன்" நடித்த "விக்டரி" ஒரு படத்தை வாரு தேடி எடுத்துக் கொண்டேன். அந்த திரைப்படத்தை தேடி எடுத்த நேரம் அமீர்கானின் "லகான்" திரைப்படம் கிடைத்தது. திரைப்படத்தை எடுத்ததும் என்னடா!பெரிய படமாக இருந்து விட போகிறது இந்த படம், என நினைத்துக் கொண்டு சரி பரவா இல்ல கிரிக்கெட் படம் தானே பாப்போம் என நினைத்துக் கொண்டு மாலை வேளையில் படம் பார்க்க தொடங்கினேன்.
முன்னர் என்னடா இந்த படம் என நினைத்ததற்கு பதிலாக, படத்தை பார்த்து முடித்த தருணம் என்னை நானே நான் நொந்துக் கொண்டேன். "அந்த லகான் படம் அப்படி. லகான் தி பெஸ்ட்". பார்த்தவர்களுக்கு இந்த படம் பற்றி சொல்ல தேவை இருக்காது. அன்றிலிருந்து ஆரம்பித்தேன் தனி ஒருவன் அமீர்கான் பற்றி தேட, அன்றிலிருந்தே அவரது ரசிகனாகவும் ஆகி விட்டேன்.
ஒரு நாள் தமிழ் திரைப்பட துறையின் தனிகரில்லா இயக்குனராக இன்று வளர்ந்திருக்கின்ற ஷங்கர் ஒரு நாள் அமீர் கானின் ஒரு திரைப்படத்தை பார்க்கிறார் எவ்வளவு நேரம் சென்றும் அவரால் அந்த படத்தின் நினைவுகளில் இருந்து மீளவே முடியவில்லை அந்த திரைப்படத்தை உடனே தமிழில் உருவாக்க வேண்டும் என முடிவு செய்தார்.
அந்த இன்றியமையாத படைப்பாளியின் முதல் ரீமேக் படம் ஹிந்தியில் அமீர் கானின் கூட்டணியில் உருவாகி, பட்டையை கிளப்பிய 03 இடியட்ஸ் தமிழில் நண்பனாக பரிணாமம் அடைந்தது.நண்பன் படத்தை ரசித்தவர்கள் உண்மையில் ஷங்கரை மனதார பாராட்டியதை பல தடவைகள் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். அனால் உண்மையில் அந்த பாராட்டுதல்களும் கை தட்டல்களும் சேர்ந்திருக்க வேண்டியது அமீர் கான் என்ற தனி ஒருவனுக்கு தான். (அதற்காக நட்பூக்கள் ஷங்கர் திறமையானவர் இல்லை என்றும் நான் கூற வில்லை அவ்வாறு தவறாகவும் புரிந்துக் கொள்ள வேண்டாம். )
இதுவரைக்கும் தனி ஒருவன் மாத்திரம் இந்தியாவிலேயே ஒட்டு மொத்த இந்தியாவிலேயே 04 தேசிய விருதுகள், ஏழு ஃப்லிம் ஃபேர் விருதுகள். பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று எல்லா வகையான விருதுகளையும் கையில் வாங்கிக் கொண்டு தான் நான் இன்னும் ஒன்றுமே பெரிதாக செய்ய வில்லையே என்று பௌவியமாக இருந்துக் கொண்டு வேகமாக இன்னும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஓட்ட பந்தய வீரன்.
தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைகள் மூலமும் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு செய்தியை சொல்லும் ஆர்வமுள்ள படைப்பாளி.
இந்த தனி ஒருவன் நடித்த 3 இடியட்ஸ் திரைப்படம், இந்திய மாணவர் சமூகத்தில் மிக பெரிய தாக்கத்தை உண்டாக்கியது என்பதை விட பல இளைஞர்கள் அதற்கு பின் தான் தமக்கான ஒரு பாதையை தேடி செல்ல முட்பட்டிருந்தார்கள். அதன் பின் அவரது குறிப்பிட தக்க படைப்புக்களில் முக்கியமானது "பிகே" அந்த படத்தில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் சொல்ல வார்த்தைகளே இல்லை.
மதம் என்ற பிடியில் பாரத நாடு எப்படி குழம்பிப் போயுள்ளது என்பதை யாரையும் எதிர்பார்க்காமல் மிக தைரியமாகவே சொன்னவர். இப்படி சமூக சிந்தனைகளோடு கூடிய கமர்ஷியல் படங்களைக் கொடுப்பதில் அமீர்கான் ஒரு ரியல் ஹீரோ நமது இளைஞர்களை பொறுத்த வரையில்.
திரைப்படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரையில் அவர் நடத்திய 'சத்தியமேவ ஜெயதே' எனும் தொடர் அவருக்கு வெள்ளித்திரையில் கிடைத்திராத, பெயரையும், புகழையும், எல்லாவற்றிற்கும் மேல் அவர் மீது ஒரு பெரிய மரியாதையையும் மக்களிடையே ஏற்படுத்தியது.
சமூகத்தில் நமக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றியும், அதை மாற்றும் வழிமுறைகளையும் காட்டிய அந்தத் தொடரால் உண்மையிலேயே பல மாறுதல்கள் ஏற்பட்டன, இன்றும் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
இவரது படத்துக்கு 1000, 2000,3000,4000,5000 என்று டிக்கெட் விலை உயர்ந்துக் கொண்டே இருந்தாலும் அது ரசிகர்களுக்கு கவலையை தராது மாறாக அமீர்கானின் படத்தை பார்த்து விட்டோமே என்ற மாறுதலை மட்டும் தான் தரும் அப்படி ஒரு ரசனை மிகுந்த யதார்த்தமான ஒரு ஒரு நடிகர் அமீர் கான்.
அப்படி பட்ட நடிகருக்கு இன்று 51 வயதாகிறது. அந்த நடிப்பு சகாப்தம் நடிக்க தொடங்கியது 1973ம் ஆண்டு காலப்பகுதியில்.
மும்பையில் தயாரிப்பாளர் தாகிர் ஹுசெயின், சீனத் ஹுசெயின் தம்பதியினருக்கு பிறந்த இவர், இன்றைய நாளில் பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் நடிகர். இந்திய மொழிகள் எல்லாவற்றிலுமே தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர்.
தனக்கான ஒரு தனியான இடத்தை வைத்திருப்பவர். நான்கு குழந்தைகளுள் மூத்தவரான அமீர் தனது முதல் திரையுலக பிரவேசத்தை 1973ஆம் ஆண்டு தனது உறவினரும், இயக்குனருமான நாசிர் ஹுசைனின் "யாதோன் கி பாரத்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக துவங்கினார். அதன் பிறகு 1988ல் இவர் நடித்த ‘கயாமத் சே கயாமத் தக்’ இந்திய அளவில் மாஸ் ஹிட்டடித்த படம். அதில் பல விருதுகளை அள்ளி, தனக்கென ஒரு சிம்மாசனத்தைப் பிடித்தார்.
பின், பல திரைப்படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, இளையவர்கள் முதல் பல்லு போன கிழவர்கள் வரை அணைத்து தரப்பினர்களையும் தனக்கு ரசிகர்களாக மாற்றினார்.
ஒரு முழுமையான நடிகர் என கூறும் அளவிற்கு இவரது நடிப்பும், திரையில் இவரது செயல்பாடுகளும் நிச்சயம் அமைந்திருக்கும். அப்படி அமையாமல் ஒரு திரைப்படம் கூட இந்த தனி ஒருவனின் படத்தில் நான் பார்த்தது கிடையாது.
ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை சலிப்பில் ஆழ்த்தாமல் ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய கதைக்களம், புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மட்டும் அல்லாமல் ஒரு புதிய தேடலை வெளிப்படுத்தும் நடிகர்களில் இன்றியமையாத ஒரு இடம் இந்த தனி ஒருவனுக்கு தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
எழுபதுகளில் சினிமா பார்க்க தொடங்கிய முதல் இளம் பெண்கள் தொடக்கி இந்தக் கால இளம்பெண்கள் வரை அனைவரின் கனவு நாயகனாகவும், ஆண் ரசிகர்களுக்கு நல்ல நடிகனாகவும், ஒரு ஆசிரியராகவும்,குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கின்ற இவர் இதுவரைக்கும் திரையுலகிற்கு அளித்த திரைப்படங்கள் 57. நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளர், உதவி இயக்குனர் என பண் முகங்களைக் கொண்டவர் இந்த தனி ஒருவன்.
'அமீர் கான்' எனும் பெயரைக் கேட்ட உடன் பலரது மனதிற்கும் வரும் சில திரைப்படங்கள் "லகான், மங்கள் பாண்டே, தாரே ஜமீன் பர், 3 இடியட்ஸ், பிகே" ஒவ்வொன்றிலும் தனது நடிப்பால் பல கோடி ரசிகர்களையும், பல கோடிகளில் கலெக்ஷனையும் ஈர்த்தவர் என்பதையும் தாண்டி பலரது இதயங்களில் வாழும் ஒரு சினிமா ஆதர்ச நாயகன் அமீர் கான் என்ற தனி ஒருவன். வாழ்த்துக்கள் இனிமையான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தொடரட்டும் தனி ஒருவனது சாதனைகள், உனது படைப்புகளை பார்த்து இளம் இளைஞர்கள் தமக்கான பாதையை தேடி கொள்ளட்டும், உனது படைப்புக்கள் எப்போதுமே கை தட்டல்களை வாங்கி குவிக்கட்டும். "தலைவா யு ஆர் கிரேட் என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க".
Thursday, March 17, 2016
மீண்டும் தங்கம் வெல்லும் கனவுடன் இமாஸ எஷான்.
நேற்று முதல் அமெரிக்காவின் போர்ட்லேன்ட் சிட்டி நகரில் கோலகலமாக ஆரம்பமாகியிருந்த உள்ளக மெய்வல்லுனர் போட்டிகளுக்கு இம்முறை இலங்கையிலிருந்து நடந்து முடிந்த ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் ஆசியாவிலேயே வேகமான வீரர் என்ற சாதனையை படைத்த இமாஸ எஷான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
இதன்படி ஓட்ட வீரர் இமாஷ எஷான் அமெரிக்காவில் நடைபெறுகின்ற மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கு பற்றுகின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதோடு, இலங்கையில் இருந்து குறித்த மெய்வல்லுனர் போட்டிகளுக்கு தேர்வி செயப்படிருக்கின்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் இமாஷ பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த 15ம் திகதி இப்போடிகளில் பங்குப்பற்றுவதற்காக இமாஷ எஷான் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆசியுடன் அமெரிக்க நோக்கி பயனமாகியிருந்ததோடு வருகிற 19ம் திகதி போட்டிகளில் கலந்துக் கொள்ள இருக்கின்றார்.
16ம் திகதி ஆரம்ப தின நிகழ்வுகளோடு ஆரம்பமான குறித்த போட்டிகள் இம்மாதம் 20ம் திகதி வரை நடைபெறுகின்றன. மொத்தமாக 15 நாடுகளை சேர்ந்த வீர வீராங்கனைகள் குறித்த போட்டிகளில் கலந்துக் கொள்கின்றனர்.
கடந்த மாதம் இந்தியாவில் இடம்பெற்ற ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இமாஷ எஷான் தங்கப் பதக்கத்தை இலங்கைக்கு தேடிக் கொடுத்ததோடு ஆசியாவிலேயே வேகமான வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா பறந்தார் மலிங்க.
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற டி20 உலகக் கிண்ண போட்டிகளே தான் விளையாடுகின்ற இறுதிப் போட்டிகளாக சில வேளைகளில் அமையக் கூடும் என இலங்கை அணியின் முன்னால் டி20 அணி தலைவர் லசித் மலிங்க உருக்கமான கருத்தொன்றை முன் வைத்துள்ளார்.கடந்த 14ம் திகதி போட்டிகளில் பங்குபற்றுவதட்காக இந்தியா நோக்கி பயணமாவதற்கு முன்பதாக இலங்கையின் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது பற்றி லசித் மலிங்க மேலும் கூறியுள்ள வருடங்கள் அணியின் வெற்றி தோல்விகளில் பங்கெடுத்துள்ளேன்.அண்மைய காலமாக உபாதை காரணமாக என்னால் அணிக்கு சரியான பங்களிப்பினை செய்ய முடியவில்லை. தொடர் காயங்களால் தொடர்ந்து அவதி பட்டு வருகின்றேன் இதன் காரணமாக எனது உடல் நிலையையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே சில சமயங்களில் இந்த டி 20 உலகக் கிண்ண போட்டிகள் கூட எனது இறுதி போட்டிகளாக அமைந்து விடக் கூடும்.
மேலும் தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருக்கின்ற இலங்கை அணிக்கு ரசிகர்களிடம் இருந்து ஆதரவு மட்டுமே தேவையாக இருக்கின்றது, அந்த ஆதரவை இலங்கை ரசிகர்கள் சரியாக தருவார்கள் என்று நினைக்கிறேன்.
இலங்கை அணி இந்தியா நோக்கி புறப்படும் போது அணி தலைவர் அஞ்சலோ மத்யுஸ் கருத்தொன்றை கூறியிருந்தார். அதாவது இலங்கை ரசிகர்கள் எண்கள் மீது வைத்திருக்கின்ற அபரீதமான நம்பிக்கையை நாம் எப்போதுமே காப்பாற்றுவோம் என்று கூறியிருந்தார். நானும் இந்த சந்தர்ப்பத்தில் அதை தான் கூற விரும்புகிறேன்,இலங்கை அணிக்கு என்னாலான பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று உருக்கமாக கூறி இந்தியாவுக்கு பறந்திருக்கிறார் போட்டிகளில் பங்கு பற்ற மலிங்க.
கடந்த வாரம் தமிழ் சினிமா மிக முக்கியமான இரண்டு நடிகர்களை இழந்திருக்கிறது. ஒன்று தனிப்பட்ட சிரிப்பு என்று ஒன்றுக்கே பெயர் போன குமரி முத்து. இரண்டாவது மணி யார் இந்த மணி னு கேக்காதிங்க,
நம்ம கலாபவன் மணி தான். ரொம்ப யோசிக்காதிங்க ஜெமினி படத்து வில்லன் தா, பா இந்த கலாபவன் மணி. முதலில் குமரிமுத்துவை பற்றி எழுதுவது சரியாக இருக்கும் என நினைக்கிறன். இதுவே ரொம்ப லேட் தான் இருந்தாலும் பொறுத்துக்கங்க. நகைச்சுவை நடிகர் என தொழில் ரீதியாக நாம் அவரை குறிப்பிட்டாலும், சுயமரியாதை குணமும் திராவிடக்கொள்கையில் தீவிர பற்றும் கொண்டவர். சினிமாவில்தான் குமரிமுத்து, நாடக உலகில் அந்நாளில் அவரது பெயர் வாத்தியார் முத்து.ஆயிரம் ஆயிரமாம் கலைஞர்களை கண்ட சினிமாவில் ஆச்சர்யமாக ஒரு சிலர் மட்டும் தங்களது தனிப் பட்ட திறமைகள் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர்கள். அவர்களில் ஒருவர் குமரிமுத்து. “ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாாா”... என அரைப்புள்ளி, கமா, முழுப்புள்ளி இன்றி ஒரு வார்த்தையை இழுத்து நீட்டி முழுக்கி சிரிப்பது என்பது அவரது பாணி.
நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்ல, தேர்ந்த குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய குமரிமுத்து, சினிமாவுக்கு முதல்தலைமுறை நடிகர் அல்ல. பள்ளிப்பருவத்திலேயே நாடகங்கள் மீது காதல் கொண்ட குமரிமுத்து, அப்போதே சொந்தமாக நாடகங்கள் நடத்தினார். நாடகங்கள் மீதான காதலால் எட்டாம் வகுப்போடு புத்தகப்பைக்கு விடை கொடுத்து விட்டு, சென்னைக்கு ரயில் ஏறி, சகோதரரோடு சில பல நாடக முயற்சிகள் செய்திருந்தாலும் அது கை கூடவில்லை குமரி முத்துவுக்கு. அண்ணனிடம் இருந்து சரியான பதில்கள், சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் தனது முயற்சியிலேயே வைரம் நாடக சபாவின் நாடகங்களில் வாய்ப்பை தேடி வாங்கி நடித்தார்.
இருந்தும் என்ன அண்ணனின் முயற்சியில் சிறுசிறுவேடங்கள் எப்போதாவது கிடைத்தன. கூட்டத்துடன் கூட்டமாக எட்டாவது வரிசையில் நிற்கும் வாய்ப்புதான் அவருக்கு அப்போது கிடைத்த பெரிய வாய்ப்பு. 70களின் மத்தியில் சில படங்களில் தலைகாட்டினார். சினிமா உலகில் வாய்ப்பு கேட்டு அலைந்தபோது அவரது பெயர் கே.எம்.முத்து. சினிமா உலகை பீடித்திருக்கும் ராசி, நம்பிக்கை இவரையும் விடவில்லை. ராசிக்காக தன் பெயரை குமரி முத்து என மாற்றிக்கொண்டார்.
1968 ல், சென்னை மைலாப்பூர் (FINE ARTS ) கலையரங்கத்தில் குமரிமுத்துவின் நாடகம் அரங்கேறியது. அந்த நாடகத்தை பார்க்க வந்த பிரபல கதை-வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனுக்கு குமரிமுத்துவின் நடிப்பு பிடித்து போக , எல்.பாலுவிடம் அவரை அறிமுகப்படுத்தினார். திரைப்பட வாய்ப்புகள் குறைந்து நாடகம், சினிமா என இரண்டுங்கெட்டனாக குமரிமுத்து இருந்த காலங்களில் வானொலி மற்றும் மேடை நாடகங்களில் நடித்துவந்தார். கிறிஸ்துவ கலை அமைப்பு ஒன்று நடத்திய நாடகங்களில் குமரிமுத்து நடித்துவந்தபோது, புகழ்பெற்ற இயக்குநரான மகேந்திரன் அங்கு நாடக வசனங்களை எழுதிக்கொண்டிருந்தார்.
குமரிமுத்துவுக்கென தனியே கைதட்டல்கள் கிடைக்க ஆரம்பித்தது அந்தநாட்களில் இருந்து தான். கே.பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ படம் குமரிமுத்துவின் திறமையை சொல்லும் முக்கிய படங்களில் ஒன்று. சினிமாவில் வயது வையத் வந்தவராக இருந்தாலும் கூட , தன்னைவிட இளையவர்களிடம் எந்தவிதமான ஆணவமும் இன்றி பழகுவார் நடிப்பார், நடித்தார். இவரது ஒற்றைப்பார்வையையும் அகன்ற சிரிப்பையும் கவுண்டமணி பல படங்களில் கிண்டலடிப்பதுண்டு. அப்படி பட்ட ஒரு நிதர்சனமான ஒரு நடிகர் நம் மத்தியில் இன்று இல்லை. அவர் மறைந்தாலும் அவரது சிரிப்பொலி என்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கும் சினிமா என்ற கண்ணாடியின் வழியாக !
இந்தியாவின் அதிர்ச்சி தோல்வியும், நாக்பூர் ஆடுகளம் பற்றிய சர்ச்சையும்.
உண்மையில் இந்த பதிவை நேற்றய தினமே இணையத்தில் உலாவ விட்டிருக்க வேண்டும். சில பல வேலைபாடுகள் காரணமாக சற்று நேரம் கிடைக்கவில்லை. இனிய கலைத்தால் களோடு ஆரம்பமாகியிருந்தது இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாக்பூர் மைதானத்தில். மைதானத்தை பற்றியும் சற்று அல்ல நிறையவே கூறியாக வேண்டும் தொடர்ந்து வாசியுங்கள்.
முதலில் அசுர பலம் மிக்க இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்ட போது முழு கிரிக்கெட் உலகமுமே அதிர்ந்து போனது கரணம் உலகின் தலைசிறந்த வேகப் பந்து வீச்சாளர்களான டிம் சௌதி மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோரை பயன்படுத்தாமல் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக சோதி, நேதன் மக்கலம்,சன்ட்னரை பயன்படுத்தி இந்திய அணியை நிலை குலைய வைத்திருந்தது இளம் நியூசிலாந்து அணி. இதில் மிக முக்கியமான விடயம் என்ன வென்றால் பிரண்டன் மெக்கலம் ஓய்வு பெற்ற பிறகு சரியான பாதையில் தான் நியூசிலாந்து அணி பயணிக்கிறது என்பதை காட்டியிருந்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அதிரடி தொடக்கத்தை கொடுக்கும் என நான் உட்பட பல கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்திருப்பார்கள் காரணம் அஸ்வினின் முதலாவது பந்து வீச்சையே இடது கை துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மார்டின் கப்டில் ஆறு ஓட்டத்துக்கு விரட்டியது போட்டியை இன்னும் கொஞ்சம் கலகலப்பாக்கும் என எதிர்பார்த்திருந்த சமயம் அடுத்த பந்திலேயே கப்டில் ஆட்டமிழந்தது இந்திய அணியின் பக்கம் வெற்றி முழுமையாக சைவத்தை வெளிப்படையாகவே காட்டியிருந்தது.
தொடர்ந்து இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள 126 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அதிக பட்சமாக கோரி அண்டர்சன் மட்டுமே 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். இதில் கவனிக்கத்தக்கது இறுதி நேரத்தில் அதிரடியாக துடுபெடுத்தாடிய கோரி அண்டர்சன் இறுதி ஓவரை வீசிய நெஹ்ராவின் ஓவரை 02 ஆறு ஓட்டங்களோடு முடித்திருந்தார்.
இந்திய அணி இலகுவாக இந்த வெற்றி இலக்கை கடக்கும் என எதிர்பார்த்திருந்த சமயம் நேதன் மெக்கலம் தவனின் விக்கட்டை உடைத்து போட தொடர்ந்து ரோஹித் சர்மாவும் பவிலியன் திரும்ப ரெய்னாவும் துரதிஷ்ட வசமாக பிடி கொடுத்து அடமிளக்க முற்று முழுதாக போட்டியின் வெற்றி நியூசிலாந்து அணியின் பக்கம் சாய்ந்திருந்தது.
ஜோடி சேர்ந்த கோஹ்லி, யுவராஜ் ஜோடி சற்று ஆறுதலான மெதுவான துடுப்பாட்டத்தை வழங்கினாலும் யுவராஜ் போட்டியின் போக்கை மாற்றுவார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சமயம் அவரும் ஆட்டமிளந்திருந்தார்.
தொடர்ந்து விராத் கோஹ்ளியும் ஏமாற்ற இறுதிவரை காலத்தில் நின்ற டோனி மட்டும் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இந்திய அணி சகல விக்கடுகலைஅயும் இழந்து வெறுமனே 79 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டதோடு துன்பகரமான ஒரு தோல்வியை பரிசளித்திருக்கிறது இந்திய ரசிகர்களுக்கு.
பந்து வீச்சில் மிட்செல் சட்னர் இந்திய விக்கட்டுக்களை உடைத்துப் போட்டிருந்தார். மொத்தமாக 04 விக்கடுககளை கைப்பற்றி இருந்தார் வெறும் 11 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து. போட்டியின் சிறப்பாட்ட கரரகவும் அவரே தெரிவாகியிருந்தார். இதன்படி இந்த வெற்றியுடன் முதல் வெற்றியை பதிவு செய்து முதலிடத்தில் இருக்கின்றது நியூசிலாந்து தனது குழுவில்.
இந்த போட்டியில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் டோனி தனது சொந்த மண்ணில் இந்த ஆடுகளத்தை சரியாக கணிக்க தவறி விட்டார் என்று தான் கூற வேண்டும் நியூசிலாந்து அணி தலைவர் கேன் வில்லியம்சன் புரிந்துக் கொண்டு சரியாக விளையாடியதை போல இந்தியாவும் இந்திய வீரர்களும் சரியாக இந்த ஆடுகளத்தை புரிந்துக் கொண்டிருக்கலாம் என்பது தான் இந்திய ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கின்றது. தவிரவும் அனைவரும் கவனித்த விடயம் கேன் வில்லியம்சனின் மதியுகமான விளையாட்டு திறன்.
எனினும் இந்தப் போட்டிக்கு முன்னதாக நினைவுகூரப்பட்ட முன்னாள் நியூசீலாந்து அணித் தலைவர் மார்ட்டின் க்ரோ 1992 உலகக்கிண்ணத்தில் சுழல்பந்தையும் களத்தடுப்பு, மிதவேகப் பந்துவீச்சையும் வைத்து செய்த புதுமை போல வில்லியம்சனும் ஆரம்பித்திருக்கிறார் என்பது ஒரு சுவாரஸ்யமாக இருந்தாலும் கூட அவரை நினைத்து மைதானத்தில் குப்டில், டெய்லர் ஆகியோர் மைதானத்தில் கண் கலங்கி நின்றதை இங்கு கூறவிரும்புகிறேன். எனக்கு நினைவில் நிற்கின்ற நாட்களை பொறுத்த மட்டில் ஒரு தடவை ஒரு பேட்டியில் கூட மார்ட்டின் குரோவ், ‘குப்தில், ரோஸ் டெய்லரை தன் குழந்தைகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.ஆகா ஒட்டு மொத்தத்தில் சிறந்த வெற்றிகள் பலவற்றை குவிக்க வாழ்த்துக்கள் நியூசிலாந்தின் இளம் சிங்கங்களுக்கு.
அடுத்தது மேலே சொன்ன மைதானம் பற்றிய விமர்சனத்தை இங்கு முன் குவிப்பது சரியாக இருக்கும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா தென் ஆபிரிக்க அணியை இதே நாக்பூரில் சுழல்பந்து வீச்சாளர்களை வைத்து 3 நாட்களுக்குள் உருட்டி போட்டு ஒரு டெஸ்ட் போட்டியை வென்றது?
மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய அந்த 3 நாள் டெஸ்ட் போட்டியில் இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்களை கிள்ளி எடுத்திருந்தார்கள் இதில் அஷ்வின் மட்டும் 12 விக்கட்டுக்களை உடைத்து எடுத்திருந்தார். தவிரவும் தென் ஆபிரிக்காவின் சுழல்பந்து வீச்சாளர்கள் 13 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இருந்தார்கள்.போட்டித் தீர்ப்பாளர்கள், நடுவர்கள் , ஏன் விமர்சகர்கள் என்று எல்லோருமே கடுமையான அதிருப்தியை நாக்பூர் ஆடுகளம் பற்றி வெளிப்படுத்தியிருந்தனர் அந்த நேரத்தில் நான் கூட இந்த ஆடுகளம் பற்றி எனது வதனப் புத்தகத்திலும் ஒரு கருத்தை முன் வைத்திருந்தேன்.
இதனையடுத்து 15000 அமெரிக்க டொலர் தொகையை பிசிசிஐ இந்த மைதான பராமரிப்பாளர்களுக்கு தண்டப் பணமாக வழங்கியிருந்தது. ஆனால் தண்டப்பணத்தை பற்றி மட்டுமே கருத்துக்களை கூறியிருந்த பிசிசிஐ ஏன் உலகக் கிண்ண போட்டிகளை இவ்வகையான மைதானங்களில் வைக்க அனுமதி அளித்திருந்தது என்பது மட்டும் இது வரைக்கும் வெளிப்படாத உண்மையாக பார்க்கப்படுகிறது.இப்போது இந்தியாவின் தோல்வியை அடுத்து, அதிலும் சுழல்பந்து வீச்சில் சுருண்டு வீழ்ந்ததை அடுத்து மீண்டும் இந்த நாக்பூர் மைதான விவகாரம் துருவப்படும் என எதிர்பார்க்கின்றேன்.
மேலும் இன்னும் 02 பிரதானமான போட்டிகள் இந்த மைதானத்தில் இடம்பெற இருப்பது கொஞ்சம் யோசிக்க வைத்திருகிறது ரசிகர்களை. அந்த இரண்டு போட்டிகளும்,
மேற்கிந்தியத் தீவுகள் எதிர் தென் ஆபிரிக்காவும்
ஆப்கானிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்வும்
என்பதையும் இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
மிக முக்கியமாக இனிமேல் விளையாடுகின்ற ஒவ்வொரு போட்டிகளையும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. இந்திய அணியுன் எதிர்த்து விளையாடப் போகின்ற அணிகள் யார் யார் என்று தெரியும் தானே ஆஸ்திரேலிய. பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான். நிலைமை புரிந்து செயற்பட்டால் சரி இந்திய அணி.
Subscribe to:
Posts (Atom)

























