இன்னும் சிலுவையில் அறயப்படாத இயேசு நான். கடவுளின் படைப்பில் விமோசனமே இல்லாத சாபம் நான்.
Wednesday, March 9, 2016
இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் இருக்கும் நாட்கள் நரகமாகிவிடும்தானே. இந்த நிலைதான் நியூசிலாந்து அணியின் முன்னாள் அணி தலைவர் மார்ட்டின் குரோவுக்கும். மிகச்சிறந்த கிரிக்கெட்டராக உண்மையான ஜென்டில்மேனாக வாழ்ந்து வந்த குரோவின் வாழ்க்கையில் விதி விளையாடி விட்டது.
உலகக் கிண்ண வரலாற்றில் கடந்தாண்டு முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியதால், இறுதிப் போட்டியை நேரில் பார்க்க மெல்பர்ன் மைதானத்திற்கே வந்திருந்தார் மார்ட்டின் குரோ.
நியூசிலாந்து அணி 262 ஓட்டங்களை குவித்த தருணம் குரோவுக்கு காயத்தின் ரூபத்தில் பிரச்னை வந்தது. காயம் கடுமையாக இருந்ததால் ஜான் ரைட்டிடம் தலைமை பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தார். ஆனால் அப்போட்டியில் பாகிஸ்தான் வென்று விட்டது. முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது நியூசிலாந்து அணிக்கு . “நான் ஒரு வகையில் பந்துவீச்சாளர்களை உபயோகித்திருப்பேன். ஆனால் ஜான் ரைட்டிற்கென்று ஒரு மூளை உள்ளதல்லவா, அது வேறு வகையில் வேலை செய்து விட்டது” என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார் இந்த போட்டி முடிந்ததும் குரோவ்.
Saturday, March 5, 2016
வங்கப்புலிகளா? சீறும் சிறுத்தைகளா? அனல் பறக்கும் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி இன்று.
கடந்த புதன்கிழமையிலிருந்து இணையவெளி எங்கும் ஆக்ரோஷமான சொல்லாடல்கள், இனிய கலாய்த்தல்கள் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் அணியைப் பற்றித்தான் பேச்சு காரணம் ஒன்று , பாகிஸ்தான் அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணி பெற்றுக்கொண்ட சாதனை வெற்றி இரண்டாவது , இன்று அசுரபலம் கொண்ட இந்திய அணியை எதிர்தாடுகின்ற 2016ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி. இது மிக பெரிய உந்துதல் பங்களாதேஷ் அணியை பொருத்த வரையில். இதுவரைக்கும் நடந்துள்ள 13 ஆசியத் கிண்ண தொடர்களில் இந்தியா, 05 தடவைகளும், இலங்கை 05 தடவைகளும், பாகிஸ்தான் இரு தடவைகளும் சம்பியனாகியிருக்கின்றன.
இதே அழுத்தத்துடனும் சொந்த மண்ணில் முதல் முறையாக ஆசியக் கிண்ணத்தை வெல்லும் முனைப்புடனும் இந்திய அணியுடன் பங்களாதேஷ் அணி இன்று இறுதிப் போட்டியில் களம் காண்கிறது.இந்த ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் மிகப் பெரிய, அதே நேரத்தில் மிகப் பரபரப்பாகப் பேசப்படுகின்ற பேசப்படப் போவது மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இருக்கின்ற கிரிக்கெட் ரசிகர்களைக் இந்தப் போட்டி கட்டிப் போட்டிருக்கின்றது.
கடந்த வருடத்திலிருந்து பங்களாதேஷ் அணி, இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சந்திக அதுருசிங்கவின் மிக சிறப்பான வழிநடத்தலுடன் பல இன்றியமையாத வெற்றிகளைக் குவித்துக் கொண்டு வருகின்றது.
இதன்படி முதலில் பங்களாதேஷ் அணி சிம்பாபே அணிக்கு எதிராகப் பெற்ற 5-0 என்ற தொடர் வெற்றி, அதற்கு பின்பு மகேந்திர சிங் டோனி தலைமையிலான பலம் பொருந்திய இந்திய அணியைச் சொந்த மண்ணில் வைத்து மண் கௌவ்வ செய்த விதம், எல்லாவற்றுக்கும் மேலாக யாருமே எதிர்ப்பார்க்கா விதமாக ஏ.பி.டி. வில்லியர்ஸ், அம்லா போன்ற தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களும் ஸ்டெய்ன் ரபாடா போன்ற தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் இருக்கின்ற தென்னாபிரிக்க அணியையே அதனது சொந்த மண்ணில் வைத்து 2015 டி20 தொடரில் மண் கௌவ்வ வைத்தது. அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றி என்று சொல்லி பங்களாதேஷ் அணியின் எழுச்சி மிகுந்த வெற்றிகள் கடந்த வருடத்திலிருந்து தொடர்ந்துக் கொண்டே வருகின்றது.
அடுத்து ஆசியக் கிண்ணத் தொடரில் கடந்து ஞாயிற்றுக்கிழமை (28.02.2016) நடப்பு சம்பியன் இலங்கை அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி என்று சொல்லி இறுதிப் போட்டியில் இந்திய அணியைச் சந்திக்கும் பங்களாதேஷ் அணி பலமான அணிதான் என்பதை பறை சாற்றி நிற்கின்றன மேற்கூறிய வெற்றிகள் அனைத்தும்.
சொந்த மைதானம் என்கின்ற படியால் பங்களாதேஷ் அணியைப் பொருத்தமட்டில் சமநிலை வாய்ந்த தன்மை, சகி புல் ஹசன்,புஸ்பிகுர் ரகிம், மஹமுதுல்லா, தவிர பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபி மொர்தாசா போன்ற வீரர்கள் இப்போது பெற்றிருக்கும் முதிர்ச்சியான கிரிக்கெட் ஞானம் சரியான முறையில் இந்திய பந்து வீச்சாளர்களைத் துவம்சம் செய்யக்கூடிய ஆற்றல் என்பன இவர்களுக்கு வெற்றியை தேடி தரக்கூடும்.
மேலும், இந்திய அணி இந்தத்தொடரில் எந்த அணியுடனும் தோற்றதில்லை என்ற வீராப்பான மன நிலையில் களம் காண்தோடு, இந்திய அணியில் நெஹரா, பும்ரா,அஸ்வின் போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்களோடு ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி,டோனி போன்ற அசத்தலான துடுப்பாட்ட வீரர்கள் இருப்பதும்,யுவராஜ் சிங் கடந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக வழமைப் போலவே தனது மிரட்டும் துடுப்பாட்டத்தைக்காட்டி போமுக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.
சொந்த மண்ணில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கின்ற படியால் மிகக் கடுமையாக, மிகப்பலமாக பங்களாதேஷ் அணி கிண்ணத்தை வெல்ல போராடும் என்பதை விடவும் இந்த போட்டி மிகப் பெரிய மாறுதலைப் பங்களாதேஷ் அணிக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். எது எப்படி இருந்தாலும் விறுவிறுப்பான போட்டியாக இந்தப் போட்டி அமையும்.எதிர்பாருங்கள் இலங்கை நேரப்படி இன்று இரவு சரியாக 07 மணிக்கு.
Wednesday, March 2, 2016
கிரிக்கெட் உலகம் கண்ட மரணங்கள் ஒரு பகிர்வு.
கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டு என்று ஒரு பக்கம் விபரித்தாலும் கூட அதில் அவ்வப்போது இடம்பெறுகின்ற வீபரீதங்கள் கிரிக்கட் ரசிகர்களைப் பொருத்தமட்டில் என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
ஒரு பக்கம் தினமும் கிரிக்கெட்டில் சாதனைகள் ,சரித்திரங்கள் படைக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தின் பக்கங்கள் புதுப்பிக்கப்பட்டாலும் கூட இது வரை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள மரணங்கள் பற்றிய ஒரு பகிர்வு இது.
01. பிலிப் ஹியூஸ்.
உன்னிப்பாக ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிகளையும் ரசிக்கின்ற, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனாலும் இன்றும் ஜீரணிக்க முடியாத ஒன்று ஆஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூசின் மரணம் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மனதால் நொந்துப்போன ஒரு நாள்.ஆம் அன்று தான் பிலிப் ஹியூஸ் பிராந்தியப் போட்டிகளில் பங்குபற்றிக் கொண்டிருந்தப்போது , துரதிஷ்டவசமாகப் பந்து தலையில் பட்டு மைதானத்திலே சிதறி விழுந்தார்.
சிட்னி வின்சென்ட் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சிகிச்சை பயனின்று பிலிப்ஹியூஸ் இறந்து விட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிலிப் ஹியூஸ் அறிமுகப் போட்டியிலேயே சதம் கடந்து சாதனைப் படைத்திருந்தார். தவிர கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக தனது ஒரு நாள் கன்னிப் போட்டியில் விளையாடியிருந்தார்.
பிலிப் ஹியூஸ் இதுவரைக்கும் 26 டெஸ்ட் @பாட்டிகளில் விளையாடி 1535 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 03 சதங்களையும் ,7 அரை சதங்களையும்,25 ஒருநாள் போட்டிகளில் 826 ஓட்டங்களையும் 02 சதம் , 4அரைச்சதம் உள்ளடங்கலாகப் பெற்றுள்ளார்.
உண்மையிலேயே பிலிப் ஹெயுசின் மரணம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களாலும் இன்றும் ஜீரணிக்க முடியாத ஒன்று என்று தான் கூறவேண்டும்.
இதில் வருந்தத்தக்க விடயம் என்னவென்றால் பிலிப் ஹியூக்ஸ் மரணத்தைத் தழுவிய நாள் தான் அவரது பிறந்த நாள்.
02. டெரன் ரன்டல்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக் கண்ட சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த விக்கெட் காப்பாளர்கள் வரிசையில் எப்போதுமே டெரன் ரன்டலுக்கும் மிகப் பிரதானமான இடம் இருக்கிறது எனலாம். கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்@டாபர் 27ஆம் திகதி யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக டெரன் ரண்டல் மைதானத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது தலையில் பந்து பட்டு உயிர்ழந்திருந்தார்.
04 டெஸ்ட் போட்டிகளில் 688 ஓட்டங்களையும், 04 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 198 ஓட்டங்களையும் டெரன் குவித்துள்ளார். கிரிக்கெட் உலகம் கண்ட மற்றுமொரு துர்மரணம் டெரன் ரன்டலுடையது.
03. வசிம் ராஜா.
மைதானத்தில் துடிப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென மாரடைப்பினால் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் வசிம் ராஜா மரணமடைந்திருந்தார். இந்த மரணம் நடந்தது கடந்த 2006ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்து.
தனது தனிப்பட்ட துடுப்பாட்ட திறமையினால் போராடி பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தவர்களில் வசிம் ராஜாவும் ஒருவர். முதன் முதலாக கடந்த 1993ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடி வசிம் ராஜா 03 டெஸ்ட் சதங்களை குவித்துள்ளார்.இன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தாம் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றிகளுக்கும் வசிம் ராஜா பெயரை நினைவுக் கூறுவது சிறப்பானது.
04. ராமன் லம்பா.
கிரிக்கெட் உலகில் மற்றுமொரு இறப்பு கடந்த 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெற்றது. இது இந்தியா துடுப்பாட்ட வீரர் ராமன் லம்பாவினுடையது. இந்திய கிரிக்கெட் சபை கண்ட வேதனையான இறப்புக்களில் ஒன்றாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இன்றும் நினைவுக் கூறப்படுகிறது.
04டெஸ்ட் போட்டிகளில் 102 ஓட்டங்களையும், 32 ஒருநாள் போட்டிகளில் 783 ஓட்டங்களையும், பெற்றுள்ளதோடு, ஒரு நாள் போட்டிகளில் 15 விக்கெட்க்களையும் ராமன் லம்பா வீழ்த்தியிருக்கிறார்.
இறுதியாகப் பாகிஸ்தான் அணிக்கு எதிராக துடுப்பெடுத்தாடித் கொண்டிருக்கும் போதே பந்து பட்டு தலையில் பட்டு எதிர்பாரா விதமாக ராமன் லம்பா மைதானத்திலேயே உயிரிழந்திருந்தார்.
05. கியன் பூலி
மாரடைப்பினால் மைதானத்திலேயே இறந்தவர்கள் வரிசையில் மற்றுமொரு துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் கியன் பூலியும் ஒருவர். ரசிகர்கள் பெறும்பாலும் கியன் பூலியைச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம் கியன் பூலி விளையாடியது எல்லாம் இங்கிலாந்தின் லங்கா சியர் பிராந்தியத்துக்காகத்தான்.
140 டெஸ்ட் போட்டிகளில் 1485 ஓட்டங்களை 01 அரைச்சதம் உள்ளடங்கலாக கியன் பூலி பெற்றிருக்கிறார். பந்து வீச்சில் 287 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ள பூலி கடந்த 1993ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி மாரடைப்பினால் மைதானத்திலேயே இறந்திருந்தார்.
06. வில்ப்ஸ் ஸ்லாக்.
கிரிக்கெட் உலகம் கண்ட மற்றுமொரு சகித்துக் கொள்ள முடியாத இறப்பு மேற்கிந்திய தீவுகள் அணியின் வில்ப் ஸ்லாக்கினுடையது. கடந்த 1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக பந்து நெஞ்சில் பட்டு உயிரிழந்திருந்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 02 ஒரு நாள் போட்டிகளிலும் 03 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள வில்ப் ஸ்லாக் 97 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இவ்வளவு மரணங்கள் கிரிக்கெட் உலகத்துக்குள் இடம் பெற்றிருக்கின்றன நிச்சயமாக இவ்வளவு இறப்புக்களும் கிரிக்கெட் உலகில் என்றுமே ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத இறப்புக்களாக இருக்கும் கிரிக்கெட் போட்டிகள் உலகில் இருக்கும் வரை.
Tuesday, March 1, 2016
பரிதாபகரமான நிலையில் இலங்கை அணி.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்த வருடம் பல தோல்விகளை தருகின்ற வருடமாகவே இருக்கின்றது. கரணம் முதலில் இந்திய அணிக்கு எதிராக பெற்ற தோல்வி ஒரு பக்கம் இலங்கை கிரிக்கெட் சபையை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய அணியுடனான போட்டியில் மீண்டும் ஒருதோல்வி கிடைத்திருக்கிறது இலங்கை அணிக்கு.
இதன்படி இந்தப் போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இலங்கை அணி 09 விக்கட்டுக்கள் இழப்புக்கு 138 ஓட்டங்களை மட்டுமே எடுத்துக் கொண்டது .துடுப்பாட்டத்தில் யாருமே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பிரகாசிக்க வில்லை. இலங்கை அணியில் தற்போதைக்கு ரசிகர்கள் நம்பியிருக்கின்ற சமர கபுகெதர மாத்திரம் 30 ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டார்.
பதிலுக்கு 139 ஓட்டங்களை சேசிங் செய்ய தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே விக்கட்டுக்களை இழந்திருந்தாலும் விராத் கோஹ்ளியும் யுவராஜ் சிங்கும் நின்று நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியினை உறுதி செய்ய , யுவராஜ் அதிரடியாக 03 ஆறு ஓட்டங்கள், 03 நான்கு ஓட்டங்களுடன் 35 ஓட்டங்களை அதிரடியாக எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாண்டியா 01 ஓட்டத்துடன் நடையை கட்ட டோனி ஒரு ஆறு ஓட்டத்துடன் மறுமுனையில் துடுப்பெடுத்தாட விராத் கோஹ்லி 56 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற இந்திய அணி இலகுவாக வெற்றியிலக்கை அடைந்தது.
போட்டியின் சிறப்பாட்ட காரராக விராத் கோஹ்லி தெரிவு செய்யப் பட மறு புறம் இலங்கை அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறுகின்ற வாய்ப்பு மேலும் பிரகாசமில்லாமல் இருக்கின்றது. கரணம் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே பெற்ற தொடர்ச்சியான தோல்விகள்.
இறுதி போட்டிக்கு இலங்கை அணி தெரிவு செய்யப்பட வேண்டுமாக இருந்தால் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிக பெரிய வெற்றியை பெற இலங்கை அணி மிக கடுமையாக போராட வேண்டி இருக்கும்.அப்படி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிக பெரிய ஓட்டங்களை பெற்று வெற்றி பெருமாக இருந்தால் இந்திய அணியுடன் இலங்கை அணி ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடலாம்.
அதற்கும் மேலதிகமாக பந்து வீச்சு சற்று சிறப்பானதாக இருந்தாலும் கூட
துடுப்பாட்டம் ,மற்றும் களத்தடுப்பு ஆகியவற்றை சீராக சரி செய்துக் கொண்டு அடுத்தப் போட்டிகளில்முழு மன திடத்துடன் இலங்கை அணி பங்கு பற்ற வேண்டி இருக்கும்.மேலும் நாளை நடைபெறுகின்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்த தொடர் முழுவதும் சொதப்பி வருகின்ற கசுன் ஜயசூரிய, மற்றும் அணி தலைவர் அஞ்சேலோ மத்யுஸ் ஆகியோர் தம்மை நிரூபித்துக் காட்ட வேண்டிய முக்கிய கடப்பாட்டில் இருக்கின்றதுடன் அணியின் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் என்பது இப்போதைக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளாக இருக்கின்றது.
Friday, February 19, 2016
நரிக்குறவர்கள் ..
நரிக்குறவர்களின் இனவரலாறு, தோற்றம், இடப்பெயர்ச்சி, சமூக அமைப்பு, மொழி, வாழ்க்கைமுறை, சமூக மாற்றம் இவற்றுடன் அவர்களுடைய திருமணம், சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், புழங்குபொருட்கள், வழக்காறுகள் என அனைத்து விவரங்களையும் மிக எளிமையாகவும் சுவையாகவும் இந்த நூலில் அறிந்துக் கொள்ள முடியும்.
உண்மையில் யார் இந்த நரிக்குறவர்கள் என்று தேடி பார்த்தால், அவர்களின் வாழ்க்கை நமக்கு பல துன்பங்களை கற்று தருகிறது. அதாவது இந்திய ஆரிய வழி சமூகத்தில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு,இம்சைகளை தொடர்ந்து அனுபவித்து வருகின்ற ஒரு இனம்இந்த நரிகுறவர்கள் . நாகரிகமற்ற நிலை, உடல் துர்நாற்றம், சுத்தமில்லாத ஆடை போன்றவையும் , பார்த்த உடனேயே குமட்டலைத் தந்து வாந்தியெடுக்கும் உணர்வை ஏற்படுத்துமாரான ஒரு அடையாளம் தான் இந்த நரிகுறவர்களினுடையது.
மேலும் இந்த இனத்தைப்பற்றி இன்னொரு மிக முக்கியமான விடயத்தையும் கூறியாக வேண்டும் சுறுசுறுப்பு, கடின உழைப்பு, கூடி மகிழும் இயல்பு, பொறுமை, இருக்கும் சூழலில் இன்புற்று வாழும் நிலை போன்றன இயல்பான ஆறறிவு மனிதனில் வேறுபட்டு இவர்களுக்கு மட்டுமே உரிய இயல்புகள்.
இந்த நூலிலிருந்து இந்த இனத்தின் ஒரு அடையாளம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது அதாவது வேடுவர்களை போலவே இவர்களும் வேட்டையாடுதலை மிக முக்கிய தொழிலாக கொண்டவர்கள்.வேட்டையாடினால்தான் அன்றைய பிழைப்பு இவர்களுக்கு.
பொதுவாக குறவர்கள் என்று வழங்கப்படும் இனத்துக்கும் இந்த நரிக்குறவர் இனத்துக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. குறவர்கள் என்பவர்கள் பண்டைக்கால தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மலையும் மலை சார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்தவர்கள்.. குற்றாலக்குறவஞ்சி போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக அறியப்பட்டவர்கள். ஆனால் நரிக்குறவர்கள் என்பவர்கள் வேறுவகையானவர்கள். அவர்கள் நாடோடிகள். தமிழகத்தில் குடியேறிய சமூகத்தினர்.
நரிக்குறவர்கள் குஜராத், மேவார் போன்ற பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பது இந்த நூலில் இருந்து தெரிய வருகிறது. மேலும் அவர்களின் பூர்வீகமும் அது தான்.முகலாயப் படையெடுப்பின் பிறகு அவர்களுக்குப் பயந்து காடுகளில் வசிக்கத் தொடங்கிய அவர்கள் காடுகளைச் சார்ந்தே தங்களுடைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டனர் போன்ற தகவல்கள் இந்த நூலில் பெண் எழுத்தாளர் கரசூர் பத்மபாரதியினால் கூறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏறக்குறைய எழுபது வகையான குறவர்கள் இருந்தாலும் தொழில் அடிப்படையில் பூனைகுத்தும் குறவர், உப்புக் குறவர், மலைக்குறவர் போன்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.நரிகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உண்பதாலும் நரித்தோல், நரிப்பல், நகம் வால் கொம்பு முதலியவற்றை விற்பதாலும் குறிப்பிட்ட இனத்தை நரிக்குறவர் இனம் என்பதாகத் தெரிகிறது.
இவ்வாறு இந்நூலில் பரவலாகக் காணப்படும் பல தகவல்கள் நரிக்குறவர் வாழ்க்கை பற்றிய ஒரு முழுமையானக் கண்ணோட்டத்தை நமக்கு வழங்கக்கூடியவை எனலாம்.நாம் முற்றிலும் அறிந்துகொள்ள விரும்பாது ஒதுக்கியும் உதாசீனப்படுத்தியும் வைத்துள்ள ஒரு சமூகத்தை, அதனுள் இருந்து பார்ப்பது போன்ற உணர்வைத் இந்த நூல் தருவதுடன் வாசித்து முடித்ததும் அவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் நமக்கு உண்டாவது போன்றதான ஒரு புரிதல் இந்த நூலில் நிச்சயம் வெளிப்படும்.
Tuesday, February 16, 2016
இந்த முறை ஆசிய கிண்ணம் யார் வசம்?
உச்சத்தைத் தொட்ட பிறகு எல்லா அணிகளுக்கும் தான் தம் அணியை பற்றிய ஒரு பிரமிப்பு இருக்கும் அந்த வகையில் இந்த முறை ஆசிய கிண்ணத்தில் பங்கு பற்ற போகின்ற ஆசிய அணிகளுக்கு தமது அணி பற்றிய கனவு இருப்பது சாதாரணம் தான்.
இந்நிலையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளும் இன்னும் தம்மை, தமது திறமையை சரியாக நிரூபிக்க தவறாத அணிகளாக ஆசிய கண்டங்களில் இனங்கான பட்டிறிக்கின்ற மாலைத்திவுகள்,ஐக்கிய அரபு ராச்சியம், ஹாங் காங், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளில் ஒரு அணி தெரிவு செய்யப்பட்டு இந்த போட்டிகள் இடம்பெறுகின்றன.
போட்டிகள் பங்களதேசில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டிகள் வருகின்ற 24ம் திகதி ஆரம்பமாகின்றது. இதன்படி முதல் போட்டியில் இந்தியாவும் பங்காளதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
குறித்த 05 அணிகளும் மற்றைய 04 அணிகளுடன் மோதிக் கொள்ளும் இதன்படி 02 போட்டிகளில் வெற்றி பெறுகின்ற அணிகள் தரப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கின்ற அணிகள் வருகின்ற மார்ச் மாதம் 05ம் திகதி இருஹிபோஅடியில் மோதிக் கொள்ளும்.மேலும் முதல் சுற்று போட்டிகளில் மிகவும் விறுவிறுப்பான போட்டி உலகிலேயே அதிக ரசிகர்கள் ரசிக்கின்ற ,அதிக ரசிகர்கள் மைதானங்களில் கூடுகின்ற போட்டி வருகின்ற 24ம் திகதி நடைபெறுகிறது. யார் இந்த இரு அணிகளும் என்று பார்க்கிறிர்களா இந்திஆயவும் பாகிஸ்தானும் தான்.
ஒரு பக்கம் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியாக வேண்டும் என்று ஒரு கனவு ,ஒரு எதிர்பார்ப்பு இருந்தாலும் இந்த மறை ஆசிய கிண்ணம் டி20 போட்டிகளாக மாற்றப்பட்டிருக்கின்ற காரணத்தினால் குறித்த ஆசிய அணிகள் இந்த போட்டிகளை உலக கிண்ணம் டி20 போட்டிகளுக்கான முன்னோட்ட போடிகளாகவே பார்க்கும் என்பதுனான் உட்பட கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்து. இந்நிலையில் எந்த அணி இந்த முறை ஆசிய கிண்ணத்தை கைப்பற்றும் என்பதான ஒரு சிறிய அலசல்.
01.இந்தியா.
கடந்த முறை ஆசிய கிண்ண போட்டிகளில் அரையிறுதிப் போட்டிகளோடு பாகிஸ்தானுடன் பலத்த அடி வாங்கியிருந்த இந்திய அணி இந்த முறை விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைய காலமாக பல விமர்சனங்களை சந்தித்திருகின்ற இந்திய அணி அண்மையில் இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியதையடுத்து கொஞ்ச குஷியாக இருகின்றது.
மிக முக்கியமாக ஆதிரடியை வழங்கக் கூடிய தவான், ரோஹித் ஷர்மா ஜோடி பந்த்கு வீச்சாளர்களை துவம்சம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கின்ற யுவராஜ் சிங்க் மீதும் பலரது எதிர்பார்ப்பும் இருகின்றது என்றே கூறலாம்.
குறிப்பாக அனைவரது கவனமும் தற்போது மகேந்திர சிங்க் டோனி மீதும் விராத் கொஹ்லி மீதும் தான் இருகின்றது காரணம் இரண்டு தலைவர்கள் சகல விதத்திலும் நம்பிக்கையான இருக்கின்ற இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். மேலும் துடுப்பாட்டத்திலும் சுழற பந்து வீச்சிலும் கலக்கி வருகின்ற சென்னை பையன் அஷ்வின் மீது தற்போது எல்லோரது கவனமும். அதே போல இந்திய அணிக்கு சகிர் கானின் நிரந்தர ஓய்வுக்கு பிறகு மிக சிறந்த பந்து வீச்சு பரிதிகளை வழங்கி வருகின்ற பும்ரா அதிகமாக கவனிக்கப்படுவார் ரசிகர்களால்.
02. இலங்கை
சென்ற வருடம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடி கிண்ணத்தை கைப்பற்றிய அதே சந்தோசத்தோடு இந்த முறையும் களம் காண காத்திருக்கிறது இளம் இலங்கை அணி. ஒரே ஒரு குறை தான், சென்ற தொடரில் விளையாடிய அதே நேரத்தில் இலங்கை அணிக்கு எந்த நேரத்திலும் மிக பெரிய துண்களாக விளங்கிய மஹேல,மற்றும் சங்கா என்ற இரு பெரும் நட்சத்திரங்கள் இந்த முறை விளையாட மாட்டார்கள் காரணம் அவர்கள் ஓய்வு பெற்றதனால்.
மேலும் திலகரட்ன டில்ஷான் அனுபவம் வாய்ந்த வீரராக இலங்கை அணிக்கு நம்பிக்கை தர கூடிய வீரராக இந்த முறை இலங்கை ரசிகர்களால் நோக்கப்படுவார். இதேபோல தற்போது உபாதையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் ரங்கன ஹேரத்தும் பந்து வீச்சில் இலங்கை அணிக்கு பலம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற படி அதே இலங்கை அணி லசித் மலிங்கவின் தலைமையின் கீழ் இந்த மறையும் ஆசிய கிண்ணம் வெல்லும் முனைப்போடு இலக்கை நோக்கி இலங்கை அணி ஆடுகளங்களில் போராடும்.
03.பாகிஸ்தான்.
கடந்த தொடரில் இலங்கை அணியிடம் வாங்கிய மிக நீண்ட அடியும்,சில விமர்சனங்களும் நிச்சயம் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் நினைவில் இருக்கும். பல வீரர்களின் ஓய்வுக்கு பிறகும் பாகிஸ்தான் நிமிர்ந்து போராட தயாராக இருக்கிறது என்பது அண்மைய காலங்களில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக வெளிபடுத்திய மிக சிறந்த பெறுபேறுகளில் இருந்து தெரிய வருகிறது.
மேலும் போதை பொருள் குற்ற சாட்டில் சிக்கி தற்போது பாகிஸ்தான் அணிக்கு திரும்பியுள்ள மொஹமட் அமீரின் பந்து வீச்சு மீதும் ரசிகர்களின் பார்வை அதிகமாக இருக்கும். மற்றபடி அப்ரிடியின் தலைமையில் பாகிஸ்தான் அணி மிக சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தும் என நான் உட்பட எல்லோரும் எதிர்பார்த்து காத்திருகிறோம்.
05.பங்களாதேஷ்.
அடுத்த ஆஸ்திரேலிய அணி என்ற புகழப்படுகின்ற அளவுக்கு பங்களாதேஸ் அணியின் வளர்ச்சியை அண்மைய போட்டிகளின் மூலம் காணக் கூடியதாக இருக்கிறது. முதலில் இந்திய அணிக்கு எதிராக பெற்ற தொடர் வெற்றி, அடுத்து தென்னாபிரிக்க அணிக்கு எதிராக பெற்ற டி20 தொடர் வெற்றி என பங்களாதேஷ் அணி கொடுத்தல் குஷியில் இருக்கிறது தாமும் மேற்கூறிய முதல் தர அணிகளுக்கு சவால் விடக் கூடிய அணி தான் என்ற நம்பிக்கையில்.
சொந்த மண்ணில் விளையாடுகிற படியால் அதிகமான அழுத்தங்களை பங்களாதேஷ் அணி பிரயோக்கும் அதே நேரத்தில் எதிரணிகள் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கோடு போட்டிகளில் பங்கு பற்றும் என எதிர்பார்க்கலாம்.
1984 ம் ஆண்டு முதல் நடைபெறுகின்ற ஆசிய கிண்ணப் போட்டிகளில் இதுவரையில் இந்திய அணி 06 தடவைகளும், இலங்கை அணி 04 தடவைகளும், பாகிஸ்தான் அணி 02 தடவையும் கின்னங்களைகைபற்றியுள்ளன. அதே நேரத்தில் பங்களாதேஷ் அணி எந்த வருடமும் கிண்ணத்தை கைப்பற்ற வில்லை. எனவே எல்லா பக்கமும் மேற்குறிப்பிட்ட 04 அணிகளும் கிண்ணத்தை கைப்பற்ற கடுமையாக போராடும்.
Subscribe to:
Posts (Atom)




















































