இன்னும் சிலுவையில் அறயப்படாத இயேசு நான். கடவுளின் படைப்பில் விமோசனமே இல்லாத சாபம் நான்.
Saturday, March 5, 2016
Wednesday, March 2, 2016
கிரிக்கெட் உலகம் கண்ட மரணங்கள் ஒரு பகிர்வு.
கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டு என்று ஒரு பக்கம் விபரித்தாலும் கூட அதில் அவ்வப்போது இடம்பெறுகின்ற வீபரீதங்கள் கிரிக்கட் ரசிகர்களைப் பொருத்தமட்டில் என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
ஒரு பக்கம் தினமும் கிரிக்கெட்டில் சாதனைகள் ,சரித்திரங்கள் படைக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தின் பக்கங்கள் புதுப்பிக்கப்பட்டாலும் கூட இது வரை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள மரணங்கள் பற்றிய ஒரு பகிர்வு இது.
01. பிலிப் ஹியூஸ்.
உன்னிப்பாக ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிகளையும் ரசிக்கின்ற, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனாலும் இன்றும் ஜீரணிக்க முடியாத ஒன்று ஆஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூசின் மரணம் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மனதால் நொந்துப்போன ஒரு நாள்.ஆம் அன்று தான் பிலிப் ஹியூஸ் பிராந்தியப் போட்டிகளில் பங்குபற்றிக் கொண்டிருந்தப்போது , துரதிஷ்டவசமாகப் பந்து தலையில் பட்டு மைதானத்திலே சிதறி விழுந்தார்.
சிட்னி வின்சென்ட் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சிகிச்சை பயனின்று பிலிப்ஹியூஸ் இறந்து விட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிலிப் ஹியூஸ் அறிமுகப் போட்டியிலேயே சதம் கடந்து சாதனைப் படைத்திருந்தார். தவிர கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக தனது ஒரு நாள் கன்னிப் போட்டியில் விளையாடியிருந்தார்.
பிலிப் ஹியூஸ் இதுவரைக்கும் 26 டெஸ்ட் @பாட்டிகளில் விளையாடி 1535 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 03 சதங்களையும் ,7 அரை சதங்களையும்,25 ஒருநாள் போட்டிகளில் 826 ஓட்டங்களையும் 02 சதம் , 4அரைச்சதம் உள்ளடங்கலாகப் பெற்றுள்ளார்.
உண்மையிலேயே பிலிப் ஹெயுசின் மரணம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களாலும் இன்றும் ஜீரணிக்க முடியாத ஒன்று என்று தான் கூறவேண்டும்.
இதில் வருந்தத்தக்க விடயம் என்னவென்றால் பிலிப் ஹியூக்ஸ் மரணத்தைத் தழுவிய நாள் தான் அவரது பிறந்த நாள்.
02. டெரன் ரன்டல்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக் கண்ட சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த விக்கெட் காப்பாளர்கள் வரிசையில் எப்போதுமே டெரன் ரன்டலுக்கும் மிகப் பிரதானமான இடம் இருக்கிறது எனலாம். கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்@டாபர் 27ஆம் திகதி யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக டெரன் ரண்டல் மைதானத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது தலையில் பந்து பட்டு உயிர்ழந்திருந்தார்.
04 டெஸ்ட் போட்டிகளில் 688 ஓட்டங்களையும், 04 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 198 ஓட்டங்களையும் டெரன் குவித்துள்ளார். கிரிக்கெட் உலகம் கண்ட மற்றுமொரு துர்மரணம் டெரன் ரன்டலுடையது.
03. வசிம் ராஜா.
மைதானத்தில் துடிப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென மாரடைப்பினால் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் வசிம் ராஜா மரணமடைந்திருந்தார். இந்த மரணம் நடந்தது கடந்த 2006ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்து.
தனது தனிப்பட்ட துடுப்பாட்ட திறமையினால் போராடி பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தவர்களில் வசிம் ராஜாவும் ஒருவர். முதன் முதலாக கடந்த 1993ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடி வசிம் ராஜா 03 டெஸ்ட் சதங்களை குவித்துள்ளார்.இன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தாம் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றிகளுக்கும் வசிம் ராஜா பெயரை நினைவுக் கூறுவது சிறப்பானது.
04. ராமன் லம்பா.
கிரிக்கெட் உலகில் மற்றுமொரு இறப்பு கடந்த 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெற்றது. இது இந்தியா துடுப்பாட்ட வீரர் ராமன் லம்பாவினுடையது. இந்திய கிரிக்கெட் சபை கண்ட வேதனையான இறப்புக்களில் ஒன்றாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இன்றும் நினைவுக் கூறப்படுகிறது.
04டெஸ்ட் போட்டிகளில் 102 ஓட்டங்களையும், 32 ஒருநாள் போட்டிகளில் 783 ஓட்டங்களையும், பெற்றுள்ளதோடு, ஒரு நாள் போட்டிகளில் 15 விக்கெட்க்களையும் ராமன் லம்பா வீழ்த்தியிருக்கிறார்.
இறுதியாகப் பாகிஸ்தான் அணிக்கு எதிராக துடுப்பெடுத்தாடித் கொண்டிருக்கும் போதே பந்து பட்டு தலையில் பட்டு எதிர்பாரா விதமாக ராமன் லம்பா மைதானத்திலேயே உயிரிழந்திருந்தார்.
05. கியன் பூலி
மாரடைப்பினால் மைதானத்திலேயே இறந்தவர்கள் வரிசையில் மற்றுமொரு துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் கியன் பூலியும் ஒருவர். ரசிகர்கள் பெறும்பாலும் கியன் பூலியைச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம் கியன் பூலி விளையாடியது எல்லாம் இங்கிலாந்தின் லங்கா சியர் பிராந்தியத்துக்காகத்தான்.
140 டெஸ்ட் போட்டிகளில் 1485 ஓட்டங்களை 01 அரைச்சதம் உள்ளடங்கலாக கியன் பூலி பெற்றிருக்கிறார். பந்து வீச்சில் 287 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ள பூலி கடந்த 1993ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி மாரடைப்பினால் மைதானத்திலேயே இறந்திருந்தார்.
06. வில்ப்ஸ் ஸ்லாக்.
கிரிக்கெட் உலகம் கண்ட மற்றுமொரு சகித்துக் கொள்ள முடியாத இறப்பு மேற்கிந்திய தீவுகள் அணியின் வில்ப் ஸ்லாக்கினுடையது. கடந்த 1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக பந்து நெஞ்சில் பட்டு உயிரிழந்திருந்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 02 ஒரு நாள் போட்டிகளிலும் 03 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள வில்ப் ஸ்லாக் 97 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இவ்வளவு மரணங்கள் கிரிக்கெட் உலகத்துக்குள் இடம் பெற்றிருக்கின்றன நிச்சயமாக இவ்வளவு இறப்புக்களும் கிரிக்கெட் உலகில் என்றுமே ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத இறப்புக்களாக இருக்கும் கிரிக்கெட் போட்டிகள் உலகில் இருக்கும் வரை.
Tuesday, March 1, 2016
பரிதாபகரமான நிலையில் இலங்கை அணி.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்த வருடம் பல தோல்விகளை தருகின்ற வருடமாகவே இருக்கின்றது. கரணம் முதலில் இந்திய அணிக்கு எதிராக பெற்ற தோல்வி ஒரு பக்கம் இலங்கை கிரிக்கெட் சபையை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய அணியுடனான போட்டியில் மீண்டும் ஒருதோல்வி கிடைத்திருக்கிறது இலங்கை அணிக்கு.
இதன்படி இந்தப் போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இலங்கை அணி 09 விக்கட்டுக்கள் இழப்புக்கு 138 ஓட்டங்களை மட்டுமே எடுத்துக் கொண்டது .துடுப்பாட்டத்தில் யாருமே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பிரகாசிக்க வில்லை. இலங்கை அணியில் தற்போதைக்கு ரசிகர்கள் நம்பியிருக்கின்ற சமர கபுகெதர மாத்திரம் 30 ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டார்.
பதிலுக்கு 139 ஓட்டங்களை சேசிங் செய்ய தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே விக்கட்டுக்களை இழந்திருந்தாலும் விராத் கோஹ்ளியும் யுவராஜ் சிங்கும் நின்று நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியினை உறுதி செய்ய , யுவராஜ் அதிரடியாக 03 ஆறு ஓட்டங்கள், 03 நான்கு ஓட்டங்களுடன் 35 ஓட்டங்களை அதிரடியாக எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாண்டியா 01 ஓட்டத்துடன் நடையை கட்ட டோனி ஒரு ஆறு ஓட்டத்துடன் மறுமுனையில் துடுப்பெடுத்தாட விராத் கோஹ்லி 56 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற இந்திய அணி இலகுவாக வெற்றியிலக்கை அடைந்தது.
போட்டியின் சிறப்பாட்ட காரராக விராத் கோஹ்லி தெரிவு செய்யப் பட மறு புறம் இலங்கை அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறுகின்ற வாய்ப்பு மேலும் பிரகாசமில்லாமல் இருக்கின்றது. கரணம் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே பெற்ற தொடர்ச்சியான தோல்விகள்.
இறுதி போட்டிக்கு இலங்கை அணி தெரிவு செய்யப்பட வேண்டுமாக இருந்தால் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிக பெரிய வெற்றியை பெற இலங்கை அணி மிக கடுமையாக போராட வேண்டி இருக்கும்.அப்படி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிக பெரிய ஓட்டங்களை பெற்று வெற்றி பெருமாக இருந்தால் இந்திய அணியுடன் இலங்கை அணி ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடலாம்.
அதற்கும் மேலதிகமாக பந்து வீச்சு சற்று சிறப்பானதாக இருந்தாலும் கூட
துடுப்பாட்டம் ,மற்றும் களத்தடுப்பு ஆகியவற்றை சீராக சரி செய்துக் கொண்டு அடுத்தப் போட்டிகளில்முழு மன திடத்துடன் இலங்கை அணி பங்கு பற்ற வேண்டி இருக்கும்.மேலும் நாளை நடைபெறுகின்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்த தொடர் முழுவதும் சொதப்பி வருகின்ற கசுன் ஜயசூரிய, மற்றும் அணி தலைவர் அஞ்சேலோ மத்யுஸ் ஆகியோர் தம்மை நிரூபித்துக் காட்ட வேண்டிய முக்கிய கடப்பாட்டில் இருக்கின்றதுடன் அணியின் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் என்பது இப்போதைக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளாக இருக்கின்றது.
Friday, February 19, 2016
நரிக்குறவர்கள் ..
நரிக்குறவர்களின் இனவரலாறு, தோற்றம், இடப்பெயர்ச்சி, சமூக அமைப்பு, மொழி, வாழ்க்கைமுறை, சமூக மாற்றம் இவற்றுடன் அவர்களுடைய திருமணம், சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், புழங்குபொருட்கள், வழக்காறுகள் என அனைத்து விவரங்களையும் மிக எளிமையாகவும் சுவையாகவும் இந்த நூலில் அறிந்துக் கொள்ள முடியும்.
உண்மையில் யார் இந்த நரிக்குறவர்கள் என்று தேடி பார்த்தால், அவர்களின் வாழ்க்கை நமக்கு பல துன்பங்களை கற்று தருகிறது. அதாவது இந்திய ஆரிய வழி சமூகத்தில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு,இம்சைகளை தொடர்ந்து அனுபவித்து வருகின்ற ஒரு இனம்இந்த நரிகுறவர்கள் . நாகரிகமற்ற நிலை, உடல் துர்நாற்றம், சுத்தமில்லாத ஆடை போன்றவையும் , பார்த்த உடனேயே குமட்டலைத் தந்து வாந்தியெடுக்கும் உணர்வை ஏற்படுத்துமாரான ஒரு அடையாளம் தான் இந்த நரிகுறவர்களினுடையது.
மேலும் இந்த இனத்தைப்பற்றி இன்னொரு மிக முக்கியமான விடயத்தையும் கூறியாக வேண்டும் சுறுசுறுப்பு, கடின உழைப்பு, கூடி மகிழும் இயல்பு, பொறுமை, இருக்கும் சூழலில் இன்புற்று வாழும் நிலை போன்றன இயல்பான ஆறறிவு மனிதனில் வேறுபட்டு இவர்களுக்கு மட்டுமே உரிய இயல்புகள்.
இந்த நூலிலிருந்து இந்த இனத்தின் ஒரு அடையாளம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது அதாவது வேடுவர்களை போலவே இவர்களும் வேட்டையாடுதலை மிக முக்கிய தொழிலாக கொண்டவர்கள்.வேட்டையாடினால்தான் அன்றைய பிழைப்பு இவர்களுக்கு.
பொதுவாக குறவர்கள் என்று வழங்கப்படும் இனத்துக்கும் இந்த நரிக்குறவர் இனத்துக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. குறவர்கள் என்பவர்கள் பண்டைக்கால தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மலையும் மலை சார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்தவர்கள்.. குற்றாலக்குறவஞ்சி போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக அறியப்பட்டவர்கள். ஆனால் நரிக்குறவர்கள் என்பவர்கள் வேறுவகையானவர்கள். அவர்கள் நாடோடிகள். தமிழகத்தில் குடியேறிய சமூகத்தினர்.
நரிக்குறவர்கள் குஜராத், மேவார் போன்ற பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பது இந்த நூலில் இருந்து தெரிய வருகிறது. மேலும் அவர்களின் பூர்வீகமும் அது தான்.முகலாயப் படையெடுப்பின் பிறகு அவர்களுக்குப் பயந்து காடுகளில் வசிக்கத் தொடங்கிய அவர்கள் காடுகளைச் சார்ந்தே தங்களுடைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டனர் போன்ற தகவல்கள் இந்த நூலில் பெண் எழுத்தாளர் கரசூர் பத்மபாரதியினால் கூறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏறக்குறைய எழுபது வகையான குறவர்கள் இருந்தாலும் தொழில் அடிப்படையில் பூனைகுத்தும் குறவர், உப்புக் குறவர், மலைக்குறவர் போன்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.நரிகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உண்பதாலும் நரித்தோல், நரிப்பல், நகம் வால் கொம்பு முதலியவற்றை விற்பதாலும் குறிப்பிட்ட இனத்தை நரிக்குறவர் இனம் என்பதாகத் தெரிகிறது.
இவ்வாறு இந்நூலில் பரவலாகக் காணப்படும் பல தகவல்கள் நரிக்குறவர் வாழ்க்கை பற்றிய ஒரு முழுமையானக் கண்ணோட்டத்தை நமக்கு வழங்கக்கூடியவை எனலாம்.நாம் முற்றிலும் அறிந்துகொள்ள விரும்பாது ஒதுக்கியும் உதாசீனப்படுத்தியும் வைத்துள்ள ஒரு சமூகத்தை, அதனுள் இருந்து பார்ப்பது போன்ற உணர்வைத் இந்த நூல் தருவதுடன் வாசித்து முடித்ததும் அவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் நமக்கு உண்டாவது போன்றதான ஒரு புரிதல் இந்த நூலில் நிச்சயம் வெளிப்படும்.
Tuesday, February 16, 2016
இந்த முறை ஆசிய கிண்ணம் யார் வசம்?
உச்சத்தைத் தொட்ட பிறகு எல்லா அணிகளுக்கும் தான் தம் அணியை பற்றிய ஒரு பிரமிப்பு இருக்கும் அந்த வகையில் இந்த முறை ஆசிய கிண்ணத்தில் பங்கு பற்ற போகின்ற ஆசிய அணிகளுக்கு தமது அணி பற்றிய கனவு இருப்பது சாதாரணம் தான்.
இந்நிலையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளும் இன்னும் தம்மை, தமது திறமையை சரியாக நிரூபிக்க தவறாத அணிகளாக ஆசிய கண்டங்களில் இனங்கான பட்டிறிக்கின்ற மாலைத்திவுகள்,ஐக்கிய அரபு ராச்சியம், ஹாங் காங், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளில் ஒரு அணி தெரிவு செய்யப்பட்டு இந்த போட்டிகள் இடம்பெறுகின்றன.
போட்டிகள் பங்களதேசில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டிகள் வருகின்ற 24ம் திகதி ஆரம்பமாகின்றது. இதன்படி முதல் போட்டியில் இந்தியாவும் பங்காளதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
குறித்த 05 அணிகளும் மற்றைய 04 அணிகளுடன் மோதிக் கொள்ளும் இதன்படி 02 போட்டிகளில் வெற்றி பெறுகின்ற அணிகள் தரப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கின்ற அணிகள் வருகின்ற மார்ச் மாதம் 05ம் திகதி இருஹிபோஅடியில் மோதிக் கொள்ளும்.மேலும் முதல் சுற்று போட்டிகளில் மிகவும் விறுவிறுப்பான போட்டி உலகிலேயே அதிக ரசிகர்கள் ரசிக்கின்ற ,அதிக ரசிகர்கள் மைதானங்களில் கூடுகின்ற போட்டி வருகின்ற 24ம் திகதி நடைபெறுகிறது. யார் இந்த இரு அணிகளும் என்று பார்க்கிறிர்களா இந்திஆயவும் பாகிஸ்தானும் தான்.
ஒரு பக்கம் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியாக வேண்டும் என்று ஒரு கனவு ,ஒரு எதிர்பார்ப்பு இருந்தாலும் இந்த மறை ஆசிய கிண்ணம் டி20 போட்டிகளாக மாற்றப்பட்டிருக்கின்ற காரணத்தினால் குறித்த ஆசிய அணிகள் இந்த போட்டிகளை உலக கிண்ணம் டி20 போட்டிகளுக்கான முன்னோட்ட போடிகளாகவே பார்க்கும் என்பதுனான் உட்பட கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்து. இந்நிலையில் எந்த அணி இந்த முறை ஆசிய கிண்ணத்தை கைப்பற்றும் என்பதான ஒரு சிறிய அலசல்.
01.இந்தியா.
கடந்த முறை ஆசிய கிண்ண போட்டிகளில் அரையிறுதிப் போட்டிகளோடு பாகிஸ்தானுடன் பலத்த அடி வாங்கியிருந்த இந்திய அணி இந்த முறை விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைய காலமாக பல விமர்சனங்களை சந்தித்திருகின்ற இந்திய அணி அண்மையில் இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியதையடுத்து கொஞ்ச குஷியாக இருகின்றது.
மிக முக்கியமாக ஆதிரடியை வழங்கக் கூடிய தவான், ரோஹித் ஷர்மா ஜோடி பந்த்கு வீச்சாளர்களை துவம்சம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கின்ற யுவராஜ் சிங்க் மீதும் பலரது எதிர்பார்ப்பும் இருகின்றது என்றே கூறலாம்.
குறிப்பாக அனைவரது கவனமும் தற்போது மகேந்திர சிங்க் டோனி மீதும் விராத் கொஹ்லி மீதும் தான் இருகின்றது காரணம் இரண்டு தலைவர்கள் சகல விதத்திலும் நம்பிக்கையான இருக்கின்ற இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். மேலும் துடுப்பாட்டத்திலும் சுழற பந்து வீச்சிலும் கலக்கி வருகின்ற சென்னை பையன் அஷ்வின் மீது தற்போது எல்லோரது கவனமும். அதே போல இந்திய அணிக்கு சகிர் கானின் நிரந்தர ஓய்வுக்கு பிறகு மிக சிறந்த பந்து வீச்சு பரிதிகளை வழங்கி வருகின்ற பும்ரா அதிகமாக கவனிக்கப்படுவார் ரசிகர்களால்.
02. இலங்கை
சென்ற வருடம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடி கிண்ணத்தை கைப்பற்றிய அதே சந்தோசத்தோடு இந்த முறையும் களம் காண காத்திருக்கிறது இளம் இலங்கை அணி. ஒரே ஒரு குறை தான், சென்ற தொடரில் விளையாடிய அதே நேரத்தில் இலங்கை அணிக்கு எந்த நேரத்திலும் மிக பெரிய துண்களாக விளங்கிய மஹேல,மற்றும் சங்கா என்ற இரு பெரும் நட்சத்திரங்கள் இந்த முறை விளையாட மாட்டார்கள் காரணம் அவர்கள் ஓய்வு பெற்றதனால்.
மேலும் திலகரட்ன டில்ஷான் அனுபவம் வாய்ந்த வீரராக இலங்கை அணிக்கு நம்பிக்கை தர கூடிய வீரராக இந்த முறை இலங்கை ரசிகர்களால் நோக்கப்படுவார். இதேபோல தற்போது உபாதையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் ரங்கன ஹேரத்தும் பந்து வீச்சில் இலங்கை அணிக்கு பலம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற படி அதே இலங்கை அணி லசித் மலிங்கவின் தலைமையின் கீழ் இந்த மறையும் ஆசிய கிண்ணம் வெல்லும் முனைப்போடு இலக்கை நோக்கி இலங்கை அணி ஆடுகளங்களில் போராடும்.
03.பாகிஸ்தான்.
கடந்த தொடரில் இலங்கை அணியிடம் வாங்கிய மிக நீண்ட அடியும்,சில விமர்சனங்களும் நிச்சயம் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் நினைவில் இருக்கும். பல வீரர்களின் ஓய்வுக்கு பிறகும் பாகிஸ்தான் நிமிர்ந்து போராட தயாராக இருக்கிறது என்பது அண்மைய காலங்களில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக வெளிபடுத்திய மிக சிறந்த பெறுபேறுகளில் இருந்து தெரிய வருகிறது.
மேலும் போதை பொருள் குற்ற சாட்டில் சிக்கி தற்போது பாகிஸ்தான் அணிக்கு திரும்பியுள்ள மொஹமட் அமீரின் பந்து வீச்சு மீதும் ரசிகர்களின் பார்வை அதிகமாக இருக்கும். மற்றபடி அப்ரிடியின் தலைமையில் பாகிஸ்தான் அணி மிக சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தும் என நான் உட்பட எல்லோரும் எதிர்பார்த்து காத்திருகிறோம்.
05.பங்களாதேஷ்.
அடுத்த ஆஸ்திரேலிய அணி என்ற புகழப்படுகின்ற அளவுக்கு பங்களாதேஸ் அணியின் வளர்ச்சியை அண்மைய போட்டிகளின் மூலம் காணக் கூடியதாக இருக்கிறது. முதலில் இந்திய அணிக்கு எதிராக பெற்ற தொடர் வெற்றி, அடுத்து தென்னாபிரிக்க அணிக்கு எதிராக பெற்ற டி20 தொடர் வெற்றி என பங்களாதேஷ் அணி கொடுத்தல் குஷியில் இருக்கிறது தாமும் மேற்கூறிய முதல் தர அணிகளுக்கு சவால் விடக் கூடிய அணி தான் என்ற நம்பிக்கையில்.
சொந்த மண்ணில் விளையாடுகிற படியால் அதிகமான அழுத்தங்களை பங்களாதேஷ் அணி பிரயோக்கும் அதே நேரத்தில் எதிரணிகள் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கோடு போட்டிகளில் பங்கு பற்றும் என எதிர்பார்க்கலாம்.
1984 ம் ஆண்டு முதல் நடைபெறுகின்ற ஆசிய கிண்ணப் போட்டிகளில் இதுவரையில் இந்திய அணி 06 தடவைகளும், இலங்கை அணி 04 தடவைகளும், பாகிஸ்தான் அணி 02 தடவையும் கின்னங்களைகைபற்றியுள்ளன. அதே நேரத்தில் பங்களாதேஷ் அணி எந்த வருடமும் கிண்ணத்தை கைப்பற்ற வில்லை. எனவே எல்லா பக்கமும் மேற்குறிப்பிட்ட 04 அணிகளும் கிண்ணத்தை கைப்பற்ற கடுமையாக போராடும்.
Friday, February 12, 2016
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் ஒரு பார்வை.
கடந்த வாரம் 5ம் திகதியிலிருந்து தெற்காசிய நாடுகளுக்கு கொண்டாட்டம் தான் காரணம் தெற்காசிய வளையாட்டு போட்டிகள் ஆரம்பித்து களைகட்டிக் கொண்ருக்கின்றன.சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கின்ற இலங்கை ,இந்தியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் ,வங்கதேசம்,பூட்டான்,நேபாளம்,மாலைதீவு ஆகிய நாடுகளை சேர்ந்த 2500 வீர வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கு பற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டிகளை தொடக்கி வைத்தார்.
இம்முறை 12வது முறையாகவும் நடைபெறும் இத் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் குவாஹொட்டி இந்திரா காந்தி மைதானத்தில் ஆரம்பமானதோடு இந்தப் போட்டிகள் இந்தியாவில் இடம்பெறுவது இது 3வது சந்தர்ப்பமாகும்.
இதன்படி தடகளம்,கூடைபந்து,சைக்கிள் ,கால்பந்து,ஹன்ட்பால்,கபடி,கோ-கோ,துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ்,நீச்சல்,டென்னிஸ்,ட்ரையத்லான்,கைபந்து,பளுதூக்குதல்,மல்யுத்தம்,ஆடவர் கால்பந்து,ஆகிய விளையாட்டுக்கள் மிக பிரதான விளையாட்டுக்களாக விளையாடபடுவதோடு இதற்கு மேலதிகமாக வில்வித்தை,பாட்மிட்டன்,குத்துசண்டை, ஜூடோ,டேபிள் டென்னிஸ்,தேக்வாண்டோ,வூசு (பெண்கள் ), ஆகிய போட்டிகளும் இடம்பெறுகின்றன.
நதிகளின் பெயர்களில் நிகழ்சிகள்.
தெற்கு ஆசிய நாடுகளில் ஓடும் நதிகளை நினைவுகூரும் முகமாக அல்லது பாரம்பரியத்தை போற்றும் முகமாகவும் இம்முறை நதிகளின் பெயர்களை ஒவ்வொரு நிகழ்சிகளின் பெயர்களும் குறிபிடப்படிருந்தன.
இதன்படி பிரம்மபுத்திரா (இந்தியா), சிந்து நதி (பாகிஸ்தான்), காபுல் நதி (ஆப்கானிஸ்தான்), கோஸி (நேபாளம்), பத்மா நதி (வங்கதேசம்), மகாவலி (இலங்கை ), மாலை தீவு ( ஏரி) காரணம் மாலை தீவுகளில் ஆறுகள் கிடையாது ஆகிய நதிகளை மையமாக வைத்து நிகழ்சிகள் நடத்தப்பட்டன.
லோகோ (இலட்சனை).
12வது தெற்காசிய விளையாட்டு போட்டியின் சின்னமாக இந்த முறை திஹொர் வடிவமைக்கப் பட்டிருந்தது.இந்த சின்னமானது தெற்காசிய நாடுகளுக்கிடையில் அமைதி ,முன்னேற்றம்,வலிமை ஆகியவற்றை வலியுறுத்துவதாக அமைந்தது.
இந்தியாவின் ஆதிக்கம்.
இதுவரை 12 முறை நடத்தப்பட்டுள்ள தெற்காசியப் போட்டிகளில் இந்தியா இதுவரை 7 முறை பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.தவிர பெரும்பாலான போட்டிகளில் பாகிஸ்தானே அதிக இரண்டாமிடன்களை பிடித்திருக்கின்றது.எனினும் கடுமையாகப் போராடி இலங்கை இந்த முறை இரண்டாமிடத்துக்கு தரப்ப்படுத்தப்படுள்ளதுடன் இன்னும் கடுமையாகப் போராடுகின்ற சந்தர்ப்பங்களில் இலங்கை முதலிடத்துக்கு முன்னேறக்கூடிய சந்தரங்கள் அதிகம் இருக்கின்றன.கடந்த கால தோல்விகளும் எழுச்சி கண்ட இலங்கையும்.
கடந்த இரு வருடங்களை போல இல்லாமல் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கையை பிரதிநிதுவப்படுதுகின்ற இலங்கை வீரர்கள் மிக சிறந்த பருதிகளை மிக சிறந்த வெற்றிகளை தேடி கொடுத்திருகின்றனர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இந்நிலையில் இது வரையான போட்டிகளின் அடிப்படையில் இந்தியா 146 தங்கம் ,79 வெள்ளி,23 வெண்கல பதக்கங்களை கைப்பற்றி தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்க இந்தியா பாகிஸ்தான் போன்ற மிக பெரிய நாடு வீரர்களிடம் சவால் விடும் அளவுக்கு இலங்கை 25 தங்கம் ,53 வெள்ளி,79 வெண்கல பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்படியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது.
இதன்படி இதுவரை நடந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் இலங்கை 25 தங்க பதக்கங்களை கைப்பற்றி எமது தாய் நாட்டுக்கு பெருமை தேடி தந்த தங்க நாயகர்கள் பற்றிய தேடல் இது.
01. மெத்திவ் அபேசிங்க.
அண்மைய காலமாகவும் சரி இனிமேல் நடைபெற போகின்ற போட்டிகளிலும் சரி நீச்சல் போட்டிகளில் இந்திய வீரர்களை இந்திய நீச்சல் வீர,வீராங்கனைகளை வீழ்த்த முடியாமல் இருக்கின்றதே என்ற ஏக்கம் பலருக்கும் இருந்தது. ஆனால் இந்தமுறை இந்த கனவு பளித்திருக்கின்றது.ஆம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றிய மெத்திவ் அபேசிங்க தங்க பதக்கங்களை வென்றது மட்டும் அல்லாமல் புதிய சாதனை ஒன்றையும் நிலைநாட்டியிருந்தார்.
அதாவது கடந்த 10ம் திகதி இடம்பெற்ற ஆண்களுக்கான குறுந்தூர மற்றும் நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றிய மெத்திவ் அபேசிங்க 200மீற்றர் நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கபதக்கத்தை கைப்பற்றி கொண்டதோடு, ஆண்களுக்கான 100மீற்றர் ப்ரி ஸ்டைல் (Free Style) நீச்சல் போட்டியிலும் அவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி மொத்தமாக 7 தங்கப் பதக்கங்களை கைப்பற்றிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.கடந்த 1991 ம்ஆண்டு இடம்பெற்ற தெற்காசிய போட்டிகளில் நீச்சல் வீரர் ஜுலியன் போலிங் 6 தங்கப்பதக்கத்தை பெற்றிருந்ததே, இது வரை தனிநபர் சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த முறை மெத்திவ் அபேசிங்க கைப்பற்றிய தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 05 என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
2. சுரஞ்சித் 200 மீ.ஓட்டப்போட்டிகள்.
கடந்த 2ம் திகதி இடம்பெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் சுரன்ஜித் த சில்வா 21:00 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து இலங்கைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்திருந்தார்.
3. சந்தருவான்- கோலுன்றி பாய்தல்.
கடந்த 10ம் இடம்பெற்ற கோலுன்றி பாய்தல் போட்டியில் இலங்கை வீரர் எம்.எச்.ஐ. சந்தருவான் இலங்கைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.இதன்படி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சந்தருவான் 4.90 மீற்றர் பாய்ந்து தங்கப்பதக்கத்தை வெற்றிக் கொண்டிருந்தார்.மேலும் கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் முகம்மது ஐயூபின் தெற்காசிய சாதனையை முறியடித்திருந்ததோடு பாகிஸ்தான் வீரர் ஐயூப் 4.81 மீற்றர் உயரம் பாய்ந்திருந்தார்.என்பதும் இங்கு கவனிக்கக்கூடியது. மேலும் இலங்கைக்கு மொத்தமாக இலங்கைக்கு மொத்தமாக 09 தங்கப்பதக்கங்கள் தடகள போட்டிகளில் மட்டும் கிடைத்துள்ளன.
4.இந்துனில் ஹேரத் - 800 மீற்றர்.
இலங்கையை பிரதிநிதிதுவப்படுத்தி இந்த முறை 800 மீட்டர் ஓட்டப்போட்டிகளில் பங்குபற்றிய இந்துனில் ஹேரத் குறிப்பிட்ட தூரத்தை 1:51.46 என்ற மணித்தியாலத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியிருந்தார்.
5.கிமிகோ ரஹிம் - 100 மீட்டர் ஓட்டப்போட்டிகள்.
பெண்களுக்கான 100 மீற்றர் பிரிஸ்டைல் போட்டியில் கிமிகோ ரஹிம் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.இதன்படி குறிப்பிட்ட தூரத்தை அவர் 57.20 என்ற நிமிடங்களிலேயே கடந்து தங்க பதக்கத்தை தனதாக்கியிருந்தார்.இந்த பதக்கத்தோடு சேர்த்து இவர் கைப்பற்றிய தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 03. ஏற்கனவே 50 மீட்டர் நீச்சல் போட்டியில் குறிப்பிட்ட தூரத்தை 26.49 நிமிடத்தில் கடந்ததோடு, 50 மீற்றர் பின்நோக்கி நீந்தும் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியிருந்தார்.
6.ஜீவன் ஜயசிங்க - வீதியோர சைக்கிளோட்டம்.
இலங்கை வீர வீராங்கனைகளில் கவனிக்கப்படக் கூடிய ஒரு மெய்வல்லுனர் தான் இந்த ஜீவன் ஜயசிங்க, அதாவது கடந்த 10ம் திகதி இடம்பெற்ற வீதியோர சைக்கிளோட்டபோட்டிகளில் இலங்கைக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்காது என்ற மனநிலையில் இலங்கை ரசிகர்கள் இருக்க யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஜீவன் ஜயசிங்க இலங்கைக்கு தங்கபதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.
இதோடு சேர்த்து இலங்கை மல்யுத்த வீரர்கள் இலங்கைக்கு 12 பதக்கங்களை பெற்றுக்கொடுத்துள்ளனர். இம்முறை முதன் முறையாக பங்குபற்றிய இலங்கை பெண்கள் மல்யுத்த வீராங்கனைகள் 5 வெள்ளிப்பதக்கம் 3 வெண்கலப்பதக்கக்களையும் பெற்று கொடுத்ததோடு,ஆண்கள் மல்யுத்த அணி ஒரு வெள்ளிப்பதக்கமும் மூன்று வெண்கலப்பத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட இரு பிரிவிலும் இலங்கைக்கு தங்கபதக்கங்கள் கிடைக்கவிட்டாலும் கூட அடுத்த முறை இலங்கை ல்மல்யுத்த வீர வீராங்கனைகள் பதக்கங்களை கைப்பற்றுவார்கள் என் ஏதிர்ப்பர்க்கடுகிறது.
7. அதிவேக வீர வீராங்கனைகள் இலங்கையில் ......
இந்த போட்டிகள் தங்க பதக்கங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்க எல்லா நாடுகளும் கவனித்த மற்றுமொரு விடயம் இலங்கையில் தான் தெற்காசியாவிலேயே அதி வேக வீர வீராங்கனைகள் இருகின்றார்கள் என்பது, இந்த யதார்த்தம் நிகழ்ந்தது கடந்த 09ம் திகதி தான்.அதாவது ஆண்களுக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப்போட்டியில் ஹிமாஷ எஷான் 10.26 செக்கன்களில் ஓட்டத் தூரத்தை கடந்ததன் மூலம் புதிய அசதனையை படைத்ததோடு தங்கப்பதக்கத்தை மகிழ்ச்சொயோடு கைப்பற்றினார்.இந்த சாதனையின் மூலம் இவர் தெற்காசியாவின் அதிவேக ஒட்டவீரர் என்பதை மற்றுமொரு உலக மக்கள் அரங்குக்கு பறை சாற்றியிருந்தார்.1999ம் ஆண்டு இலங்கை வீரர் சிந்தக்கவின் சாதனையை கிட்ட தட்ட 17 வருடங்களுக்கு பின்னர் எஷான் முறியடித்துள்ளமை மேலும் சிறப்பம்சமாகும்.
மேலும் பெண்களுக்கான 100மீற்றர் ஓட்டப்போட்டியில் ருமேஷிக்கா ரத்நாயக்க 11.60 செக்கன்களில் ஓடி தெற்காசிய சாதனையை நிலைநாட்டியதோடு தங்கப்பதக்கத்தையும் பெற்றார். இவர் 11.71 செக்கன்களில் அத்தூரத்தை கடந்திருந்தார்.
08.மஞ்சுல குமார- உயரம் பாய்தல்.
கடந்த 08ம் திகதி இடம்பெற்ற உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய மஞ்சுல குமார 2.17 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
09.கே.எல்.ஏ நிமாலி லியானாராச்சி- பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டி.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கே.எல்.ஏ நிமாலி லியானாராச்சி 2.09.40 நிமிடங்களில் போட்டித் தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றி மற்றுமொரு தங்கப்பதக்கத்தை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பெண் இரட்டை குழந்தைகளுடன் பதக்கம் வென்ற உபெக்ஷிகா மற்றுமொரு சாதனையாளர் இலங்கையை பொறுத்த வரையில்.
அதாவது தெற்காசிய போட்டிகளுக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்து இரட்டை குழந்தைகளை பிரசவித்தவர் குழந்தைகளை பிரசவித்த உடனே எவாறு போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என்பது சாத்தியப்படக் கூடிய விடயமா என்று வாசகர்கள் சிந்திக்கலாம்.ஆனால் இது உண்மை தான் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் குறி பார்த்து சுடும் போட்டிகளில் தனது அயராத முயற்சியால் உபெக்ஷிகா எகோட வெல வெங்கலப்பதக்கதை வென்று கொடுத்துள்ளார். இன்னும் 04 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்ற நிலையில் இலங்கை வீர வீராங்கனைகள் இன்னும் சற்று முயற்சி செய்வார்களாயின் இலங்கைக்கு இன்னும் சில தங்கப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
Wednesday, February 10, 2016
ஒரு தலை சிறந்த பினிஷர் ஓய்வு பெற்றார்.
போட்டி ஆரம்பித்த மறு நிமிடமே இந்த வீரரை பார்த்து விட்டால் ரசிகர்களின் கை தட்டல் விசில் சத்தம் மட்டும் தான் மைதானத்தில் வரும். முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டும் மிக அரிதான வீரர்களில் ஒருவர், 360 டிகிரி கோணத்தில் பந்துகளை துவம்சம் செய்பவர், இந்த வீரரின் துடுப்பில் பந்துமட்டும் பட்டு விட்டால் நிச்சயமாக அது ஆறு ஓட்டமாக மட்டும் தான் இருக்கும்.
அவர் தான் நியூசிலாந்து அணியின் பர்ண்டன் மெக்கலம். நான் தற்போதைய காலத்தில் ரசிக்கின்ற மற்றுமொரு மிக சிறந்த வீரர் . இனிமேல் அவரை நாம் ஒரு நாள் போட்டிகளில் பார்க்க முடியாது காரணம் இன்றோடு அவர் ஓய்வு பெறுகிறார்.அதுவும் தனது துடுப்பாட்டத்தில் தனது துடுப்பாட்ட வியுகத்தில் மாற்றங்களை கொண்டு வராமல் தனக்கே உரிய முறையில் கடைசி போட்டியிலும் 27 பந்துகளில் 47 ஓட்டங்களோடு.
அதிரடியாக கிரிக்கெட் விளையாடுபவர்களை காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்று கூறுவோம். உண்மையிலேயே காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடக்கூடியவர்தான் இந்த மெக்கல்லம். பிச்சிக்கு நடுவில் வந்தே இருக்காது ஆனால் மெக்கலம் நாடு பிச்சில் இருப்பார். பிறகென்ன வருகின்ற பந்து ஆறு ஓட்டங்களை தொடும் அல்லது நான்கு ஓட்டங்களை தொடும் இது தான் மேக்கலமுக்கான அடையாளம். இனிமேல் ஏதாவது ஒரு போட்டி விறுவிறுப்பு இல்லாமல் சப்பையாக நடக்குமாயின் அது நிச்சயம் மெக்கலமை நினைவு படுத்தும்.
கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டது. முதன் முதலாக அயல்நாட்டு வீரர்களும், இந்திய வீரர்களும் இணைந்து இந்தியாவில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கிறார்கள். நட்சத்திரப் பட்டாளங்கள் குவிந்த இந்த தொடர், உலகக்கோப்பை போட்டியை காட்டிலும் களை கட்டியது. ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி என்பதால் பெங்களூரு, சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
இதன்படி முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் - பெங்களூரு அணியும் மோதிக் கொண்டன. கொல்கத்தா அணியின் கேப்டன் கங்குலியுடன், பிரண்டன் மெக்குல்லம் களமிறங்கினார். முதல் ஓவரை பிரவீன் குமார் வீச, ஐந்து பந்துகளை சந்தித்த மெக்குல்லம் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. முதல் ஓவரில் ஒரு ரன் மட்டும் விட்டுக் கொடுத்து, டிராவிட்டின் முடிவு சரியானதே என ரசிகர்களுக்கு சொன்னார் பிரவீன் குமார்.
அடுத்த ஓவர், ஜாகீர்கான் பந்துவீச வந்தார், ஓவரின் முதல் பந்தில் ரன் இல்லை, அடுத்த நான்கு பந்துகளும் பவுண்டரி, சிக்சர் என நொறுக்கி தள்ளினார் மெக்குல்லம். ஐ.பி.எல் போட்டியில் முதல் ரன், முதல் பவுண்டரி, முதல் சிக்சர் மூன்றையும் அடித்தவர் மெக்குல்லம்தான். இரண்டாவது ஓவரோடு மெக்குல்லம் நின்றுவிடவில்லை. மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார். மறுமுனையில் கங்குலி, ரிக்கி பாண்டிங், ஹஸ்சி, ஹபீஸ் சொற்ப ஓட்டங்களில் நடயை கட்டிக் கொண்டிருக்க தனி ஒருவனாக நின்று 73 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளையும், 13 சிக்சர்களையும் விளாசி தள்ளி 158 ரன்களை குவித்தார். பங்களூரு பந்து வீச்சாளர்களின் பந்துகளை உடைத்து நொறுக்கி போட்டார். 20 ஓவரில் கொல்கத்தாவின் ஸ்கோர் 222.
மெக்குல்லத்தின் மரண விளாசலை கண்டு அத்தனை பேரும் ஆடி போனார்கள். மெக்குல்லத்தின் அதிரடி அந்த போட்டியில் இருந்துதான் தொடங்கியது. ஒரு தின போட்டியில் 150 ரன்கள் எடுப்பதே சாதனை என்ற காலக்கட்டத்தில், அனாயசமாக 20 ஓவரில் 158 ரன்களை குவித்திருந்தார் மெக்குல்லம். அந்த வகையில் கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ்க்கு எல்லாம் முன்னோடி இந்த மெக்குல்லம். சேஸிங்கில் களமிறங்கிய பெங்களூருக்கு அதிக ரன்கள் எப்படி வந்தது தெரியுமா? எக்ஸ்ட்ராஸ் மூலமாகத்தான் 19 ரன்கள் வந்தது. பிரவீன் குமாரை தவிர வேறு யாரும் இரட்டைப்படை எண்ணிக்கையில் ரன்கள் குவிக்கவில்லை. பரிதாபமாக 82 ரன்களில் பெங்களூரு அணியின் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வர, 140 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது கொல்கத்தா...
பிரண்டன் மெக்கல்லம் 2002-ம் ஆண்டே நியூசிலாந்து அணிக்காக விளையாட ஆரம்பித்து விட்டார். மிகச்சிறந்த விக்கெட் காப்பாளராக இருந்த மெக்குல்லம், சிறந்த பேட்ஸ்மேனாக மாறியது ஐ.பி.எல்-க்கு பின்னர் தான். டி-20 மட்டுமல்ல டெஸ்ட் போட்டிகளிலும் மெக்குல்லம் சிறந்த வீரர்தான். இந்திய மண்ணில், வலுவான சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இரட்டைச் சதமடித்தார் மெக்குல்லம். கடந்த ஆண்டு இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆக்லாந்து மைதானத்தில் இரட்டை சதம் அடித்தார். அத்துடன் மெக்குல்லம் அடங்கவில்லை. அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே இரண்டாவது இன்னிங்க்ஸில், 13 மணி நேரம் களத்தில் நின்று 559 பந்துகளை (93 ஓவர்கள்) சந்தித்தது 32 பவுண்டரிகள், நான்கு சிக்சர் விளாசி முச்சதம் எடுத்து முத்திரை பதித்தார். இந்தியாவுக்கு ஷேவாக் போல நியூசிலாந்துக்கு மெக்குல்லம். முச்சதம் எடுத்த ஒரே நியூசிலாந்து வீரர் அவர்தான். நான்கு முறை டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்திருக்கிறார்.
ஆக நியூசிலாந்து அணி இன்னும் தரவரிசையிலும் சரி விளையாடுகின்ற போட்டிகளிலும் சரி மிக சிறந்த வெற்றிகளை குவித்திருக்கின்றது என்றால் அதில் மெக்கலாமின் பங்கு அலாதியானது. மிக முக்கியமாக இங்கு கவனிக்க வேண்டியது இந்த வருடம் உலக கிண்ண போட்டிகளில் நியூசிலாந்து அணி எந்த வருடமும் வராதது போல இறுதி போட்டிக்கு முன்னேறியது என்றால் அதற்கு காரணம் ரியல் ஹீரோ மெக்கலம் தான்.
வெற்றியோடு தனது கிரிக்கெட் பயணத்தை முடித்திருக்கிறார் வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்பி வைப்போம் வாழ்த்துக்கள் தலைவா! நிகாஹயம் கிரிக்கெட் உலக நாளைய போட்டிகளில் உன்னை மிஸ் செய்யும்.
Subscribe to:
Posts (Atom)





















































