Monday, February 8, 2016

விளையாட்டு உலகில் தமிழர்கள்.

உலகம் முழுக்க தமிழர்கள் பரவி சிதறிக் கிடக்கிறார்கள் ,எல்லா  துறையிலும் தமிழர்களின் சாதனைகள் வானை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறதென்றே கூறலாம்.எனினும் விளையாட்டு உலகில் தமிழர்களின் ஆதிக்கம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே இருக்கிறதென்பது கொஞ்சம் தமிழர்கள் மத்தியிலே அங்கலாய்க்கப்படுகின்ற ஒரு விடயமாக இருந்தாலும் கூட  இந்த கட்டுரையில் குறிப்பிட போகின்ற தமிழர்கள் அனைவருமே தம் தம் துறையில் சாதனைகளை குவித்தவைகள் என்றே கூறலாம்.
அப்படி தம் துறையில் சாதித்து ,இன்னும் சாதித்துக் கொண்டிருக்கின்ற தமிழர்கள் பற்றிய ஒரு அலசல் இது.

@.முத்தையா முரளிதரன்-கிரிக்கெட்.

உலக தமிழர்கள் அனைவரும்    800 என்ற இந்த இலக்கத்தை அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள் காரணம் இந்த உலக சாதனையாளன் உலக சாதனை படைத்து  ,தன் பெயரை கின்னஸ் புத்தகத்தில் அழுத்தமாக பதிக்கவும்,தன்னை கிரிக்கெட் உலகம் எப்பொதுமே நினைவு கூறவும் கைப்பற்றிய விக்கட்டுக்களின் எண்ணிக்கை அது.
முரளி இலங்கை கிரிக்கெட் அணிக்குள் ஒரு சகாப்தம்,133 டெஸ்ட் போட்டிகள் ஆடுகளங்களில் அனல் பறக்கும் பந்து வீச்சு,இதில் ஒரு போட்டியில் மட்டும் 5 விக்கட்டுக்களை கைப்பற்றிய சந்தர்பங்கள் 67 வும்,10 விக்கட்டுக்களை கைப்பற்றிய சந்தர்பங்கள் 22 வும் அடங்கும்.


1992ம் அகண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது கன்னி டெஸ்ட் போட்டியிலும் ,2010 ம் ஆண்டு  இந்திய அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும்  விளையாடி சாதனையோடு 2010 ஆம் ஆண்டு விடைபெற்றார்.

முரளியின் பந்து வீச்சு என்பது ஆடுகளங்களில் அசத்தல் மிகுந்தது.தான் விளையாடிய 18 ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட விருதுகள்,பல தடவைகள் ஐ.சி.சி யின் தேசிய அணியில் பிரதான சுழற்பந்து வீச்சாளராக அறியப்பட்டவர் என்பதோடு  சேர்த்து இலங்கை அணி வென்ற உலக கிண்ணத்தை  கைப்பற்ற மிகமிக முக்கிய பங்காற்றியவர்.
நிச்சயம் முரளி இலங்கை கிரிக்கேட்டுக்குள் மட்டுமல்ல உலக தமிழ் மக்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமான உதாரணமான விளையாட்டு வீரர் தான்.



@. விஸ்வநாதன் ஆனந்த்.

மற்றுமொரு தமிழ் விளையாட்டு உலகின் பொக்கிஷம் இந்திய தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். 1992ம் ஆண்டு ரஷ்ய மண்ணில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டிகள் வாசகர்களுக்கு சில சமயங்களில் நினைவில் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் இந்த போட்டி தான் விஸ்வநாதன் ஆனந்த் என்ற உலக சாதனையாளனை  உலகம் அறிய செய்த போட்டி.ஆறு வயதில் ஆரம்பித்த செஸ் வேட்கை அவரது 14வது வயதில் முதல் இந்தியா அளவிலான வெற்றியை தேடி தந்ததோடு   “மின்னல் சிறுவன்” என்று உலக மக்கள் போற்றும் அளவுக்கு பிரபலத்தை ஆனந்துக்கு தேடி தந்தது.


ஆனந்த் பிறப்பில் ஒரு பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். தனது தாயின் ஆசைப்படி சிறுவயது முதலே செஸ் போட்டிகளில் பங்கு பற்றியவர். ஆரம்பத்தில் மாநில அளவுகளுக்கு இடையிலான போட்டிகளில் கூட பங்கு பற்ற முடியாத அளவுக்கு மனதளவிலும் சரி,திறமையிலும் சரி தேங்கி போய் இருந்த ஆனந்துக்கு ஊக்கமும் உத்வேகமும் தந்தது 1991ம் ஆண்டு இடம்பெற்ற மாநில அளவிலான செஸ் போட்டிகள் தான்.



அதற்கு பின்பு ஆனந்தின் காட்டில் அடை மழை என்றே கூறலாம். பொறுமை விவேகம் என்று சொல்லி தான் பங்கு பற்றுகின்ற போட்டிகள் அனைத்திலும் நிதானமான அதே நேரத்தில் மிக சரியான வெற்றிகளை தேடி  கொண்டார். மேலும், 2003 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்று, “உலகின் அதிவேக சதுரங்க வீரர்” என்ற சிறப்பு பட்டமும் பெற்றார். பதினான்கு வயதில், ‘இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம்’, பதினைந்து வயதில் ‘அனைத்துலக மாஸ்ர் பட்டம், பதினெட்டு வயதில் ‘உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம் ஐந்து முறை ‘உலக சாம்பியன் பட்டம்’ என  சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை, இமயம் தொடச் செய்தவர்.

இதுவரைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’ மற்றும் ‘அர்ஜுனா விருது’ என பல விருதுகளுக்கும் சொந்தக்காரர்  என்பது பலருக்கு தெரியாத விடயம். மேலும், பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் ‘புக் ஆஃப் தி இயர்’, ‘சோவியத் லேண்ட் நேரு விருது’, 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான ‘சதுரங்க ஆஸ்கார் விருதுகள்’ என மேலும் பல விருதுகளை வென்றுள்ளார். உலகளவில் சதுரங்கப் விளையாட்டில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்துவரும் ஒரு தமிழர் ஆனந்த்.



@.ரவிச்சந்திரன் அஷ்வின்.



ரவிச்சந்திரன் அஷ்வின்... 
அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் வரிசையில் இந்திய
கிரிக்கெட் அணிக்குக் கிடைத்து இருக்கும் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர்! சுழற பந்து ஜாம்பவான்  முரளிதரனுக்கு 'தூஸ்ரா'போல ரவிச்சந்திரனுக்கு 'கேரம் பால்'!.


முதல் போடியிலே சாதனை 5 விக்கட்டுக்களை கைப்பற்றிய சாதனையோடு இந்திய அணையின் வரர்ந்து வருகின்ற நம்பிக்கை நட்சத்திரம் ரவி அஸ்வின். இது வரைக்கும் வெறுமனே 32 இரண்டு டெஸ்ட் போட்டிகள் கைப்பற்றியுள்ள விக்கட்டுக்களின்  எண்ணிக்கை 176. 5 ஒரே போட்டியில் 5 விக்கட்டுக்களை கைப்பற்றிய சந்தர்ப்பங்கள் 16உம் ஒரே போட்டியில் 10 விக்கட்டுக்களை கைப்பற்றிய சந்தர்ப்பங்கள் 4உம் அடங்கும்.
தவிர எதிர்கால இந்திய அணியின் சகலதுறை வீரராக பிரகாசிப்பார் என்கிறது இந்திய கிரிக்கெட் சபை தகவல்கள்.



@.தினேஷ் கார்த்திக்.
இந்த கட்டுரையில்  இடம்பிடித்திருகின்ற மற்றுமொரு தமிழர்  இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரும்,விக்கட்  காப்பாளருமான  தமிழகத்தின் தினேஷ் கார்த்திக். இவரது முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2004ம் ஆண்டும்,முதலாவது ஒரு நாள் போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக வும் முதல் டி20 போட்டி தென்னாபிரிக்க  அணிக்கு எதிராகவும் அமைந்தது.




ஒரு காலத்தில் இந்திய அணியில் நிரந்தர விக்கட் காப்பாளராக அறியப்படுவார் என நம்பப்பட்ட வேளையில், இந்திய அணி தலைவர் மகேந்திர சிங்க் தோனி யினால் இவருக்கான இடம் இந்திய அணியில் மறுக்கப்பட்டது என்றே கூறலாம். எனினும் சில போட்டிகளில் தனது மீள் பிரவேசத்தை  காட்டினாலும் சிறப்பான முறையில்  பிரகாசிக்க தவறியதால் இந்திய அணியில் இடம் கி0திக்காமல் தடுமாறி வருகிறார். தற்போது இந்திய அளவிலான போட்டிகளிலும் இந்த முறை இடம்பெற உள்ள  ஐ.பின் எல் போட்டிகளில் ராயல் சாலஞ்சர்ஸ்  பெங்களூரு அணிககவும் விளையாடுகிறார்.




@.   முரளி விஜய்.
திறமை இருந்தும் இந்திய அணியில்  சரியான இடம் கிடைக்காமல் தடுமாறி வருகின்ற மற்றுமொரு தமிழக வீரர் முரளி விஜய். தனது முதல் டெஸ்ட் போட்டியை 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், முதல் ஒரு நாள் போட்டியை தென்னாபிரிக்க அணிக்கு எதிராகவும் விளையாடி தனது கிரிக்கெட் வாழ்கையை தொடக்கிய முரளி விஜய் இதுவரைக்கும் ஐ.பி.எல் போட்டிகள் உள்ளடங்கலாக எல்லா போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 5693 ஓட்டனகளை மட்டுமே பெற்றுள்ள முரளி விஜய் டெஸ்ட் போட்டிகளில் 06 சதங்களையும் 14 அரை சதங்களையும் ,ஒரு நாள் போட்டிகளில் தலா ஒவ்வொரு சதங்களையும் அடித்துள்ளார்.




தவிர தற்போது காயம் காரணமாக ஓய்வில் உள்ள முரளி விஜய் இந்த ஐ.பி.எல் போட்டிகளில்  கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார்.எதிர்வரும் காலங்களில் திறமையான் துடுப்பாட்டத்தை வெளிபடுத்தினால் இந்திய அணியில் முரளி விஜய்க்கு நிரந்தரம் இடம் கிடைக்கும்.


Tuesday, February 2, 2016









நான் முயற்சி செய்வதை எபோதுமே நிறுத்தியது இல்லை.- டிராவிட்.


இந்திய அணியின் தடுப்பு சுவர் பற்றிய ஒரு இனிமையான பகிர்வு இது.



டிராவிட் இந்த அணியின் ப்கொக்கியசம் என்றே கூறலாம்.ஒரு  காலகட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியில் 3,4ம் இலக்கத்தில் துடுபெடுத்தாட சரியான அதே நேரத்தில் நிதானமாகவும் ஓட்டங்களையும் குவிக்கக்கூடிய ஒரு வீரர் இந்திய அணியில்  இல்லை என்ற நிலையில் இந்திய அணிக்கு கிடைத்த ஹீரோ டிராவிட் என்று நான் புகழாரம் சொல்வேன் .



இதோ டிராவிட் தான் விளையாடிய காலத்திலும் சரி தான் ஓய்வுபெற்ற காலத்திலும் சரி தான் பங்கு பற்றிய போட்டிகளின் முடிவில் அவர் கூறிய சில இன்றியமையாத வார்த்தைகளின் தொகுப்பு இது.  



@.        ஓய்வு பெற்ற பொழுது டிராவிட் பேசியது

கிரிக்கெட் குறித்த என்னுடைய அணுகுமுறை பொதுவாக எளிமையானது. அணிக்காக முழு அர்ப்பணிப்பையும் தருவது; கண்ணியத்தோடு ஆடுவது, ஆட்டத்தின் ஆன்மாவை காப்பது ஆகியவையே அவை. இவற்றில் சிலவற்றையேனும் நான் இறுதிவரை மேற்கொண்டேன் என்று நம்புகிறேன். நான் சமயங்களில் தோற்றிருக்கிறேன், ஆனால், எப்பொழுதும் முயல்வதை நிறுத்தியதே இல்லை. அதனால் தான் நான் சோகத்தோடு விடைபெற்றாலும் பெருமிதத்தோடும் விடை  கொடுக்கிறேன்!.



@.         பிசிசிஐ விழாவில் அணி குறித்தும். தன்னை உத்வேகப்படுத்தியவர்கள் குறித்தும் டிராவிட் குறிப்பிட்டது:

சமயங்களில் சில வீரர்கள் மிகப்பெரும் சாதனைகளைத் தங்களின் உழைப்பு, தியாகம் ஆகியவற்றால் அடைகிறார்கள். ஆனால், அவர்கள் அதிர்ஷ்டம் உடையவர்களாகவும் உள்ளார்கள் இந்திய கிரிகெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் என்று நீங்கள் எண்களைக் கொண்டேனும் கருதாத பலருடன் நான் விளையாடி இருக்கிறேன். ஆனால், என்னுடைய பார்வையில் இந்த விளையாட்டை என்னுடைய ஆடிய அனைவரும், வெற்றிப் பெறவேண்டும் என்று போராடிய அனைவரும், வெல்ல வேண்டும் என்கிற உத்வேகத்தோடு தங்களாலான அனைத்தையும் தந்த அனைவருமே நாயகர்கள் தான். உங்களிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து ஓயாமல் உழைத்தும் தாங்கள் விரும்பியது கிடைக்காமல் போனாலும், மீண்டும், மீண்டும் துவளாது போராடும் உங்களைக் காண்பதே எனக்கு உத்வேகத்தை எப்பொழுதும் தந்தது... இந்திய கிரிக்கெட் அணியின் அங்கமாக இருப்பதை நான் நிச்சயம் மிஸ் செய்வேன். அதை மட்டுமல்ல வெகுகாலம் நம்மிடையே இருந்த பரஸ்பர நம்பிக்கை, நட்பு, குறும்பாக ஒருவரை ஒருவரை வாரிக்கொண்ட கணங்கள், அந்த ஓயாத தேடல் எல்லாவற்றின் இன்மையையும் ஆழமாக உணர்வேன்...ஆனால், தாளமிடவைக்கும் இசை என்னோடு இருக்கும் என எண்ணுகிறேன்.




@.பிராட்மான் நினைவு சொற்பொழிவில் தனக்கும். பிராட்மானுக்கும் இடையேயான தொடர்பு பற்றி கூறியது.

அவரும் என்னைப் போலவே மூன்றாவதாகக் களமிறங்கும் மட்டையாளர். அது மிக, மிகக்கடினமான பணியாகும்.நாங்கள் தான் கிரிக்கெட்டின் அரசர்களுக்கான வழிப்பாதையைச் செப்பனிட்டு, எளிமையாக்கி தருகிறோம். என்னைவிடப் பிராட்மான் அதனை அதிக வெற்றி, அலாதியான பாணியோடு செய்தார். அவர் பல்வேறு பந்து வீச்சாளர்களைச் சிதறடித்து, இருக்கையின் நுனிக்கே பார்வையாளர்களைக் கொண்டுசென்றார். நான் எவ்வளவு நேரம் ஆடினாலும். மக்கள் சலிப்புற்று உறங்கப்போய்விடும் வாய்ப்புகளே அதிகம். என்றாலும், இப்படிப்பட்ட ஒரு இடத்தில் நெடுங்காலம் ஆடியதே பெருமைதான். அதன் அளவுகோல் என்பது தான் மிகச்சேர்ந்த மட்டையாளருக்கான அளவுகோல் என்று நான் அறிவேன். அது போதும் எனக்கு!


@. பிட்ஸ் பிலானி பட்டமளிப்பு விழாவில் பேசிய 'காத்திருப்பு' பற்றிய உரை:

என் தலைமையாசிரியர் என் பெற்றோர்கள் சொன்னதைக்கேட்டுஎன்னைக் கிரிக்கெட் ஆடாமல் செய்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். “நீங்கள் அவனின் கிரிக்கெட்டை பார்த்துக்கொள்ளுங்கள் ; நாங்கள் அவன் கல்வியைப் பார்த்துக்கொள்கிறோம் “என்றார் அவர்.தேர்வுகளுக்கு என் நண்பர்களின் குறிப்புகள் தான் உதவும் ; அதை அவசர அவசரமாகப் படித்துவிட்டு தேர்வுகளை எழுதினேன் நான். தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் ஆடிக்கொண்டு தான் இருந்தேன்.




டென்னிஸ் பந்தை பதினைந்து கஜங்களில் இருந்து வீசச்செய்து பயிற்சி செய்து வேகப்பந்து வீச்சாளர்களை இன்னமும் சிறப்பாக எதிர்கொள்ள என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். அண்டர் 19 இந்திய அணியின் கேப்டனாக ஆகியிருந்தேன். சிறந்த பந்துவீச்சுகளைச் சந்தித்துச் சிறப்பாகவே ஆடினேன் . ஆனாலும் நான் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. ஐந்து வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் தான் ஆடிக்கொண்டு இருந்தேன் நான். என்னுடைய கைனடிக் பைக்கில் இப்படி எழுதிக்கொண்டேன்.

@.கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”(“God’s delays are not God’s denials.” ).

திரும்பிப்பார்க்கிற பொழுது அந்த ஐந்து வருடம் அப்படி இருந்திருக்காவிட்டால் இப்பொழுது பெற்றிருக்கும் வெற்றிகளை என்னால் எதிர்கொண்டு இருக்க முடியாது என்பதே உண்மை என்று உணர்கிறேன். இதுவே என்னை வார்னே,முரளிதரன் மாதிரியான சுழல்பந்து வீச்சாளர்களைத் தைரியமாக எதிர்கொள்ளச் செய்தது. டென்னிஸ் பந்து பயிற்சி தான் அக்ரம்,மெக்ராத்,டொனால்ட் என எல்லாரையும் ஆடக்கடினமான பிட்ச்களில் கம்பீரமாகச் சந்திக்க உதவியது. நான் இளைஞர்களுடன் பேசுகிற பொழுது இந்தக் காத்திருத்தல் பற்றிதான் அழுத்தி சொல்வேன். ஒரு செடியின் கதை உங்களை ஈர்க்கப்போகிறது இப்பொழுது …



ஒரு சீன மூங்கில் விதையை நிலத்தில் நட்டு ஒரு வருடம் நீர் விட்டு பராமரித்து வளர்த்தாலும் அது முளைக்காது. ஐந்து வருடங்கள் வரை அது நிச்சயம் முளைக்காது. ஒருநாள் சின்னதாக ஒரே ஒரு சின்னஞ்சிறு செடி முளைக்கும். அடுத்த ஆறே வாரத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும் அது. ஒரே நாளில் 39 அங்குலம் கூட வளரும் அது. நீங்கள் செடி வளர்வதைக் கண்களால் பார்க்க முடியும் அந்த ஐந்து வருடங்கள் அந்தச் செடி என்ன செய்து கொண்டிருந்தது ? அது தன்னுடைய வேர்களை வளர்த்துக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்களாகப் பெருவளர்ச்சிக்கு அது தன்னைத் தயார்படுத்திக்கொண்டு இருந்தது. அந்த வேர்களைக்கொண்டுஅது தன்னைக் காப்பாற்றிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. ஆறே வாரத்தில் 90 அடிகள் வளர்ந்து நிற்கிறது என்று சிலர் சொல்வார்கள்.அது ஐந்து வருடம்,ஆறு வாரங்களில் 90 அடிகள் வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன் . அந்த ஐந்து வருடங்கள் என்னுடைய நம்பிக்கை,ஆர்வம்,என் திறமையின் மீதான என்னுடைய பிடிப்பு ஆகியவற்றைச் சோதித்தது என்றே சொல்வேன் – ராகுல் திராவிடின் BITS Pilani பட்டமளிப்பு உரையில் இருந்து ஒரு பகுதி

“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”((“God’s delays are not God’s denials.” ).

இந்த வாய்மொழிக் கதைகளில் நம்பிக்கைகள், அணுகுமுறைகள், அறிவின் சேமிப்புக் கிடங்குகள் எல்லாம் இணைந்து நம்முடைய கிரிக்கெட்டின் அடையாளத்தைத் தருகின்றன...இந்தியாவின் வண்ணமயமான கிரிக்கெட் கதை இன்னமும் எழுதப்படுகிறது...அதை மேலும் வளப்படுத்துங்கள்.

இந்த பகிர்வு பற்றி எனக்கு நீங்கள் என்ன நினைக்கிறேர்கள் என்பது பற்றி எனக்கு துளி கூட தெரியாது ஆனால் கிரிகெட்டை நேசிக்கிற  உண்மையான ரசிகர்கள் இந்த பகிர்வைநிச்சயம் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையில் நான்..



Sunday, December 27, 2015

நூல் அறிமுகம்
கிறிஸ்தவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும்,மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும் நூல்

கடந்த 2000 ஆண்டு கால உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதத்துக்கான தாக்கம் மிகவும் வலுவானது.உலக வரலாறே கிறிஸ்துவுக்கு பின் என்று தான் வகுக்கப்பட்டு இலக்கியங்களில் விபரிக்கப்படுகிறது.
தேவ மைந்தன்  இயேசுவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம்  ஏக போதித்ததுபோல அன்பை மட்டும் விதைக்கவில்லை.உலக வரலாற்றை படிக்கும் எவரும், அந்த வரலாற்றை  தெரிந்த எவரும் மத பரப்பலுக்காக சிந்திய ரத்தம் கொஞ்சம் நஞ்சமில்லை.இந்த பின்னணியில் கிறிஸ்தவத்தை பைபிள் ஆதரங்களுடன் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கும் நூல்கள் பல ஏற்கனவே மேற்கத்தேய நாடுகளில் எழுதப்பட்டுள்ளன.ஆயினும் தமிழில் அதை போன்ற விரிவான நூல் வெளிவரவில்லை.அந்த குறையை இந்த நூல் நிவர்த்தி செய்திருக்கிறது என்று கூறலாம்.
பரிசுத்த வேதாகமத்திலிருந்து மேற்கோள்கள் காட்டுவதில் தொடக்கி பலநூறு நூல்களிலிருந்தும் கருத்துக்களை உள்வாங்கி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

பத்து பகுதிகள் கொண்ட இந்த நூலில் கிறிஸ்தவ சமயத்தின் வளர்ச்சி,நோக்கம்,விஞ்ஞானம் கூறும் உலகத்தோற்றத்திற்க்கு­­ முரண்பட்ட கிறுஸ்தவ கோட்பாடு,உலகின் பல்வேறு  நாகரிகங்களின் வரலாறு,இந்து சமவெளி நாகரிகத்தின் தொன்மை,அழியாத்தன்மை,செமிட்டிக் மதங்களின் தாயகமான பலஸ்தினத்தின் வரலாறு,உலக நாடுகளில் கிறிஸ்தவம் பரவிய வரலாறு,பிரிவினை வாதத்தை வளர்க்கும் மத குருமார்கள் என பல விடயங்கள் இந்த நூலில் தெள்ள தெளிவாக கூறப்பட்டும் ,பல உண்மைகள் தோலுரித்து காட்டப்படும் இருக்கின்றன.

இந்த வகையில் எழுத்தாளர் உமரி காசிவேலு மிக சிறந்த ஆதாரங்களை புத்தகத்தின் பக்கத்துக்கு பக்கம் தவள விட்டிறிக்கிறார்.பக்கத்துக்கு பக்கம் கிறிஸ்தவ மதம் பற்றிய மிக தெளிவான தரவுகள் கூறப்பட்டுள்ளன.வரலாற்றை சரியாக தெரிந்து கொண்டு இந்த நூலை வாசிக்கும் போது ஒரு மதத்தின் தெளிவான பல உண்மைகளை தெரிந்து கொள்ள முடியும்.வசிப்பளர்கள் வாசிக்க வேண்டிய சிறந்த நூல் என்று இந்த நூலை கூறலாம்.


Sunday, December 6, 2015

கால்பந்தில்  உலகை ஆளும் ஆடவர்கள்  இவர்கள் தான்.

32 அணிகள் உலகக் கோப்பைப் போட்டியில் மோதினாலும் கூட ஒவ்வொரு அணியிலும் ஏதாவது ஒரு நட்சத்திர வீரர்தான் இருப்பார். அந்த வகையில் பார்த்தால் தற்போதைய உலக கால்பந்து அணிகளை அலசிப் பார்க்கும்போது 11 பேர் மீதுதான் உலக கால்பந்து ரசிகர்களின் கவனம் முழுமையாக திரும்பி இருக்கும்.
அந்த முதல் 10 வீரர்கள் [பாரிய ஒரு சுவையான அலசல் இது.
    1.லியோனல் மெஸ்ஸி-அர்ஜென்டினா.


அட்டகாசமான மெஸ்ஸி, போட்டிகள் நடைபெறுகின்ற போது எதிரணிகளுக்கு நிச்சயம் பெரும் தலைவலிதான். அவருடைய ஒவ்வொரு மூவ்களை முறியடிப்பது எதிரணிக்கு மிக .மிகக் கடினமான ஒன்று. இப்படித்தான் பந்தை கவர்ந்து வருவார் இப்படி தான் பந்து வரும் என்று எதிர்பார்த்திருந்தால் வேறு பக்கம் பந்தை உதைத்துச் சென்று விடுவார்.மெஸ்ஸி – வலது பக்கம்  சிக்னல் போட்டு விட்டு இடது பக்கம்  வளையும் படி மிக சிறந்த கோள்களை பெற கூடிய ஒருவர்.இவருடைய விளையாட்டுக்கும், அழகுக்கும், ஐரோப்பாவில் ஏகப்பட்ட பேர் அடிமைகளாகவே மாறிப் போயுள்ளனர்.தவிர இந்த ஆண்டின் பல்லான் டி ஆர் விருதுக்கும் மெசியின்  பெயர்  தெரிவு செய்யப்பட்டுள்ளது.





இந்த முறையும் மெச்சி இந்த விருதை பெற்றால் இது அவருக்கு 6 வது பல்லான் டி ஆர் விருது.எனவே உலகில் ஒட்டு மொத்த கால்பந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்திருக்கும் மெஸ்சி தான் ஹிட் லிஸ்ட் நம்பர் வன்.
ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் பட்டத்தை பல முறை வென்றவர் மெஸ்ஸி. இவரை பெரிதும் நம்பியுள்ளது அர்ஜென்டினா அணி என்று சொல்வதில் குறை ஒன்றும்  இல்லை..
2.      கிறிஸ்டியானோ ரொனால்டோ-போர்ச்சுகல்.


உலகில் மெசிக்கு அடுத்து அதிக கால்பந்து ரசிகர்களை கொண்டிருக்கின்ற ஒரு வீரர் என்றால் அது ரெனல்டோ தான்.விளையாடிய,விளையாடிக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் பல எண்ணற்ற விருதுகளை தான் வசப்படுத்தியிருக்கின்ற ஒரு வீரர்.
2006 உலகக் கோப்பைப் போட்டியில் அசத்தி தனது பெயரை அழுத்தமாக ரசிகர்களுக்கு சொன்னவர்.. ரியல் மாட்ரிட் அணி இவரை 132 மில்லியன் டாலருக்கு வாங்கிப் போட்டுள்ளது. தலையால் முட்டி கோலடிப்பதில் சாகசம் செய்யக்கூடியவர் இவரை தவிர எவரும் இல்லை என்று தான் கோர வேண்டும்.
ரியல் மாட்ரிட்டுக்காக விளையாடிய முதல் 35 போட்டிகளில் 33 கோல்களைப் போடு சாதனை படைத்துள்ள ஒரே ரியல் மாட்ரிட் வீரர் இவர் தான்.



3.       வேயன் ரூனி-  இங்கிலாந்து.
இவரை இலகுவில் ரசிகர்களும் என்னய்யா கால்பந்து பிரியர்களும் மறந்து  விட முடியாது காரணம் 2006ம் ஆண்டு  உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின்போது சிகப்பு நிற அட்டை  கொடுக்கப்பட்டவர்.ஆனால் அதற்கு அடுத்த போட்டியிலே அசுர வேகத்தில் 04 கோள்களை போட்டு இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது மட்டும் இல்லாமல் தன்னையும் இங்கில்லாது அணியின் அபாயகரமான வீரர்களில் ஒருவராக நிலைநிறுத்தினார். தனி மனிதராக இருந்து வெற்றியை அடையக் கூடிய சாதுரியம் படைத்தவர். 2009ம் ஆண்டு தொடரில் 7 கோல்களை அடுத்தடுத்து அடித்து அசத்தியவர்.


2009-10ல் காலபகுதியில் இங்கிலாந்துக்காக 26 கோல்களை அடித்தவர். இங்கிலாந்துக்காக அதிக கோல்களைப் போட்ட 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றவர். இவரது அதிரடி ஆட்டம், எதிரணி வீரர்களுக்கு நிச்சயம் பீதியைக் கொடுப்பதாக அமையும்.

4.நெய்மர்-பிரேசில்



எதிரணிகளை துவம்சம் செய்கின்ற மற்றுமொரு வீரர் நெய்மர்.வெறும் 23 வயது தான்.ஆனால் உலகில் கால்பந்து ரசிகர்கள் மொத்தமாக 23 லட்சத்துக்கும் மேல் இவரது ரசிகர்கள் தான் என்கிறது இங்கிலாந்தின் போப் சஞ்சிகை. தென் அமெரிக்க கண்டத்தில் 2010ம் ஆண்டில் மிக சிறந்த வீரர் நெய்மர் தான்.உலகில் மிக பிரபலமான கால்பந்து வீர்கள் கொண்டாடுகிற பிபா பாலான் தி விருதுக்கு 2010 இல் நெய்மரின் பரிந்துரை செய்யப்பட்டாலும் அவருக்கு அந்த தரவரிசையில் 10வது இடமே கிடைத்தது.மிக விரைவான ஆட்டத்திற்கும் வேகமெடுக்கும் திறனுக்கும் காற்பந்தை கையாளும் (காலாளும்) சுழற்றி  கொண்டு செல்கின்ற விதத்திற்கும் இரண்டு கால்களையும் பயன்படுத்தக்கூடிய திறமைக்காகவும் எடுத்துச் சென்ற பந்தை முடிக்கும் திறமைக்காகவும் இவருக்கு உலகில் பல்லாயிரம் ரசிகர்கள்.

பிரேசில் கால்பந்து வரலாற்றில் பீலே பற்றி எல்லோரும் தெரியும் அவரது திறனுக்கு ஈடாக நெய்மர் பேசப்படுவதுடன் பிரேசிலின் 2வது பீலேவாகவும் பிரேசில் நாட்டில் நெய்மர் அறியப்படுகிறார்.ஒட்டு மொத்தத்தில் இவரது சிறப்பை ஒரே வார்த்தையில் கூறினால் கால்பந்தில் கில்லி.
5.மைகான்-தடுப்பட்ட வீரர்- காமரூன்
தடுப்பாட்டத்தில் வல்லவராக இருக்கும் அதே வேளையில் அட்டாக்கிங்கிலும் மைகான், மகா கில்லாடி. புதுப் பொலிவுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு வந்துள்ள பிரேசில் அணியில் உள்ள மிகத் துடிப்பான வீரர்களில் மைகானும் ஒருவர். அவருடைய விளையாடும் அழகே அலாதியானது.


6.சாமுவேல் எட்டோ

ஆப்பிரிக்காவின் சூப்பர் ஸ்டார் வீரர் சாமுவேல். மூன்று முறை ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3வது முறையாக உலகக்கோப்பைப் போட்டியில் மிக இளவயதில் களமிறங்கிய வீரர்.
உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இதுவரை  79 கோல்களைப் போட்டுள்ளார். காமரூன் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மட்டுமல்லாது அவ்வணியின் ரியல் ஹீரோ இவர் தான்.


7.இகர் கசில்லாஸ்-ஸ்பெயின்.



உலகின் மிகச் சிறந்த ஸ்ட்ரைகர்களில் இவறும் ஒருவர். 2008ம் ஆண்டு ஈரோ கோப்பை போட்டியை வென்று ஸ்பெயின் சாம்பியனாவதற்குமிக முக்கிய காரணமாக  இருந்தவர்.இந்த வெற்றியின் மூலம் 44 ஆண்டுகளாக பாய்த்துக் கொண்டிருந்த ஈரோ கோப்பையை ஸ்பெயின் வென்று வெற்றி தாகத்தைத் தணித்துக் கொண்டது.
ஈரோ கோப்பை நாக் அவுட் சுற்றில் ஸ்பெயினுக்கு எதிராக ஒரு கோல் கூட விழாமல் தடுத்த ஜாம்பவான் இவர். கோல் கம்பங்களுக்கிடையே இவர் செயல்படும் வேகம், எந்த பந்தாக இருந்தாலும் நிச்சயம் பயப்படும்.
   
8.கிளின்ட் டெம்ப்சி-அமெரிக்கா.

இவரை உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவரான பீட் மாரவிச்சுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் அமெரிக்க அணியின் பயிற்ருவிப்ப்ளர். அமெரிக்காவின் மிக முக்கிய கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் கிளின்ட், சர்வதேச அளவில் பிரபலமான வீரராகவும் திகழ்கிறார்.
2006ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் கானாவுக்கு எதிராக நடந்த போட்டியில் விழுந்த ஒரே கோலை கிளின்ட்தான் போட்டார்.
   

 9.பெர்னாண்டோ டோரஸ்- ஸ்பெயின்.






ஈரோ 2008 கோப்பையை ஸ்பெயின் வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களில் டோரஸும் ஒருவர். நல்ல வேகத்துடன் ஆடக் கூடியவர். கோலடிக்க வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாக கொண்டிருப்பார் களத்தில்.தவிர களத்தில் இருக்கும் போது இவர் கொஞ்சம் ஆபத்தான வீரர் தான்.


    10.ஸ்டீவன் பியனார்-தென் ஆப்பிரிக்கா.
தென் ஆப்பிரிக்காவின் முக்கிய வீரர்களில் ஒருவர் பியனார். சிறந்த முறையில் பந்தை நகர்த்திக் கொண்டு செல்வதில் வல்லவர். இங்கிலாந்தின் எவர்டன் அணிக்காக விளையாடி வருகிறார்.இவரது சாதனைகளை ஒரே வார்த்தையில் நினைவுக்கு கொண்டு வரவேண்டுமெனின் 2008 ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.தனக்கு கிடைத்த கடைசி 5 நிமிடத்தில் 2 கோல்களை பெற்று தனது அணியை வெற்றி பெற செய்தார்.


Saturday, November 21, 2015

ச்லட்ஜிங் சிறுத்தை ஓய்வு பெற்று விட்டது.

எனக்கு தெரிந்த ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர்களில் பிரெட்லீக்கு அடுத்து நான் அதிகம் ரசித்தது மிச்சல் ஜோன்சன் என்ற ச்லட்ஜிங் புயலைதான்.எந்த துடுப்பாட்ட வீரராக இருந்தாலும் சரி அவரது பவுன்சர் பந்துகள்.வேகம் எதிர்த்து துடுப்பெடுத்தாடும் வீரரை ஒரு நிமிடமா கதி கலங்க வைத்துவிடும்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பல முறை உலக கிண்ணம் வெல்வதற்கும்,பல தொடர்களை வெல்வதற்கும் மிக முக்கியமான ஒரு வேக பந்து வீச்சாளர் என்றால் என்னை பொறுத்தவரை அது மிச்சல்  ஜோன்சன் தான் என்று கூறுவேன்.அவர் நவம்பர் 17-ம் திகதி  தனது ஓய்வை அறிவித்து விட்டார்.
சில நிமிடம் அவர் செய்தது சரியாய் என்று யோசித்தேன் கரணம் கிரிக்கட்டை உண்மையாக நேசிக்கிற ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு மிக சிறந்த வீரர் தனது ஓய்வை அறிவிக்கிறார் என்றால் மனதில் பல கேள்விகள் எழும் அந்த கேள்வி தான் எனது அந்த யோசனைக்கும் காரணம்.


மிச்சல் ஜோன்சன் பற்றிய சிறு பகிர்வு.
ஒருநாள் போட்டிகள் என்றாலும் சரி மிச்சல் ஜான்சனின் 10 ஓவர் எப்போது முடியும் என்பதுதான் எதிரணியின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதுவே, டெஸ்ட் போட்டி என்றால் இன்று யாரை வம்பிழுக்கப் போகிறார், இவரது பவுன்சரில் யார் யார் நிலைகுலையப் போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். கிட்டத்தட்ட 10 வருட காலம் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ள  மிட்சல் ஜான்சன் பல பல சாதனைகளுக்கு  சொந்தக்காரர்.


ஆஸ்திரேலிய அணியில் பிரட்லீ, மெக்ராத், ஃப்ளெம்மிங் போன்றவர்கள் ஓய்வு பெற்றதற்கு பின்பு,  ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் முக்கிய இடம்பிடித்தவர்களில் முதன்மையானவர் மிட்சல் ஜான்சன். ஓடிவரும் ஸ்டைல் துவங்கி, பந்தை ஆடுகளங்களில் அடித்து தலைக்கு மேலே பவுன்ஸர்களாக மாற்றுவது வரை பேட்ஸ்மேனை ஒரு நிமிடம் நிலைகுலைய வைப்பவர். உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர்களான சச்சின், தோனி, காலிஸ் போன்றவர்களை கலங்கடித்தவர் ஜான்சன்.

ஆஸ்திரேலிய அணியின் ஆஸ்தான ஆயுதமான ஸ்லெட்ஜிங்கை சிறப்பாக செய்தவர் ஜான்சன். அந்த  ஸ்லெட்ஜிங் மூலம் பல வெற்றிகளை ஆஸி அணி பெற்றுக்கொண்டது. சைமண்ட்ஸ், பிரெட்லீக்கு இணையாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டவர் ஜான்சன்தான். 2013 /2014 ஆம் ஆண்டுகளில்  இடம்பெற்ற ஆஷஸ் தொடரின்போது ஜோ ரூட்டை வம்பிழுத்ததுதான் இவரது ஸ்லெட்ஜிங்கின் உச்சக்கட்டம். ஜான்சனின் அனல் பறக்கும் பந்துவீச்சு, சரியான நேரத்தில் கைகொடுக்கும் பேட்டிங் இதனையெல்லாம் தாண்டி இவரது ஸ்லெட்ஜிங்கிற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

களத்தில் எப்போதும் அக்ரஸிவாக இருந்தால்தான் ஒரு வேகப்பந்து வீச்சாளரால் வேகமாக பந்துகளை வீச முடியும் என்பது அக்தர் காலத்து ட்ரிக்ஸ் அதனை இன்னும் ஒருபடி சிறப்பாக செய்தவர் ஜான்சன்.   பிலிப் ஹூயூக்ஸ், பவுன்ஸர் தாக்கி உயிரிழந்தார் அந்த சோகம் ஆஸி  வீரர்களை அதிகமாக தாகி விட்டது.அதன் பின்பு சுற்றுலா இந்திய அணிக்கு  எதிரான போட்டியில்     முதல் டெஸ்ட் போட்டியில்  ஜான்சன் இந்திய அணியின் தலைவர்  விராட் கோலிக்கு வீசிய பந்து ஹெல்மெட்டை தாக்கிய சந்தர்ப்பத்தில், சற்று நேரம் நிலைகுலைந்தார் கோலி. அந்த பவுன்ஸர் தான் ஆஸ்திரேலியா தொடரை வெல்ல ஆஸி வீரர்களை மனதளவில் தயார்படுத்தியது என்றே சொல்லலாம்.


ஆஸ்திரேலிய அணியின் அனைத்து போட்டிகளிலும் ஜான்சனின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், அதே போல் அவரது ஆட்டமும் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் கண்டிப்பாக ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் கண்டிப்பாக இருக்கும். ஒற்றை ஆளாக அணியை வெற்றிப்பாதைக்கு  அழைத்து செல்வார் ஜோன்சன்.மேலே குறிப்பிட்ட கூற்றுக்கு  2013-2014 ம் ஆண்டில் இடம்பெற்ற ஆஷஸ் தொடரில் ஜோன்சன் கைப்பற்றிய விக்கட்டுகளே சான்று.

ஜான்சனின் பலமே பவுன்சர் பந்துகள் தான் . டெஸ்ட் போட்டிகளில் புதிதாக களமிறங்கும் வீரர் ஜான்சன் பந்துவீசும் போது துடுப்பெடுத்தாட  பயப்படுவார் காரணம் அவர் சந்திக்கும் முதல் பந்தை கணிக்க முடியாத பவுன்ஸராக்கி ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் எளிதில் திருப்பும் திறன் கொண்டவர் ஜான்சன். டென்னிஸ் லில்லி புகழ்ந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஜான்சனும் ஒருவர். ஓய்வை அறிவித்த பின்பு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் 'இங்கிலாந்து வீரர்கள் மகிழ்ச்சியடைவார்கள் காரணம் இனி அவர்கள் ஜான்சனை எதிர்கொள்ளமாட்டார்கள்' என புகழ்ந்துள்ளார் அந்த அளவுக்கு ஜோன்சனின் வேகபந்து வீச்சும்,பவுன்சர் பந்துகளும் எதிரணி வீரர்களை தாக்கியிருக்கிறது ,அதிலும் இங்கிலாந்து அணி துடுப்பாட்ட வீரர்களை சொல்லே வேண்டாம்.


ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களில் விக்கெட் மெஷின் ஜான்சன் தான். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களில் 4வது இடத்திலும், வேகப்பந்துவீச்சாளர்களில் 3வது இடத்திலும் உள்ளார். கடைசி போட்டியில் ( அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிராக  அவர் எடுத்த விக்கெட்) ஆஸியின் வேகப்பந்து  ஜாம்பவான் பிரெட்லீயின் சாதனையை முறியடித்தது. கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிநாளில் கூட சாதனை படைத்தார் ஜான்சன். மூன்று (ஒரு நாள்,டி20,டெஸ்ட்) போட்டிகளிலும் சேர்த்து ஜான்சன் 590 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2008ம் ஆண்டு தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான போட்டியில் 8 வீரர்களை ஒரே இன்னிங்ஸில் வீழ்த்தியதே அவரது சிறப்பான பந்துவீச்சு.

ஓய்வை அறிவித்த பின்பு இதுதான் பிரபலங்கள் அவருக்கு கூறும் வாழ்த்து.
1. சச்சின் டெண்டுல்கர்.
#. ஜான்சன் ஒரு ஸ்பெஷல் பந்துவீச்சாளர், அவரது ஆக்ரோஷமான பந்துவீச்சை ரசித்துள்ளேன்.

2. மைக்கேல் கிளார்க்
#.நான் விளையாடிய வீரர்களிலேயே மிகச் சிறந்த வீரர்.வாழ்த்துக்கள் கூறி ஒரு சிறந்த வீரனை வழியனுப்பி வைப்போம்.
3. ஏபி.டி. வில்லியர்ஸ்.
#.அவரது ஓய்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
4.ஷேன் வாட்சன்.
#.ஜான்சனுடன் மறுபடியும் விளையாட முடியாததை நினைத்த போது எனது கண்கள் கலங்கிவிட்டன, சிறந்த நண்பர்.
ஒரு சிறந்த வீரனுக்கு வாழ்த்துக்கள் கூறி வழியனுப்பி வைபோம்.சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தலும் அவரது கிரிக்கெட் வாழ்க்கை உள்ளூர்,ஐ.பி எல் போன்ற போட்டிகளில் தொடரட்டும்.
வாழ்த்துக்கள் தலைவா.

Thursday, November 19, 2015

அல்லாவின் பெயரால்....
கடந்த வெள்ளிக்கிழமை உலகம் என்றுமே நினைவில் வைத்துகொள்ள வேண்டிய முக்கியமான கருப்பு நாள்.வலி வேதனை எல்லா  மனிதர்களுக்கும் பொதுவான ஒன்று தான் ஆனால் மதத்தின் பெயரால்  மனிதம் உலகில் சாகடிக்கப்படுகிறது.சில வேளைகளில் இந்த கோர சம்பவம் காரணமாக உங்களை அறியாமலேயே உங்களது கண்கள் நீர் மழை பொழிந்திருக்கலாம் பாரிஸ் மக்களிஞ் கண்களில் இவரு தான் கண்ணீர் இன்னும் நின்ற நின்றபாடில்லை.


ஐ.எஸ்.ஐ.எஸ் உலகிலேயே மிகவும் இறுக்கமானதும் என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீவிரவாத இயக்கமாக பரிணமித்து விட்டது.கடந்த வெள்ளிகிழமை பிரான்ஸ் பாரிஸ் நகரில் இடம்பெற்ற கோர சம்பவம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.சென்ற வாரம் வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாடு  விழா கோலம் பூண்டிருந்தது.கரணம் நடப்பு உதப்பந்தட்ட சம்பியனான ஜெர்மனி அணியும் பிரான்ஸ் கால்பந்து அணியும் செயின் டி  பிரான்ஸ் மைதானத்தில் சினேகபூர்வமான கால்பந்தாட்டப் போட்டிகளில் ஒன்றை ஒன்று எதிர்த்தாடி கொண்டிருந்தன.இவை தவிர பிரான்ஸ் நகர்   சொல்லவே வேண்டாம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது.திடீரென யாரும் நினைத்து பார்க்காத தருணத்தில் பிரான்சின் முக்கிய 07 இடங்கள்  ரத்தமும் சதையுமாக  காட்சியளித்தது.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அந்த 07 இடங்களையும் குண்டு வைத்து தகர்த்து விட்டார்கள்.
இதுவரையில் 160 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் 200 பேர் கடுமையான காயங்களால் உந்தப்பட்டு வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படிருக்கிரர்கள்.



பிரான்ஸ் நாடே ஒரு நீங்கா இருளுக்குள்  மூழ்கி போய்  இருக்கிறது.03 நாட்களுக்கு பிரான்ஸ் நாட்டில் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதே வேலை அந்த நாட்டில் அவசர கால நிலையம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த மனித வெடி குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்..ஐ.எஸ் அமைப்பில் இருந்து வரும் நியாயம் இதுதான்.
#.பாலியல் தொழிலுக்கும் ஆபாசத்துக்கும் தலைநகராக விளங்கும் பாரிசில் தாக்குதல் நடத்தியிருப்பது புனித அல்லாவின் கிருபையே.
#.நடந்துக்கொண்டிருப்பது சிலுவை போர்  .ஆகவே எமது முஸ்லிம்கள் தான் எமக்கு முக்கியம்.
#.உலகில் எந்த நாடாக இருந்தாலும் சரி முஸ்லிம்கள் நாடுகள் மீது குண்டு வீசி போர் தொடுப்பவர்களுக்கு இதுதான்  கதி.
#.தற்கொலை தாக்குதல் நடத்திய எங்களது 08 சகோதரர்களுக்கும் அல்லா துணை இருப்பான்,.நாங்கள் தான் உலகை ஆளப்போகிறோம் என்பதற்கான ஆரம்பம் தான் இது.
மேலே ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்  சார்பில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட புனிதப்போர் என்று இந்த தாக்குதலுக்கு  ஒரு  தார்மிக நியாயம் சொல்லப்பட்டாலும் இறந்தது என்னவோ அப்பாவி உயிர்கள் மட்டுமே என்பது நிதர்சனம்.


இவை தவிர மேலை நாடு கிறிஸ்தவர்களும் ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பகையுணர்வை ஏற்படுத்தும் நோக்க்கமும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் வெற்றிகரமானதாக நிறைவு  செய்யப்படிருக்கிறது.எல்லாவற்றுக்கும்  மேலாக ஐ.எஸ்.ஐ.எஸ் பிரமுகரான ஜிகாதி ஜான் அமெரிக்கப்படைகளால் கொள்ளப்பட்டதும் இந்த தாக்குதலுக்கு மிக முக்கியமானதொரு காரணமாக இருக்கலாம்.
ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க,ரஷ்யா என்ற இரு பெரும் வல்லரசுகள் தவிர உலகின் பல நாடுகளில் இருந்தும் பிரான்ஸ் தாக்குதலுக்கு  அனுதாபம் இன்னமும் போய் சேர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது.கடந்த சனிக்கிழமையில் இருந்து இன்றய நாள் வரைக்கும் உலகம்  முழுக்க சமூக வலைதளங்களில் பிரான்ஸ் தேசியக்கொடி அனைஒவரது சுயவிபர படமாக மாறிப் போய்  இருக்கிறது.
இந்த கோர சம்பவம் என்றுமே மன்னிக்க முடியாத ஒன்று.பிரான்ஸ் ஜனாதிபதி  ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பை  பெயரிட்டு கண்டித்திருக்கிறார்.இது எங்கள் மீது தொடுக்கப்பட்ட போர் இதற்கு  விரைவில்  பலிக்கு பலி நிச்சயம் கருணையற்ற முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்திருக்கிறார்.


ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பு தீவிரத்தன்மை  கொண்ட வாஹபி இஸ்லாத்தை உலகம் முழுக்க எடுத்து செல்ல துடிக்கிறது.இந்த முயற்சிக்கு எதிரான கருத்தியல் போரை அறிவு ஜீவிகள் முன்னெடுக்க வேண்டியது  மிக மிக அவசியம்.வெறுப்பான அரசியல்  சித்தாந்தத்தையும் வளர்த்தெடுக்கும் இத்தகைய இகக்கங்களிடம் இருந்து அப்பாவி பொது மக்கள் காப்பாற்ற பட வேண்டும்.ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

சுதந்திரம்,சகோதரத்துவம்.,சமத்துவம் ஆகிய மிக சிறந்த முழக்கங்களை உலகுக்கு பறை சாற்றிய நாடு பிரான்ஸ்.அந்த முழக்கங்களுக்கு பிரான்ஸ் மக்களுக்கும் உயிரிழந்த மக்களுக்காகவும் உயிர்த்துடிப்போடு பிரார்த்திப்போம்.ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை தனிமைப்படுத்த எத்தனிப்போம்.
வைரமுத்து சிறுகதைகள்
உலக சிறுகதைகளோடு கண்டிப்பாக ஒப்பிடத்தக்கவை.
கவிதை ,திரை பாடல், கட்டுரை, தொடர்கதை,நாவல், தன் வரலாறு என இலக்கியத்தின் பல துறைகளில் கால்பதித்து சாதனைகளை தொட்ட நமக்கு  தெரிந்த பாடலாசிரியர் வைரமுத்து வின் வேறுபட்ட இலக்கிய முயற்சி இது.சிறுகதைகளுக்கான கதை கருக்கள் ஒன்று என்றாலும் இந்த புத்தகத்தில் பேசப்படுகின்ற கதைகலங்கள் வேறுவேறு.காலங்களும் வேறு,கதா பாத்திரங்களும் வேறு.அதிலும் வைரமுத்து சிறுகதைகளில் சிறப்பானது பொய் தானேடி கொள்ளும் மெய் கொல்லாது போன்ற வாசகங்கள் சிறுகதைகளுக்கு மிக சிறந்த வெற்றிகளை தேடிக்க் கொடுத்திருக்கின்றன எனலாம்.


இவற்றுக்கு இடையிலான பொது பண்பு இவை எல்லாமே மனிதத்தை பற்றி பேசுகின்றன.
இந்த அக உலகின் குறுக்கு வெட்டு தோற்றத்தை அச்சு அசலாக பதிவு செய்வதில்  வெற்றி  கண்டிருக்கின்றார்  பாடலாசிரியர்.அதிலும் (மாறும் யுகங்கள் மாறுகின்றன ) போன்ற சிறுகதைகள் மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கு பொருந்தும் சிறுகதைகள்.தவிர வறுமையில் செம்மையை வலியுறுத்தும் மார்க்கம்,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று சொல்லும் ராஜராஜன் ,ஏற்பது இகழ்ச்சி என்பதை நினைவூட்டும் விதத்திலும்,காந்தியின் கடைசி கதைகள் போன்ற கதைகள் இன்றைய சிறுகதை தலைமுறையினர் படமாக பயில வேண்டியை


இந்த தொகுப்பிலுள்ள இறந்தக் காலங்கள் இறந்தே போகட்டும் இப்படியும் ஒருவன் இருந்தான் போன்ற சிறுகதைகள் தமிழுக்கு புதிது.அதிலும் பாடலாசிரியர் கூறியிருக்கும் கருத்துக்கள் வார்த்தைகள் கரிர் என்று தைகின்றன.எல்லாவற்றுக்கும் மேலாக புத்தர்,ஷாஜஹான்,ராஜராஜன்  போன்ற மனிதர்களில் தொடக்கி வாழ்வின் பல இடுக்குகளில் வாழ்பவர்கள் பல மதங்களை சேர்ந்தவர்கள், பல்வேறு குணங்கள் உடையவர்கள் என விதவிதமான மனிதர்கள் இந்தக் கதைகளில் இடம்பெற்றாலும் எல்லோருமே நம் முன் ரத்தமும் சதையும் உலவும் மனிதர்களாக தான் இருக்கின்றார்கள்.


குறிப்பாக என்னால் ஒன்று மட்டும் கூற முடியும் தமிழில் இது வரை வந்துள்ள சிருகதைகளிலும் பார்க்க இந்த சிறுகதைகள் புத்தித் என்று தான் கூற வேண்டும்.இந்த புத்தகத்தின் 40 சிறுகதைகளும் தமிழுக்கு 40 முகங்கள்.வைரமுத்து என்று ஒரு இலக்கிய கர்த்தாவை பார்க்கிறோம் என் தர கன்னட்டத்தோடு இந்த சிறுகதைகளை வாசித்து பாருங்கள்.
வாசிப்பின் முழு பலனையும் இந்த நூல் படித்து முடிக்கும் போது தந்து விடும்.இலக்கிய மோகம் கொண்டவர்களின் கையில் இருக்க வேண்டிய மிக அருமையான நூல் இது.