Friday, October 16, 2015

சுவாமியே சரணமய்யப்பா.
மாலை அணைந்து சபரி மலைக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் இந்த மந்திரங்கள் சுவாமிகளுக்கு தமிழில் உதவும் என நினைத்து இந்த பதிவை பதிவிடுகிறேன்.
சுவாமி சரணம் ஐயப்பா
விநாயகர் வணக்கம்

கலை நிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவரு மொருபரை சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை சரணம் சரணம்
அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினை கெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்
வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்
சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்

மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்,

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஐயப்பன் 108 சரணக் கோவை

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா

ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா

ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!

ஐயப்பன் கவசம்

கணபதி துதி

அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே
இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே
உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே
எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே
ஐங்கரனே அருள் புரிவாய்.

காப்பு

ஹரிஹரபுத்ரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை அறுமுகன் தம்பியை
சபரிகிரீசனை, சாந்த ஸ்வரூபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோம்
ஐயப்ப தேவன் கவசமிதனை
அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வருமே

நூல்

மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலிவாஹனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணியமூர்த்தியே வருக வருக
பூத நாயகா வருக வருக
புஷ்களை பதியே வருக வருக

பொன்னம்பலத்துறை ஈசா வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக
வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீர மணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக
ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகற்றிட அன்பனே வருக
இருவிளை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக

பதினென்படியை மனத்தில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப்பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே
சபரிகிரீசனை நினைத்தே நீரிடத்
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்

ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க
அவினியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர்
சரணம் சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்குரு நாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்.

வேண்டுதல்

சிவனார் மகன் என் சிரசினைக் காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பிஎன் கண்ணிணைக் காக்க
நாராணன் பாலன் நாசியைக் காக்க
இருமூர்த்தி மைந்தன் இருசெவி காக்க
வாபரின் தோழன் வாயினைக் காக்க
பம்பையின் பாலன் பற்களைக் காக்க
நான்முகப் பூஜீயன் நாவினைக் காக்க
கலியுக வரதன் கழுத்தினைக் காக்க
குமரன் தம்பி என் குரல்வளை காக்க

புஷ்களை நாதன் புஜங்களைக் காக்க
முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க
வீரமணி கண்டன் விரல்களைக் காக்க
கயிலை மைந்தன் மார்பினைக் காக்க
மணிகண்ட தேவன் மார்பினைக் காக்க
வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க
முழுமுதற் கடவுள் முதுகினைக்காக்க
இருமுடிப்பிரியன் இடுப்பினைக் காக்க
பிரம்பாயுதன் என் பிட்டங்கள் காக்க
தர்மசதஸ்தா என் துடைதனைக் காக்க

முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
பந்தள பாலன் பாதத்தினைக் காக்க
விஜயகுமரன் விரல்களைக் காக்க
அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக்க
ஆரியங்கா ஜோதி அன்புடன் காக்க
காட்டாளரூபி காலையில் காக்க
நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க

மாலின் மகனார் மாலையில் காக்க
ஹரிஹர சுதனார் அந்தியில் காக்க
இன்பமய ஜோதி இரவினில் காக்க
எருமேலி சாஸ்தா என்றுமே காக்க
ஹரியின் மகனார் அநுதினம் காக்க
நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
இருமுடி ஈசன் இடப்புறம் காக்க
காக்கக் காக்க கருணையால் காக்க
பார்க்கப் பார்க்க பாபம் பொடிபட

இம்மையும் மறுமையும் இல்லா தொழிந்திட
ஈசன் மகன்எனை என்றுமே காக்க
கொடிய விஷயங்களும் கொள்ள நோய்களும்
குருதியைக் குடிக்கும் துஷ்டப் பேய்களும்
காந்தமலைதனைக் கருத்தில் கொண்டிட
கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய்
பில்லி, சூனியம் பலவித வஞ்சனை
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய்
பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய்

வாதம், பித்தம் சிலேட்சுமத் துடனே
வாந்தியும், பேதியும் வலிப்பும் சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணுகாமல்
என்றுமே காப்பாய் எருமேலி தேவா
கல்வியும், செல்வமும் கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க
நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா
காமம், குரோதம், லோபம் மோஹம்
மதமாச்சர்ய மெனும் ஐம்பெரும் பேய்கள்

என்றுமே என்னை அணுகிவிடாமல்
ஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய்
சூது, பொறாமை, பொய் கோபமில்லாமல்
சோரம், லோபம் துன்மார்க்கம் கல்லாமல்
வேத நெறிதனை விலகி நில்லாமல்
வீரமணி கண்டா வரமெனக் கருள்வாய்
மூப்பும், பிணியும், வறுமையும், பசியும்
வந்தனை வாட்டி வதை செய்யாமல்
உள்ளன் புடனே உன்திருநாமம்
அநுதினம் சொல்ல அருள் தருவாயே

நமஸ்காரம்

ஹரிஹரபுத்ரா அன்பா நமோ நமோ
சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ
ஐயங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ
பொன்னம் பலத்துறை புண்ணியா நமோ நமோ
புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ
மஹிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ
சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்

அகஸ்தியர் அருளிய ஐயப்ப மாலை

1. விருப்பமும் வெறுப்புமின்றி வினைப் பயன் எல்லா முந்தன்
திருப்ப தம் தன்னில் வைத்து திருப்தியும் திறனு முற்று
ஒருப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடாது அன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே

2. வையமும் வானும் வாழ மறை முதல் தருமம் வாழ
செய்யும் நற் செயல்கள் வாழத் திருவருள் விளக்கம் வாழ
நையும் ஊழுடையார் தத்தம் நலிவகன்றினிது வாழ
ஐயனாய் அப்பனானான அவர் பதம் வணக்கம் செய்வோம்

3. மெய்யெல்லாம் திரு நீறாக வழியெலாம் அருள் நீராக
பொய்யில்லா மனத்தராகி புலனெல்லாம் ஒருத்தராகி
வெய்ய வேறற்றவுள்ள விளக்க முற்றான் பால் விம்மி
ஐயனே ஐயப்பா என்பார் அவர் பாதம் வணக்கம் செய்வோம்


சபரிமலை மகாத்மியம்

4. சக்தியெல்லாம் சபரிமலை தத்வமெலாம் சபரிமலை
சித்திமெலாம் சபரிமலை மோனமெலாம் சபரிமலை
முக்தியெலாம் சபரிமலை சிற்பரமாம் சபரிமலை
புத்தியெலாம் சபரிமலை போற்றிடுவாய் நீ மனமே

5. ஓங்காரமான மலை ஓதுமறை ஓங்குமலை
ஹ்ரீங்கார மந்த்ரமலை ரிஷிகணங்களேத்து மலை
ஆங்காரம் அழிக்கும் மலை ஆனந்தம் கொழிக்கும் மலை
பாங்கான சபரிமலை பல்வளஞ்சேர் மலை வளமே

6. கோடி மலைகளிலே கொழிக்கும் மலை எந்த மலை
வஞ்சி மலை நாட்டினிலே உயர்ந்த மலை எந்த மலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை
ஜனகாதி முனிவ ரெல்லாம் தேடி வரும் சபரிமலை

7. ஹரிஹர புத்ரா போற்றி
அன்பான குருவே போற்றி
புஷ்களை ரமணா போற்றி
எனையாள் குருவே போற்றி
கண்கண்ட நாதா போற்றி
சபரிமலை வாசா போற்றி
கஞ்சமலர்ப் பாதா போற்றி
ஐயனே போற்றி போற்றி
முந்திய சிவனார் போற்றி
மூர்க்கனும் அசுரன் போற்றி
இந்திர வரவும் போற்றி
ஈசனார் வேசம் போற்றி
பந்தடி கமலம் வெற்றி
வந்ததோர் விரதம் போற்றி
சந்ததியான மூர்த்தி தர்ம சாஸ்தாவே போற்றி போற்றி

ஓம் தேவ தேவோத்தம தேவதா ஸார்வ பௌம
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயக
ஸ்ரீ பூர்ணா புஷ்களா ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர
சுவாமின்.........ஜெய விஜயீ பவ

விருத்தம்

1. ஆனைமுகத்தோன் தம்பி அருள் குமரனுக் கிளையோன்
வானவர் போற்றும் வாணி வந் தெனக்கு அருள வேனும்
சேனையில் தலைவர் போற்றும் தென் குளத்தூரிலையன்
கானக விளையாட்டெல்லாம் கருத்துடன் போற்றாய் நெஞ்சே

2. அந்தணர் முனிவர் சூழ் அற்புத சபையைப் போற்றி
மந்திரம் கையிலேந்தும் வாழ்குளத்தூரான் மீதில்
சிந்தையில் உதித்த செல்வம் செப்புமென் கவி விளங்க
கந்தனும் குருவும் வாணி கஜமுகன் காப்பதாமே

3. சாஸ்தா நமக்குண்டு தாய் போல் வருவார் இந்தத் தனி வழிக்கே
பார்த்தால் நமக்கு பயமேது மில்லை பயந்து பயந்து
ஆற்றாமல் சொல்லி அபய மிட்டோடி வரும் சுரர்தமை
கார்த்தே வரும் கடிய குன்றேறிய காவலனே

4. வாழையும் தெங்கும் வரிகை பலாவுடனே மாங்கனியும்
சோலையும் அருள் வண்டுலாவும் குளத்தூர் பதியில் சென்றால்
கங்கா நதிக்கும் ஹிமசேது மட்டுக்கும் இந்த கலியுகத்தில்
உன் காலில் அதிசயம் போல் கண்டதில்லை என்பவர்க்கு
சிங்கார வஞ்சிமலையேறி சனிவாரம் தொழுதவர்க்கு
மங்காத சர்வ பீஷ்டமும் கொடுப்பதாமே

பிரார்த்தனை

1. குளத்தூரிலேயிருந்து குடியிருந்து அவதரித்து
வளர்த்ததொரு தாய் பெற்றெடுத்த மாதா உமக்கினையோ
களத்தூரில் பதின்குலக் கன்னியர்கள் தந்தசெல்வம்
குளத்தூரிலே அய்யனென்றால் குற்றமொன்றும் வாராதே

2. மாணிக்க மாலை மகிழ்மாலை பூமாலை
காணிக்கைக் கொண்டு வந்து காண்பார் தினந்தோறும்
ஆனிப் பொன் மார்பன் அழகன் குளத்தூரானை
பேனித் தொழாய் நெஞ்சே பிழைகளொன்றும் வராதே.

3. கற்சரடு பொற்பதக்கம் கனத்த முத்துச் சுவடியுமாய்
மெய் கனியாய் அணிந்திருக்கும் விரகா உன் திருமேனி
தக்க மிட்டு வரும் பேயைத் தடியெடுத்து தான் விரட்டும்
மிக்க நல்ல குளத்தூரான் வெள்ளைக் கல்லாதிபனே

4. தூங்கும் செவி யொதிக்கி துதிக்கை யொரு கொம்பில்
நீங்காத மலைபோல் நிற்கு மந்தக் குஞ்சரங்காள்
பூங்காவிலே இருந்து புண்ணியரைத்தான் நினைத்தால்
பாங்கான மத கரிகள் பனிமலை போல் அகன்றிடுமே

5. பாரச் சுமடெடுத்துப் பதினெட்டாம் குன்றேறி
ஏத்தமெல்லாம் ஏறி இளைத்து வரும் அந்நேரம்
வேர்த்த தெல்லாம் பன்னீராய் வென்சாமரை வீச
கதித்த வல்லி குளத்தூரான் காந்தமலை காவலனே

6. செண்டார்ந்த கையன் எங்கள் ஸ்ரீமான் எங்கள் பிரான்
வீரமணிகண்டா அநுதினமும் காத்தருள வேணுமையா
தந்தாமரை வளரும் தவமுனிவர் வான வரும்
கொண்டாடும் தென்னிசை கூடபர சாஸ்தாவே

7. சீருடன் புவியில் செழுத்தவே மன்னரைக் காக்க
வீருடன் புலியைத் தாங்கி விண்ணவர் மேய்க்க வந்தாய்
ஆவினில் பெரியோனாகி ஆரியங்காவையா னென்றும்
பூர்ணமாக ஐயன் பொற்பாதம் போற்றுவோம்.

விருத்தம்

1. நாள் கேட்டு முகூர்த்தமிட்டு நல்ல நாள் என்று சொல்லி
வீட்டைவிட்டு சுமடெடுத்துச் சிவசைலம் வீதியிலே
கூட்டமெல்லாம் கூடி குளத்தூரிலே நினைவாய்
தாஷ்டிகமாய் வழிநடத்தும் தர்மகுளத்தூரில் ஐயா

2. உற்றார் இருக்க உடன்பிறப்புத் தானிருக்கப்
பெற்றோரிருக்கப் புறப்பட்டேன் உன் காவல்
என் தந்தை மனமுருக சோதரன் கண்ணீர் பெருக
பந்து ஜன முருக பெற்ற மக்கள் தானுருக.

3. சொந்த மனையாள் தூண்டில் மச்சம் போல் துடிதுடிக்க
இந்த பிறவிகள் தீர்க்க இறக்க மில்லையோ சுவாமி
வியர்த்த தெல்லாம் பனிநீராம் வெண் சாமரம் வீச
காத்தவனே குளத்தூரான் சிவ காந்தமலை காவலனே

4. கல்லான மலையேறித் தடலேறிக் குன்றேறி
இல்லாமையால் அல்லவோ இந்த மலை ஏறுவதும்
வல்லான பக்ஷிகளும் பாண்டி பரதேசிக்களைக்
கொல்லாமல் காத்தருள் வாய் குளத்தூரில் ஐயனே

5. மேகம் இருண்டு வர விடுதிகளும் காணாமல்
காகம் போல் உமதடியேன் கலங்குவது கானீரோ
ஆக்கம் மிகத் தளர்ந்தேன் ஐயனே தென் குளத்தூர்
நாகம் அணிந்தவனே நல்லமலை சாஸ்தாவே

6. எதிர்காற்றும் மழையும் எடுத்தடி வைக்கவொட்டாமல்
பெரியாற்றின் கரையினிலே பரதவிக்கும் அந்நேரம்
அலையரமல் தோணிக் கட்டி அக்கரைக்கே கடத்திவிடும்
பலம் உமக்கு சாஸ்தாவே பரதேசிக் காவலனே

7. நம்பி வந்தேன் சன்னதியில் நன்மை தர வேண்டுமென்று
பாடி வந்தேன் உன் பெயரைப் பாக்கிய மிக தந்தருள்வாய்
பெற்றோரை போல் என் பிழை பொருத்து ஆதரிப்பாய்
விஸ்தார மணிமார்பா வெள்ளைக்கல் ஆதிபனே

8. உன்னை நம்பும் எங்களுக்கு ஒரு வினையும் வாராதுதென்று
நினைத்திருந்து காலமெல்லாம் ஏங்குதையா என் மனம்
ஓங்கி எனது மனம் ஒன்று பத்து நூராகும்
சங்கைக் கொண்டு திரு வாரியங் காவுவை யாவே

9. கச்சை கட்டி முண்டுத்தி மூங்கில் தடி பிடித்து
பதினெட்டாம் குன்றேறிப் பார்க்க வந்தேன் உன் மகிமை
பாரசுமடெடுத்து பதினெட்டாம் குன்றேறி
ஏற்றமெல்லாம் கடந்து இளைப்பாறும் அந்நேரம்

10. பொல்லாத மழைப் பெய்ய புனலாறு பெருகிவர
கல்லானை மிதந்துவர காட்டெருமை மிரண்டோட
மெய்யாகும் கன்னீயர்கள் மேதினியிற் குரவையிட
ஐயன் திருவுள்ளம் திரு ஆரியங்காவு ஐயாவே

11. ஐயா உன் சன்னதியில் நம்பிவந்தேன் ஆண்டவனே
அக்ஷணமே வந்துதவும் சபரிமலை சாஸ்தாவே
ஆதியந்தம் இல்லாத அற்புதனே குரு நமக்கு
வேத ஒளியாம் சபரி மெய்யனும் ஆண்டவனே

ஐயப்பன் பிரார்த்தனை விருத்தம்

1. கலியுகம் தன்னிலே கண்கண்ட கடவுளென்று
காத்திருக்கிறோம் ஐயா
ஏழையான அடியேனுக்கு நின் திருப்பாத தரிசனம்
தந்தருள தாமதம் ஏனோ
அனாத ரக்ஷகன் என்று அனவரதமும் போற்றிடும்
அடியார்க்கு நீர் அருள் ஞான
மெய்த் தருவாய் வந்து நல்லாதரவு அளித்து ஆட்கொண்டருள்வாய்
தவயோக சித்தாந்த சபரி பீடாச்ரமஸ்தான மெய் ஞான குருவே

2. பரதேசியான அடியேன் அனுதினமும் வேண்டுவது
பாடினால் நின் சரண கீதங்கள் பாட வேண்டும்
உடுத்தால் உன் நீல ஆடை உடுக்க வேண்டும்
அணிந்தால் நின் துளஸி மாலை அணியவேண்டும்
சுமந்தால் நான் இரு முடி சுமக்க வேண்டும்
ஏறினால் நின் சபரிகிரி ஏற வேண்டும்
இரு முடிச் சுமையதும் சுமக்க முடியாமல் நான்
சரிமலை ஏறி வருந்துகின்ற சமயம்
தயவுடன் வந்தெனக்கு பாத பலமும் தந்து
திருவடி தந்தருள் வாய்
தவயோக சித்தாந்த சபரி பீடாச் ரமஸ்தான
மெய் ஞான குருவே

தாயாகி தந்தையுமாய்

தாயாகி தந்தையுமாய் நீயும் வளர்த்தாய்
தரணியிலே உன்னைப் போல தெய்வம் இல்லை ஐயப்பா
மானிடரை வாழவைக்கும் தெய்வமன்றோ நீயே
மனதை யெல்லாம் அடங்க வைக்கும் சக்தியன்றோ நீயே
இச்சையெல்லாம வென்றுவிட்ட வீரனன்றோ
இம்மையிலும் மறுமையிலும் குருவுமய்யா
ஹரிஹரனின் மைந்தனாக கலியுகத்தில் பிறந்தாய்
பந்தளத்து பாலகனாய் பாரினில் நீ வளர்ந்தாய்
அரக்கிதனை வதம் செய்து சபரிமலை மீது
அமர்ந்து என்னை ரக்ஷிக்கும் ஐயப்பா தெய்வமே

சபரி பஞ்சங்கம்

கருணாகரக் கடவுள் ஹரனாரிடம் சூர்ப்பகா ஸுரன்
தவமிருந்து கை வைத்த பேர் சிரஸுதுய்ய
நீறாகவே கருதினான் ஒரு வரத்தை
பரம குருவாம் ஹரன் அருளினோ மென் ரவுடன் அவன்
சிரஸினில் கரம் வைத்திடச் சென்றடுத்தான்
வள்ளல் ஐவரளியில் ஒளிந்தா ரென்று மாலறிந்து ஓடிவந்து
தருண மோஹினியாய் அஸுரனை வெண்ணீறாக்கிச்
சம்புவை அணைந்து பெற்ற ஸந்ததிப் பொருளாக வந்த
என் கண்மணியே! ஸங்கடம் தீரும் ஐயா!
சரணம் அய்யப்பா என்று உருகும் அன்பர்க்கு நீர்
ஸகல ஸெள பாக்கியமும் தந்து உதவும்
தவயோக சித்தாந்த சபரி பீடாச் ரம ஸ்தான
மெய் ஞான குருவே!

பால் குருநாதர்

1. பால் குருநாதா சரணமய்யப்பா
எங்கள் குருநாதனே சரணமய்யப்பா
நல்ல வழி தந்திடுவார் சரணமய்யப்பா - எங்கள்
நடமாடும் தெய்வமே சரணமய்யப்பா (பால்)

2. திருமந்திர நகர மதில் மகிழும் பாலன் - ஈசன்
திருவருளை பெற்றவராம் சரணமய்யப்பா
அன்புள்ளம் கொண்டவராம் சரணமய்யப்பா - எங்களை
ஆதரிக்கும் தெய்வமாம் சரணமய்யப்பா (பால்)

3. இல்லை இல்லை இல்லை என்றும் ஏங்கும் மாந்தரின்
உள்ளம் தனைக் குளிர வைப்பார் சரணமய்யப்பா
பிணியகல வழி வகுக்கும் என் குருநாதன் - ஞான
பணிபுரிய அருள் புரிவார் சரணமய்யப்பா (பால்)

4. வினை யறுத்து பவமழிக்கும் என் குருநாதன்
நம்மைத் துணை இருந்து காத்திடுவார் சரணமய்யப்பா
பக்தி முக்தி தாயகனே சரணமய்யா - நம்
பக்தர்களை காத்திடுவார் சரணமய்யப்பா (பால்)

ஓம் நமோ ஐயப்ப தேவா

1. ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ ஐயப்ப தேவ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ நமோ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ ஐயப்ப தேவ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ  (ஓம்)

2. எனது நான் எனச் செருக்கி மமதை உற்றலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப மூர்த்தியே
ஒருகனத்துள் என துளத்தை உருக வைத்த எனது நாமம்
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ (ஓம்)

3. அரியுமான சிவனுமான ஆண்டவனின் மைந்தனாகி
அல்ல லெல்லாம் தீர்க்க வந்த அன்பு தெய்வமே
அன்பினாலே ஆளவந்த அன்பர்களைக் காத்திடவே
அவதரித்து பூவுலகம் வந்த சாமியே (ஓம்)

4. ஆதியோடு அந்தமாகி ஆரியங்காவு பாலனாகி
ஆதிசக்தி மகனுமாக வந்த மூர்த்தியே
ஆண்டவனின் பிள்ளையான எங்களையே காத்திடவே
ஆவலோடு வந்த எங்கள் காந்த ஜோதியே (ஓம்)

5. எரிமேலி சாஸ்தாவாகி எல்லோர்க்கும் தேவனாகி
எங்கள் குல தெய்வமாக வந்த ஜோதியே
எந்தன் துயர் போக்கி நீயும் எங்களைக் காத்திடவே
ஏகாந்த மூர்த்தியாக வந்த தெய்வமே

6. பதினெட்டாம் படியனாகி பம்பைநதி வாசனாகி
பக்தர்களைக் காக்க வந்த எங்கள் ஜோதியே
பக்தியுடன் பூஜை செய்து சுத்தமான மனதுடனே
நித்தமும் காத்தருள்வாய் நீதிதேவன.

கற்பூர ஹாரத்தி ஹீதம்

பாஹி பாஹி மணிகண்டா
மாமலைவாசா மணிகண்டா
வன்புலி வாகனா மணிகண்டா
வானவர் பூஜித மணிகண்டா
மகிஷி மர்த்தனா மணிகண்டா
மோகன நாசனா மணிகண்டா
மோகினி சுதனே மணிகண்டா
மத கஜ வாகனா மணிகண்டா
மார்க்க பந்தோ மணிகண்டா
சபரிகிரீஸ்வரா மணிகண்டா
சாஸ்தவ ரூபா மணிகண்டா

சுவாமியே சரணம் ஐயப்பா

மங்கள ஆரத்தி

மங்களனே மாதவனே
சங்கரனே சதாசிவனே
பாண்டியனார் பாலகனே
காந்தமலை வாசனே

ஸ்ரீ சக்ரபீடமதில் கொலுவிற்கும் எங்கள் ஐயப்பனே

ஐயப்பனை வேண்டுதல்

1. ஓங்காரத்தின் தத்துவ ரூபனே
2. தாரகப் பிரம்மமே
3. சத்திய ரூபனே
4. பூத கண நாதனே
5. புண்ணிய மூர்த்தியே
6. அரனுர் மைந்தனே
7. பந்தளத்தரசன் மகிழ் பாலகனே
8. தேவ தேவனே
9. மணிகண்ட  பொருளே
10. அசுரர் காலனே
11. அன்பின் வடிவமே
12. கருணை கண்ணனே
13. கிருபைக் கடலே
14. துன்பம் துடைப்பவனே
15. கலியுக வரதனே
16. ஐயனே மெய்யனே
17. ஸச்சி தானந்தனே
18. மோகினி சுதனே
19. சுந்தர வடிவமே
20. மெய் ஞான பொருளே

உனது திவ்ய பாதார விந்தங்களுக்கு எங்களது ஆனந்த கோடி நமஸ்காரம்.

சகல செல்வங்களும் தரும் இமையகிரி ராஜ தன்ய மாதேவனே நின்னைச் சத்தியமாய் நித்தமும் உள்ளத்தில் துதிக்கும் எழியோர்களுக்கு இரங்கி அருளி அகிலமதில் நோய்ன்மை, கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலிவு, துணிவு, வாழ்நாள் வெற்றி ஆகும். நன்னூல் நுகர்ச்சி தொகை தரும் பதினாறும் பேரும் தந்தருளி நீ சுகானந்த வாழ் வளிப்பாய் சுகிர்த குணசாலி பரிபாலனே அநுகூலனே மங்கள வாசனே மகவு நாங்கள் தந்தை நீர் அத்தனையும் எங்களுக்கு அளிக்க வொண்ணாதோ மகிமை வளர் திரு சபரிகிரியில் வாழும் எங்கள் ஐயப்ப தெய்வமே, சரணம் சரணம் ஐயப்பா

தீப மங்கள ஜோதி நமோ நம
தூய சபரி கிரிஷா நதோ நம
பூர்ணை புஷ்கலை நாதா நமோ நம
அருள் தாராய் சுவாமி

சாந்தி சாந்தி சாந்தி

ஓம் த்ரியம்பகம் பஜா மஹே ஸுகந்தீம்
புஷ்டி வர்த்தனம்
உர் வாருக மிவ பந்தனாத் மிருத்யோர்
மூக்ஷிய மாம் ரு தாத்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
சாந்தி சாந்தி சாந்தி ஓம்

என் நினைவிலும் ஐயப்பா

1. என் நினைவிலும் ஐயப்பா என் கனவிலும் ஐயப்பா-எங்கள்
நீலகண்டன் கண்ணில் வந்தாய் நிர்மலனே ஐயப்பா

2. மாயன் அன்று மோகினியாய் மகிழ்ந்தனைத்த ஐயப்பா-எனத்
தூயவனே துணைவனே என் தோழனே ஐயப்பா

3. மலைமகளும் கலைமகளும் அனைத்தெடுத்த ஐயப்பா....பல
கலைகளிலே விளையாடும் கண்மணியே ஐயப்பா

4. சபரிமலை தெய்வமே என் சாஸ்தாவே ஐயப்பா-நீ
அபயமளித்துக் காத்திடுவாய் ஐயாவே ஐயப்பா

5. நித்திய வஸ்துவாகி எங்கும் நிறைந்தவனே ஐயப்பா-உன்
தத்துவ காட்சி காணத் தனித்து வந்தேன் ஐயப்பா

6. கலியுகத்தின் கடவுள் என்றே காண வந்தேன் ஐயப்பா-உன்
கலிகள் நீங்கக் கண்திறந்தே காத்தருள்வாய் ஐயப்பா

7. பாண்டிபதி நாயகனே பாலகனே ஐயப்பா-உன்னை
வேண்டி நின்றே வரம் கேட்பேன் வேதியனே ஐயப்பா

8. மன்னவர்க்கு மன்னவனே மக பதியே ஐயப்பா-இந்த
மானிலத்தை ஆள்பவனே மறையோனே ஐயப்பா

9. பொன்னுரங்க பூபதியே பூசுரனே ஐயப்பா-என்றும்
எண்ணுள்ளே விளையாடி இன்ப மருள் ஐயப்பா

10. வண்ண வண்ணக்களஞ்சியமே வடிவழகா ஐயப்பா-என்
எண்ணமதில் கலந்திருப்பாய் என் துரையே ஐயப்பா

11. காவியத்தில் கலந்து நின்றாய் காரணனே ஐயப்பா-உன்னை
ஓவியத்தில் அமர்த்தி என்றும் ஓதுகிறேன் ஐயப்பா

12. நீரணிந்த மேனியனே நிறைமதியே ஐயப்பா-நல்ல
நீல வண்ணக் கட்டழகா நீ வருவாய் ஐயப்பா

13. ஆடுகின்ற அன்பருள்ளே ஆடுகிறாய் ஐயப்பா-உன்னைப்
பாடுகின்ற பண்களிலே பரவி நிற்பாய் ஐயப்பா

14. ஜாதிபேதம் அறியாத சாஸ்தாவே ஐயப்பா- எங்கும்
நீதியிலே நிறைவு காண நீ வருவாய் ஐயப்பா

15. கற்பூர ஜோதி கரைந்து நின்றாய் ஐயப்பா-உன்
பொற்பாதம் காண வந்தேன் பூரணனே ஐயப்பா

16. காடுமலைகள் ஆறுதாண்டி காணவந்தேன் ஐயப்பா-என்
ஒடுமனதை உள்ளடக்கி உணர வைப்பாய் ஐயப்பா

17. மலைகளிலே பல மலைகள் தாண்டி மகிழ்ந்து வந்தேன் ஐயப்பா
மகரஜோதி காணவந்தேன் மணிகண்டனே ஐயப்பா (நான்)

18. பம்பா நதியில் நீராடிப்பணிந்து வந்தேன் ஐயப்பா-ஸ்ரீ
ஜெகதாம்பாள் மகிழும் தேவனே என் ஐயப்பா

19. நீரணிந்துன் நினைவில் வந்தேன் நிதிபதியே ஐயப்பா-இப்
பாரினிலே பாடியாடிப் பார்க்க வந்தேன் ஐயப்பா

20. பனிமலைமேல் பவனிவரும் பரம்பொருளே ஐயப்பா-இப்
பதினெட்டாம் படியேறிப் பணிந்து வந்தேன் ஐயப்பா

21. கோழை எந்தன் குணமறிந்து குறைத் தீர்ப்பாய் ஐயப்பா-நான்
ஏழை என்று அறியாயோ ஏகனே என் ஐயப்பா

22. யானை புலிக் கூட்டம் கண்டால் சரணம் என்பேன் ஐயப்பா-நீ
எதிரில் வந்து காத்தருள்வாய் என் ஐயனே ஐயப்பா

23. தாய் தந்தையும் நீயல்லவோ தாரகனே-ஐயப்பா இதை
ஆய்ந்தறிந்தே அண்டி வந்தேன் ஆதரிப்பாய் ஐயப்பா

24. குருவெனக் கொண்டாடி வந்தேன் குணமணியே ஐயப்பா-என்
குலதெய்வம் நீயல்லவோ குணநிதியே ஐயப்பா

25. கருணையுள்ள கற்பகமே கலிவரதா ஐயப்பா-நல்ல
களைத்து வரும் நடுவழியில் கை கொடுப்பாய் ஐயப்பா

26. வருந்துகின்றேன் வாடுகின்றேன் வாழ்வளிப்பாய் ஐயப்பா-நல்ல
மருந்தாகி நீ வருவாய் மலையரசே ஐயப்பா

27. வருமை நீக்கி வரந்தருவாய் வரதனே என் ஐயப்பா-என்
சிறுமை கண்டு இறங்காயோ சீலனே என் ஐயப்பா

28. அடியார்க்கு எளியவனே ஆனந்தனே ஐயப்பா-உன்
அடிபணிந்தேன் ஆதரிப்பாய் ஐயாவே ஐயப்பா

29. அன்னதானம் செய்திடவே அருள் புரிவாய் ஐயப்பா-என்
கருமவினை தீர்த்தருள்வாய் கலிவரதா ஐயப்பா

30. வாழி சொல்லி வாழ்த்தி வந்தேன் வரம் அளிப்பாய் ஐயப்பா-என்
ஊழ்வினையைத் தீர்த்தருள்வாய் உத்தமனே ஐயப்பா.

காக்க ... காக்க ...

சுவாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

எப்போதும் என் தலை நின் தாழ் பணிந்திட தப்பாது காக்க வேண்டும்
கொட்டிக் கொடுக்கின்ற திருநீறு அணிந்திட நெற்றியை காக்க வேண்டும்
தத்துவம் காட்டிடும் முத்திரை திருக்கரம் நிற்புருவம் காக்க வேண்டும்
சத்திய தயாநிதி அன்னதானப் பிரபு சபரிமாமலை சுவாமியே

விழிகளால் நின் பேரழகினைப் பருகிட விழிகளை காக்க வேண்டும்
இமை சற்றும் அசையாமல் இருக்கின்ற பாலனே இமைகளை காக்க வேண்டும்
மொழிகளால் நின் திருப்புகழினைப் பாடிட இதழ்களைக் காக்க வேண்டும்
அழியாத செல்வமே அகலாத தெய்வமே அழுதமலையின் அதிபனே

நந்தா விளக்காக நெஞ்சிலே நின்றவா நாசியைக் காக்க வேண்டும்
நாவுள்ள வரையிலும் நடுநிலை தவறாமல் வார்த்தையை காக்க வேண்டும்
செந்தாமரைக்கரம் செந்தேந்தி அமர்ந்தவா செவிகளை காக்க வேண்டும்
சித்துக்கள் விளையாடும் அற்புதக் கற்பகம் அச்சங்கோவில் அரசே

முத்துச் சிரிப்பினால் பித்தாக்கும் மூர்த்தியை பற்களை காக்க வேண்டும்
தப்பித் தவறி நான் சொல் பிதறி பேசாமல் சொற்களை காக்க வேண்டும்
கட்டுக் கடங்காத கட்டழகு காளையே கன்னங்கள் காக்க வேண்டும்
எட்டுத் திசைகளிலும் கொடி கட்டி ஆள்கின்ற ஏகாந்த தீப ஒளியே

பின்னாலி ருந்து தெவரும் பிடித்தெனை தள்ளாமல் பிடரியை காக்க வேண்டும்
என்பாட்டு தேனாக எங்கும் முழங்கிட கழுத்தினை காக்க வேண்டும்
பொன்னாரம் மணியாரம் நின்னுருவம் அசைந்திட நெஞ்சினை காக்க வேண்டும்
பொன்னம்பலம் தன்னில் என்னாளும் அணைக்கின்ற பூங்காவனத் தேவனே

அன்னபூரணி எந்தன் இல்லத்திலே தங்கி அருசுவைகள் பெருக வேண்டும்
அரை வயிறு கால் வயிறு எனும் குறைகள் இல்லாது நிறைவயிறு காக்க வேண்டும்
வன்புலி வாகனன் என் தோளில் வழுவேற்றி தோள்களை காக்க வேண்டும்
வாழ்வெல்லாம் சுவாமிய சரணமென ஓதுவேன் வாபரின் தோழனே

வணங்கத் தவறாத வள்ளலே ஐயனே முழங்கைகள் காக்க வேண்டும்
வருக என வரவேற்க அருளாசி தந்து நீ முன்கையை காக்க வேண்டும்
முழு முதற்கடவுளே இருமுடிப்பிரியனே முதுகினை காக்க வேண்டும்
முருகனின் தம்பியே அரிகரன் புதல்வனே கலியுக கடவுள் நீயே

உள்ளம் கலங்காது ஊருக்கு உதவிட உள்ளங்கை காக்க வேண்டும்
வில்லாளி வீரனே நெய்விளக்கு ஏற்றிடும் விரல்களை காக்க வேண்டும்
நல்லதோர் இதயத்தை தந்து நான் நலமுற நகங்களை காக்க வேண்டும்
நாதமே, வேதமே, ஞானமே, மோனமே காந்தமலை ஜோதி நீயே

இடையிலே என் பெயரில் பழிஏதும் வாராமல் இடையினை காக்க வேண்டும்
துவண்டு நான் வீழாமல் துணிவுடன் வாழ்ந்திட துடைகளை காக்க வேண்டும்
அறியாது நான்செய்த பிழைகளை மன்னித்து குறிகளை காக்க வேண்டும்
கருணையின் வடிவமே கற்பூர ஜோதியே கரிமலை ஆளும் சீலா

கீழோர்கள் தயவுக்கு மண்டி போடாமல் என் முழங்கால்கள் காக்க வேண்டும்
காட்டுவழி சென்றாலும் நின் சங்கு சக்கரம் கணுக்கால்கள் காக்க வேண்டும்
நீ வாழும் மலையேற இறுதிவரை தளராது பாதங்கள் காக்க வேண்டும்
நிழலாக குளிர்தந்து நினைத்ததை கொடுத்திடும் சமரச குருநாதனே

காலையிலும் மாலையிலும் அந்தி சந்தி வேளையிலும் கால்விரல்கள் காக்க வேண்டும்
காலன் எனைப்பாராமல் போவதற்கு வழி சொல்லி கவலைகள் தீர்க்க வேண்டும்
யாருக்கும் குனியாமல் ஐயப்பா எனும் நாமம் அச்சத்தை போக்க வேண்டும்
சீர்மேவு சபரிமலை வீரமணிகண்டனே நீதான் என் கவசமய்யா...எனைக் காக்கும் கவசமய்யா..

சுவாமியே சரணம் ஐயப்பா
சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா
சரணம் ... சரணம்.... ஐயப்பா

பஜனை பாடல்கள்

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய ரக்ஷ்மாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷ்மாம்

கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷ்மாம்

ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ரக்ஷ்மாம்

மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ரக்ஷ்மாம்

ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ரக்ஷ்மாம்

பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரக்ஷ்மாம்

ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய பாஹிமாம்
ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ரக்ஷ்மாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீச சபரிகிரீச சபரிகிரீச ரக்ஷ்மாம்

வெங்கடேச வெங்கடேச வெங்கடேச பாஹிமாம்
ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ரக்ஷ்மாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீ ராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷ்மாம்

ஆஞ்சனேய ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷ்மாம்

கணேசா சரணம்

1. கணேசா சரணம் சரணம் கணேசா
கணேசா சரணம் சரணம் கணேசா  (கணேசா)

2. கதியெனக் கருள்வாய் சரணம் கணேசா
கருணையின் வடிவே சரணம் கணேசா (கணேசா)

3. சங்கடம் தீர்ப்பாய் சரணம் கணேசா
சண்முக சோதரா சரணம் கணேசா (கணேசா)

4. சக்தியின் மைந்தா சரணம் கணேசா
சாஸ்தா சோதரா சரணம் கணேசா (கணேசா)

5. முதல்வனும் நீயே சரணம் கணேசா
முனிதொழும் தேவா சரணம் கணேசா (கணேசா)

6. அகந்தை அழிந்திடும் சரணம் கணேசா
அன்பில் உறைந்திடும் சரணம் கணேசா (கணேசா)

7. கரிமுகன் நீயே சரணம் கணேசா
கதியெனத் தொழுவோம் சரணம் கணேசா (கணேசா)

8. மூஷிக வாகனா சரணம் கணேசா
மோதக ஹஸ்தா சரணம் கணேசா (கணேசா)

9. பார்வதி பாலா சரணம் கணேசா
பாகவதப் பிரியா சரணம் கணேசா (கணேசா)

பிள்ளையார் துதி

1. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

2. ஆற்றங்கரை மீதிலே அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

3. ஆனைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்
பானை வயிறு படைத்தவர் பக்தர் குறைத்தீர்த்தவர்

4. மஞ்சனிலே செய்யினும் மண்ணனாலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்

5. ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்

6. அவல் பொரிக்கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும்
கவலை யின்றித் திண்ணுவார் கஷ்டங்களை போக்குவார்

7. கலியுகத்து விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம்போல் சுற்றுவார்.

அரிஹரோ ஹரா சுவாமி

அர ஹரோ ஹரா சுவாமி அரஹரோஹரா
அர ஹரோ ஹரா சுவாமி அரஹரோஹரா

1. திருப்பரங் கிரி தீரனுக்கு அரஹரோஹரா
தெய்வயானை மணாளனுக்கு அரஹரோஹரா
செந்தில் வளர் கந்தனுக்கு அரஹரோஹரா
செஞ்சுடர் வேல் வேந்தனுக்கு அரஹரோஹரா

2. பழனிமலை வேலனுக்கு அரஹரோஹரா
பாலா பிஷேகனுக்கு அரஹரோஹரா
சுவாமிமலை நாதனுக்கு அரஹரோஹரா
சுப்ரமண்ய மாணவர்க்கு அரஹரோஹரா

3. தணிகைமலை செல்வனுக்கு அரஹரோஹரா
தனித்து நின்ற குமரனுக்கு அரஹரோஹரா
சோலைமலை முருகனுக்கு அரஹரோஹரா
சொகுசுக்கார வேலனுக்கு அரஹரோஹரா

4. கந்தன் கடம்பனுக்கு அரஹரோஹரா
கதிர்காம வேலனுக்கு அரஹரோஹரா
சிக்கல் சிங்காரனுக்கு அரஹரோஹரா
சிங்கார வேலனுக்கு அரஹரோஹரா

5. எட்டுக்குடி வேலனுக்கு அரஹரோஹரா
எங்குள் குல தேவனுக்கு அரஹரோஹரா
மருதமலை மன்னனுக்கு அரஹரோஹரா
மாந்தர் தொழும் மாறனுக்கு அரஹரோஹரா

6. வெள்ளிமலை வேலனுக்கு அரஹரோஹரா
வள்ளி மணாளனுக்கு அரஹரோஹரா
அபிஷேகப் பிரியனுக்கு அரஹரோஹரா
ஆனந்த வடிவனுக்கு அரஹரோஹரா

ஐயப்பசாமி - ஆறுமுகசாமி

1. சரணம் சாமி சரணம்சாமி ஐயப்பசாமி
அரோகரா அரோகரா ஆறுமுகசாமி

2. பம்பையிலே உதித்தவராம் ஐயப்பசாமி
பொய்கையிலே உதித்தவராம் ஆறுமுகசாமி
திருமாலின் திருமகனாம் ஐயப்பசாமி
திருமாலின் மருமகனாம் ஆறுமுகசாமி

3. சபரிமலை மீதிருப்பார் ஐயப்பசாமி
பழனிமலை மீதிருப்பார் ஆறுமுகசாமி
புலிக் கொடியைக் கொண்டவராம் ஐயப்பசாமி
சேவற்கொடி அழகனையப்பா ஆறுமுகசாமி

4. ஐந்து மலைக் கதிபதியாம் ஐயப்பசாமி
ஆறு மலைக் கதிபதியாம் ஆறுமுகசாமி
வில்எடுத்து வருபவராம் ஐயப்பசாமி
வேல் எடுத்து வருபவராம் ஆறுமுகசாமி

5. காடுமலை நாடியவர் ஐயப்பசாமி
குன்றேறி நின்றவர்தான் ஆறுமுகசாமி
வாபரைத் துணைக்கொண்டார் ஐயப்பசாமி
பாகுவைத் துணைக்கொண்டார் ஆறுமுகசாமி

6. சரண கோஷ பித்தராம் ஐயப்பசாமி
அரோகர பித்தராம் ஆறுமுகசாமி
மகிஷியைக் கொன்றவராம் ஐயப்பசாமி
சூரனை வென்றவராம் ஆறுமுகசாமி

7. இன்று வரை பிரம்மச்சாமி ஐயப்பசாமி
இருதாரம் கொண்டவராம் ஆறுமுகசாமி
இருமுடி பிரியனையா ஐயப்பசாமி
காவடி பிரியனையா ஆறுமுகசாமி

8. நெய்யா அபிஷேகராம் ஐயப்பசாமி
பாலா அபிஷேகராம் ஆறுமுகசாமி
ஊமைக் கருள் புரிந்தவராம் ஐயப்பசாமி
ஒளவைக்கு உபதேசித்தவர் ஆறுமுகசாமி

9. புலியேறி வருபவராம் ஐயப்பசாமி
மயிலேறி வருபவராம் ஆறுமுகசாமி
பாணக்க பிரியராம் ஐயப்பசாமி
பஞ்சாமிர்தப் பிரியராம் ஆறுமுகசாமி

10. தை மகர கீர்த்தியவர் ஐயப்பசாமி
தை பூச மூர்த்தியவர் ஆறுமுகசாமி
அருள் வழங்கும் வள்ளலவர் ஐயப்பசாமி
அழகு தமிழ் ஆனழகர் ஆறுமுகசாமி

சமயபுரம் மாரியம்மா

1. சமயபுரத்தாளே மாரியம்மா - அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

2. மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் - அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம்

3. துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா - அம்மா
தூயவனே என் தாயே மாரியம்மா

4. பட்டு பீதாம்பரத்தில தாவணியும் - உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்

5. எட்டு திசைகளையும் ஆண்டவனே - அம்மா
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா

6. கத்தி கதறுகிறோம் கேட்கலையோ - தாயே
கல்லேதான் உன் மனமும் கரையலையோ

7. உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பில் - எங்கள்
உமையவளே தாயே மாரியம்மா

8. காலிற் சதங்கை ஒலி காதைத் துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா

9. பூவாடை வீசுதம்மா அம்மா
பூமகளே என் தாயே மாரியம்மா

தாயே சமயபுரத்தாளே!
எல்லாம் உன் அடிமையே!
எல்லாம் உன் உடமையே!
எல்லாம் உன் செயலே!

செல்லாத்தா செல்ல மாரியாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
பொன்னாத்தா உன்னைக் காணாட்டா - இந்த
கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா  (செல்)

தென்னை மரத்தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தென்னை மரத் தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா - நாங்கள்
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல
வழிதனையே காட்டி விடு மாரியாத்தா (செல்)

பசும்பாலை கறந்துகிட்டு கறந்த பாலை எடுத்து கிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி நீ பாம்பாக மாறி அதை
பாங்காக குடித்து விட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா - இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்)
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா - எங்கள்
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா

சன்னதியில் கட்டுங்கட்டி

1. சன்னதியில் கட்டுங்கட்டி தன்னே னானான - நாங்க
சபரிமலை பயணமுங்க தில்லேலே லேலோ

2. கார்த்திகையில் மாலைப்போட்டு தன்னே னானான - நாங்க
கடும் பயணம் போறோமுங்க தில்லேலே லேலோ

3. மார்கழியில் கட்டுந்தாங்கி தன்னே னானான - நாங்க
மணிகண்டனைப் பார்க்க போறோம் தில்லேலே லேலோ

4. எரிமேலியில் பெட்டை துள்ளி தன்னே னானான - நாங்க
ஏறிடுவோம் சபரிமலை தில்லேலே லேலோ

5. அழுதையிலே ஸ்நானம் செய்து தன்னே னானான - நாங்க
அன்னதானம் மிட்டிடுவோம் தில்லேலே லேலோ

6. பம்பையிலே ஸ்நானம் செய்து தன்னே னானான - நாங்க
சக்தி பூஜை கொண்டாடுவோம் தில்லேலே லேலோ

7. ஐந்து மலை கடந்து சென்று தன்னே னானான - நாங்க
ஐயப்பனை காணப் போறோம் தில்லேலே லேலோ

8. மலையாம் மலை கடந்து சென்று தன்னே னானான - நாங்க
மகர ஜோதி காணப் போறோம் தில்லேலே லேலோ

9. பதினெட்டாம் படியேறி தன்னே னானான - நாங்க
பாவங்களைத் தீர்க்க போறோம் தில்லேலே லேலோ

தள்ளாடித் தள்ளாடி

தள்ளாடித் தள்ளாடி நடை நடந்து - நாங்க
சபரிமலை நோக்கி வந்தோமய்யா (தள்ளாடி)

1. கார்த்திகை நல்ல நாளில் மாலையும் போட்டுகிட்டு
காலையும் மாலையும் சரணங்கள் சொல்லிகிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சரணங்கள் சொல்லிக் கொண்டு வந்தோமையா
சபரிமலை நோக்கி வந்தோமையா (தள்ளாடி)

2. இருமுடியைக் கட்டிகிட்டு இன்பமாக பாடிகிட்டு
ஈசன் மகனெ உந்தன் இருப்பிடத்தை தேடிக்கிட்டு (தள்ளாடி)

3. வேட்டைகளும் துள்ளி கிட்டு வேஷங்களும் போட்டுகிட்டு
வேடிக்கையாக நாங்கள் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு
சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் (தள்ளாடி)

4. காணாத காட்சியெல்லாம் கண்ணாரக் கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையாத் தாண்டிகிட்டு
பம்பையில் குளித்து விட்டு பாபமெல்லாம் போக்கி விட்டு
பக்தரெல்லாம் கூடி நின்று பஜனைகள் பாடிக்கிட்டு (தள்ளாடி)

5. நீலிமலை ஏற்றத்திலே நின்று நின்று ஏறிக்கிட்டு
நெஞ்சம் உருகி உன்னை நினைச்சுமே பார்த்துகிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே (தள்ளாடி)

6. படியேறி போகும் போது பாங்காகக்காய் உடைத்து
பாலனான உந்தனையே பார்த்து சொக்கிகிட்டு
நெய்யிலே குளிக்கும் போது நேரிலேயே பார்த்து கிட்டு
ஐயா சரணம் என்று அலறியடிச்சுக் கிட்டு (தள்ளாடி)

அல்லி மலர் வாசமது

1. அல்லி மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ஹரி ஹர புத்திரனின் மேலே மணக்குது

2. அத்தர் புனுகு வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமியின் மேலே மணக்குது

3. மல்லிகை பூ மரிக்கொழுந்து எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
மணிகண்ட சுவாமியின் மேலே மணக்குது

4. முல்லை மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
மோகன பாலனின் மேலே மணக்குது

5. ரோஜா மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ராஜாதி ராஜனவன் மேலே மணக்குது

6. காட்டுமல்லி நாட்டுமல்லி எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
கருணாகர மூர்த்தியின் மேலே மணக்குது

7. பரிமள சாம் பிராணி எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
எரிமேலி சாஸ்தாவின் மேலே மணக்குது

8. கற்பூர வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
காந்தமலை வாசனவன் மேலே மணக்குது

9. சந்தன வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
சபரி கிரி மலையின் மேலே மணக்குது

10. குங்குமப் பூ ஜவ்வாது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
குளத்துப் புழை பாலகனின் மேலே மணக்குது

11. பன்னீரும் குல் கந்தும் எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
பந்தள செல்வனவன் மேலே மணக்குது

12. மகர மாதம் ஜோதியது எங்கே தெரியுது
அது எங்கே எங்கே தெரியுது
கரந்தமலை உச்சியின் மேலே தெரியுது

13. மஞ்ச பொடி மகிமையது எங்கே தெரியுது
அங்கே எங்கே எங்கே தெரியுது
மஞ்ச மாதா தேவியவள் மேலே தெரியுது

14. விபூதி அபி÷க்ஷகமது எங்கே நடக்குது
அது எங்கே எங்கே நடக்குது
வீரமணிகண்டன் மேலே நடக்குது

15. நெய்யா அபிஷேகமது எங்கே நடக்குது
அது எங்கே எங்கே நடக்குது
சாஸ்தாவாம் ஐயப்பனின் மேலே நடக்குது

16. சரண கோஷ சப்தமது எங்கே ஒலிக்குது
அது எங்கே எங்கே ஒலிக்குது
சுவாமியாம் ஐயப்பன் மலையில் ஒலிக்குது.

சாமி சாமி ஐயப்பா

1. சாமி சாமி ஐயப்பா சபரிமலை ஐயப்பா
சபரிமலை ஐயப்பா சாஸ்தாவே ஐயப்பா

2. அச்சங்கோயில் அரசனே சாமி சாமி ஐயப்பா
ஆதரிக்க வேண்டுமையா சபரிமலை ஐயப்பா

3. குளத்துப்புழை பாலகரே சாமி சாமி ஐயப்பா
குறைகளையே நீக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

4. கணபதியின் தம்பியே சாமி சாமி ஐயப்பா
கவலைகளைப் போக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

5. வாபரின் கோட்டை ஐயாசாமி சாமி ஐயப்பா
வரங்களையே கொடுக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

6. காளைகட்டி ஆஸ்ரமம் சாமி சாமி ஐயப்பா
களைப்பார வந்து நின்றோம் சபரிமலை ஐயப்பா

7. அமுதா நதியிலே சாமி சாமி ஐயப்பா
ஆனந்தமாய் குளித்து வந்தோம் சபரிமலை ஐயப்பா

8. கரிமலை உச்சியிலே சாமி சாமி ஐயப்பா
கடினமாக ஏறிவந்தோம் சபரிமலை ஐயப்பா

9. பம்பா நதியிலே சாமி சாமி ஐயப்பா
பாவமெல்லாம் போக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

10. நீலிமலை ஏற்றத்திலே சாமி சாமி ஐயப்பா
நிற்க வைத்து பார்க்கிறியே சபரிமலை ஐயப்பா

11. சரங்குத்தி வந்தடைந்தோம் சாமி சாமி ஐயப்பா
சன்னிதானம் கண்டோமே சபரிமலை ஐயப்பா

12. நெய்யப்பிஷேகத்தோடு சாமி சாமி ஐயப்பா
நேரில் காண வந்தோம் சபரிமலை ஐயப்பா

13. குற்றம் குறை எதுவானாலும் சாமி சாமி ஐயப்பா
குறைகளையே நீக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா.

ஓம் குருநாதா ஐயப்பன்

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குரு நாதா ஐயப்பா (ஓம்)

அரனார் பாலா ஐயப்பா
அம்பிகை பாலா ஐயப்பா (ஓம்)

ஆபத் பாந்தவா ஐயப்பா
ஆதி பரா பரா ஐயப்பா (ஓம்)

இருமுடிப் பிரியா ஐயப்பா
இரக்க மிகுந்தவா ஐயப்பா (ஓம்)

ஈசன் மகனே ஐயப்பா
ஈஸ்வரி மைந்தா ஐயப்பா (ஓம்)

உமையாள் பாலா ஐயப்பா
உறுதுணை நீயே ஐயப்பா (ஓம்)

ஊக்கம் தருபவர் ஐயப்பா
ஊழ்வினை அறுப்பவர் ஐயப்பா (ஓம்)

எங்கும் நிறைந்தவர் ஐயப்பா
எங்கள் நாயகா ஐயப்பா (ஓம்)

பம்பையின் பாலா ஐயப்பா
பந்தள வேந்தா ஐயப்பா (ஓம்)

வன்புலி வாகனா ஐயப்பா
வனத்திலிருப்பவர் ஐயப்பா (ஓம்)

சபரிகிரீசா ஐயப்பா
சாஸ்வதரூபா ஐயப்பா (ஓம்)

பதினெட்டாம் படிகளே சரணம்

1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

4. நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

5. ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

6. ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

7. ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

8. எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

9. ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

10. பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

11. பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

12. பன்னிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

13. பதின்மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

14. பதினான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

15. பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

16. பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

17. பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

18. பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

19. படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

20. படி தொட்டு வந்தனம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

வழிநடைப் பாடல்

சாமியே - ஐயப்போ
ஐயப்போ - சாமியே
பள்ளிக்கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும் - காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்
நெய் அபிஷேகம் - சுவாமிக்கே
சுவாமிக்கே - நெய் அபிஷேகம்
பால அபிஷேகம் - சுவாமிக்கே
தேன் அபிஷேகம் - சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம் - சுவாமிக்கே
பகவானே - பகவதியே
பகவதியே - பகவானே
குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம் - குண்டும் குழியும்
ஏந்திவிடையா - தூக்கிவிடைய்யா
தூக்கிவிடைய்யா - ஏந்திவிடைய்யா
வில்லாளி வீரனே - வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே - வில்லாளி வீரனே
பாதபலம் தா - தேக பலம் தா
தேகபலம் தா - பாத பலம் தா
கற்பூர தீபம் - சுவாமிக்கே
அவிலும் மலரும் - சுவாமிக்கே
காணிப்பொன்னும் - சுவாமிக்கே
இருமுடி கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - இருமுடி கட்டு
கற்பூரஜோதி - சுவாமிக்கே
சுவாமிமாரே - ஐயப்பமாரே
ஐயப்பமாரே - சுவாமிமாரே
ஈஸ்வரனே - ஈஸ்வரியே
ஈஸ்வரியே - ஈஸ்வரனே
ஐயப்பபாதம் - சுவாமிபாதம்
சுவாமிபாதம் - ஐயப்பபாதம்
தாங்கிவிடப்பா - ஏந்திவிடப்பா
ஏந்திவிடப்பா - தாங்கிவிடப்பா
கடினம் கடினம் - கரிமலை ஏற்றம்
கரிமலை ஏற்றம் - கடினம் கடினம்
தூக்கிவிடப்பா - ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம் - தூக்கிவிடப்பா
கதலி பழமும் - சுவாமிக்கே
சுவாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும்
கட்டுங்கட்டி - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - கட்டுங்கட்டி
யாரைக்காண - சாமியைக்காண
சாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும்
பேட்டை துள்ளல் - சுவாமிக்கே
பெருவழி பாதை - சுவாமிக்கே
கருடன் வருவது - சுவாமிக்கே
ஆபரண பெட்டி - சுவாமிக்கே
தேவன் மாரே - தேவி மாரே
தேவி மாரே - தேவன் மாரே
தேவனே - தேவியே
தேவியே - தேவனே
கடவுள் வணக்கம் - காலை மாலை
காலை மாலை - கடவுள் வணக்கம்
சுவாமியே - ஐயப்போ-ஐயப்போ சுவாமியே

மாலையை அவிழ்த்து விரதத்தினை முடித்துக் கொள்ளும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.சுவாமியே சரணமய்யப்பா.
மாலை அணைந்து சபரி மலைக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் இந்த மந்திரங்கள் சுவாமிகளுக்கு தமிழில் உதவும் என நினைத்து இந்த பதிவை பதிவிடுகிறேன்.
சுவாமி சரணம் ஐயப்பா
விநாயகர் வணக்கம்

கலை நிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவரு மொருபரை சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை சரணம் சரணம்
அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினை கெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்
வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்
சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்

மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்,

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஐயப்பன் 108 சரணக் கோவை

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா

ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா

ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!

ஐயப்பன் கவசம்

கணபதி துதி

அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே
இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே
உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே
எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே
ஐங்கரனே அருள் புரிவாய்.

காப்பு

ஹரிஹரபுத்ரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை அறுமுகன் தம்பியை
சபரிகிரீசனை, சாந்த ஸ்வரூபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோம்
ஐயப்ப தேவன் கவசமிதனை
அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வருமே

நூல்

மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலிவாஹனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணியமூர்த்தியே வருக வருக
பூத நாயகா வருக வருக
புஷ்களை பதியே வருக வருக

பொன்னம்பலத்துறை ஈசா வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக
வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீர மணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக
ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகற்றிட அன்பனே வருக
இருவிளை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக

பதினென்படியை மனத்தில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப்பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே
சபரிகிரீசனை நினைத்தே நீரிடத்
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்

ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க
அவினியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர்
சரணம் சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்குரு நாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்.

வேண்டுதல்

சிவனார் மகன் என் சிரசினைக் காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பிஎன் கண்ணிணைக் காக்க
நாராணன் பாலன் நாசியைக் காக்க
இருமூர்த்தி மைந்தன் இருசெவி காக்க
வாபரின் தோழன் வாயினைக் காக்க
பம்பையின் பாலன் பற்களைக் காக்க
நான்முகப் பூஜீயன் நாவினைக் காக்க
கலியுக வரதன் கழுத்தினைக் காக்க
குமரன் தம்பி என் குரல்வளை காக்க

புஷ்களை நாதன் புஜங்களைக் காக்க
முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க
வீரமணி கண்டன் விரல்களைக் காக்க
கயிலை மைந்தன் மார்பினைக் காக்க
மணிகண்ட தேவன் மார்பினைக் காக்க
வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க
முழுமுதற் கடவுள் முதுகினைக்காக்க
இருமுடிப்பிரியன் இடுப்பினைக் காக்க
பிரம்பாயுதன் என் பிட்டங்கள் காக்க
தர்மசதஸ்தா என் துடைதனைக் காக்க

முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
பந்தள பாலன் பாதத்தினைக் காக்க
விஜயகுமரன் விரல்களைக் காக்க
அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக்க
ஆரியங்கா ஜோதி அன்புடன் காக்க
காட்டாளரூபி காலையில் காக்க
நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க

மாலின் மகனார் மாலையில் காக்க
ஹரிஹர சுதனார் அந்தியில் காக்க
இன்பமய ஜோதி இரவினில் காக்க
எருமேலி சாஸ்தா என்றுமே காக்க
ஹரியின் மகனார் அநுதினம் காக்க
நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
இருமுடி ஈசன் இடப்புறம் காக்க
காக்கக் காக்க கருணையால் காக்க
பார்க்கப் பார்க்க பாபம் பொடிபட

இம்மையும் மறுமையும் இல்லா தொழிந்திட
ஈசன் மகன்எனை என்றுமே காக்க
கொடிய விஷயங்களும் கொள்ள நோய்களும்
குருதியைக் குடிக்கும் துஷ்டப் பேய்களும்
காந்தமலைதனைக் கருத்தில் கொண்டிட
கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய்
பில்லி, சூனியம் பலவித வஞ்சனை
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய்
பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய்

வாதம், பித்தம் சிலேட்சுமத் துடனே
வாந்தியும், பேதியும் வலிப்பும் சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணுகாமல்
என்றுமே காப்பாய் எருமேலி தேவா
கல்வியும், செல்வமும் கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க
நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா
காமம், குரோதம், லோபம் மோஹம்
மதமாச்சர்ய மெனும் ஐம்பெரும் பேய்கள்

என்றுமே என்னை அணுகிவிடாமல்
ஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய்
சூது, பொறாமை, பொய் கோபமில்லாமல்
சோரம், லோபம் துன்மார்க்கம் கல்லாமல்
வேத நெறிதனை விலகி நில்லாமல்
வீரமணி கண்டா வரமெனக் கருள்வாய்
மூப்பும், பிணியும், வறுமையும், பசியும்
வந்தனை வாட்டி வதை செய்யாமல்
உள்ளன் புடனே உன்திருநாமம்
அநுதினம் சொல்ல அருள் தருவாயே

நமஸ்காரம்

ஹரிஹரபுத்ரா அன்பா நமோ நமோ
சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ
ஐயங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ
பொன்னம் பலத்துறை புண்ணியா நமோ நமோ
புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ
மஹிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ
சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்

அகஸ்தியர் அருளிய ஐயப்ப மாலை

1. விருப்பமும் வெறுப்புமின்றி வினைப் பயன் எல்லா முந்தன்
திருப்ப தம் தன்னில் வைத்து திருப்தியும் திறனு முற்று
ஒருப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடாது அன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே

2. வையமும் வானும் வாழ மறை முதல் தருமம் வாழ
செய்யும் நற் செயல்கள் வாழத் திருவருள் விளக்கம் வாழ
நையும் ஊழுடையார் தத்தம் நலிவகன்றினிது வாழ
ஐயனாய் அப்பனானான அவர் பதம் வணக்கம் செய்வோம்

3. மெய்யெல்லாம் திரு நீறாக வழியெலாம் அருள் நீராக
பொய்யில்லா மனத்தராகி புலனெல்லாம் ஒருத்தராகி
வெய்ய வேறற்றவுள்ள விளக்க முற்றான் பால் விம்மி
ஐயனே ஐயப்பா என்பார் அவர் பாதம் வணக்கம் செய்வோம்

சபரிமலை மகாத்மியம்

4. சக்தியெல்லாம் சபரிமலை தத்வமெலாம் சபரிமலை
சித்திமெலாம் சபரிமலை மோனமெலாம் சபரிமலை
முக்தியெலாம் சபரிமலை சிற்பரமாம் சபரிமலை
புத்தியெலாம் சபரிமலை போற்றிடுவாய் நீ மனமே

5. ஓங்காரமான மலை ஓதுமறை ஓங்குமலை
ஹ்ரீங்கார மந்த்ரமலை ரிஷிகணங்களேத்து மலை
ஆங்காரம் அழிக்கும் மலை ஆனந்தம் கொழிக்கும் மலை
பாங்கான சபரிமலை பல்வளஞ்சேர் மலை வளமே

6. கோடி மலைகளிலே கொழிக்கும் மலை எந்த மலை
வஞ்சி மலை நாட்டினிலே உயர்ந்த மலை எந்த மலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை
ஜனகாதி முனிவ ரெல்லாம் தேடி வரும் சபரிமலை

7. ஹரிஹர புத்ரா போற்றி
அன்பான குருவே போற்றி
புஷ்களை ரமணா போற்றி
எனையாள் குருவே போற்றி
கண்கண்ட நாதா போற்றி
சபரிமலை வாசா போற்றி
கஞ்சமலர்ப் பாதா போற்றி
ஐயனே போற்றி போற்றி
முந்திய சிவனார் போற்றி
மூர்க்கனும் அசுரன் போற்றி
இந்திர வரவும் போற்றி
ஈசனார் வேசம் போற்றி
பந்தடி கமலம் வெற்றி
வந்ததோர் விரதம் போற்றி
சந்ததியான மூர்த்தி தர்ம சாஸ்தாவே போற்றி போற்றி

ஓம் தேவ தேவோத்தம தேவதா ஸார்வ பௌம
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயக
ஸ்ரீ பூர்ணா புஷ்களா ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர
சுவாமின்.........ஜெய விஜயீ பவ

விருத்தம்

1. ஆனைமுகத்தோன் தம்பி அருள் குமரனுக் கிளையோன்
வானவர் போற்றும் வாணி வந் தெனக்கு அருள வேனும்
சேனையில் தலைவர் போற்றும் தென் குளத்தூரிலையன்
கானக விளையாட்டெல்லாம் கருத்துடன் போற்றாய் நெஞ்சே

2. அந்தணர் முனிவர் சூழ் அற்புத சபையைப் போற்றி
மந்திரம் கையிலேந்தும் வாழ்குளத்தூரான் மீதில்
சிந்தையில் உதித்த செல்வம் செப்புமென் கவி விளங்க
கந்தனும் குருவும் வாணி கஜமுகன் காப்பதாமே

3. சாஸ்தா நமக்குண்டு தாய் போல் வருவார் இந்தத் தனி வழிக்கே
பார்த்தால் நமக்கு பயமேது மில்லை பயந்து பயந்து
ஆற்றாமல் சொல்லி அபய மிட்டோடி வரும் சுரர்தமை
கார்த்தே வரும் கடிய குன்றேறிய காவலனே

4. வாழையும் தெங்கும் வரிகை பலாவுடனே மாங்கனியும்
சோலையும் அருள் வண்டுலாவும் குளத்தூர் பதியில் சென்றால்
கங்கா நதிக்கும் ஹிமசேது மட்டுக்கும் இந்த கலியுகத்தில்
உன் காலில் அதிசயம் போல் கண்டதில்லை என்பவர்க்கு
சிங்கார வஞ்சிமலையேறி சனிவாரம் தொழுதவர்க்கு
மங்காத சர்வ பீஷ்டமும் கொடுப்பதாமே

பிரார்த்தனை

1. குளத்தூரிலேயிருந்து குடியிருந்து அவதரித்து
வளர்த்ததொரு தாய் பெற்றெடுத்த மாதா உமக்கினையோ
களத்தூரில் பதின்குலக் கன்னியர்கள் தந்தசெல்வம்
குளத்தூரிலே அய்யனென்றால் குற்றமொன்றும் வாராதே

2. மாணிக்க மாலை மகிழ்மாலை பூமாலை
காணிக்கைக் கொண்டு வந்து காண்பார் தினந்தோறும்
ஆனிப் பொன் மார்பன் அழகன் குளத்தூரானை
பேனித் தொழாய் நெஞ்சே பிழைகளொன்றும் வராதே.

3. கற்சரடு பொற்பதக்கம் கனத்த முத்துச் சுவடியுமாய்
மெய் கனியாய் அணிந்திருக்கும் விரகா உன் திருமேனி
தக்க மிட்டு வரும் பேயைத் தடியெடுத்து தான் விரட்டும்
மிக்க நல்ல குளத்தூரான் வெள்ளைக் கல்லாதிபனே

4. தூங்கும் செவி யொதிக்கி துதிக்கை யொரு கொம்பில்
நீங்காத மலைபோல் நிற்கு மந்தக் குஞ்சரங்காள்
பூங்காவிலே இருந்து புண்ணியரைத்தான் நினைத்தால்
பாங்கான மத கரிகள் பனிமலை போல் அகன்றிடுமே

5. பாரச் சுமடெடுத்துப் பதினெட்டாம் குன்றேறி
ஏத்தமெல்லாம் ஏறி இளைத்து வரும் அந்நேரம்
வேர்த்த தெல்லாம் பன்னீராய் வென்சாமரை வீச
கதித்த வல்லி குளத்தூரான் காந்தமலை காவலனே

6. செண்டார்ந்த கையன் எங்கள் ஸ்ரீமான் எங்கள் பிரான்
வீரமணிகண்டா அநுதினமும் காத்தருள வேணுமையா
தந்தாமரை வளரும் தவமுனிவர் வான வரும்
கொண்டாடும் தென்னிசை கூடபர சாஸ்தாவே

7. சீருடன் புவியில் செழுத்தவே மன்னரைக் காக்க
வீருடன் புலியைத் தாங்கி விண்ணவர் மேய்க்க வந்தாய்
ஆவினில் பெரியோனாகி ஆரியங்காவையா னென்றும்
பூர்ணமாக ஐயன் பொற்பாதம் போற்றுவோம்.

விருத்தம்

1. நாள் கேட்டு முகூர்த்தமிட்டு நல்ல நாள் என்று சொல்லி
வீட்டைவிட்டு சுமடெடுத்துச் சிவசைலம் வீதியிலே
கூட்டமெல்லாம் கூடி குளத்தூரிலே நினைவாய்
தாஷ்டிகமாய் வழிநடத்தும் தர்மகுளத்தூரில் ஐயா

2. உற்றார் இருக்க உடன்பிறப்புத் தானிருக்கப்
பெற்றோரிருக்கப் புறப்பட்டேன் உன் காவல்
என் தந்தை மனமுருக சோதரன் கண்ணீர் பெருக
பந்து ஜன முருக பெற்ற மக்கள் தானுருக.

3. சொந்த மனையாள் தூண்டில் மச்சம் போல் துடிதுடிக்க
இந்த பிறவிகள் தீர்க்க இறக்க மில்லையோ சுவாமி
வியர்த்த தெல்லாம் பனிநீராம் வெண் சாமரம் வீச
காத்தவனே குளத்தூரான் சிவ காந்தமலை காவலனே

4. கல்லான மலையேறித் தடலேறிக் குன்றேறி
இல்லாமையால் அல்லவோ இந்த மலை ஏறுவதும்
வல்லான பக்ஷிகளும் பாண்டி பரதேசிக்களைக்
கொல்லாமல் காத்தருள் வாய் குளத்தூரில் ஐயனே

5. மேகம் இருண்டு வர விடுதிகளும் காணாமல்
காகம் போல் உமதடியேன் கலங்குவது கானீரோ
ஆக்கம் மிகத் தளர்ந்தேன் ஐயனே தென் குளத்தூர்
நாகம் அணிந்தவனே நல்லமலை சாஸ்தாவே

6. எதிர்காற்றும் மழையும் எடுத்தடி வைக்கவொட்டாமல்
பெரியாற்றின் கரையினிலே பரதவிக்கும் அந்நேரம்
அலையரமல் தோணிக் கட்டி அக்கரைக்கே கடத்திவிடும்
பலம் உமக்கு சாஸ்தாவே பரதேசிக் காவலனே

7. நம்பி வந்தேன் சன்னதியில் நன்மை தர வேண்டுமென்று
பாடி வந்தேன் உன் பெயரைப் பாக்கிய மிக தந்தருள்வாய்
பெற்றோரை போல் என் பிழை பொருத்து ஆதரிப்பாய்
விஸ்தார மணிமார்பா வெள்ளைக்கல் ஆதிபனே

8. உன்னை நம்பும் எங்களுக்கு ஒரு வினையும் வாராதுதென்று
நினைத்திருந்து காலமெல்லாம் ஏங்குதையா என் மனம்
ஓங்கி எனது மனம் ஒன்று பத்து நூராகும்
சங்கைக் கொண்டு திரு வாரியங் காவுவை யாவே

9. கச்சை கட்டி முண்டுத்தி மூங்கில் தடி பிடித்து
பதினெட்டாம் குன்றேறிப் பார்க்க வந்தேன் உன் மகிமை
பாரசுமடெடுத்து பதினெட்டாம் குன்றேறி
ஏற்றமெல்லாம் கடந்து இளைப்பாறும் அந்நேரம்

10. பொல்லாத மழைப் பெய்ய புனலாறு பெருகிவர
கல்லானை மிதந்துவர காட்டெருமை மிரண்டோட
மெய்யாகும் கன்னீயர்கள் மேதினியிற் குரவையிட
ஐயன் திருவுள்ளம் திரு ஆரியங்காவு ஐயாவே

11. ஐயா உன் சன்னதியில் நம்பிவந்தேன் ஆண்டவனே
அக்ஷணமே வந்துதவும் சபரிமலை சாஸ்தாவே
ஆதியந்தம் இல்லாத அற்புதனே குரு நமக்கு
வேத ஒளியாம் சபரி மெய்யனும் ஆண்டவனே

ஐயப்பன் பிரார்த்தனை விருத்தம்

1. கலியுகம் தன்னிலே கண்கண்ட கடவுளென்று
காத்திருக்கிறோம் ஐயா
ஏழையான அடியேனுக்கு நின் திருப்பாத தரிசனம்
தந்தருள தாமதம் ஏனோ
அனாத ரக்ஷகன் என்று அனவரதமும் போற்றிடும்
அடியார்க்கு நீர் அருள் ஞான
மெய்த் தருவாய் வந்து நல்லாதரவு அளித்து ஆட்கொண்டருள்வாய்
தவயோக சித்தாந்த சபரி பீடாச்ரமஸ்தான மெய் ஞான குருவே

2. பரதேசியான அடியேன் அனுதினமும் வேண்டுவது
பாடினால் நின் சரண கீதங்கள் பாட வேண்டும்
உடுத்தால் உன் நீல ஆடை உடுக்க வேண்டும்
அணிந்தால் நின் துளஸி மாலை அணியவேண்டும்
சுமந்தால் நான் இரு முடி சுமக்க வேண்டும்
ஏறினால் நின் சபரிகிரி ஏற வேண்டும்
இரு முடிச் சுமையதும் சுமக்க முடியாமல் நான்
சரிமலை ஏறி வருந்துகின்ற சமயம்
தயவுடன் வந்தெனக்கு பாத பலமும் தந்து
திருவடி தந்தருள் வாய்
தவயோக சித்தாந்த சபரி பீடாச் ரமஸ்தான
மெய் ஞான குருவே

தாயாகி தந்தையுமாய்

தாயாகி தந்தையுமாய் நீயும் வளர்த்தாய்
தரணியிலே உன்னைப் போல தெய்வம் இல்லை ஐயப்பா
மானிடரை வாழவைக்கும் தெய்வமன்றோ நீயே
மனதை யெல்லாம் அடங்க வைக்கும் சக்தியன்றோ நீயே
இச்சையெல்லாம வென்றுவிட்ட வீரனன்றோ
இம்மையிலும் மறுமையிலும் குருவுமய்யா
ஹரிஹரனின் மைந்தனாக கலியுகத்தில் பிறந்தாய்
பந்தளத்து பாலகனாய் பாரினில் நீ வளர்ந்தாய்
அரக்கிதனை வதம் செய்து சபரிமலை மீது
அமர்ந்து என்னை ரக்ஷிக்கும் ஐயப்பா தெய்வமே

சபரி பஞ்சங்கம்

கருணாகரக் கடவுள் ஹரனாரிடம் சூர்ப்பகா ஸுரன்
தவமிருந்து கை வைத்த பேர் சிரஸுதுய்ய
நீறாகவே கருதினான் ஒரு வரத்தை
பரம குருவாம் ஹரன் அருளினோ மென் ரவுடன் அவன்
சிரஸினில் கரம் வைத்திடச் சென்றடுத்தான்
வள்ளல் ஐவரளியில் ஒளிந்தா ரென்று மாலறிந்து ஓடிவந்து
தருண மோஹினியாய் அஸுரனை வெண்ணீறாக்கிச்
சம்புவை அணைந்து பெற்ற ஸந்ததிப் பொருளாக வந்த
என் கண்மணியே! ஸங்கடம் தீரும் ஐயா!
சரணம் அய்யப்பா என்று உருகும் அன்பர்க்கு நீர்
ஸகல ஸெள பாக்கியமும் தந்து உதவும்
தவயோக சித்தாந்த சபரி பீடாச் ரம ஸ்தான
மெய் ஞான குருவே!

பால் குருநாதர்

1. பால் குருநாதா சரணமய்யப்பா
எங்கள் குருநாதனே சரணமய்யப்பா
நல்ல வழி தந்திடுவார் சரணமய்யப்பா - எங்கள்
நடமாடும் தெய்வமே சரணமய்யப்பா (பால்)

2. திருமந்திர நகர மதில் மகிழும் பாலன் - ஈசன்
திருவருளை பெற்றவராம் சரணமய்யப்பா
அன்புள்ளம் கொண்டவராம் சரணமய்யப்பா - எங்களை
ஆதரிக்கும் தெய்வமாம் சரணமய்யப்பா (பால்)

3. இல்லை இல்லை இல்லை என்றும் ஏங்கும் மாந்தரின்
உள்ளம் தனைக் குளிர வைப்பார் சரணமய்யப்பா
பிணியகல வழி வகுக்கும் என் குருநாதன் - ஞான
பணிபுரிய அருள் புரிவார் சரணமய்யப்பா (பால்)

4. வினை யறுத்து பவமழிக்கும் என் குருநாதன்
நம்மைத் துணை இருந்து காத்திடுவார் சரணமய்யப்பா
பக்தி முக்தி தாயகனே சரணமய்யா - நம்
பக்தர்களை காத்திடுவார் சரணமய்யப்பா (பால்)

ஓம் நமோ ஐயப்ப தேவா

1. ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ ஐயப்ப தேவ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ நமோ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ ஐயப்ப தேவ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ  (ஓம்)

2. எனது நான் எனச் செருக்கி மமதை உற்றலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப மூர்த்தியே
ஒருகனத்துள் என துளத்தை உருக வைத்த எனது நாமம்
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ (ஓம்)

3. அரியுமான சிவனுமான ஆண்டவனின் மைந்தனாகி
அல்ல லெல்லாம் தீர்க்க வந்த அன்பு தெய்வமே
அன்பினாலே ஆளவந்த அன்பர்களைக் காத்திடவே
அவதரித்து பூவுலகம் வந்த சாமியே (ஓம்)

4. ஆதியோடு அந்தமாகி ஆரியங்காவு பாலனாகி
ஆதிசக்தி மகனுமாக வந்த மூர்த்தியே
ஆண்டவனின் பிள்ளையான எங்களையே காத்திடவே
ஆவலோடு வந்த எங்கள் காந்த ஜோதியே (ஓம்)

5. எரிமேலி சாஸ்தாவாகி எல்லோர்க்கும் தேவனாகி
எங்கள் குல தெய்வமாக வந்த ஜோதியே
எந்தன் துயர் போக்கி நீயும் எங்களைக் காத்திடவே
ஏகாந்த மூர்த்தியாக வந்த தெய்வமே

6. பதினெட்டாம் படியனாகி பம்பைநதி வாசனாகி
பக்தர்களைக் காக்க வந்த எங்கள் ஜோதியே
பக்தியுடன் பூஜை செய்து சுத்தமான மனதுடனே
நித்தமும் காத்தருள்வாய் நீதிதேவனே

கற்பூர ஹாரத்தி ஹீதம்

பாஹி பாஹி மணிகண்டா
மாமலைவாசா மணிகண்டா
வன்புலி வாகனா மணிகண்டா
வானவர் பூஜித மணிகண்டா
மகிஷி மர்த்தனா மணிகண்டா
மோகன நாசனா மணிகண்டா
மோகினி சுதனே மணிகண்டா
மத கஜ வாகனா மணிகண்டா
மார்க்க பந்தோ மணிகண்டா
சபரிகிரீஸ்வரா மணிகண்டா
சாஸ்தவ ரூபா மணிகண்டா

சுவாமியே சரணம் ஐயப்பா

மங்கள ஆரத்தி

மங்களனே மாதவனே
சங்கரனே சதாசிவனே
பாண்டியனார் பாலகனே
காந்தமலை வாசனே

ஸ்ரீ சக்ரபீடமதில் கொலுவிற்கும் எங்கள் ஐயப்பனே

ஐயப்பனை வேண்டுதல்

1. ஓங்காரத்தின் தத்துவ ரூபனே
2. தாரகப் பிரம்மமே
3. சத்திய ரூபனே
4. பூத கண நாதனே
5. புண்ணிய மூர்த்தியே
6. அரனுர் மைந்தனே
7. பந்தளத்தரசன் மகிழ் பாலகனே
8. தேவ தேவனே
9. மணிகண்ட  பொருளே
10. அசுரர் காலனே
11. அன்பின் வடிவமே
12. கருணை கண்ணனே
13. கிருபைக் கடலே
14. துன்பம் துடைப்பவனே
15. கலியுக வரதனே
16. ஐயனே மெய்யனே
17. ஸச்சி தானந்தனே
18. மோகினி சுதனே
19. சுந்தர வடிவமே
20. மெய் ஞான பொருளே

உனது திவ்ய பாதார விந்தங்களுக்கு எங்களது ஆனந்த கோடி நமஸ்காரம்.

சகல செல்வங்களும் தரும் இமையகிரி ராஜ தன்ய மாதேவனே நின்னைச் சத்தியமாய் நித்தமும் உள்ளத்தில் துதிக்கும் எழியோர்களுக்கு இரங்கி அருளி அகிலமதில் நோய்ன்மை, கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலிவு, துணிவு, வாழ்நாள் வெற்றி ஆகும். நன்னூல் நுகர்ச்சி தொகை தரும் பதினாறும் பேரும் தந்தருளி நீ சுகானந்த வாழ் வளிப்பாய் சுகிர்த குணசாலி பரிபாலனே அநுகூலனே மங்கள வாசனே மகவு நாங்கள் தந்தை நீர் அத்தனையும் எங்களுக்கு அளிக்க வொண்ணாதோ மகிமை வளர் திரு சபரிகிரியில் வாழும் எங்கள் ஐயப்ப தெய்வமே, சரணம் சரணம் ஐயப்பா

தீப மங்கள ஜோதி நமோ நம
தூய சபரி கிரிஷா நதோ நம
பூர்ணை புஷ்கலை நாதா நமோ நம
அருள் தாராய் சுவாமி

சாந்தி சாந்தி சாந்தி

ஓம் த்ரியம்பகம் பஜா மஹே ஸுகந்தீம்
புஷ்டி வர்த்தனம்
உர் வாருக மிவ பந்தனாத் மிருத்யோர்
மூக்ஷிய மாம் ரு தாத்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
சாந்தி சாந்தி சாந்தி ஓம்

என் நினைவிலும் ஐயப்பா

1. என் நினைவிலும் ஐயப்பா என் கனவிலும் ஐயப்பா-எங்கள்
நீலகண்டன் கண்ணில் வந்தாய் நிர்மலனே ஐயப்பா

2. மாயன் அன்று மோகினியாய் மகிழ்ந்தனைத்த ஐயப்பா-எனத்
தூயவனே துணைவனே என் தோழனே ஐயப்பா

3. மலைமகளும் கலைமகளும் அனைத்தெடுத்த ஐயப்பா....பல
கலைகளிலே விளையாடும் கண்மணியே ஐயப்பா

4. சபரிமலை தெய்வமே என் சாஸ்தாவே ஐயப்பா-நீ
அபயமளித்துக் காத்திடுவாய் ஐயாவே ஐயப்பா

5. நித்திய வஸ்துவாகி எங்கும் நிறைந்தவனே ஐயப்பா-உன்
தத்துவ காட்சி காணத் தனித்து வந்தேன் ஐயப்பா

6. கலியுகத்தின் கடவுள் என்றே காண வந்தேன் ஐயப்பா-உன்
கலிகள் நீங்கக் கண்திறந்தே காத்தருள்வாய் ஐயப்பா

7. பாண்டிபதி நாயகனே பாலகனே ஐயப்பா-உன்னை
வேண்டி நின்றே வரம் கேட்பேன் வேதியனே ஐயப்பா

8. மன்னவர்க்கு மன்னவனே மக பதியே ஐயப்பா-இந்த
மானிலத்தை ஆள்பவனே மறையோனே ஐயப்பா

9. பொன்னுரங்க பூபதியே பூசுரனே ஐயப்பா-என்றும்
எண்ணுள்ளே விளையாடி இன்ப மருள் ஐயப்பா

10. வண்ண வண்ணக்களஞ்சியமே வடிவழகா ஐயப்பா-என்
எண்ணமதில் கலந்திருப்பாய் என் துரையே ஐயப்பா

11. காவியத்தில் கலந்து நின்றாய் காரணனே ஐயப்பா-உன்னை
ஓவியத்தில் அமர்த்தி என்றும் ஓதுகிறேன் ஐயப்பா

12. நீரணிந்த மேனியனே நிறைமதியே ஐயப்பா-நல்ல
நீல வண்ணக் கட்டழகா நீ வருவாய் ஐயப்பா

13. ஆடுகின்ற அன்பருள்ளே ஆடுகிறாய் ஐயப்பா-உன்னைப்
பாடுகின்ற பண்களிலே பரவி நிற்பாய் ஐயப்பா

14. ஜாதிபேதம் அறியாத சாஸ்தாவே ஐயப்பா- எங்கும்
நீதியிலே நிறைவு காண நீ வருவாய் ஐயப்பா

15. கற்பூர ஜோதி கரைந்து நின்றாய் ஐயப்பா-உன்
பொற்பாதம் காண வந்தேன் பூரணனே ஐயப்பா

16. காடுமலைகள் ஆறுதாண்டி காணவந்தேன் ஐயப்பா-என்
ஒடுமனதை உள்ளடக்கி உணர வைப்பாய் ஐயப்பா

17. மலைகளிலே பல மலைகள் தாண்டி மகிழ்ந்து வந்தேன் ஐயப்பா
மகரஜோதி காணவந்தேன் மணிகண்டனே ஐயப்பா (நான்)

18. பம்பா நதியில் நீராடிப்பணிந்து வந்தேன் ஐயப்பா-ஸ்ரீ
ஜெகதாம்பாள் மகிழும் தேவனே என் ஐயப்பா

19. நீரணிந்துன் நினைவில் வந்தேன் நிதிபதியே ஐயப்பா-இப்
பாரினிலே பாடியாடிப் பார்க்க வந்தேன் ஐயப்பா

20. பனிமலைமேல் பவனிவரும் பரம்பொருளே ஐயப்பா-இப்
பதினெட்டாம் படியேறிப் பணிந்து வந்தேன் ஐயப்பா

21. கோழை எந்தன் குணமறிந்து குறைத் தீர்ப்பாய் ஐயப்பா-நான்
ஏழை என்று அறியாயோ ஏகனே என் ஐயப்பா

22. யானை புலிக் கூட்டம் கண்டால் சரணம் என்பேன் ஐயப்பா-நீ
எதிரில் வந்து காத்தருள்வாய் என் ஐயனே ஐயப்பா

23. தாய் தந்தையும் நீயல்லவோ தாரகனே-ஐயப்பா இதை
ஆய்ந்தறிந்தே அண்டி வந்தேன் ஆதரிப்பாய் ஐயப்பா

24. குருவெனக் கொண்டாடி வந்தேன் குணமணியே ஐயப்பா-என்
குலதெய்வம் நீயல்லவோ குணநிதியே ஐயப்பா

25. கருணையுள்ள கற்பகமே கலிவரதா ஐயப்பா-நல்ல
களைத்து வரும் நடுவழியில் கை கொடுப்பாய் ஐயப்பா

26. வருந்துகின்றேன் வாடுகின்றேன் வாழ்வளிப்பாய் ஐயப்பா-நல்ல
மருந்தாகி நீ வருவாய் மலையரசே ஐயப்பா

27. வருமை நீக்கி வரந்தருவாய் வரதனே என் ஐயப்பா-என்
சிறுமை கண்டு இறங்காயோ சீலனே என் ஐயப்பா

28. அடியார்க்கு எளியவனே ஆனந்தனே ஐயப்பா-உன்
அடிபணிந்தேன் ஆதரிப்பாய் ஐயாவே ஐயப்பா

29. அன்னதானம் செய்திடவே அருள் புரிவாய் ஐயப்பா-என்
கருமவினை தீர்த்தருள்வாய் கலிவரதா ஐயப்பா

30. வாழி சொல்லி வாழ்த்தி வந்தேன் வரம் அளிப்பாய் ஐயப்பா-என்
ஊழ்வினையைத் தீர்த்தருள்வாய் உத்தமனே ஐயப்பா.

காக்க ... காக்க ...

சுவாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

எப்போதும் என் தலை நின் தாழ் பணிந்திட தப்பாது காக்க வேண்டும்
கொட்டிக் கொடுக்கின்ற திருநீறு அணிந்திட நெற்றியை காக்க வேண்டும்
தத்துவம் காட்டிடும் முத்திரை திருக்கரம் நிற்புருவம் காக்க வேண்டும்
சத்திய தயாநிதி அன்னதானப் பிரபு சபரிமாமலை சுவாமியே

விழிகளால் நின் பேரழகினைப் பருகிட விழிகளை காக்க வேண்டும்
இமை சற்றும் அசையாமல் இருக்கின்ற பாலனே இமைகளை காக்க வேண்டும்
மொழிகளால் நின் திருப்புகழினைப் பாடிட இதழ்களைக் காக்க வேண்டும்
அழியாத செல்வமே அகலாத தெய்வமே அழுதமலையின் அதிபனே

நந்தா விளக்காக நெஞ்சிலே நின்றவா நாசியைக் காக்க வேண்டும்
நாவுள்ள வரையிலும் நடுநிலை தவறாமல் வார்த்தையை காக்க வேண்டும்
செந்தாமரைக்கரம் செந்தேந்தி அமர்ந்தவா செவிகளை காக்க வேண்டும்
சித்துக்கள் விளையாடும் அற்புதக் கற்பகம் அச்சங்கோவில் அரசே

முத்துச் சிரிப்பினால் பித்தாக்கும் மூர்த்தியை பற்களை காக்க வேண்டும்
தப்பித் தவறி நான் சொல் பிதறி பேசாமல் சொற்களை காக்க வேண்டும்
கட்டுக் கடங்காத கட்டழகு காளையே கன்னங்கள் காக்க வேண்டும்
எட்டுத் திசைகளிலும் கொடி கட்டி ஆள்கின்ற ஏகாந்த தீப ஒளியே

பின்னாலி ருந்து தெவரும் பிடித்தெனை தள்ளாமல் பிடரியை காக்க வேண்டும்
என்பாட்டு தேனாக எங்கும் முழங்கிட கழுத்தினை காக்க வேண்டும்
பொன்னாரம் மணியாரம் நின்னுருவம் அசைந்திட நெஞ்சினை காக்க வேண்டும்
பொன்னம்பலம் தன்னில் என்னாளும் அணைக்கின்ற பூங்காவனத் தேவனே

அன்னபூரணி எந்தன் இல்லத்திலே தங்கி அருசுவைகள் பெருக வேண்டும்
அரை வயிறு கால் வயிறு எனும் குறைகள் இல்லாது நிறைவயிறு காக்க வேண்டும்
வன்புலி வாகனன் என் தோளில் வழுவேற்றி தோள்களை காக்க வேண்டும்
வாழ்வெல்லாம் சுவாமிய சரணமென ஓதுவேன் வாபரின் தோழனே

வணங்கத் தவறாத வள்ளலே ஐயனே முழங்கைகள் காக்க வேண்டும்
வருக என வரவேற்க அருளாசி தந்து நீ முன்கையை காக்க வேண்டும்
முழு முதற்கடவுளே இருமுடிப்பிரியனே முதுகினை காக்க வேண்டும்
முருகனின் தம்பியே அரிகரன் புதல்வனே கலியுக கடவுள் நீயே

உள்ளம் கலங்காது ஊருக்கு உதவிட உள்ளங்கை காக்க வேண்டும்
வில்லாளி வீரனே நெய்விளக்கு ஏற்றிடும் விரல்களை காக்க வேண்டும்
நல்லதோர் இதயத்தை தந்து நான் நலமுற நகங்களை காக்க வேண்டும்
நாதமே, வேதமே, ஞானமே, மோனமே காந்தமலை ஜோதி நீயே

இடையிலே என் பெயரில் பழிஏதும் வாராமல் இடையினை காக்க வேண்டும்
துவண்டு நான் வீழாமல் துணிவுடன் வாழ்ந்திட துடைகளை காக்க வேண்டும்
அறியாது நான்செய்த பிழைகளை மன்னித்து குறிகளை காக்க வேண்டும்
கருணையின் வடிவமே கற்பூர ஜோதியே கரிமலை ஆளும் சீலா

கீழோர்கள் தயவுக்கு மண்டி போடாமல் என் முழங்கால்கள் காக்க வேண்டும்
காட்டுவழி சென்றாலும் நின் சங்கு சக்கரம் கணுக்கால்கள் காக்க வேண்டும்
நீ வாழும் மலையேற இறுதிவரை தளராது பாதங்கள் காக்க வேண்டும்
நிழலாக குளிர்தந்து நினைத்ததை கொடுத்திடும் சமரச குருநாதனே

காலையிலும் மாலையிலும் அந்தி சந்தி வேளையிலும் கால்விரல்கள் காக்க வேண்டும்
காலன் எனைப்பாராமல் போவதற்கு வழி சொல்லி கவலைகள் தீர்க்க வேண்டும்
யாருக்கும் குனியாமல் ஐயப்பா எனும் நாமம் அச்சத்தை போக்க வேண்டும்
சீர்மேவு சபரிமலை வீரமணிகண்டனே நீதான் என் கவசமய்யா...எனைக் காக்கும் கவசமய்யா..

சுவாமியே சரணம் ஐயப்பா
சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா
சரணம் ... சரணம்.... ஐயப்பா

பஜனை பாடல்கள்

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய ரக்ஷ்மாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷ்மாம்

கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷ்மாம்

ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ரக்ஷ்மாம்

மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ரக்ஷ்மாம்

ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ரக்ஷ்மாம்

பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரக்ஷ்மாம்

ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய பாஹிமாம்
ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ரக்ஷ்மாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீச சபரிகிரீச சபரிகிரீச ரக்ஷ்மாம்

வெங்கடேச வெங்கடேச வெங்கடேச பாஹிமாம்
ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ரக்ஷ்மாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீ ராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷ்மாம்

ஆஞ்சனேய ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷ்மாம்

கணேசா சரணம்

1. கணேசா சரணம் சரணம் கணேசா
கணேசா சரணம் சரணம் கணேசா  (கணேசா)

2. கதியெனக் கருள்வாய் சரணம் கணேசா
கருணையின் வடிவே சரணம் கணேசா (கணேசா)

3. சங்கடம் தீர்ப்பாய் சரணம் கணேசா
சண்முக சோதரா சரணம் கணேசா (கணேசா)

4. சக்தியின் மைந்தா சரணம் கணேசா
சாஸ்தா சோதரா சரணம் கணேசா (கணேசா)

5. முதல்வனும் நீயே சரணம் கணேசா
முனிதொழும் தேவா சரணம் கணேசா (கணேசா)

6. அகந்தை அழிந்திடும் சரணம் கணேசா
அன்பில் உறைந்திடும் சரணம் கணேசா (கணேசா)

7. கரிமுகன் நீயே சரணம் கணேசா
கதியெனத் தொழுவோம் சரணம் கணேசா (கணேசா)

8. மூஷிக வாகனா சரணம் கணேசா
மோதக ஹஸ்தா சரணம் கணேசா (கணேசா)

9. பார்வதி பாலா சரணம் கணேசா
பாகவதப் பிரியா சரணம் கணேசா (கணேசா)

பிள்ளையார் துதி

1. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

2. ஆற்றங்கரை மீதிலே அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

3. ஆனைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்
பானை வயிறு படைத்தவர் பக்தர் குறைத்தீர்த்தவர்

4. மஞ்சனிலே செய்யினும் மண்ணனாலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்

5. ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்

6. அவல் பொரிக்கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும்
கவலை யின்றித் திண்ணுவார் கஷ்டங்களை போக்குவார்

7. கலியுகத்து விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம்போல் சுற்றுவார்.

அரிஹரோ ஹரா சுவாமி

அர ஹரோ ஹரா சுவாமி அரஹரோஹரா
அர ஹரோ ஹரா சுவாமி அரஹரோஹரா

1. திருப்பரங் கிரி தீரனுக்கு அரஹரோஹரா
தெய்வயானை மணாளனுக்கு அரஹரோஹரா
செந்தில் வளர் கந்தனுக்கு அரஹரோஹரா
செஞ்சுடர் வேல் வேந்தனுக்கு அரஹரோஹரா

2. பழனிமலை வேலனுக்கு அரஹரோஹரா
பாலா பிஷேகனுக்கு அரஹரோஹரா
சுவாமிமலை நாதனுக்கு அரஹரோஹரா
சுப்ரமண்ய மாணவர்க்கு அரஹரோஹரா

3. தணிகைமலை செல்வனுக்கு அரஹரோஹரா
தனித்து நின்ற குமரனுக்கு அரஹரோஹரா
சோலைமலை முருகனுக்கு அரஹரோஹரா
சொகுசுக்கார வேலனுக்கு அரஹரோஹரா

4. கந்தன் கடம்பனுக்கு அரஹரோஹரா
கதிர்காம வேலனுக்கு அரஹரோஹரா
சிக்கல் சிங்காரனுக்கு அரஹரோஹரா
சிங்கார வேலனுக்கு அரஹரோஹரா

5. எட்டுக்குடி வேலனுக்கு அரஹரோஹரா
எங்குள் குல தேவனுக்கு அரஹரோஹரா
மருதமலை மன்னனுக்கு அரஹரோஹரா
மாந்தர் தொழும் மாறனுக்கு அரஹரோஹரா

6. வெள்ளிமலை வேலனுக்கு அரஹரோஹரா
வள்ளி மணாளனுக்கு அரஹரோஹரா
அபிஷேகப் பிரியனுக்கு அரஹரோஹரா
ஆனந்த வடிவனுக்கு அரஹரோஹரா

ஐயப்பசாமி - ஆறுமுகசாமி

1. சரணம் சாமி சரணம்சாமி ஐயப்பசாமி
அரோகரா அரோகரா ஆறுமுகசாமி

2. பம்பையிலே உதித்தவராம் ஐயப்பசாமி
பொய்கையிலே உதித்தவராம் ஆறுமுகசாமி
திருமாலின் திருமகனாம் ஐயப்பசாமி
திருமாலின் மருமகனாம் ஆறுமுகசாமி

3. சபரிமலை மீதிருப்பார் ஐயப்பசாமி
பழனிமலை மீதிருப்பார் ஆறுமுகசாமி
புலிக் கொடியைக் கொண்டவராம் ஐயப்பசாமி
சேவற்கொடி அழகனையப்பா ஆறுமுகசாமி

4. ஐந்து மலைக் கதிபதியாம் ஐயப்பசாமி
ஆறு மலைக் கதிபதியாம் ஆறுமுகசாமி
வில்எடுத்து வருபவராம் ஐயப்பசாமி
வேல் எடுத்து வருபவராம் ஆறுமுகசாமி

5. காடுமலை நாடியவர் ஐயப்பசாமி
குன்றேறி நின்றவர்தான் ஆறுமுகசாமி
வாபரைத் துணைக்கொண்டார் ஐயப்பசாமி
பாகுவைத் துணைக்கொண்டார் ஆறுமுகசாமி

6. சரண கோஷ பித்தராம் ஐயப்பசாமி
அரோகர பித்தராம் ஆறுமுகசாமி
மகிஷியைக் கொன்றவராம் ஐயப்பசாமி
சூரனை வென்றவராம் ஆறுமுகசாமி

7. இன்று வரை பிரம்மச்சாமி ஐயப்பசாமி
இருதாரம் கொண்டவராம் ஆறுமுகசாமி
இருமுடி பிரியனையா ஐயப்பசாமி
காவடி பிரியனையா ஆறுமுகசாமி

8. நெய்யா அபிஷேகராம் ஐயப்பசாமி
பாலா அபிஷேகராம் ஆறுமுகசாமி
ஊமைக் கருள் புரிந்தவராம் ஐயப்பசாமி
ஒளவைக்கு உபதேசித்தவர் ஆறுமுகசாமி

9. புலியேறி வருபவராம் ஐயப்பசாமி
மயிலேறி வருபவராம் ஆறுமுகசாமி
பாணக்க பிரியராம் ஐயப்பசாமி
பஞ்சாமிர்தப் பிரியராம் ஆறுமுகசாமி

10. தை மகர கீர்த்தியவர் ஐயப்பசாமி
தை பூச மூர்த்தியவர் ஆறுமுகசாமி
அருள் வழங்கும் வள்ளலவர் ஐயப்பசாமி
அழகு தமிழ் ஆனழகர் ஆறுமுகசாமி

சமயபுரம் மாரியம்மா

1. சமயபுரத்தாளே மாரியம்மா - அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

2. மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் - அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம்

3. துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா - அம்மா
தூயவனே என் தாயே மாரியம்மா

4. பட்டு பீதாம்பரத்தில தாவணியும் - உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்

5. எட்டு திசைகளையும் ஆண்டவனே - அம்மா
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா

6. கத்தி கதறுகிறோம் கேட்கலையோ - தாயே
கல்லேதான் உன் மனமும் கரையலையோ

7. உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பில் - எங்கள்
உமையவளே தாயே மாரியம்மா

8. காலிற் சதங்கை ஒலி காதைத் துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா

9. பூவாடை வீசுதம்மா அம்மா
பூமகளே என் தாயே மாரியம்மா

தாயே சமயபுரத்தாளே!
எல்லாம் உன் அடிமையே!
எல்லாம் உன் உடமையே!
எல்லாம் உன் செயலே!

செல்லாத்தா செல்ல மாரியாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
பொன்னாத்தா உன்னைக் காணாட்டா - இந்த
கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா  (செல்)

தென்னை மரத்தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தென்னை மரத் தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா - நாங்கள்
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல
வழிதனையே காட்டி விடு மாரியாத்தா (செல்)

பசும்பாலை கறந்துகிட்டு கறந்த பாலை எடுத்து கிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி நீ பாம்பாக மாறி அதை
பாங்காக குடித்து விட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா - இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்)
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா - எங்கள்
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா

சன்னதியில் கட்டுங்கட்டி

1. சன்னதியில் கட்டுங்கட்டி தன்னே னானான - நாங்க
சபரிமலை பயணமுங்க தில்லேலே லேலோ

2. கார்த்திகையில் மாலைப்போட்டு தன்னே னானான - நாங்க
கடும் பயணம் போறோமுங்க தில்லேலே லேலோ

3. மார்கழியில் கட்டுந்தாங்கி தன்னே னானான - நாங்க
மணிகண்டனைப் பார்க்க போறோம் தில்லேலே லேலோ

4. எரிமேலியில் பெட்டை துள்ளி தன்னே னானான - நாங்க
ஏறிடுவோம் சபரிமலை தில்லேலே லேலோ

5. அழுதையிலே ஸ்நானம் செய்து தன்னே னானான - நாங்க
அன்னதானம் மிட்டிடுவோம் தில்லேலே லேலோ

6. பம்பையிலே ஸ்நானம் செய்து தன்னே னானான - நாங்க
சக்தி பூஜை கொண்டாடுவோம் தில்லேலே லேலோ

7. ஐந்து மலை கடந்து சென்று தன்னே னானான - நாங்க
ஐயப்பனை காணப் போறோம் தில்லேலே லேலோ

8. மலையாம் மலை கடந்து சென்று தன்னே னானான - நாங்க
மகர ஜோதி காணப் போறோம் தில்லேலே லேலோ

9. பதினெட்டாம் படியேறி தன்னே னானான - நாங்க
பாவங்களைத் தீர்க்க போறோம் தில்லேலே லேலோ

தள்ளாடித் தள்ளாடி

தள்ளாடித் தள்ளாடி நடை நடந்து - நாங்க
சபரிமலை நோக்கி வந்தோமய்யா (தள்ளாடி)

1. கார்த்திகை நல்ல நாளில் மாலையும் போட்டுகிட்டு
காலையும் மாலையும் சரணங்கள் சொல்லிகிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சரணங்கள் சொல்லிக் கொண்டு வந்தோமையா
சபரிமலை நோக்கி வந்தோமையா (தள்ளாடி)

2. இருமுடியைக் கட்டிகிட்டு இன்பமாக பாடிகிட்டு
ஈசன் மகனெ உந்தன் இருப்பிடத்தை தேடிக்கிட்டு (தள்ளாடி)

3. வேட்டைகளும் துள்ளி கிட்டு வேஷங்களும் போட்டுகிட்டு
வேடிக்கையாக நாங்கள் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு
சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் (தள்ளாடி)

4. காணாத காட்சியெல்லாம் கண்ணாரக் கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையாத் தாண்டிகிட்டு
பம்பையில் குளித்து விட்டு பாபமெல்லாம் போக்கி விட்டு
பக்தரெல்லாம் கூடி நின்று பஜனைகள் பாடிக்கிட்டு (தள்ளாடி)

5. நீலிமலை ஏற்றத்திலே நின்று நின்று ஏறிக்கிட்டு
நெஞ்சம் உருகி உன்னை நினைச்சுமே பார்த்துகிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே (தள்ளாடி)

6. படியேறி போகும் போது பாங்காகக்காய் உடைத்து
பாலனான உந்தனையே பார்த்து சொக்கிகிட்டு
நெய்யிலே குளிக்கும் போது நேரிலேயே பார்த்து கிட்டு
ஐயா சரணம் என்று அலறியடிச்சுக் கிட்டு (தள்ளாடி)

அல்லி மலர் வாசமது

1. அல்லி மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ஹரி ஹர புத்திரனின் மேலே மணக்குது

2. அத்தர் புனுகு வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமியின் மேலே மணக்குது

3. மல்லிகை பூ மரிக்கொழுந்து எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
மணிகண்ட சுவாமியின் மேலே மணக்குது

4. முல்லை மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
மோகன பாலனின் மேலே மணக்குது

5. ரோஜா மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ராஜாதி ராஜனவன் மேலே மணக்குது

6. காட்டுமல்லி நாட்டுமல்லி எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
கருணாகர மூர்த்தியின் மேலே மணக்குது

7. பரிமள சாம் பிராணி எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
எரிமேலி சாஸ்தாவின் மேலே மணக்குது

8. கற்பூர வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
காந்தமலை வாசனவன் மேலே மணக்குது

9. சந்தன வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
சபரி கிரி மலையின் மேலே மணக்குது

10. குங்குமப் பூ ஜவ்வாது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
குளத்துப் புழை பாலகனின் மேலே மணக்குது

11. பன்னீரும் குல் கந்தும் எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
பந்தள செல்வனவன் மேலே மணக்குது

12. மகர மாதம் ஜோதியது எங்கே தெரியுது
அது எங்கே எங்கே தெரியுது
கரந்தமலை உச்சியின் மேலே தெரியுது

13. மஞ்ச பொடி மகிமையது எங்கே தெரியுது
அங்கே எங்கே எங்கே தெரியுது
மஞ்ச மாதா தேவியவள் மேலே தெரியுது

14. விபூதி அபி÷க்ஷகமது எங்கே நடக்குது
அது எங்கே எங்கே நடக்குது
வீரமணிகண்டன் மேலே நடக்குது

15. நெய்யா அபிஷேகமது எங்கே நடக்குது
அது எங்கே எங்கே நடக்குது
சாஸ்தாவாம் ஐயப்பனின் மேலே நடக்குது

16. சரண கோஷ சப்தமது எங்கே ஒலிக்குது
அது எங்கே எங்கே ஒலிக்குது
சுவாமியாம் ஐயப்பன் மலையில் ஒலிக்குது.

சாமி சாமி ஐயப்பா

1. சாமி சாமி ஐயப்பா சபரிமலை ஐயப்பா
சபரிமலை ஐயப்பா சாஸ்தாவே ஐயப்பா

2. அச்சங்கோயில் அரசனே சாமி சாமி ஐயப்பா
ஆதரிக்க வேண்டுமையா சபரிமலை ஐயப்பா

3. குளத்துப்புழை பாலகரே சாமி சாமி ஐயப்பா
குறைகளையே நீக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

4. கணபதியின் தம்பியே சாமி சாமி ஐயப்பா
கவலைகளைப் போக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

5. வாபரின் கோட்டை ஐயாசாமி சாமி ஐயப்பா
வரங்களையே கொடுக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

6. காளைகட்டி ஆஸ்ரமம் சாமி சாமி ஐயப்பா
களைப்பார வந்து நின்றோம் சபரிமலை ஐயப்பா

7. அமுதா நதியிலே சாமி சாமி ஐயப்பா
ஆனந்தமாய் குளித்து வந்தோம் சபரிமலை ஐயப்பா

8. கரிமலை உச்சியிலே சாமி சாமி ஐயப்பா
கடினமாக ஏறிவந்தோம் சபரிமலை ஐயப்பா

9. பம்பா நதியிலே சாமி சாமி ஐயப்பா
பாவமெல்லாம் போக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

10. நீலிமலை ஏற்றத்திலே சாமி சாமி ஐயப்பா
நிற்க வைத்து பார்க்கிறியே சபரிமலை ஐயப்பா

11. சரங்குத்தி வந்தடைந்தோம் சாமி சாமி ஐயப்பா
சன்னிதானம் கண்டோமே சபரிமலை ஐயப்பா

12. நெய்யப்பிஷேகத்தோடு சாமி சாமி ஐயப்பா
நேரில் காண வந்தோம் சபரிமலை ஐயப்பா

13. குற்றம் குறை எதுவானாலும் சாமி சாமி ஐயப்பா
குறைகளையே நீக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா.

ஓம் குருநாதா ஐயப்பன்

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குரு நாதா ஐயப்பா (ஓம்)

அரனார் பாலா ஐயப்பா
அம்பிகை பாலா ஐயப்பா (ஓம்)

ஆபத் பாந்தவா ஐயப்பா
ஆதி பரா பரா ஐயப்பா (ஓம்)

இருமுடிப் பிரியா ஐயப்பா
இரக்க மிகுந்தவா ஐயப்பா (ஓம்)

ஈசன் மகனே ஐயப்பா
ஈஸ்வரி மைந்தா ஐயப்பா (ஓம்)

உமையாள் பாலா ஐயப்பா
உறுதுணை நீயே ஐயப்பா (ஓம்)

ஊக்கம் தருபவர் ஐயப்பா
ஊழ்வினை அறுப்பவர் ஐயப்பா (ஓம்)

எங்கும் நிறைந்தவர் ஐயப்பா
எங்கள் நாயகா ஐயப்பா (ஓம்)

பம்பையின் பாலா ஐயப்பா
பந்தள வேந்தா ஐயப்பா (ஓம்)

வன்புலி வாகனா ஐயப்பா
வனத்திலிருப்பவர் ஐயப்பா (ஓம்)

சபரிகிரீசா ஐயப்பா
சாஸ்வதரூபா ஐயப்பா (ஓம்)

பதினெட்டாம் படிகளே சரணம்

1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

4. நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

5. ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

6. ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

7. ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

8. எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

9. ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

10. பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

11. பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

12. பன்னிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

13. பதின்மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

14. பதினான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

15. பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

16. பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

17. பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

18. பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

19. படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

20. படி தொட்டு வந்தனம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

வழிநடைப் பாடல்

சாமியே - ஐயப்போ
ஐயப்போ - சாமியே
பள்ளிக்கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும் - காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்
நெய் அபிஷேகம் - சுவாமிக்கே
சுவாமிக்கே - நெய் அபிஷேகம்
பால அபிஷேகம் - சுவாமிக்கே
தேன் அபிஷேகம் - சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம் - சுவாமிக்கே
பகவானே - பகவதியே
பகவதியே - பகவானே
குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம் - குண்டும் குழியும்
ஏந்திவிடையா - தூக்கிவிடைய்யா
தூக்கிவிடைய்யா - ஏந்திவிடைய்யா
வில்லாளி வீரனே - வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே - வில்லாளி வீரனே
பாதபலம் தா - தேக பலம் தா
தேகபலம் தா - பாத பலம் தா
கற்பூர தீபம் - சுவாமிக்கே
அவிலும் மலரும் - சுவாமிக்கே
காணிப்பொன்னும் - சுவாமிக்கே
இருமுடி கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - இருமுடி கட்டு
கற்பூரஜோதி - சுவாமிக்கே
சுவாமிமாரே - ஐயப்பமாரே
ஐயப்பமாரே - சுவாமிமாரே
ஈஸ்வரனே - ஈஸ்வரியே
ஈஸ்வரியே - ஈஸ்வரனே
ஐயப்பபாதம் - சுவாமிபாதம்
சுவாமிபாதம் - ஐயப்பபாதம்
தாங்கிவிடப்பா - ஏந்திவிடப்பா
ஏந்திவிடப்பா - தாங்கிவிடப்பா
கடினம் கடினம் - கரிமலை ஏற்றம்
கரிமலை ஏற்றம் - கடினம் கடினம்
தூக்கிவிடப்பா - ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம் - தூக்கிவிடப்பா
கதலி பழமும் - சுவாமிக்கே
சுவாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும்
கட்டுங்கட்டி - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - கட்டுங்கட்டி
யாரைக்காண - சாமியைக்காண
சாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும்
பேட்டை துள்ளல் - சுவாமிக்கே
பெருவழி பாதை - சுவாமிக்கே
கருடன் வருவது - சுவாமிக்கே
ஆபரண பெட்டி - சுவாமிக்கே
தேவன் மாரே - தேவி மாரே
தேவி மாரே - தேவன் மாரே
தேவனே - தேவியே
தேவியே - தேவனே
கடவுள் வணக்கம் - காலை மாலை
காலை மாலை - கடவுள் வணக்கம்
சுவாமியே - ஐயப்போ-ஐயப்போ சுவாமியே

மாலையை அவிழ்த்து விரதத்தினை முடித்துக் கொள்ளும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.
சென்ற பதிவில் ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுதி விட்டு 
இப்பொழுது  அருள் தரும் ஐயப்ப சுவாமி பற்றிய அறிய தகவல்களை இங்கே பதிவிடுகிறேன்.

ஐயப்ப சுவாமியின் விரத முறைகள்.



கார்த்திகை மாதம் துவங்கியதும் இந்தியாவில், மற்றும் உலக நடுகல் பல வற்றில் இருந்தும்  உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் .



#.சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.
#. மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.
#. தாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.
#.இவ்வாறு மாலை அணிந்த பின்பு  கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது.   அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.
#. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி  கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.


#. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்.
#. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
#. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.
#. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
#. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.
#. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.
#. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.

#. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.
#. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.


#. காலணிகள் பயன்படுத்தக்கூடாது.
#. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.
#. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.
#. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.
#. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.



#. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.

. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.

#. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.

#. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து, பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.

#. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து  ஐயப்பன்  திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை:

@. மாலை அணிந்த  நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை - முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

@. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.

@ பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.

@. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.

@. விரத நாட்களில் பெண்களை - சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.

@. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால், அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும். அப்படி வசதி இல்லாவிடில், மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.

@. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும், சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.

@. ஒருவேளை, அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால், அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம். இதில் தவறு ஏதுமில்லை. எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.


@. மாலை போடும் சமயத்தில் எந்தவிதமான பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால், மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.

@. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும், மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.

@. இருமுடி கட்டும் வைபவத்தை, தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.

@. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று: தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல், தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.


@. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!
ஐயப்பனை தியானிப்போம், மாலை அணிவோம் 
இனிய வாழ்வை பெறுவோம்.
ஐயப்பா சரணம் 



ஜெய் ஸ்ரீ ராம்


1.துன்பங்களை தீர்க்கும் ஆஞ்சநேயர் பற்றி இங்கே எழுதலாம் என்று நினைக்கிறேன்
காரணம் திடிரென்று அவர் பற்றி எழுததோன்றியது. பல காரணங்கள் இதற்கு இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் அவர் எனக்கு எல்லமுக எல்லா துன்பங்களிலும் இருப்பவர் இன்னும் சொல்வதென்றால் எனது மானசீக குரு கூட அவர் தான்.

ஆஞ்சநேயர் என்றல் பலம், வீரம்,சாகா  வரம் என்பன கை வரப்பெற்றவர். அவரது பலம் ராமாயணத்தில் இறுதி யுத்தத்தில் அதாவது ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்த போரில் ராமன் வெற்றி பெற்று தர்மம் மீண்டும்  வெல்ல  ராமனுக்கு பக்க பலமாக எல்லா சந்தர்ப்பங்களிலும் இருந்தது ஆஞ்சநேயர் தான். இதோ அவரது வரலாற்றை இங்கே பதிவிடுகிறேன்.
ஜெய் ஸ்ரீ ராம்.

ஆஞ்சநேயர்  வரலாறு.

அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை, ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது. அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது. அதைச் சாப்பிட்ட கேசரி– அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.  அந்தக் குழந்தைக்கு ஒருநாள் பசி எடுத்தபோது, வானத்தில் தெரிந்த சூரியனைப், ‘பழம்’ என நினைத்து அதைச் சாப்பிட வானிற்குச் சென்றது. வானம் நோக்கி வந்த குழந்தையை இந்திரன் தன்னிடமிருந்த ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார். இதில் அந்தக் குழந்தையின் தாடை சற்று வளைந்ததால் ‘அனுமன்’ என்று பெயர்பெற்றார். அனுமன் என்பதற்கு ‘வளைந்த தாடையை உடையவன்’ என்று பொருள்.

வளர்ந்து பெரியவனான அனுமன், சீதையைத் தேடி வந்த ராமனிடம் அன்பு கொண்டான். அந்த அன்பு பக்தியாக மாறியது. அனுமன் ராமனையே இறைவனாக வழிபடத் தொடங்கினான். இறைவன் மேலான பக்தியை மூன்று வகைகளாகக் குறிப்பிடுகின்றனர். இறைவன் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ இருந்து நம்மைக் காத்து அருள்கிறார் என்கிற எண்ணத்துடன் இறைவனை நினைத்து வழிபடுவது முதல் வகை. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் இறைவன் இருப்பதாக நினைத்து அவைகளிடம் அன்பு செலுத்தி இறைவனை வழிபடுவது இரண்டாவது வகை. இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறார், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை. இதில் அனுமன், ராமனிடம் கொண்ட பக்தியும், வழிபாடும் மூன்றாவது வகையைச் சேர்ந்தது.

அனுமன், சீதையை மீட்பதற்காக முதலில் ராமனின் தூதுவனாகச் சென்றார். பின்னர் ராவணனை அழிப்பதற்கான போரில் ராமனுக்குத் துணையாகச் சென்றார். அனுமன் தனது ராம பக்தியினாலும், தன்னலமற்ற சேவையினாலும் ராமாயண இதிகாசத்தில் ராமன், சீதைக்கு அடுத்த நிலையில் உயர்ந்து நின்றார்.
2.அனுமன் கோவில்கள்  

தன்னலமற்ற சேவையினால் உயர்ந்து நின்ற அனுமனுக்கு இந்தியாவின் சுசீந்திரம், நாமக்கல், நங்கநல்லூர், தெய்வச்செயல்புரம், குலசேகரன்கோட்டை, பஞ்சவடி என்று பல ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டும், பல ஊர்களில் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாக இருக்கிறது.

3.தல வரலாறு
பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அனுமன், இந்த இடத்தில் தான் தியான கோலத்தில் இருப்பதாகவும், இங்கு தனக்குக் கோவில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த பக்தரின் முயற்சியினால் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலில் மூலவரான ஆஞ்சநேயர், ‘வணங்கிய நிலை’யில் 16 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரது மார்பில் சிவலிங்கம் உள்ளது. கால்களில் காலணி அணிந்து, இடுப்பில் கத்தி சொருகியபடி, கதாயுதத்துடன் போர்க்கோலத்தில் இருப்பது போன்று அவரது உருவம் வடிக்கப்பட்டிருக்கிறது.
நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் செய்யப்பட்டது இந்தச் சிலை. அனுமனின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போன்றும் வடிக்கப்பட்டுள்ளது. சிவனைப் போன்று ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் கல்வி, செல்வம் ஆகியவற்றுடன் நீண்ட ஆயுள் கிடைக்கும். அனுமனின் வால் காலை நோக்கிக் கீழாக அமைந்திருக்கிறது. மேலும் இத்தல அனுமனை வழிபட்டால் சனி, ராகு போன்ற கிரகங்களின் தோஷங்கள் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோவிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆஞ்சநேயர் போர்க்கோலத்தில் இருப்பதால் கோவிலின், மகாமண்டபத்தில் அவரது துணைவர்களான நளன், நீலன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவான், ஜிதன், ஜூவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. கோவில் வளாகத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளும், கோவிலின் சுற்றுப்பகுதியில் லட்சுமி, சரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன.
ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது, இங்கு அவருடைய கால் பதிந்ததாகவும், சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோவிலின் எதிரில் உள்ள சிறு மலை என்றும் கூறுகின்றனர்.
4.சிறப்பு வழிபாடுகள்
ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திர நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இங்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தை மாதம் முதல் நாளில் 5,008 கரும்புகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம், சித்திரை மாதம் முதல் நாளில் பத்தாயிரம் கனிகளைக் கொண்டு அலங்காரம், ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் முதலாவது சனிக்கிழமை ராஜ அலங்காரம், இரண்டாவது சனிக்கிழமையில் செந்தூர அலங்காரம், மூன்றாவது சனிக்கிழமை பச்சை அலங்காரம், நான்காவது சனிக் கிழமை சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அலங்காரம், ஐந்தாவது சனிக்கிழமை பத்மாசனத்தில் தியான அலங்காரம் என்று பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்ற


இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் ஆண்டு வழிபாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து வரும் மூலம் நட்சத்திர நாளில் 508 லிட்டர் பாலாபிஷேகம், 108 கலசாபிஷேகம், 7 வருணாபிஷேகம் நடைபெறுகின்றன. அடுத்த நாள் மகாபாரத காலத்தில் பீமனுடன் வாதம் புரிந்த வயோதிக ஆஞ்சநேயர் அலங்காரம், அதையடுத்து கருடர், வராகர், நரசிம்மர், ஹயக்கிரீவர் மற்றும் ஆஞ்சநேயரின் வடிவம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகிறது.

4.அமைவிடம்
திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சின்னாளபட்டி. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டுப்பட்டியில்தான் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.

5.சனி தோஷம் விலக்கும் அனுமன் வழிபாடு
ராமன், வானரப் படைகளுடன் இலங்கை செல்வதற்காகக் கடலில் சேதுபாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் வானரப் படைகள் அந்தப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. அனுமன் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின் மீது ‘வெற்றி ராமனுக்கே’ என்று எழுதிக் கடலில் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சனிபகவான், ‘அனுமனே, இப்போது உனக்கு ஏழரைச்சனிக் காலம் தொடங்குகிறது. என் பணியைச் செய்ய உன் உடலில் எனக்கு ஒரு இடம் கொடு’ என்றார்.
‘சனி பகவானே! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்ல வேண்டும். அதற்காகவே இந்த சேதுபாலப் பணியை சேவையாக செய்து கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், தாங்கள் என் உடல் முழுவதும் எடுத்துக் கொள்ளலாம். அதுவரை பொறுத்தருள வேண்டும்’ என்றார் அனுமன்.
அதற்கு சனி பகவான் ஒப்புக்கொள்ளவில்லை. ‘அனுமனே, காலதேவன் எனக்குக் கொடுத்த கால அளவை நான் மீற முடியாது. உன் உடலின் எந்தப் பாகத்தில் நான் இருக்கலாம் என்பதை மட்டும் தெரிவித்திட வேண்டும்’ என்றார்.
இதனால் அனுமன், ‘என் கைகள் ராமனுக்கான பணியில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது தங்களை அவமதிப்பதாகும். நீங்கள் என் தலை மீது அமர்ந்து உங்கள் கடமையைச் செய்யுங்கள்’ என்றபடி அனுமன் தலை வணங்கி நிற்க, அவர் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.
அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கி வந்த அனுமன், சனிபகவான் தனது தலை மீது அமர்ந்த பின்பு, மிகப்பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தன் தலை மீது வைத்துச் சுமந்து கொண்டு போய்க் கடலில் வீசினார். இதனால் பெரிய பாறைகளின் எடையினை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனிபகவானே சுமக்க வேண்டியதாயிற்று. சனி பகவானால் ஒரு கட்டத்திற்கு மேல் சுமையை தாங்க முடியவில்லை. இதனால் அனுமனின் தலையிலிருந்து கீழே குதித்தார்.

இதைக் கண்ட அனுமன், ‘சனி பகவானே, ஏழரை ஆண்டுகள் என்னிடம் இருக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, இவ்வளவு சீக்கிரம் இறங்கிவிட்டீர்களே?’ என்றார்.
அதற்கு சனிபகவான், ‘அனுமனே, உன்னிடம் ஏழரை நிமிடங்கள் மட்டுமே என்னால் இருக்க முடிந்தது. இதன் மூலம் நான் தோல்வியடைந்தாலும், ராமனுக்கான சேது பாலம் அமைக்கும் பணியில், தங்கள் மூலம் நானும் பாறைகளைச் சுமந்த நற்பேறு பெற்றேன். அதற்காக நான் உனக்கு ஏதாவது நன்மை செய்ய விரும்புகிறேன்’ என்றார்.
அனுமன், ‘ராமனின் பெயரைப் பக்தியுடன் உச்சரித்து வணங்குபவர்களை ஏழரைச் சனிக் காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து காத்தருள வேண்டும்’ என வரம் கேட்டார்.
சனிபகவானும், ‘ராமன் பெயரை உச்சரித்து வணங்கு பவர்கள் மட்டுமின்றி, உன்னை நினைத்து வழிபடுபவர்களுக்கும் துன்பங்களைத் தராமல் நற்பலன்களை அளிப்பேன்’ என்று வரம் அருளினார்.


இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட ராமனாக விஸ்ணு அவதரிக்க, அவருக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவி செய்ய நினைத்த எல்லாம் வள்ளவரான சிவபெருமானே ஆஞ்சநேயராக அவதரித்ததாக ஒரு பக்கம் வரலாறு சான்று பகர்ந்து நிற்கி0ன்றது.
எல்லாம் வல்ல அஞ்சநேயரை வணங்கி பலன் பெறுவோம்.
ஜெய் ஸ்ரீ ராம்.


Wednesday, October 14, 2015

காலை உணவு கட்டாயம்!




சக்கரவர்த்தி மாதிரி காலையில் சாப்பிடு, ஒரு இளவரசன் மாதிரி பகலில் சாப்பிடு,பிச்ங்கை்காரன் போல இரவில் சாப்பிடு !
இது உணவின் தேவை உணர்ந்து நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட வாசகம் இது.
காலை உணவானது மிக மிக முக்கியமானது.ஏனெனில் காலை வேளையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுதான் அன்றைய நாளுக்கான ஆரம்பத்தை,  சக்தியை கொடுக்கிறது எனலாம்.கால்கள் இரண்டிலும் சக்கரங்களை கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்ற நாம் காலை உணவை அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை போனால் போகிறது காலை உணவு தானே என்று கண்டுக்கொள்ளாமல் விடுகையில் ஏற்படும்  உடல்சார் பிரச்சினைகள், ஆரோக்கியக் குறைபாடு அதிகம்.
காலை உணவை சரியாக சாப்பிட்டு வந்தால் ஒரு நாளைக்கு தேவையான எல்லா ஆற்றல்களையும் சரியாக பெற முடியும்.அதிலும்  நாம் உண்ணும் காலை உணவில் காம்ப்ளக்ஸ், கார்போவைதரேற்று,நார்சத்துக்கள்,மற்றும் புரதம் அதிகமாகவும், கொழுப்புகள் குறைவாகவும் இருக்க வேண்டும்.இப்படி அதிக கார்போவைதரேற்று அதிகம் உள்ள உணவுகளை காலையில் எடுத்துக் கொள்ளும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலானது அதிக அளவில் கிடைக்கிறது.


மேலும், அண்மையில் அமெரிக்க பல்கலை கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காலை உணவை உண்ணாமல் விடுகின்ற போது கவனச்சிதறல்,பிரச்சினைகளை சரி ஙெய்யும் ஆற்றல் குறைகிறது.மூளை சிறப்பாக ஙெ்யல்படும் போக்கு குறைகிறது போன்ற பல விடயங்கள் குறித்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தவிர இரவு முழுவதும் உடலும் மூளையும் ஒய்வு எடுத்துக்கொண்டு மறுநாள் காலை அவற்றுக்கு ங்க்தியை அளிக்கும் சர்க்கரை தேவைப்படுகின்றது.இந்த ங்ர்க்கரையை நமக்கு காலை உணவு மட்டுமே கொடுக்கின்றது எனலாம்.
காலை உணவை தவிர்ப்பதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றி நோக்குவோமாயின் மூளை வளர்ச்சி குறைவு, ஞாபக ங்க்தி குறைவு மற்றும் ஏஆ எனப்படுகின்ற ஈமோகுளோபின் அளவு குறைவு, டெங்கு போன்ற பல மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. எனவே காலை உணவை ங்ாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் ங்ரியான முக்கியத்துவம் கொடுத்து காலை உணவை தொடர்ச்சியாக எடுத்து வந்தால்  நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்.
தவிர காலை வேளையில் Fast Food  எனப்படுகின்ற விரைவில் தயாரிக்கக்கூடிய பொருட்களை தவிர்ப்பது நல்லது.அதிலும் கீரை வகைகள், பழங்கள் போன்ற விற்றமின்களான    அ, ஈ போன்ற ங்த்துக்கள் உள்ள பழங்கள் உண்பது    சிறந்தது. தினமும் ஒரே வகையான உணவை காலை உணவாக எடுத்துக் கொள்ளாமல் மேற்கூறிய ங்த்துக்களுடன் கூடிய விதவிதமான உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.
மேலும் பிரத்தியேகமாக காலை உணவுக்கென ஒரு குறிப்பிட்ட நேரம் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை என்பதாகும். இந்த நேரத்துக்குள் ங்ரியாக காலை உணவை எடுத்துக் கொண்டால் ங்ரியான ங்த்துக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே  மகினும், குறையினும் குறை ஙெ்ய்யும் என்ற பழமொழிக்கமைய காலை உணவை இனிமேல் தவிர்க்காமல் இருப்போம்.

Saturday, October 10, 2015

குணசித்திர நடிகை மனோரமா ஒரு சகாப்தம்............



தென் இந்தியா ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறக்க காரணமாக இருந்த ஒரு நடிப்பு சகாப்தம் இன்று மறைந்து விட்டது.

நடிகை மனோரமா மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமாகி விட்டார். ஒரு காலத்தில் தென் இந்திய தமிழ்  சினிமா கொண்டாடிய மிக சிறந்த குணசித்திர நடிகை,நகைச்சுவை நடிகை. கிட்ட தட்ட தமிழ் சினிமாவில் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்த பெருமை இவரை சாரும்.தவிர தமிழ்  நாட்டின் 5 முதல் அமைச்சர்களுடன் நடித்த பெருமையும் இவரை சேரும்.எல்லா நடிப்பிலும் கைதேர்ந்த ஒரு மிக சிறந்த நடிகையை இன்று தமிழ் சினிமா இழந்து விட்டது.

மனோரமா பற்றிய சில தகவல்களை இங்கே பதிவிடுகிறேன்.இந்த தரவுகள் அடுத்த தலைமுறையில் நடிப்பில் சாதிக்க துடிக்கும் சாதனையளர்களுக்கு மனோரமா, ஆட்சி மனோரமா ஒரு வழிகாட்டியாக இருப்பார் என நான் நினைக்கின்றேன்.

19943.05.26 இல் மன்னார்குடியில் பிறந்த மனோரம்மாவின் இயற்பெயர் கோபி சாந்தா. தமிழ் நாட்டின் 5 முதல் அமைச்சர்களுடன் அதாவது  அண்ணாதுறை , மு. கருணாநிதி, தமிழ் நாட்டின் தற்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம், ம. கோ. ராமசந்திரன்,என்.டி. ராமராவ் நடித்திருக்கின்றார்.

இவரது நடிப்பு,கலையுலக சாதனை என எல்லா சாதனைகளும் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை  சொந்தக்காரர்.தவிர பல தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.

" தில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை தட்டாதே",மெட்ராசா சுத்தி பார்க்க போறேன் " போன்ற மிக சிறந்த பாடல்களின் மூலம் தமக்கு பாடும் திறமையும் இயல்பிலே இருக்கின்றது என்பதை பல முறை நிரூபித்தவர்.மேலும் தமிழ் சினிமா கண்ட மிக சிறந்த திரைப்படமான "தில்லான மோகனம்பாள் திரைப்படத்திலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிட தக்கது. இறுதியாக சிங்கம், சின்காம் 2 போன்ற திரைபடங்களில் நடித்தார் என்பதும் குறிப்ப்பிட தக்கது.

இன்றோடு ஒரு சினிமா சகாப்பதம் மறைந்து விட்டது.அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.




Tuesday, October 6, 2015



இந்த முறையும் பார்சிலோனா வசமா கிண்ணம் ?
ஆர்ப்பமாக போகும் யூபா சாம்பியன்ஸ் கிண்ணம் 


கால்பந்தாட்டம் என்ற ஒற்றை வார்த்தைக்கு உலகில் உள்ள ரசிகர்கள் ஏராளம் பேர். அந்த ஒற்றை வார்த்தையை நேசிக்கிற, சுவாசிக்கிற ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் கொழுந்து வீட்டு எரிந்துக் கொண்டிருக்கின்ற ஒரு இன்பமயமான தீ யூபா சம்பியன்ஸ் தொடர். உலக கால்பந்து காதலர்களின்  தாகத்தைத் இந்த தொடர் தணிக்கும் என்பது மட்டும் திண்ணம். இதோ  ஜூன் இறுதியில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று முடிந்து விட்டன. 17 நாடுகளைச் சார்ந்த 32 அணிகள் இத்தொடரில் விளையாட தகுதிபெற்றுவிட்டன. செப்டம்பர் 15 தொடங்கும் 61ஆவது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், பங்கேற்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இரண்டு அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி இத்தாலியின் சான் சிரோ நகரில் நடைபெறும்.
ஆனால் இந்த தொடரை பற்றி முக்கியமாக கூறி ஆக வேண்டியது முதல் போட்டி ஆரம்பித்து விட இப்போதே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இறுதிப்போட்டி பற்றிய கனவுகள் ரசிகர்கள் மனதில் வந்து விட ஆரம்பித்திருக்கும்.வெற்றி பெரும் அணிக்கு பரிசுத் தொகையாக 15 மில்லியன் யூரோ வழங்கப்படும். அட பரிசு தொகை ஒரு புறம் இருக்கட்டும் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என இங்கும் ரசிகர்கள் ஏராளம் பேர்.
நடப்பு கிண்ண தொடரில் மிக சிறந்த முறையில் விளையாடி வெற்றி பெற்ற   நெய்மர்,மெஸ்சி,அர்டா டூறேன் போன்ற மிக சிறந்த வீரர்கள்  உள்ள   ஸ்பெயினின், பார்சிலோனா அணியின் வசம் கிண்ணம் உள்ளது என்பது தான் இங்கு குறிப்பிட தக்கது.
இந்த நிலையில் கால்பந்து நிபுணர்கள், ரசிகர்கள் என அத்தனை பேரும் தற்போது விழிமேல் விழிவைத்து எதிர் பார்த்து  காத்திருக்கின்ற, அதே வேலை இந்த முறை கிண்ணத்தை   வெல்லும் அணி எது? என்பது பற்றியான விபரம் வருமாறு.


பார்சிலோனா (ஸ்பெயின்) நடப்பு வெற்றியாளர்கள்.
  
2014 இன் வெற்றியாளர்கள், நடப்பு சாம்பியன் என்ற  அந்தஸ்தோடு களமிறங்கும் பார்சிலோனா அணி கோப்பையை தக்க வைத்துக்கொள்ளும் என்பதே ஏகோபித்த  பலரின் கருத்தாக உள்ளது . மெஸ்ஸி, நெய்மர், சுவாரஸ் என்ற இந்த மும்மூர்த்திகளை நம்பித்தான் இந்த அணி இருக்கின்றது எனலாம். கடந்த ஆண்டு இவர்கள் மூவர் மட்டுமே இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட கோல்கள் அடித்து,  தமது அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. எந்த தருணத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை கொண்ட கேப்டன் இனியஸ்டா, எப்படிப்பட்ட வீரரையும் தடுத்து பந்தைப் பறிக்கும் ஆற்றல் கொண்ட மச்சாரானோ என நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கின்றனர் .இந்த அணியில் தவிர இன்னும் பல நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் விளையாட சந்தர்பம் கிடைக்காத என ஏங்கிய வண்ணம் உள்ளனர். ஏதாவது போட்டி நடைபெற்றால்,  அதிர்ஷ்டம் நடந்தால் மட்டுமே இவ்வணியை வெல்ல முடியும் என்கிற ஒரு வார்த்தை போதும் இந்த அணியின் பலத்தை பற்றி சொல்ல.அணியின் இப்போதைய ஒரே பலவீனம் இவ்வணியின் பின்கள வீரர்கள் தான். அதிக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் ஜெரார்ட் பிக்கு, டேனி ஏல்வியஸ் போன்ற வீரர்கள் அடிக்கடி நடுவர்களால் எச்சரிக்கை செய்யப்படுபவர்கள்.முக்கியமான சில சமயங்களில் சிகப்பு அட்டை காட்டப்படுவது மட்டும் அல்லாமல், ஒரு கட்டத்தில்  அவர்கள் வெளியற்றப்பட்டால் அது அணிக்கு பெரும் பின்னடைவாக மாறிவிடக்கூடும்.

ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்).
இந்த அணியை பற்றி கூறுவதற்கு முன்பாக கடந்த ஆண்டு போட்டிகளில் இந்த அணியின் தோல்விகளை நினைவில் வைத்து கொள்வது சிறந்தது.காரணம் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள ரியல் மாட்ரிட் அணிக்கு பெரும் சவால்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு பார்சிலோனா அணியிடம் அனைத்து கோப்பைகளையும் கோட்டை விட்டதால் பயிற்சியாளர் ஆன்சலோட்டி நீக்கப்பட்டு ரஃபா பெனிட்ஸ் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றார். 
கால்பந்தின் உயரிய விருதான பல்லான் டி ஓர் (தங்கபந்து )  விருது வென்ற கிரிஸ்டியானோ ரொனால்டோ, இளமையும் திறமையும் கலந்து கலக்கும் ராட்ரிக்யூஸ், குரூஸ், உலகின் மிகவும் காஸ்ட்லியான வீரரான காரத் பேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்  சில வேளைகளில்  பார்சிலோனா பெரும் சவாலோடு வெற்றி பெறக்கொடிய சந்தர்பம் உள்ளது. அதேசமயம் அணியின் நீண்ட நாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த கோல்கீப்பராகவும் வலம் வந்த இகர் காசில்லஸ் போர்ட்டோ அணியில் இணைந்தது ரியல் மாட்ரிட்டுக்கு பின்னடைவே. நட்சத்திர வீரர்கள் யாரேனும் அடிபட்டுவிட்டால் அணி திண்டாடுவது சமீப காலங்களாகவே வெளிப்பட்டு வருகிறது. 10 சாம்பியன்ஸ் கோப்பைகளை வென்ற ஒரே அணியான ரியல் மாட்ரிட் பார்சிலோனாவிடம் இருந்து  கைப்பற்ற நிச்சயம் போராடும் என எதிர்பார்க்க படுகிறது.

பேயர்ன் மூனிச் (ஜெர்மனி).
மேற்சொன்ன  இரு ஸ்பெயின்  அணிகளுக்கும் எல்லா வகையிலும் ஈடு கொடுக்கும் அணி பேயர்ன் மூனிச். முல்லர், ரிபரி, ராபன், லாம், லெவண்டோஸ்கி, கோட்சே என அணியில் திறமை மிகுந்த வீரர்களுக்கு பஞ்சமில்லை. உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணியின் பாதி வீரர்கள் இந்த அணிக்கு விளையாடுவது மிகப் பெரிய பலம். உலகக்கோப்பையின் சிறந்த கோல்கீப்பரான நூயர் இருந்தாலும் இவர்களின் தடுப்பாட்டக்காரர்கள் சொதப்புவதாலேயே கடந்த இரு முறையும் அதிக கோல்கள் வாங்கி அரை இறுதியோடு வெளியேற நேரிட்டது. இந்த முறையும் இப்பிரச்சனை சரிசெய்யப்பட்டதாய் தெரியவில்லை. முன்கள ஆட்டத்தில் காட்டும் அக்கறையை தடுப்பாட்டத்திலும் காட்டினால் இம்முறை கண்டிப்பாக இறுதிப்போட்டியை எட்டக்கூடும். நடுகள வீரர்களான டக்லஸ் கோஸ்டா, சிலியைச் சார்ந்த விடால் ஆகியோரின் வருகை அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து).
இரண்டு மாதம் முன்புவரை இவ்வணி காலறிதி ஆட்டத்தை கூட  தாண்டும் என்று கூட யாரும் யோசித்திருக்க  மாட்டார்கள். பிரிமியர் லீக் தொடரில்  தொடர்ந்து 5 போட்டிகளாக ஒரு கோல் கூட வாங்காமல் பட்டயைக் கிளப்பி விளையாடி வருகிறது ரியல் மட்ரிட். கேப்டன் கெம்பனி, மங்கலா ஆகியோரின் அரணை எந்த வீரராலும் இது வரை உடைக்க முடியவில்லை. டோரே, நவாஸ், சில்வா ஆகியோரும் பார்முக்குத் திரும்பிவிட்டதால் இவ்வணியின் வெற்றிப் பயணத்தை யாரலும் தடுக்க முடியவில்லை. இந்த ஆண்டு மட்டும் புதிய வீரர்களுக்காக சுமார் 130 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்துள்ளது இவ்வணி. உலகின் அனைத்து பெரிய அணிகளும் வளைத்துப்போட போட்டி போட்ட இளம் வீரர்களான ஸ்டெர்லிங்,  டி புரூய்ன் ஆகியோரை இவர்கள் வாங்கியிருப்பது அணியை மேலும் பலமாக்கியுள்ளது.  ஆனாலும் அணியின் மிகப்பெரிய பலமும் பலவீனமும் அர்ஜென்டினாவைச் சார்ந்த அகுவேரோ தான். கோல் மெஷின் என்று வருணிக்கப்படும் இவரையே அதிகம் சார்ந்துள்ளது இவ்வணி. இவருக்கு அடிக்கடி அடிபட்டு விடுவது அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும். இவர் உடல்நிலை ஒத்துழைத்து மற்றவர்களும் சிறப்பாக விளையாடினால் இம்முறை கோப்பையை வென்று சரித்திரம் படைக்கலாம்.    
    
இவ்வணிகள் மட்டுமல்லாமல் அத்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின் ), பாரிஸ் செயிட் ஜெர்மெய்ன் (பிரான்சு), செல்ஸி (இங்கிலாந்து), ஜுவென்டஸ் (இத்தாலி) ஆகிய அணிகளும் கடும் போட்டியில் உள்ளன.  அதுமட்டுமின்றி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில்அடிப்பது யார்? என்பதில்  மெஸ்ஸி, ரொனால்டோ இடையே நடக்கும் கோல் போடும் போட்டி  தொடரை இன்னும்விறுவிறுப்பாக்கும். 
கடந்த ஆண்டு சுமார் 150 கோடி மக்களால் கண்டு களிக்கப்பட்ட இந்த சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணியே ஐரோப்பாவின் முடிசூடா மன்னனாக ஓரண்டு காலம் இருக்கும். அந்த அரசன் யார்? எந்த நாட்டைச் சார்ந்த அணி எது ? யார் அதிக கோல்கள் போட்டு முதலிடம் பிடிக்கப் போகிறார்கள் ?
மேலும் தகுதிகான் போட்டிகளிலும் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி கிண்ணத்தை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் விளையாட காத்திருக்கும் உலகின் 2ம் தர அணிகளும் தமது ஆட்டத்தை தகுந்த முறையில் வெளிபடுத்துவர்கள்  என எதிர்பார்க்க படுகிறது.எது எப்படியோ அடுத்த வருடம் கால்பந்து ரசிகர்களுக்கு ராஜா விருந்து காத்திருக்கிறது. பொருத்திருபோம் அடுத்த ஆண்டு வரை.




Friday, October 2, 2015

ஜின்னா  தேசியவதியா? பிரிவினை வாதியா?


நம்மில் பலருக்கு காந்தியை பற்றிய அறிமுகம் மிக இருந்தாலும்,ஜின்னா என்பவரை
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இன்று உலக நாடுகளுக்கிடையில் தனி ஒரு முஸ்லிம் நாடாக பரிணமித்திருக்கின்ற பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் உருவாக காரணமானவரே  அவர் தான்.

மேலைத்தேய வீரிய கொடும் சமூகம் இந்தியாவை அடக்கி ஆண்டுக்கொண்டிருந்த போது இந்தியத் துணைக்கண்டத்தின் மிக முக்கிய  இஸ்லாமிய தலைவர்களில்  முதன்மையானவர் தான் முஹமது அலி ஜின்னா.இத்தனைக்கும் அவர் முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் யாத்திரையை கூட  மேற்கொண்டது கிடையாது.

இறக்கும் வரைக்கும் அவர் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்ததில்லை.மசூதிக்கு போவதை வழக்கமாக கொண்டதில்லை.குரானுக்கும் அவருக்கும் வெகு தூரம்.ஜின்னாவின் குடும்பம் எல்லா மதத்தவர்களையும் உள்ளடக்கியது.

இப்படி ஜின்னாவை சுற்றி நடைபெற்றிருக்கும் சர்ச்சைகள் தான் மெய் சிலிர்பூட்டுபவை. ஆனால் அவர் இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கினார்.அது எப்படி சாத்தியமாயிற்று அந்த கேள்விக்கான பதில்தான் இந்தப்புத்தகம்.

ஜின்னா பற்றி பல்வேறு அத்தியாயங்களில் பல்வேறு விதமாக, ஜின்னா பற்றிய விடை காணா வினாக்களுக்குரிய விடைகளை தகுந்த ஆதரங்களோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் ச. ராசமாணிக்கம்.

காங்கிரஸ் கட்சிகளை மிரட்டி ஜின்னா நடத்திய பிரிவினைவாதம் இந்த நூலில் தெட்டத்தெளிவாக காட்டப்பட்டுள்ளது.எல்லாவற்றையும் தவிர இந்திய முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் எனும் தனி நாடு ஏன் தேவைப்பட்டது என்பதற்கான கேள்விகளோடு புத்தகத்தின் சுவாரசியம் நீள்கிறது.

இவ்வாறு ஜின்னாவை பற்றி முற்றிலும் புதியக் கோணத்தில் இதுவரை அறியப்படாத எராளமான தகவல்களுடன் தக்கசான்றாய் விளங்குகிறது இந்தப் புத்தகம்.
வரலாறு பற்றிய தேடல் மிகுந்தவர்கள், அரசியல் விரும்பிகள், என வாசிப்பு மீதான தீராத வேட்கை கொண்டோருக்கான அறுசுவை விருந்து இந்த புத்தகம்..

உலகில் பிறந்த யாருமே மிக சிறந்த அறிவாளிகள் இல்லை. நான் படித்த
சிறந்த நூல்கள் பற்றிய அறிமுகங்களை இங்கே எழுதுகின்றேன். தயவு செய்து நீங்கள் என்னில் கண்ட பிழைகளை சூட்டிகாட்டுங்கள். அது எனது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். நன்றி....